மனுக்குலம் அனைத்தும் ஒரே குடும்பம்.நாம் அனைவரும் ஒரே கடவுளின் படைப்புக்கள் எனும் முறையில், ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்கள் என்பதை பஹாய் போதனைகள் வலியிருத்துகின்றன.
பஹாவுல்லா, "ஒற்றுமை எனும் கூடாரம் எழுப்பப்பட்டுவிட்டது; நீங்கள் ஒருவரை ஒருவர் அன்னியர்கள் எனக் கருதவேண்டாம். நீங்கள் ஒரு மரத்தின் கனிகள், மற்றும் ஒரு கிளையின் இலைகள்" எனக் கூறுகின்றார்;
ஒவ்வொரு தேசத்திலும் உள்ள ஏறத்தாழ ஒவ்வொரு பின்னனியைச் சார்ந்த மக்களும் பஹாய்களாகியுள்ளனர்.
ஆணும் பெண்ணும் சமமானவர்கள். ஆண் பெண்ணுக்கிடையில் முழு சமத்துவமும் கூட்டுணர்வும் மனித மேம்பாட்டிற்கும் சமுதாய நிலைமாற்றத்திற்கும் இன்றியமையாதது. "ஆண்களும் பெண்களும் இறைவனின் பார்வையில் என்றுமே சமமானவர்கள் இனி என்றுமே அவ்வாறே இருந்து வருவார்கள்", என பஹாவுல்லா கூறுகிறார்.
கடந்த நூறாண்டுகாலமாக பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கான இயக்கத்தில் உலக முழுவதும் உள்ள பஹாய் சமூகம் முன்னனியில் இருந்து வந்துள்ளது.
இன, சமய, தேசிய அல்லது பொருளாதார ரீதியான அனைத்துத் முன்தப்பெண்ணங்களும் அழிவுமிக்கவை மற்றும் அவை ஒழிக்கப்படவேண்டும்.முன்தப்பெண்ணங்கள் குறித்த பிரச்சனைக்கு பஹாவுல்லா குறிப்பான கவனம் செலுத்தியுள்ளார். அவரது செய்தியின் மையத்தில் தேசங்கள், கலாச்சாரங்கள், மற்றும் மக்களிடையே பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் தோழமையை அவர் அறைகூவுகின்றார்.
ஒரே ஒரு மனித இனமே உள்ளது, என பஹாவுல்லா வலியுறுத்துகின்றார். மனித குலம் ஒரு அமைதியான மற்றும் நியாயமான அனைத்துலக சமூகத்தை உருவாக்க வேண்டுமானால் இனம், தேசியம், சமயம், அல்லது சமூகப் பின்னனியை அடிப்படையாக் கொண்ட முன்தப்பெண்ண உணர்வு கண்டிப்பாக அகற்றப்படவேண்டு
நாம் எவ்வித முன்கருத்துக்கள் ஏதுமின்றி உண்மையை சுயமாக ஆராயவேண்டும்.உலகில் இன்று முரண்பாடுகளுக்கான முக்கிய காரணங்களாக இருப்பது பெரும்பாலான மக்கள் கண்மூடித்தனமாகவும் ஆராய்ந்துபார்க்காமலும் பல்வேறு பழக்கவழக்கங்களையும், இயக்கங்களையும், கருத்துக்களையும் பின்பற்றுவதே ஆகும்.
"மனிதர்கள் "தங்கள் சொந்தக் கண்களாலன்றி மற்றவர்களின் கண்களைக் கொண்டு" அறிவு பெறக்கூடாது எனும் அவர்களின் அடிப்படை கடமையை பஹாவுல்லா வலியுறுத்திக் கூறுகிறார்
அறிவியலும் சமயமும் இணக்கத்துடனேயே இருக்கின்றன.பஹாய் போதனகைள் அறிவியல் மற்றும் சமயத்திற்கிடையிலான அடிப்படை இணக்கத்தை வலியுறுத்துகின்றன. அறிவியல் ஆய்வு செய்யும் மெய்ம்மையை படைத்த வெளிப்பாட்டை வருவித்தவர் அதே தனிச்சிறப்புமிக்க கடவுளே ஆவார் என பஹாய்கள் கருதுகின்றனர் .
இருப்பது உண்மையில் ஒரே உண்மை (மெய்ம்மை)யெனில் ஒரு விஷயம் அறிவியல் ரீதியாகப் பொய் எனவும் சமய ரீதியில் உண்மையாகவும் இருப்பது சாத்தியமல்ல; வேறுபாடுகள் மனிதத் தவறு, செருக்கு ஆகியவற்றையே சாரும்.
நமது பொருளாதார பிரச்சனைகள் ஆன்மீக பிரச்சனைகளோடு தொடர்புகொண்டுள்ளன.வாழ்வின் ஆன்மீக மற்றும் நடைமுறை அம்சங்களின் இன்றியமையா தொடர்பு கண்டுகொள்ளப்டும்போதுதான் பொருளாதார நீதியும் செழுமையும் உருவாகும் என பஹாய் போதனைகள் தெரிவிக்கின்றன.
உலகின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான திருப்திகரமான தீர்வு சமயத்தினால் மட்டுமே ஏற்படுத்தப்படக்கூடிய இதயம் மற்றும் மனம் சார்ந்த ஓர் ஆழ்ந்த மாற்றத்தில் உள்ளடங்கியுள்ளது.
குடும்பமும் அதன் ஒற்றுமையும் மிகவும் இன்றியமையாதவை.பஹாவுல்லா உலக ஒற்றுமைக்காகத் தோன்றியுள்ளார் மற்றும் குடும்பத்தின் ஒற்றுமையே அடிப்படை ஒற்றுமையாகும்.
குடும்பமே சமுதாயத்தின் அடிப்படைக் கூறாகும் என்பதை பஹாய்கள் அறிவர். ஆகவே, இந்த முழு முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானக்கூறு நலமாகவும் ஒன்றித்தும் இருந்தாலன்றி, சமுதாயும் நலத்தோடும் ஒற்றுமையாகவும் இருக்கமுடியாது
"ஒரு தனிக்குடும்பத்தில் அன்பும் இணக்கமும் வெளிப்பபட்டால், அக்குடும்பம் மேம்பாடு கண்டும், ஒளிபெற்றும் ஆன்மீகமாகவும் ஆகும்," என பஹாய் எழுத்தோவியங்கள் எடுத்துரைக்கின்றன.
கடவுள் ஒருவரே உள்ளார். பஹாய்களின் ஒரு கடவுள் நம்பிக்கை என்பது இந்த பிரபஞ்சமும் அதன் உயிரினங்கள் அனைத்தும் மற்றும் அதில் அடங்கியுள்ள உள்ளாற்றல்கள் .அனைத்தும் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரே ஒரு பரம்பொருளினால் படைக்கப்பட்டுள்ளன என்பதாகும்
கடவுள், அல்லா, யாஹ்வே, மற்றும் பிரம்மா எனும் பெயர்கள் அனைத்தும் ஒரே தெய்வீகப் பொருளையே குறிப்பிடுகின்றன. அதன் இயல்பு அறியப்படமுடியாதது மற்றும் மனிதகுலத்திற்கு அப்பாற்பட்டதும் ஆகும். மனிதகுலத்திற்குப்போதித்து அவர்களுக்கு வழிகாட்டும், கடவுளின் அவதாரங்கள் வாயிலாகவே நாம் இறைவனை அறிந்துகொள்கின்றோம்.
முக்கிய சமயங்கள் அனைத்தும் கடவுளிடமிருந்தே தோன்றியுள்ளன.பல்வேறு சமயங்கள் ஒன்றென பஹாய்கள் கூறும்போது அதே பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் இயக்கங்கள் யாவும் உள்ளடக்கத்தில் ஒன்றென அவர்கள் கூறவில்லை. மாறாக, மனுக்குலத்திற்கு வழிகாட்டவும் கல்வியூட்டவும் நோக்கங் கொண்ட தெய்வீக அவதாரங்களின் அடுத்தடுத்த வெளிப்பாடுகளின் வாயிலாகக் கடவுள் தம்மை வெளிப்படுத்தி வந்துள்ளார் என்பதே அர்த்தமாகும்.
அவர்கள் யாவரும் "கடந்தகாலத்திலும் நிலையான, வருங்காலத்திலும் நிலையான, " ஒரே தெய்வீகக் குறிக்கோளான கடவுளின் மாற்றமில்லா சமயத்தின் படிப்படியாக வெளிப்படும் அவதாரங்கள் ஆவார்கள்.
உலக அமைதியே நம்காலத்தின் முக்கியத் தேவை.மனிதகுலம் விடாப்பிடியாக கடந்தகால வாழ்க்கைமுறைகளை பற்றிக்கொண்டுள்ள காரனத்தினால் கற்பனை செய்யவியலா அழிவுகளினால் உலகம் அமைதியை ஏற்படுத்திக்கொள்ளத்தான் வேண்டும் எனும் நிலைவரை காத்திருக்கலாம், அல்லது இப்பொழுதே எல்லோரும் ஒன்றுகூடித் தீர்மாணித்து கலந்தாலோசனை மூலம் உலகில் அமைதியை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பதும் ஒரு தேர்வாகும்.
மனிதகுலம் இம்மாபெரும் சோதனையை அதன் இறுதிமுடிவில் மனவுறுதியோடு எதிர்கொள்ள முடியும் என்பது பஹாய சமயத்தின் நம்பிக்கையாகும்