பஹாவுல்லா தமது புனித எழுத்துக்களில் வருங்காலங்களில் ஒவ்வோர் உள்ளூரிலும் வழிபாட்டு இல்லங்கள் அல்லது கோவில்கள் எழுப்பப்பட வேண்டும் என குறித்துள்ளார். பஹாய் கோவில்கள் சில தனிச்சிறப்புக்களை உள்ளடக்கி இன்று உலகம் முழுவதும் எழுப்பட்டுள்ளன. அமெரிக்க கண்டத்தில் 3 கோவில்கள், ஆப்பிரிக்காவில் 1 கோவில், ஐரோப்பாவில் 1, ஆசியாவில் 1, ஆஸ்திரேலியாவில் 1 மற்றும் பசிபிக் தீவான சமோவாவில் 1 என பஹாய் கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன.
பஹாய் கோவில்கள் அவற்றின் சிறப்புக்கு ஏற்ப அமைப்பில் பெரியவையாகவும், ஆன்மீகச் சூழ்நிலையை உருவாக்கக்கூடியவையாகவும் அமைக்கப்படுகின்றன. இக்கோவில்களுக்கு ஒன்பது வாசல்கள் உள்ளன. 9 எனும் எண் எணகளிலேயே முழுமையான எண் ஆகும். தற்போது உலகில் ஒன்பது முக்கிய சமயங்கள் உள்ளன என்பதையும், எச்சமயத்தைச் சார்ந்தவராயினும் பஹாய் வழிபாட்டு இல்லங்களுக்கு வரவேற்கப்படுகின்றனர். அங்கு அவர்கள் கடவுளை மானசீகமாகவும், பிரார்த்தனைகளின் வழியாகவும் இங்கு வழிபட முடியும். கடவுள் மனித அறிவிற்கு அப்பாற்பட்டவர் என்பவராதாலால் பஹாய் கோவில்களில் எவ்விதமான உருவ அமைப்புக்களோ, சிலைகளோ கிடையாது. கடவுளை மனதால் தியானித்து வழிபட அனைவரும் வரவேற்கப்படுகின்றனர். கோவில்கள் அனைத்தும் 9 வாசல்கள் கொண்டு இவ்வாசல்கள் அனைத்தும் வானத்தை நோக்கி கோவிலின் உச்சியில் ஒன்றினையும் வகையில் அமைக்கப்படுகின்றன. இது சமயங்கள் பலவாயினும், பலவித மக்களாயினும் அனைவருக்கும் கடவுள் ஒருவரே என்பதைக் குறிக்கும் வகையில் உள்ளது.
வருங்காலங்களில் மக்களுக்குப் பயன் தரும் சமூக சேவையளிக்கும் நிறுவனங்கள் இப்பஹாய் கோவில்களைச் சுற்றி அமைக்கப்படும். எடுத்துக்காட்டாக, அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
சிக்காகோ, வட அமெரிக்கா
சில்லி, தென் அமெரிக்காவில் எழுப்பப்பட்டுவரும் புதிய முறையான வழிபாட்டு இல்லம்
பிராங்பர்ட், ஜெர்மனி்
இஷ்காபாத், ரஷியாவில் அமைக்கப்பட்ட முதல் பஹாய் கோவில்.(பூமியதிர்வில் இடிந்துவிட்டது)
பஹாபூர், புது டில்லியில் தாமரை வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோவில்
பனாமா, மத்திய அமெரிக்கா
அப்பியா, சமோவா
சிட்னி, ஆஸ்திரேலியா
சிட்னி, ஆஸ்திரேலியா