தாஹிரிஃ

வெண்பட்டாடை

 

இல்லம்

வெண்பட்டாடை

 

தாஹிரியின் மரணம்

 

தெஹரானுக்கு நடுவில் ஒரிடத்தில், ஒரு தோட்டத்தின் கிணற்றுக்குள், பாறாங் கற்களின் கீழ் அந்த உடல் சிதைந்து கிடக்கின் றது. அந்த கிணற்றைச் சுற்றி உயர்ந்த கட்டிடங்கள் வானளாவுகின்றன. அந்த தோட்டம் இருந்த இடத்திற்கு அருகே உள்ள சாலையில் நிறைய வாகனங்கள் வந்துபோய் கொண்டுள்ளன, பொதி சுமக்கும் கழுதைகளை பேருந்துகள் ஓரமாக ஒதுக்கித் தள்ள, உலகின் பல பாகங்களையும் சார்ந்த வாகனங்கள் ஒட்டகங்கள் சுமக்கும் சுமைகளை உரசிச் செல்கின்றன, வண்டிகள் ஆடியவாறு நகர்ந்து கொண்டிருக்கின்றன. சூரிய அஸ்தமனத்தின் போது, அருகில் உள்ள ஓர் ஓடையில் இருந்து சிலர் நீரை வாரி சாலையின் மீது இரைத்து தூசுப்படலம் எழுவதை தடுக்க முயல்கின்றனர். அந்த உடல், மண்ணோடு மண்ணாக சிதைக்கப்பட்டு அங்குதான் கிடக்கின்றது. அது மறைக்கப்பட்டுவிட்டது, மறக்கப்பட்டு விட்டது என நினைத்து மனிதர்கள் வரவும் போகவும் செய்கின்றனர்.

 

பெண்களின் அழகு என்பது காலம் சூல்நிலை ஆகியவற்றை சார்ந்த ஒன்றாகும். உதாரணமாக, லைலியை எடுத்துக்கொள்வோம். அவள் அவளது காதலன் மஜ்னூனை விட்டு பிரிந்த போது அவளது பிரிவை தாளமாட்டாமல் மஜ்னூன் பாலைவனத்தைத் நாடிச் சென்றான், ஏனென்றால் லைலியின் முகத்தை தவிர பிற மனிதர்களின் முகங்களை அவனால் பார்க்கமுடியவில்லை. பாலவன த்தின் மிருகங்களே அவனைச் சுற்றி உட்கார்ந்து அவனுடைய துக்கத்தில் பங்கு கொண்டன. ஆனால், இத்தனைக்கும் லைலி அழகானவளே அல்ல. எத்துனை கவிஞர்கள் அல்லது சித்திரக்காரர்கள் வேண்டுமானாலும் இதற்கு சாட்சியம் கூறுவர். அராபிய நாடுகளைச் சேர்ந்த மன்னன் ஒருவன் மஜ்னூனின் காதலில் தலையிட்டு அவனது மனதை மாற்றிட வீன் முயற்சிகள் எவ்வளவோ செய்து பார்த்தான். அந்த காதல் விவகாரத்தால் ஏற்பட்ட அத்தனை அழிவுகளுக்கும் மூல காரணமாக விளங்கிய அந்த லைலியின் முகம்தான் எத்தகையது என்பதைக் காண வேண்டுமென அந்த மன்னனின் உள்ளத்தில் ஓர் எண்ணமும் உதிக்கச் செய்தது. காவலர்கள் அராபிய இனங்கள் ஒவ்வொன்றிலும் அவளை தேடி, கண்டுபிடித்து, அரண்மனை முற்றத்தில் அந்த மன்னனின் முன்னிலையில் அவளை கொண்டு வந்து நிறுத்தினர். அரசன் அவளை பார்த்தான்; மெலிந்த தேகமுடைய கரு நிறத்தாள் ஒருத்தியையே அவன் கண்டான். அவனது அந்தப்புரத்தில் சேவையாற்றிடும் மிகத்தாழ்ந்த பணிப்பெண்கள் கூட நிறத்தில் அவளை மிஞ்சியிருந்த நிலையில், அவளைப் பற்றி மனதில் பெரிதாக நினைத்திட எதுவுமில்லாமல் இருந்தான் அந்த மன்னன். மஜ்னூன் மன்னன் மனதில் தோன்றிய சிந்தனையை புறிந்து கொண்டு, ‘அரசே, நீர் மஜ்னூனின் கண்களைக் கொண்டு லைலியின் உள் அழகு வெளிப்படுத்தப்படும் வகையில் அவளை பார்த்திட வேண்டும்,’ என கூறினான். ஆக, அழகென்பது பார்ப்பவரது கண்களைப் பொருத்த விஷயம். எல்லா வகையிலும், தாஹிரிஃ அவரது காலத்தின் சிந்தனைகளுக்கு ஒப்ப மிகவும் அழகானவர் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே.தாஹிரிஃயின் அழகைப் பொருத்த மட்டில் பின்வருமாறு ஏதாவது நடந்திருக்கலாம். ஏதோ ஒரு நாளன்று, எட்டு கோணம் கொண்டதும், அரக்கில் வடித்த இராப்பாடி ஒன்று அதன் மூடியை அலங்கரித்தும், அதே அரக்கால் ஆன ரோஜா ஒன்றைப் பார்த்து அந்த இராப்பாடி கீதம் இசைப்பதாக வடிவமைப்பும் கொண்ட தமது கண்ணாடிக் கைப்பேழையை திறந்திட்ட தாகிரிஃ, அதன் உட்பாகத்தில் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடியில் தெரிந்த தமது உருவத்தைப் பார்த்து, வருங்காலத்திற்கு அளித்திடவென்று தமது உருவ வர்ணனையின் குறிப்புகள் எதும் இல்லை என்பதை பற்றி சிந்தித்திருக்கலாம். தாம் இள வயதிலேயே மறையப்போவது அவருக்கு தெரிந்திருந்து, முதிய பருவம் தனது கோடுகளை அவரது முகத்தில் வரைந்து அதன் அழகை அழிக்கப்போவதில்லை என்பதை அவர் உணர்ந்தும் இருக்கலாம். அல்லது ஒரு வேளை, நீண்ட ஜன்னலின் கீழ் தரையில் மண்டியிட்ட நிலையில், அவரது புத்தகம் ஒரு பக்கம் கிடக்க, அவருடைய முகம் பார்க்கும் கண்ணாடியில் அவர் தமது முகத்தை பார்த்து, லைலி, ஷிரீன், மற்றும் அவர்களைப்போன்ற பலரின் முகங்கள் போல் தமது முகமும் மறைந்திடும் நாள் வரும் என்பதைப் பற்றி அவர் சிந்தித்திருக்கலாம். அதனால், தமது எழுத்தாணிப் பேழையைத் திறந்து, நாணல் எழுதுகோலை வெளியே எடுத்து, காகிதத்தை தமது கையில் வைத்துக் கொண்டு, அவரிடமிருந்து நமக்கு கிடைத்துள்ள, சுருக்கமான அவரது முக லட்சன வர்ணனையை, அவர் வரைந்திருக்காலாம்:

 

‘உதட்டின் ஓரத்தில் ஒரு சிறிய கருப்பு மச்சம் கண்ணங்கள் இரண்டிலும் ஒவ்வொன்றாக கரு நிற கேசச் சுருள்’ என அவர் எழுதிய போது; காகிதத்தின் மீது நாணல் எழுத்தானி கிரீச்சிட்டிருக்கலாம்.தாஹிரிஃ அழகான உடைகளையும் வாசனை திரவியங்களையும் மிகவும் விரும்புவார். நன்கு சாப்பிடவும் விரும்புவார். நாள் முழுவதும் இனிப்புப் பண்டங்கள் உண்ணக்கூடியவர். ஒரு முறை, தாஹிரிஃ மறைந்து பல வருடங்கள் ஆன பிறகு, ஆக்காவிற்கு வருகை தந்திருந்த அமெரிக்கப் பெண்மனி ஒருவர், அப்துல் பஹாவின் விருந்துபசரிப்பு மேஜையில் உட்கார்ந்திருந்தார்; உணவு மிகவும்

 

நன்றாக இருந்தது, அவரும் நிறையவே விரும்பிச் சாப்பிட்டார். ஆனால், பிறகு அவ்வாறு நிறைய உண்டதற்காக அப்துல் பஹாவிடம் மன்னிப்பு கேட்டார். ‘நற்பண்புகளும் மேன்மையும் இறைவன்பால் உண்மையான நம்பிக்கை கொள்வதில் அடங்கி உள்ளனவே அன்றி, கொண்டிருக்கும் பசி பெரிதோ அல்லது சிறிதோ என்பதில் அல்ல...,’ என அவர் அதற்கு மறுமொழி பகன்றார்.

 

மேன்மைமிகு தாஹிரிஃ அவர்களுக்கு பசி நன்கு எடுக்கும். அதைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்ட போது, ‘பாரம்பரியமாக வந்துள்ள புனிதமுறைகளில் விண்ணுலக மக்களின் ஒரு பண்பாக, தொடந்தாற் போல் உணவு உட்கொள்வது இருக்கும்,’ என அவர் பதிலளித்தாராம்.

 

அவர் சிறிய வயதினராக இருந்த போது, விளையாடுவதற்கு பதிலாக, காஃஸ்வின் நகரத்திலேயே பெரும் மத ஆச்சார்யர்களாக இருந்த அவரது தந்தை மற்றும் மாமா ஆகியோரின் சமய விவாதங்களையே செவிமடுத்துக் கொண்டிருப்பார். விரைவில், அதன் பயனாக, கடைசி ஹாடிஸ் வரை இஸ்லாத்தை பற்றி போதிக்க அவரால் முடிந்தது. அவரது சகோதரர் கூறுவது: “அவரது அறிவாற்றலுக்கு பயந்து, அவரது தமையனார்கள் மற்றும் மைத்துனர்கள் அனைவரும் அவரது முன்னிலையில் பேசவே பயப்படுவோம்,” என்பதாகும். இது, எதிலும் முதன்மை வகிக்கும், தமது சகோதரிகள் அனைவரும் அவருக்காக பனிவிடை பரிய காத்திருக்கவும் கூடிய, ஒரு பாரசீக சகேணதரரின் வாயிலிருந்து வருவதாகும்.

 

தாஹிரிஃ வளர வளர, தமது தந்தையும் மாமாவும் வழங்கிய பாடபயிற்சிகள் எல்லாவற்றிலும் கலந்து கொண்டார்; இருநூறோ முன்னூறோ ஆண்கள் நிறைந்திருந்த ஒரே கூடத்தில், ஆனால் ஒரு திரைக்குப் பின்னால் அவர் உட்கார்ந்து, ஒரு முறைக்கு மேல் பலமுறை அந்த இருவரின் விளக்கங்களை அவர் மறுக்கவும் செய்துள்ளார். கூடிய விரைவில் கர்வம் பிடித்த உலாமாக்கள் கூட அவரது கருத்துக்கள் சிலவற்றை ஏற்க வேண்டிய நிலைக்கு வந்தனர். தாஹிரிஃ தமது மைத்துனர் ஒருவரையே மணந்து குழுந்தைகளும் ஈன்றார். இத்திருமணம், திருமண வைபவத்திற்கு முன்பாக மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்காத, மணமகன் முகத்திரையற்ற மணமகளை கண நேரமே பார்க்க அனுமதிக்கப்பட்ட, சாதாரண பாரசீக திருமணமாகவே இருந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் காதல் திருமணங்கள் அவமானத்திற்கு உரியவைகளாக கொள்ளப்பட்டிருந்தன. ஆகவே, இத்திருமணம் நடப்பு முறைகளுக்கு ஏற்பவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லை, இல்லை, யார் மீதாவது மனித அன்பென ஒன்றை அவர் கொண்டிருந்தால், பிற்காலத்தில் அவர் சந்திக்க நேர்ந்த; இறைத்தூதர் முகம்மது அவர்களின் பேரரான இமாம் ஹாசானின் குலத்துதித்த, குஃடுஸாகவே அது இருக்கும் எனவே நாம் நினைக்க விரும்புவோம். மக்கள் குஃடுஸை எளிதில் நேசிப்பர். பார்வையை அவரிடமிருந்து அவர்களால் அகற்றவே முடியாது. ஷிராஸில் அவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வீதிகளின் வழியாக மூக்கில் தாம்புக் கயிற்றோடு வழிநடத்திச் செல்லப்பட்டபோது, தமது யஜமானரின் சமயத்திற்காக பாரசீக மண்ணில் முதன் முதலில் சித்திரவதைக்குள்ளானவர்களில் இவரும் ஒருவர். பின்னாளில் தபார்ஸி கோட்டையில் அகப்பட்டிருந்தோரை வழிநடத்தியவரும் இவரே, மற்றும் அக்கோட்டை, எதிரிகளின் நம்பிக்கை துரோகத்தினால் வீழ்ந்து, அழிக்கப்பட்டபோது, அவரது சொந்த ஊரான பார்புஃருஷில் அவர் ஜனக்கும்பலின் கைகளில் ஒப்படைக்கப்பட்டார். சங்கிலிகளால் பினைக்கப்படடு, கூட்டங்கள் அவரைத் தாக்க, அவர் சந்தை சதுக்கத்தின் வழியாக இழுத்துச் செல்லப்பட்டார். அவர்கள் அவரது உடையை நாசப்படுத்தி அவரை கத்திகளால் கீறிடவும் செய்து, இறுதியில் அவரது உடலை இரண்டாகப் பிழந்து மீதமிருந்ததை நெருப்பிலும் இட்டனர். குஃடுஸ் திருமணமே செய்துகொள்ளவில்லை. அவரது தாயாரும் பல வருடங்களாக அந்த பொண்னாளினைக் காணும் ஆசையில் வாழ்ந்திருந்தார்; குஃடுஸ் தமது மரணத்தை நோக்கி நடந்து செல்கையில், அவர் தமது தாயாரை நினைத்து, “இப்போது என் அன்னை என்னுடன் இருந்து, தமது கண்களாலேயே என் திருமண வைபவ கொண்டாட்டங்களை கண்ணுற முடிந்தால்!” என உறக்கக் கூவினார்.

 

ஆக, தாஹிரிஃ, காற்றில் அசையும் போது கிண்கிணியென ஒலி தரும் மெலிந்த போப்லார் மரங்கள் சூழ்ந்ததும், சாலைகளின் காவி நிற மண்ணின் ஓரமாக தெளிந்த நீரோடைகள் ஓடுவதுமான, வெய்யிலில் சுட்ட செங்கற்களை கொண்ட பொன்னிற காஃஸ்வின் நகரிலேயே வாழ்ந்தார். ஒரு பரந்த முற்றத்தில் அமைந்த, மண் ஜாடியின் நீரின் குளுகுளுப்பை கொண்டதும், தமது விளக்கையும், கைவேளைப்பாடு கொண்ட பருத்தித் துணியில் சுற்றப்பட்ட புஸ்தகங்களையும் வைக்கக்கூடிய மாடங்களும் கொண்ட, பொண் நிற வீட்டிலேயே அவர் வாழ்ந்தார். அவர் பெற்றிருந்த அனைத்தையும் பார்க்கையில் பிற பெண்களாக இருந்திருந் தால் நிச்சயமாக மனதிருப்தி அடைந்திருப்பர், ஆனால் தாஹிரிஃயோ அவற்றினால் அமைதி அடையவில்லை; அவரது மனம் அவரை அலைக்கழித்தது; இறுதியில் அவர் அனைத்தையும் துறக்க வாய்பு ஏற்பட்டு, மலைகளைக் கடந்து பாரசீகத்தை விட்டு வெளியேறி, குவிந்த கோபுரங்கள் சூழ்ந்த கர்பிலா நகரருக்கு உண்மையைத் தேடி சென்றார்.

 

ஓரு நாள் இரவு அவர் கனவொன்று கண்டார். இளைஞர் ஒருவர் ஆகாயத்தில் வீற்றிருந்தார்; அவர் கையில் நூல் ஒன்று இருந்தது, அதிலிருந்து அவர் செய்யுட்களை வாசித்துக் கொண்டிருந்தார். தாஹிரிஃ விழித்தெழுந்து தாம் கண்ட அந்த கனவில் கேட்டவை அனைத்தையும் ஞாபகத்தில் வைத்திருக்க அவற்றை ஒரு காகிதத்தில் எழுதி வைத்தார், பிறகு, பாப் அவர்கள் எழுதிய ஒரு விளக்கவுரையில் அதே வரிகளைக் காண, கனவில் தாம் கண்ட அந்த இளைஞர் பாப் அவர்களே அன்றி வேறு யாரும் இலர் என அறிந்து அவரை ஏற்கவும் செய்தார். அவர் உடனடியாக அதைப் பற்றி பொதுவில் பேசிடவும் செய்தார். அவர் தாம் பாப் அவர்களின் சமயத்தை ஏற்றுக் கொண்டுள்ளதை பகிரங்கப்படுத்தினார். அதன் விளைவு பெரும் வசைமாரியே. அவரது கனவர், தந்தை மற்றும் சகோதரர்கள் அனைவரும் அவர் தமது பைத்தியக்கார செய்கையை கைவிடுமாறு கெஞ்சினார்; அதற்கு மறுமொழியாக, அவர் தமது நம்பிக்கையை பிரகடணப்படுத்தினார். தமது தலைமுறை, தமது மக்களின் வாழ்க்கை முறை, பலதாரங்கள் கொள்ளும் முறை, பெண்கள் முகத்திரை அனிவது, உயர் மட்டங்களில் ஊழல், சமயகுருக்கள் இழைக்கும் தீங்கு ஆகியவற்றின்பால் அவர் வசை மாரிகள் பொழிந்தார். தாஹிரிஃ உசிதப் போக்குடையவரோ, மெதுவாக செயல்படுபவரோ அல்லர். அவர் வெளிப்படையாகப் பேசினார்; எல்லா மட்டங்களிலும் மனித வாழ்வில் புரட்சியை வேண்டினார்; இறுதியில் அவர் மரண வாசலில் நின்ற போது தமது வாயிலிருந்து புறப்பட்ட சொற்களாலேயே அது நேர்ந்தது என்பதையும் அவர் உணர்திருந்தார்.

 

“ஊக்கம் நிறைந்த சுபாவம், தெளிவு மிகுந்த நியாயமான பகுத்தறிவு, குறிப்பிடத்தக்க சமநிலை, வசப்படுத்த முடியாத மனவுறுதி கொண்டவர் தாஹிரிஃ”, என நிக்கோலாஸ் நமக்கு கூறுகின்றார். கோபினோவ் கூறுவது, “அவரது உரையின் குறிப்படத்தகும் தன்மை யாதெனில், அதன் கிட்டத்தட்ட திடுக்கிட வைக்கும் எளிமையே ஆகும், இருந்தும் அவர் உரை நிகழ்த்தும் போது.நாம் நமது ஆன்மாவின் ஆழம் வரை நெகிழ்வுற்றும், வியப்பால் நிரைந்தும், கண்களில் நீர் மழ்கிடவும் செய்வோம்.” எவருமே அவரது வசீகர சக்தியிலிருந்து தப்பிக்க முடியாதென நபில் கூறுகிறார்; ஒரு சிலரே தொற்றிக்கொள்ளும் அவரது சமய நம்பிக்கையிலிருந்து தப்பிக்க முடியும். அனைவருமே அவரது சீலத்தின் அசாதாரண தன்மைகளுக்கு சாட்சியம் கூறி, அவரது வியப்பூட்டும் இயல்பால் ஆச்சர்யமடைந்து, அவரது தூய்மையான சமயநம்பிக்கைக்கு சாட்சியமும் பகர்வர்.

 

மிகவும் குறிப்பிடத்தக்கவையாக தாஹிரியைப் பற்றிய அப்துல் பஹாவின் நினைவுகள் உள்ளன. அவர் சிறுவராக இருந்த போது ஒரு நாள், தாஹிரிஃ அவரை தமது மடியில் உட்கார்த்தி வைத்து, கதவிற்கு வெளியே உட்கார்ந்திருந்த உயர்திரு சைய்யிட் யாஹ்யா-இ-டாராபியுடன் உரையாடிக்கொண்டிருந்தார். சைய்யிட் அவர்கள் பெரும் கல்விமான். உதாரணமாக முப்பதாயிரம் இஸ்லாமிய மரபுக் கூற்றுகளை மனனம் செய்து வைத்திருந்தார்; திருக்குரானின் மையக் கூற்றுகள் அனைத்தையும் தெரிந்து வைத்திருந்ததோடு, பாப் அவர்களின் உண்மையை உணர வைக்க அப்புனித நூலில் இருந்து தகுந்த மேற்கோள்களை எடுத்துக்காட்டும் திறமை பெற்றவர். தாஹிரிஃ அவரைக் கூவி அழைத்து, “ஓ யாஹ்யா! நீர் ஒரு உண்மையான கல்விமானாக இருந்தால், உமது நம்பிக்கையை மெய்ப்பிப்பவைகள் சொற்கள் அன்றி அவை செயல்களாக இருக்கட்டும்,” எனக் கூறினார். சைய்யிட் அதை செவிமடுத்தார், வாழ்க்கையில் முதன் முதலாக அதை புறிந்துகொள்ளவும் செய்தார்; பாப் அவர்களின் சுயஉரிமை கோன்ரிக்கைகளாக இருப்பனவற்றை நிரூபிப்பது மட்டும் அன்றி, தாம் தம்மையே தியாகம் செய்து சமயத்தை பரவச் செய்ய வேண்டும் என்பதையும் உணர்ந்தார். அவர் எழுந்து வெளியே சென்றார், பல இடங்களுக்கு பிராயணம் செய்து சமயத்தை போதித்தார், இறுதியில் நய்ரீஸ் நகரின் செஞ்சாலைகளில் தமது உயிரையும் தியாகம் செய்தார். அவர்கள் அவரது சிரசை துண்டித்து, அதற்குள் வைக்கோலை தினித்து, நகருக்கு நகர் அதை ஊர்வலமாக கொண்டு சென்றனர். தாஹிரி பாப் அவர்களைக் கண்டதே இல்லை. அவர் பாப் அவர்களுக்கு தமது அன்பை வெளிப்படுத்தும் ஒரு செய்தியை அனுப்பினார்: “பிரகாசிக்கும் உமது வதனத்தின் ஒளி பளிச்சிட, உமது திருமுகத்தின் ஓளிக் கதிர்கள் உயரே பாய்ந்தன; நான் உங்கள் பிரபு அல்லவா எனும் வார்த்தையை கூறுங்கள், அது நீரே, நீரே” என நாங்களும் மறுமொழி பகர்வோம். நான் அல்லவா எனும் தாரையின் வரவேற்பொலியால், துன்ப முரசுகள்தான் சப்தமாக முழங்கிட என் இதய வாசலருகே, காலடி பதித்து அழிவுப் படைகளும் கூடாரம் கொண்டன...“

 

அவர் பாப் அவர்களின் ஜோசப்பின் சூரா பற்றிய விளக்கவுரையை பாரசீக மொழிக்கு மொழி மாற்றம் செய்யும் காரியத்தையும் மேற்கொண்டார். பாப் அவர்களும் தாஹிரியை, அந்த அமரத் திருக்கூட்டத்தினரில் ஒருவராக, உயிர் அட்சரங்களில் ஒருவராக, நியமிக்கவும் செய்தார். சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக, இறை தூதர் முகம்மது அவர்களின் பேரர் இமாம் ஹுசேய்ன் தாகத்தாலும் காயங்களாலும் வீழ்ந்துபட்ட, கர்பிலாவில் அவரை இப்போது கண்ணுறுகின்றோம். அவரது (இமாம் ஹுசேய்னின்) வருடாந்திர விண்ணேற்ற நாளன்று, நகரமே அவரது நினைவால் கருப்பு உடையனிந்து அவருக்காக கதறியழும்போது, இவர் பாப் அவர்களின் பிறந்த நாளை கொண்டாட விழாக்கால உடையனிந்து நிற்கின்றார். இது ஒரு புதிய நாளென அவர்களிடம் கூறுகின்றார்; பழைய வேதனைகள் மறந்துவிட்டன. பிறகு ஹௌடா எனப்படும் குதிரை மேல் பூட்டிய திரைகளிடப்பட்ட ஒரு வித பல்லக்கில் பாக்தாத் சென்று தமது போதனையை தொடர்ந்தார். இங்கு, ஷியா, சுன்ன, கிருஸ்தவ மற்றும் யூத சமூகத்தைச் சார்ந்த தலைவர்கள் அவர் செல்லும் தவறான வழியை அவருக்கு விளக்க முற்பட்டனர்; ஆனால் அவரோ பதிலுக்கு அவர்களை பிரமிக்கச் செய்தார், நிலை குலைந்து ஓட வை த்தார், பிறகு அதன் பயனாக துருக்கிய பிரதேசங்களிலிருந்து வெளியேறும்படி ஆணையும் இடப்பட்டார். பின் பாரசீகம் நோக்கி பிரயாணம் செய்தார், வழி நெடுக பாப் அவர்களுக்கு விசுவாசிகளை திரட்டிடவும் செய்தார். எங்கெங்கும், அரசபுத்திரர்களும், உ லாமாக்களும், அரசாங்க அதிகாரிகளுமென அவரைப் பார்க்க திரண்டனர்; பல பள்ளிவாசல்களின் பீடங்களிலிருந்து அவருக்கு வாழ்த்துரைகள் எழுந்தன; அதில் ஒன்று, “அதி உயர்ந்தவை என நாம் அடைந்துள்ள அனைத்தும் அவரது பரந்த அறிவிற்கு முன் னால் ஒரு துளிக்குச் சமமே” என்பதாகும். இது, ஊமைகளாகவும், வெறும் நிழல்களாகவும், தங்கள் வாழ்க்கைச் சக்கரத்தை முகத்திரைக்குப் பின்னால்: திருமணமும், நோயும், குழந்தைப் பேறும், சாதம் கிண்டுவதும், ரொட்டிகள் சுடுவதும், வெல்வெட் துனியில் இலைகள் தைப்பதும், பிறகு ஊர் பேர் தெரியாமல் இறந்து போவதும் என இருக்கும் பெண்கள் நிறைந்த ஒரு நாட்டில் பிறந்த ஒரு பெண்ணைப் பற்றி கூறப்பட்டதாகும்.

 

கர்பிலா, பாக்தாத், கிர்மான்ஷா, பிறகு ஹமடான் நகர்களுக்கு அவர் விஜயம் செய்தார். முடிவில் அவரது தந்தை அவரை காஃஸ்வின் திரும்பும்படி ஆணையிட்டார். அவர் காஃஸ்வின் திரும்பியவுடன், அவரது கனவனான முஜ்டாஹிட், அவரை தமது வீட்டிற்கு வந்து தம்மோடு வாழ உத்தரவிட்டான். அதற்கு அவரது மறுமொழியாக: “அகம்பாவமும் கர்வமும் மிக்க எனது உறவினனிடம் கூறுங்கள்... ” “என் விசுவாசமான துணைவனாகவும் சகாவாகவும் இருப்பதே உமது ஆவலாக இருந்திருந்தால் நீர் என்னை கர்பிலாவில் சந்திக்க விரைந்து வந்து, காலால் நடந்து என் பல்லக்கை காஃஸ்வின் வரை வழி நடத்தி வந்திருப்பீர். நானும் அக்கரையின்மை எனும் உமது துயிலிலிருந்து உம்மை எழுப்பி உண்மைக்கான வழியையும் உமக்கு.காண்பித்திருப்பேன். ஆனால் இது நடக்கப்போவதில்லை... இம்மையிலும் சரி மறுமையிலும் சரி நான் உம்முடன் இனைந்திருப்பதென்பது ஆகாது. என் வாழ்விலிருந்து உம்மை நிரந்தரமாக வீசி எறிந்துவிட்டேன்.”

 

அதன் பிறகு அவரது மாமாவும் கனவனும் அவரை சமயத் துரோகி என பிரகடனம் செய்து, அவருக்கெதிராக இரவும் பகலுமாக சதி செய்தனர். ஒரு நாள் காஃஸ்வின் வழியாக ஒரு முல்லா போய்க்கொண்டிருந்தார், அப்போது முரடர்கள் சிலர் ஒரு மனிதனை தெரு வழியாக இழுத்துச் செல்வதைக் கண்டார்; அவர்கள் அந்த மனிதனின் தலைப்பாகையை தாம்புக்கயிறு போல் அவரது கழுத்தில் கட்டி அவரை இம்சித்துக் கொண்டிருந்தனர். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோர், அந்த மனிதன், பாப் அவர்களின் சீடர்கள் இரு வரைப் பற்றி புகழ்ந்து பேசி விட்டதாக தெரிவித்தனர்; அதற்காக தாஹிரிஃயின் மாமா அவரை ஊரைவிட்டு வெளியேற்றுகிறார் எனவும் தெரிவித்தனர். அந்த முல்லா மனக் கிலேசமுற்றார். அவர் ஒரு பாப்’இ அல்ல, ஆனால் இம்சிக்கப்பட்ட அந்த இருவரையும் அவர் நேசித்தார். அவர் கத்திகள் செய்யப்படும் சந்தையடிக்குச் சென்று குத்துவாள் ஒன்றையும் மிகக் கூர்மையான ஈட்டி முனை ஒன்றையும் வாங்கிக்கொண்டு, அவற்றை உபயோகிக்க உசிதமான நேரத்திற்காக காத்திருந்தார். ஒரு நாள் காலைப்பொழுதில், மூதாட்டி ஒருவர் நொண்டிக் கொண்டு பள்ளிவாசலில் நுழைந்து, ஒரு கம்பளத்தை விரித்தார். அதன் பிறகு தாஹிரிஃயின் மாமா அதன் மீது தனியே பிரார்த்தனை செய்வதற்கு வந்தார். அவர் நெடுஞ்சான் கிடையாக தரையில் படுத்தபோது நமது முல்லா ஓடிச் சென்று அவர் கழுத்தில் ஈட்டி முனையை பாய்ச்சினார். அவர் ஓலமிட, முல்லா அவர் உடலைத் திருப்பிப் போட்டு, குத்துவாளை எ டுத்து அவர் வாயில் ஆழமாக குத்தி இரத்தம் பீரிட்டோட அவரை பள்ளிவாசலின் தரையிலேயே கிடக்க விட்டுச் சென்றார்.

 

அந்தக் கொலையால் காஃஸ்வின் நகரமே அல்லோலகல்லோலமாகியது. அந்த முல்லா தானே கொலை செய்தாரென ஒப்புக்கொண்டும், அவர்தான் கொலை செய்தார் என கொலையுண்டவர் சாவதற்கு முன் வாக்குமூலம் கொடுத்த போதும், ஒரு பாவமும் அறியாத பல மக்கள் குற்றஞ்சாட்டப்பட்டு கைதிகளாக்கப்பட்டனர். தெஹரானில், பஹாவுல்லா ஒரு சில நாட்கள் கொண்ட சிறை தண்டனையான தமது முதல் சித்திரவதையை அனுபவித்தார் ஏனெனில் அவர் இவர்களுக்காக வாதாடி அவர்களுக்கு உணவும் பணமும் கொடுத்தாராம். இறந்தவரின் வாரிசுகள் ஒன்றுமறியாத ஒரு அராபியரை, கர்பிலாவைச் சேர்ந்த ஷேய்க் சாலே என்பவரை, கொண்றனர். தாஹிரிஃயின் ரசிகரான இவரே பாரசீக மண்ணில் இறைவனின் சமயத்திற்காக இறந்த முதல் மனிதராவார்; அவரை தெஹரானில் கொன்றனர்; அவர் தமது கொலயாளியை தான் மிகவும் நேசிக்கும் ஒரு நண்பரை வரவேற்ப தைப் போல் வரவேற்று, தமது இறுதி வார்த்தைகளாக, “எனது எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையுமாக உள்ளவரே! உங்களைக் கண்ட வினாடி முதல் மனிதர்களின் எதிர்ப்புகளையும் நம்பிக்கைகளையும் நான் கைவிட்டுவிட்டேன்,” எனும் வார்த்தைகளை விட்டுச் சென்றார். மீதமிருந்த மற்ற கைதிகள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டதாகவும், புதைப்பதற்கு அவர்கள் உடல்களின் ஒரு பகுதி கூட மிஞ்சவில்லை எனவும் கூறுப்படுகிறது. இருந்தும் இறந்து போன முஜ்டாஹிடின் வாரிசுகள் மன திருப்தி அடையவில்லை. அவர்கள் தாஹிரிஃயை குற்றம் சாட்டினர். அவரை அவரது தந்தையின் வீட்டில் அடைத்து வைத்து, அவரை கொலை செய்யவும் ஆயத்தமானார்கள்; ஆனால் அவரது காலம் கனியவில்லை. அப்போது ஒரு நாள் பிச்சைக்கார கிழவி ஒருத்தி வாசலில் நின்று உணவுக்காக ஓலமிட்டாள்; ஆனால் அவள் பிச்சைக்காரியல்ல பஹாவுல்லாவால் அனுப்பப்பட்ட ஒருவர் மூன்று குதிரைகளுடன் காஃஸ்வின் கோட்டைவாசலருகே நிற்ப தாக தகவல் கொண்டுவந்தவள். தாஹிரிஃ அப்பெண்மணியுடன் தப்பித்துச் சென்று, காலைப்பொழுதிற்குள் தெஹரானை அடைந்து, பஹாவுல்லாவின் வீட்டையும் சேர்ந்தார். இரவு முழுவதும், அவர்கள் அவரைத் தேடினர், ஆனால் அவர் மறைந்துவிட்டார்.

 

இப்போது காட்சி பாடாஷ்ட் பூங்காவின்பால் திரும்புகிறது. பசுமையான தோட்டங்கள், அவற்றை மறைத்திடும் மண்சுவர்கள், பாலையின் மீது ஓடிய ஒரு நீரோடை, அதற்கப்பால், வானளாவும் உயர்ந்த மலைகள். “துன்பம் தரும் மலை” என பாப் அவர்களால் வ ருணிக்கப்பட்ட ஷிஃரீக்கில் பாப் அவர்கள் சிறையில் இருந்தார். அவர் வாழ இரண்டு குறுகிய வருடங்களே எஞ்சியிருந்தன. இப்போது பஹாவுல்லா, முன்னனி பாப்’இக்கள் என எண்பத்தொரு பேருடன் பாடாஷ்ட் வந்து சேர்ந்தார். அவரது ஸ்தானம் இதுகாரும் அறியப்படாமலேயே இருந்தது. பாப் அவர்களால், முகம்மது அவர்களால், இயேசுவால், ஸாராதுஸ்ட்ராவால், மற்றும் அனேகரால் வாக்களிக்கப்பட்டவர் அவர். நூற்றாண்டுகள் தோறும் தூதருக்குப்பின் வந்த தூதர்களான அவர்களால் முன்கூறப்பட்ட அவர் அறியப்படாமலேயே இருந்தார். அவரது நாமம் உலகம் முழுவதும் நேசிக்கப்படப் போகின்றது என படாஷ்ட்டில் உள்ளோர் எப்படி அறிந்திருக்க முடியும்? உலக முழுவதுமுள்ள நகரங்களில்; சான் பிரான்சிஸ்கோ, அடிலேய்ட், என முன் கேட்டறியப்படாத வினோதமான பெயர்களைக் கொண்ட இடங்களில்? அனுமானிக்கப்படாத ஆண்களும் பெண்களுமென அவரது நாமத்தை சேவிக்க முன்னெழப்போவோரை அவர்கள் எவ்வாறு கண்டிருக்க முடியும்? ஆனால் தாஹிரிஃ கண்டார்..“அவரது முகத்தில் இருந்து பளிச்சிடும் ஒளியில், விட்டில்களைப் போல் நடனமாடிடும் அவரது நேசர்களின் ஆன்மாக்களை பாருங்கள்” என அவர் எ ழுதினார். இந்த பாடாஷ்ட் எனும் ஊரில்தான் பழைய விதிகள் முறிக்கப்பட்டன. இந்நாள் வரை பாப்’இக்கள், அவர்களது தலைவர் இஸ்லாத்தை மறுஸ்தாபிதம் செய்யவே வந்துள்ளார் என நினைத்தனர்; ஆனால் இங்கோ பழைய விதிகள் ஒவ்வொன்றாக மறைவதை கண் ணுற்றார்கள். அவர்களது குழப்பமும், மனக் கிலேசமும், அதிகரித்துக் கொண்டே போனது, ஒரு சிலர் தங்களின் பழைய மார்க்கத்தை இருகப் பிடித்துக்கொண்டு புதிய வழியிற் செல்ல இயலாமலும் நின்றனர். பிறகொரு நாள், அவர்கள் பஹாவுல்லாவுடன் ஒன்றாக உட்கார்ந்திருந்த வேளை, அதிரடி போன்ற நிகழ்ச்சி ஒன்று நடந்தது. தாஹிரிஃ அவர்கள் எல்லோருக்கும் முன்னால் வந்து நின்றார். ஆனால் அவர் எப்படி வந்து நின்றார்? அவர்களுக்கு முன் அவர் தமது முகத்திரை இல்லாமல் தோன்றினார்! தாஹிரிஃ, புனிதத் தாஹிரிஃ, எவருடைய நிழலைக் கூட பார்ப்பது தவறு என மக்கள் நினைத்தனரோ; தமது காலத்தில் பெரு மதிப்புடன் திகழ்ந்த அந்த தாஹிரிஃ, தமது முகத்தை மறைத்த திரையை அகற்றிவிட்டு, அவர்களுக்கு களிப்பூட்ட வந்த ஒரு நடன மாதைப்போல் அவர்கள் முன் நின்றார். மின்னும் அவரது உடல் நிறத்தை, கூறிய இரு விழிகளின் மேல் இரு வாட்களைப் போல் ஒன்றினைந்திருந்த அவரது புருவங்களை, அவர்கள் கண்டனரே! ஆனால் அவர்களால் அவரை பார்க்க முடியவில்லை. ஒரு சிலர் தங்கள் முகங்களை தங்கள் கைகளால் மூடிக் கொண்டனர், ஒரு சிலர் தங்கள் ஆடை களை தலை மேல் போட்டு மூடிக் கொண்டனர். ஒருவர் தமது கழுத்தை தாமே அறுத்துக் கொண்டு இரத்தம் கசிந்த நிலையில் வீரிட்டவாறு ஓடிச் சென்றார். பிறகு, அங்கு மீதமிருந்தோரைப் பார்த்து உரத்த குரலில் தாஹிரிஃ பேசினார், அப்போது அவரது உரை திருக்குரானின் வார்த்தைகளை ஒத்திருந்தது எனக் கூறுவர். “இந்த நாள், இந்த நாள் கடந்த காலங்களின் தளைகள் உடைத்தெறியப்பட்டுள்ள நாள் காஃய்யிம் உச்சரிக்கவிருக்கும், பூவுலகின் குடித்தலைவர்களையும் உயர்மட்டத்தில் உள்ளவர்களையும் மருண்டோடச் செய்யக்கூடிய அந்த வார்த்தை நானே!” அவர், மேலும், எவ்விதம் பழைய விதிகள் புதிய விதிகளின்பால் வழிவிட்டுச் செல்கின்றன என்பது பற்றி கூறி, புனித நூலில் இருந்து: “மெய்யாகவே, பூங்காவனங்களிலும், ஆறுகளின் இடையிலும், ஆற்றல் மிகு அரசரின் முன்னிலையில், பக்தியுடையோர் உன்மையின் ஆசனத்தில் வீற்றிருப்பர்.” எனும் தீர்க்கதரிசனமான வார்த்தைகளோடு தமது உரையை முடித்தார். தாஹிரிஃ, பஹாவுல்லா பிறந்த அதே ஆண்டில்தான் பிறந்தார். அவர் கொலை செய்யப்படும் போது அவருக்கு முப்பத்து ஆறே வயது. ஐரோப்பிய கல்விமான்கள் அவரை, அவரது ஒரு பெயரான குர்ராத்துல் அய்ன், ‘கண்களின் ஆறுதல்’ எனும் பெயரால் நெடுங் காலமாக அறிந்து வைத்துள்ளனர். பாரசீகர்கள், மொழிமாற்றத்திற்காக காத்திருக்கும் அவரது கவிதைகளைப் பாடுகின்றனர். பல நாடுகளில் உள்ள பெண்கள் அவரைப் பற்றி கேள்விப்பட்டு, அவர் மூலமாக மனோபலமும் அடைகின்றனர். ஆண்கள் அவரை வாழ்த்திப் பேசியுள்ளனர். கோபிநோவ், அவரது அழகை வருணிக்கும் போது, “(ஆனால்) இந்த இளம் பெண்ணின் மனமும் சீலமும் அதைவிட (அவரது அழகைவிட) பன்மடங்கு சிறப்பு வாய்ந்தவை” எனக் கூறியுள்ளார். சர் பிராண்சிஸ் யங்ஹஸ்பன்ட் கூறுவது: “... அவர், செல்வங்கள், குழந்தைகள், பெயர் மற்றும் ஸ்தானம் ஆகியவற்றை தமது தலைவரின் சேவைக்காக தியாகம் செய்தார்... பாரசீக மொழியில் அவரது கவிதைகளே மன நெகிழ்ச்சி மிகச் செய்பவைகளாக இருந்தன.” திரு ஜி. ரி. செய்ன், “. . .அவரது அக்னியைப் போன்ற உற்சாகத்தினாலும் அவரது முற்றிலும் உலகைத் துறந்த போக்கினாலும் நாம் முதன்மையாகக் கவரப்படுவோம். உண்மையில், குஃடுஸ்ஸிற்கு இருந்தது போன்றே... இந்த உலகம் தாகிரிஃக்கும் ஒரு கைப்பிடி மண்ணின் மதிப்பே கொண்டிருந்தது”. இப்போது நாம் அவரை தெஹரான் நகரமுதல்வரின் இல்லத்தில் நடக்கும் ஒரு திருமணத்தில் காண்கின்றோம். அவரது நெற்றியில் விழும் கேசச் சுருள்கள் குட்டையாக உள்ளன, அவர் தமது தலையில், முகவாய்க்கட்டையின் கீழ் ஊசியினால் ஒன்று சேர்க்கப்பட்ட, தோற்பட்டை வரை விழும் ஒரு பூப்போட்ட கைத்துனியை அனிந்துள்ளார். இடையை இருகப் பிடிக்கும் உடை தரை வரை நீண் டுள்ளது; அது கைத்தறியினால் ஆனது, சித்திரப்பூ வேளைப்பாடு கொண்டதாகவும், ஜீவமரத்தின் வடிவம் அதில் வரையப்பட்டும் உள்ளது. அவரது சிறிய செருப்புகள் விரல் நுனியின் மேற்பக்கமாக வளைந்துள்ளன. சுகந்த வாசனை திரவியங்கள் அனிந்த மெல்லியலாள்களெனும் பெண்கள் கூட்டம் அவரைச் சுற்றி தள்ளிக்கொண்டும் சலசலத்துக் கொண்டும் உள்ளது. அவர்கள் குவிந்த இனிப்புப் பண்டங்கள் அடங்கிய வெள்ளித் தட்டுகள் உள்ள தங்கள் மேஜைகளை விட்டு வந்துவிட்டனர். திருமண வைபவத்திற்காக அமர்த்தப்பட்ட, தங்கள் கைவிரல்களை சொடுக்கியும் இடுப்பை ஒடித்தும் ஆடக்கூடிய நடனமணிகளை அவர்கள் மறந்துவிட் டனர். விருந்தினர்கள், தாஹிரிஃ கூறுவதை, இங்கு நகரமுதல்வரின் இல்லத்தில் கைதியாக உள்ளவர் கூறுவதை செவிமடுத்துக் கொண்டுள்ளனர். அவர் புதிய சமயத்தைப் பற்றி, அது கொண்டுவரக் கூடிய புதிய வாழ்வு முறையைப்பற்றி அவர்களுக்கு கூறுகின்றார். அவர்கள் நடணப்பெண்களையும் இனிப்புப் பண்டங்களையும் மறந்தே விட்டிருந்தனர். எவருடைய இல்லம் தாஹிரிஃக்கு சிறையாக இருந்ததோ, அந்த மாஹ்முட் காஃன் ஆகிய நகரத் தலைவர், ஒரு வினோதமான முடிவை அடைந்தார். இந்த மாஹ்முட் காஃன் தாஹிரிஃ அவரது இல்லத்தில் கைதியாக இருந்தகாலத்தில் அவர்பால் அன்பாக ந டந்தும் அவருக்கு நம்பிக்கை அளிக்கவும் செய்தார் என கோபினோவ் கூறுகின்றார். அவர் மேலும் கூறுவது, தாஹிரிஃக்கு இவ்வித நம்பிக்கை அளிப்பு எதுவும் தேவைப்படவில்லை, என்பதாகும். மாஹ்முட் காஃன் தாஹிரிஃயின் சிறைவாசத்தைப் பற்றி பேசும்போதெல்லாம், அவர் குறுக்கிட்டு, தமது சமயத்தை பற்றியே போதிப்பார்; உன்மை மற்றும் பொய்யைப் பற்றி கூறுவார்; எது நிஜம் எது மாயை என்பது பற்றி விவாதிப்பார். ஒரு நாள் காலை மாஹ்முட் காஃன் அவருக்கு நற்செய்தி ஒன்றை கொண்டுவந்தார்; நாட்டுப் பிரதமரிடமிருந்து; அவர் பாப் அவர்களின்பாலான தமது நம்பிக்கையை துறக்க வேண்டியதுதான், பிரதமர் அவர்கள் அதை நம்பாவிட்டாலும்கூட அவரை உடனேயே விடுதலை செய்துவிடுவார் எனும் செய்தியே அது. “இந்த அநித்தியமான, மதிப்பற்ற உடலை, மேலும் ஒரு சில நாட்கள் உயிருடன் வைத்திருப்பது எனும் இந்த வெற்று காரணத்திற்காக... நான் எனது நம்பிக்கையைத் துறப்பேன் என கனவு காண வேண்டாம்,” என பதிலளித்தார். “ஓ மாஹ்முட் காஃனே! நான் சொல்லப்போவதை இப்போது நீர் கேளும்... நீர் எவருக்கு சேவை செய்கின்றீரோ, அந்த யஜமான் உமது உற்சாகத்தை ஈடு செய்யப்தோவது இல்லை; மாறாக, அவரது உத்தரவின் பேரில் நீர் கொடுமையாக அழியப்போகின்றீர். உமது இறுப்பிற்கு முன், உண்மையான அறிவின்பால் உமது ஆன்மாவை ஏற்றம் அடையச் செய்ய முயற்சிப்பீர்.” என தெரிவித்தார். அதை நம்பாமல் நகரத்தலைவர் அந்த அறையை விட்டகன்றார்.

 

ஆனால் 1861-இன் பஞ்சகாலத்தில் மக்கள் செய்த புரட்சியில் தாஹிரிஃயின் கூற்று மெய்ப்படுத்தப்பட் டது. அந்த உணவுப் பஞ்சத்தால் ஏற்பட்ட புரட்சி; மற்றும் மாஹ்முட் காஃனின் இறப்பு பற்றிய நேரடி சாட்சியம்: “தெஹரானில் ஏற்பட்ட கொந்தளிப்பு ஒரு முடிவை நெருங்கியது, கடக்க முடியாதபடி இருந்த சாலைகளினால் உணவு மக்களைச் சென்று அடையவில்ல. ஐரோப்பியர் எவரேனும் சாலையில் தென்பட்டவுடன் பஞ்சத்தால் அடிபட்ட பெண்கள் அவரைச் சூழ்ந்து உதவி கோரி முறையிட்ட னர்... மார்ச் முதல் நாளன்று... பாரசீக தலைமை செயலாளர், முகம் வெளுத்தும் நடுங்கியவாறும் உள்ளே வந்து, புரட்சி ஒன்று வெடித்து விட்டதாகவும், கலாந்தர் எனப்படும் நகரத் தலைவர் அப்போதுதான் கொல்லப்பட்டுள்ளதாகவும், சந்தை தெருக்கள் வழியாக மக்கள் அவரது உடலை முழு நிர்வாணமாக இழுத்து வருகிறார்கள் எனவும் தெரிவித்தார். விரைவில் ஒரு பேரிரைச்சல் கேட்டது, சன்னல் வழியாக பார்த்தபோது, தெரு முழுவதும் மிகவும் கொந்தளித்துப் போயிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், கொலைக் கள த்தை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டும், அங்கு நிர்வாணமாக தொங்கவிடப்பட்டும் இருக்கப்போகும் மூன்று பிணங்களைச் சூழ்ந்திருந்தனர். அவ்விஷயத்தைப் பற்றி தீர விசாரித்த போது, பிப்ரவரி 28-ஆம் திகதி அன்று, வேட்டையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த ஷா மன்னனை, உணவு பற்றாக்குறை பற்றி கோஷமிட்டும், அவரது கண் முன்னேயே ரொட்டிக் கடைகளை தீயிட்டும் சூரையாடிக் கொண்டும் இருந்த பல ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம் சூழ்ந்தது... அடுத்த நாள், மார்ச் முதல் நாளன்று... ஹாஜி பாபாவின் ஸைனாப் வீசியெரியப்பட்ட கோபுரத்தின் மீது ஷா மன்னன் ஏறி தூரதர்சினியைக் கொண்டு மக்கள் கொந்தளிப்பை பார்த்துக் கெ ணண்டிருந்தான். நன்கு உடையனிந்தும், பல வேலையாட்களுடனும் இருந்த கலாந்தர் கோபுரத்தின் மீது தானும் ஏறி, அவ்வித நிலை ஏற்படும் வரை நடவடிக்கை எடுக்காத, தன்னை கடிந்து கொண்ட அரசனோடு சேர்ந்து தானும் நின்று கொண்டிருந்தான். அரசனின் கண்டிப்பை பொறுக்க மாட்டாத கலாந்தர், அந்த புரட்சியை தானே அடக்கிக் காண்பிக்கின்றேன் என சவாலிட்டு, கீழே இறங்கி ஒரு பெரும் தடியால் பல பெண்களை தன் கைகளாலேயே தாக்கினான். அதை தாங்கமுடியாமல், தாங்கள் பட்ட காயங்களை அரசனிடம் காண்பித்து அதற்கு நியாயம் கேட்டு பெண்கள் கூட்டம் அரசனிடம் வந்தது. அரசன் கலாந்தரை அழைத்து, “என் கண் முன்னாலேயே நீர் எமது பிரஜைகளிடம் இவ்விதம் நடந்து கொள்ளும் போது உமது இரகசியச் செயல்கள் எல்லாம் இன்னும் எவ்வ ளவு கொடியனவைகளாக இருக்கக் கூடும்?” எனக் கூறினான். பிறகு தமது பணியாட்கள் பக்கம் திரும்பி, “இவனை கால்கட்டைகளால் பினைத்து பாஸ்டினாடோவைப் பிரயோகியுங்கள்” என ஆணையிட்டான். அந்த கட்டளை நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் போதே “தனாப்! கயிறு, கழுத்தை நெறித்துக் கொல்லுங்கள்,” எனும் அந்த பயங்கர வார்த்தையை அரசன் உச்சரித்தான்.

 

ஓரிரவு கலாந்தரின் மனைவியை தமது அரைக்கு தாஹிரிஃ அழைத்தார். அவர் மின்னும் வெண்மை கொண்ட வெள்ளை பட்டினால் ஆன ஒரு ஆடையை அனிந்து கொண்டிருந்தார்; அவரது கேசம் ஒளிர்ந்தது, அவரது கண்ணங்கள் வெள்ளைப் படுத்தப்பட்டு மென்மையாக வெளுத்திருந்தன. அவர் சுகந்த மணம் வீசும் வாசனை திரவியங்கள் அனிந்திருந்தார், அதனால் அந்த அரையே மணம் வீசியது. “நான் எனது அன்பரைக் காண தயாராகிக் கொண்டிருக்கின்றேன்,” எனக் கூறினார். “... நான் சிறைபடுத்தப்பட்டும், தியாகமரணம் அடையவும் கூடிய நேரம் விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது” என்றார். அதன் பின், அவர் அந்த பூட்டிய அறையினுள்ளேயே முன்னும் பின்னுமாக நடந்துகொண்டும், பிரார்த்தனைகளை ஓதிக்கொண்டும் இருந்தார். கதவிற்கு வெளியே கலாந்தரின் மனைவி, உயர்ந்தும் தாழ்ந்தும் கொண்டிருந்த அவரது குரல் ஒலியை செவிமடுத்து, கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். “இறைவா, இறைவா, அவரது உதடுகள் தொடத் துடிக்கும் அந்தக் கோப்பையை அவரிடமிருந்து அப்பால் கொண்டு செல்லுங்கள்,” எனக் கதறினாள். நாம் அந்த பூட்டிய கதவை உடைத்து உள்ளே செல்ல முடியாது. அந்த கடைசி சில மணி நேரங்கள் எப்படி இருந்திருக்கும் என்பது பற்றி நாம் ஒரு யூகமே செய்யமுடியும். அது அவரது சொத்துக்களை பிரிப்பதற்கோ, நண்பர்களுக்கு பிரியாவிடை சொல்வதற்கோ என்றில்லாமல், மக்கள் அனைவருடைய ஆண்டவரும், அனைவராலும் நேசிக்கப்படுபவருமான அந்த ஒரே கடவுளுடன் தொடர்பு கொள்வதற்காகவே இருந்திருக்கும். அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டோர், அவரது புனித ஆன்மாக்கள், மற்றும் அவரது தூதர்கள், அனைவரும் அங்கு இருந்தனர்; இது போன்ற நேரங்களில் அவர்கள் ஆஜராகியிருப்பார்கள்; ஊனைத் தாண்டி அவர்களுடன் தாஹிரிஃயும் ஆன்மீக நிலையில் சேர்ந்திருந்தார். அவர்கள் அவரை அழைத்துச் செல்ல வந்த போது, அவர் முகத்திரையிட்டுக் கொண்டு தயாராகவே இருந்தார். “என்னை ஞாபக த்தில் வைத்துக் கொள், எனது களிப்பில் நீயும் சந்தோஷப்படு” என போகும் போது கூறிச் சென்றார். அந்தப் பாரசீக இருளில் அவர் அவர்கள் கொண்டு வந்திருந்த குதிரை மீதேறிச் சென்றார். நட்சத்திர ஒளி மரங்களின் மீது நன்கு விழுந்தது. இராப்பாடிகளின் சலசலப்பு மிகுந்திருந்தது. ஒட்டகங்களின் கழுத்தில் கட்டியிருந்த மணியின் ஓசை ஏதோ ஒரு திசையில் ஒலித்தது. குதிரைகளின் குழம்பொலி சாலையின் மண்ணில் தடதடத்தது. இப்போது தோட்டத்தில் இருந்த வீரர்களின் போதை மிகுந்த சிரிப்போலி கேட்கின்றது. அவர்களது இருக்கமான முகங்களில், விருந்து மேஜை விரிப்புகளில், கொட்டிக் கிடந்த மதுவின் மீது, வர்த்திகளின் ஒளி வீசியது. தாஹிரிஃ அவர்கள் தலைவன் முன் நின்ற போது அவன் அவரை ஏறிட்டு பார்க்கக் கூட இல்லை. “இங்கிருந்து போங்கள், அப்பெண்ணை கழுத்தை நெறித்துக் கொன்றுவிடுங்கள்” எனக் கத்தினான். பிறகு அவன் பார்வை அவனது மதுக் கோப்பை மீது சென்றது. தாஹிரிஃ தம்மோடு ஒரு பட்டுக் கைத்துனியை கொண்டு வந்திருந்தார்; இந்த சந்தர்ப்பத்திற்காகவே அவர் அதை நெடுங்காலமாக சேர்த்து வைத்திருந்தார். இப்போது, அதை, அவர் அவர்கள் கையில் கொடுத்தார். அவர்கள் அதைக் கொண்டு அவரது கழுத்தை சுற்றி இரத்தம் பீரிடும் வரை நெறித்தனர். அவரது உடல் அசைவுகள் நிற்கும் வரை அவர்கள் காத்திருந்தனர், பிறகு அந்த உடலை பாதி தோண்டப்பட்ட தோட்டக் கிணறு ஒன்றில் கிடத்தி, அதை மண்ணால் நன்கு மூடிச் சென்றனர். ஒருவரை ஒருவர் பார்க்கக் கூசிய அவர்கள் பார்வை பூமியின் மீது படர்ந்திருந்தது. அந்தச் சம்பவம் நடந்து தெஹரானில் பல பருவக் காலங்கள் கடந்துவிட்டன. வடக்கில் உள்ள மலைகளை பனிக் காலத்தின் பனிக்கட்டிகள், பல ஆயிரம் கண்ணடிகளைக் கொட்டியது போன்று, வெள்ளி மலைகளாக்கின. தோட்டத்தில் பேரி மலர்கள் படர்ந்திடவும், நீல மழைக் குருவிகள் வானத்தில் பாய்ந்திடவும், இளவேனிற் காலங்கள் வந்து சென்றன. கோடை காலத்தில், நகரமே புழுதித் படலம் சூழு, மக்கள், மலைகளின் நீர் படர்ந்த பாறைகளையும், பச்சை படர்ந்திட்ட பள்ளத்தாக்குகளையும் நாடிச் சென்றனர். மரக்கிளைகளெல்லாம் வெறிச்சோடிய சரத் காலத்தில், மயக்கம் தரும் அகன்ற புல்வெளிகளும் வானமும் நகரத்தை மீண்டும் வலம் வந்தன. அந்த இரவுக்குப் பிறகு பல காலம், ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகள், ஆகிவிட்டது. ஆனால் அன்று இருந்த அந்த ஒரே குரலின் இடத்தில் இன்று பல ஆயிரம் குரல்கள் ஒலிக்கின்றன. பல மொழிகளில் வார்த்தைகள், பல எழுத்துப் படிவங்களில் நூல்கள், மற்றும் கோவில்களும் எழுந்துள்ளன. எந்த அன்பிற்காக அவர் இறந்தாரோ அந்த அன்பு பற்றிக் கொண்டு பரவி, தியாகம் செய்ய ஒரே ஒரு இதயம் இருந்த இடத்தில் இன்று பல ஆயிரம் இதயங்கள் தங்களை அர்ப் பணிக்க காத்திருக்கின்றன. அங்கு புழுதியின் கீழ், அவர் மௌனமாக இல்லை. அவரது உதடுகள் மண்ணோடு மண்ணாகிவிட் டன, ஆனால் அவற்றின் சுவடுகள் பொண்ணான மொழி பேசுகின்றன.