உலகில் அமைதி ஏற்படுமா?

ஸ்டீவன் ஹோக்கிங்ஸ்

 

இல்லம்

உலகில் அமைதி ஏற்படுமா?

 

சமீபத்தில் {{ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ்))இவர் ஓர் உலகப் புகழ் பெற்ற அறிவியலாளாவார். இவர் பல பௌதீக ஆய்வுக் கட்டுரைகளை படைத்துள்ளார் (Steven Hawkings) எனும் பிரசித்தி பெற்ற விஞ்ஞானி யாஹூவிற்கு (Yahoo) அனுப்பிய ஒரு செய்தியில் பின்வரும் கேள்வியை பொதுவாகக் கேட்டுள்ளார்?

 

மனுக்குலம் அடுத்த நூறு வருடங்களை எவ்வாறு சமாளிக்கப்போகின்றது?

 

இதற்கான அவருடைய பதில் குறித்து அவரிடம் வினவப்படுகையில், அவர் அதற்கு பதில் தெரியாதென்று கூறி திகைக்க வைத்தார்.

 

 

ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் தாம் விடுத்த கேள்வி குறித்து அளித்த விளக்கம்.

 

அடுத்த 100 ஆண்டுகளை மனுக்குலம் எவ்வாறு சமாளிக்கப்போகின்றது. இதற்கான பதில் எனக்குத் தெரியாது. அதனால்தான் அக்கேள்வியை நான் கேட்டேன். மக்கள் அதைப்பற்றி சிந்திக்க வேண்டும், நாம் எதிர்நோக்கும் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும். 1940ற்கு முன்பு, நமது முக்கிய அச்சுறுத்தலாக வானவெளியில் சூரியனைச் சுற்றி வரும் அஸ்டராய்ட் எனப்படும் பெரும் பாறைகளினால் ஆன சிறு கோள்களோடு பூமி மோதிக்கொள்ளும் அபாயம் விளங்கியது. இவ்வித மோதல்கள் பூமியின் பெரும்பாலான உயிரனங்களின் அழிவிற்கு காரணமாக விளங்கியது. இருந்தபோதிலும் இத்தகைய அழிவு ஏற்பட்டு 7 கோடி வருடங்களாகிவிட்டன. அடுத்த 100களில் இத்தகைய மோதல் நிகழும் சாத்தியம் குறைவே. ஆனால், நாம் இப்போது எதிர்நோக்கும் முக்கிய அபாயமாக அனு ஆயுத போரே விளங்குகிறது. அமெரிக்கா, ருஷ்யா, சீனா போன்ற நாடுகள் மனுக்குலத்தை பலமுறை அழித்திடக்கூடிய அளவிற்கு அனு ஆயுதங்களைப் பெற்றிருக்கின்றன. கடந்த 50 வருடங்களில் அனுஆயுத போர் குறித்த அபாயகரமான சூழ்நிலைகள் பல ஏற்பட்டுள்ளன. கோல்ட் வோர் எனப்படும் போர் நிலையின் முடிவோடு அத்தகைய அபாய சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு பெரிதும் குறைந்துவிட்டது, ஆனால் மறையவில்லை. மனிதர்களை முழுமையாக அழித்திடக்கூடிய அனு ஆயுதங்கள் இன்றும் போதிய அளவு உள்ளன. தன்னை வேறொரு நாடு தாக்கக்கூடும் எனும் பதட்டத்தில் ஒரு நாடு அனு ஆயுதத்தைக் கையாளக்கூடும்.

 

இன்று வேறொரு அபாயத்தையும் நாம் எதிர்நோக்குகின்றோம். அது சில சிறிய நிலைத்தன்மையற்ற நாடுகள் அனு ஆயுதங்களைப் பெறுவதனால் ஏற்படக்கூடும். இத்தகையை சிறிய அனுசக்தி நாடுகள் பல கோடி மக்களின் அழிவை ஏற்படுத்தக்கூடும், ஆனால், அது மனுக்குலத்தின் முழு அழிவையே ஏற்படுத்தும் வாய்ப்பில்லை. ஆனால், இந்த நாடுகள் உலக வல்லரசுகளுக்கிடையே போர் மூட்டிவிட்டும் அதனால் பேரழிவுமிக்க அனு ஆயுதப் போர் நிகழும் அபாயமும் உள்ளது.

 

பூமியில் நமது நிலைத்த வாழ்விற்கு சவால்களாக இத்தகைய சிறுகோள்களின் கடுமோதல், அனு ஆயுத யுத்தம் ஆகியவற்றோடு மேலும் பல அச்சுறுத்தல்கள் சேர்ந்துகொண்டுள்ளன. தட்பவெப்ப நிலைமாற்றத்தின் வேகம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. உலக நாடுகள், கரியமிலவாயுவின் வெளிப்பாட்டை குறைப்பதன் வாயிலாக இத்தகைய தட்பவெப்ப மாற்றத்தின் அதிகரிப்பு கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கின்றன. ஆனால் இத்தகைய தட்பவெப்ப மாற்றம் திரும்பவியலா ஒரு நிலையை அடைந்தும் அதனால் பூமியின் வெப்பம் சுயமாக அதிகரித்துக் கொண்டே போகும் அபாயமும் உள்ளது. இரு துருவங்களிலும் பனிக்கட்டிகள் கரைவதானது வானவெளியில் பிரதிபலிக்கப்படக்கூடிய வெப்ப அளவை குறைத்தும், அதனால் வெப்பத்தை மேலும் அதிகரிக்கவும செய்கின்றன. கடல் வெப்பத்தின் அதிகரிப்பினால் கடல் நீரின் அடியில் இருக்கும் கரியமிலவாயு பெரும் அளவில் வெளிப்பட்டும், அதனால் "கிரீன் ஹௌஸ் எபெக்ட்" எனப்படும் ஒரு நிலையை மேலும் அதிகரித்திட செய்யும். 250 சென்டிகிரேட் பாகைகள் வெப்பமுற்றும், கந்தக அமிலத்தை மழையாக பெய்தும் கொண்டிருக்கும் நமது சக கோளாகிய வெள்ளி கிரகத்தின் நிலையை நமது பூமியும் அடைந்திடாமல் இருக்க நாம் வேண்டிக்கொள்வோமாக.

 

வேறு வகைகளில், ஏதேச்சையாக மரபனுரீதியா பொறியமைக்கப்பட்ட கிருமிகளை வேண்டுமென்றோ, வேண்டாமலோ வெளிப்படுத்தும் அபாயமும் உள்ளது. நமது தொழில்நுணுக்கத்துறை சார்ந்த சக்திகளை நாம் அதிகரித்துக்கொள்ளும் போது, அதன் வாயிலாக பெரழிவு மிக்க விளைவுகளை உருவாக்கும் சூழ்நிலையையும் அதிகரித்துக்கொள்கின்றோம். மனுக்குலம் பேரபாயமிக்க எதிரிகாலத்தை எதிர்நோக்கியுள்ளது. பூமிக்கு வேறு கிரகங்களில் வாழும் உயிரினங்கள் ஏன் வரவில்லை என்பது குறித்த ஓர் வேடிக்கை பேச்சு வழக்கில் உள்ளது. அதாவது, ஒரு நாகரீகம் பூமியின் அளவு மேம்பாடு காணும்போது அது நிலைத்தன்மை இழந்து தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் என்பதாகும். வேறு உயிரனங்கள் பூமிக்கு வராததற்து வேறு பல காரணங்கள் உண்டென்றாலும் இத்தகைய வேடிக்கை கதைகள் அபாயமிக்க நமது சூழ்நிலையை உணர்த்துகின்றன. மனிதன் வானவெளி சென்றும் வேறு கிரகங்களுக்கு குடி பெயருவதும் நமது நிலைத்தன்மையை பாதுகாக்க உதவிடும். ஆனால், இது அடுத்த 100 வருடங்கள் வரை நடக்கக்கூடிய வாய்ப்பில்லை. ஆகவே நாம் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும். ஒரு வேளை, மரபனு ஆய்வின் வாயிலாக நாம் விவேகம் மிக்கவர்களாகவும், சாந்தகுனமுடையவர்களாகவும் ஆகிடுவோம் என நம்பிக்கை கொள்வோமாக.

 

பஹாய் எழுத்துக்கள் இது குறித்து என்ன தெரிவிக்கின்றன?

 

இறைவன் மனிதனை அவன் மீது தாம் கொண்ட அன்பின் காரணமாக படைத்துள்ளார். இறைவனின் படைப்புக்கு அளவில்லை மற்றும் அவர் இருக்கும் வரை அவருடைய படைப்பும் இருந்துவரும். இறைவனின் படைப்புக்களிலேயே அதிசிறந்த படைப்பாக மனிதன் விளங்குகிறான். மற்ற அனைத்தையும் அவற்றின் சாயலாகவே படைத்த இறைவன் மனிதனை மட்டும் தமது சாயலில் படைத்துள்ளார் மற்றும் அவனுக்கு அவருடைய வழிகாட்டல் என்றென்றும் உண்டெனும் வாக்குறுதியையும் அளித்துள்ளார்.

 

அறிவியலாளர் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் இறைவன் குறித்தும் அவரது படைப்பாகிய மனிதனை குறித்தும் ஓர் அறிவியலாளர் எனும் முறையில் என்ன கூறுகிறார் என பார்ப்போம்:

 

இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான ஆதாரமாக முதலில் நான் பாரம்பரிய வழக்காக வந்துள்ள ஐந்து காரணங்களை சமர்ப்பிக்கின்றேன்.

 

 

பிரபஞ்சவியல் வாதம்

இப் பிரபஞ்சத்தின் உளதாம்நிலையின் தாக்கத்திற்கு தகுந்த காரணம் ஒன்று இருக்கவேண்டும்.

இயல்திட்டவாதம்

இப் பிரபஞ்சத்தின் வடிவமைப்பு அதன் பின்னனியில் ஒரு நோக்கத்தை அல்லது திசையை சுட்டுகின்றது

விவேகவாதம்

கட்டொழுங்கும் இயல்பான விதிமுறையும் பெற்றுள்ள இப் பிரபஞ்சத்தின் இயக்கமுறை அதன் பின்னனியில் அறிவாற்றல் ஒன்றை சுட்டுகின்றது.

மெய்ப்பொருள்மூலவியல்வாதம்

இறைவன் குறித்த மனிதனின் எண்ணங்கள் அல்லது விழிப்புணர்வு அத்தகைய விழிப்புணர்வினை அவனுள் பதித்துள்ள ஓர் இறைவனை சுட்டுகின்றது.

நெறிமுறைவாதம்

மனிதன் இயல்பாகவே பெற்றுள்ள நன்மை மற்றும் கெடுதல் குறித்த உள்ளுணர்வு அவன் தான் உள்ளார்ந்த நிலையில் பெற்றுள்ள, ஏதோ ஓர் உயர்ந்த ஆற்றலால் அவனுள் பதிக்கப்பட்ட, ஒரு விதிமுறை தொகுப்பை பிரதிபலிக்கின்றது.

 

 

அதாவது மனித சக்திக்கும் மீறிய தெய்வீக சக்தி ஒன்றின் ஆதிக்கத்தின் கீழ் மனிதன் வாழ்ந்து வருகின்றான். அச்சக்தி அவனுக்கு வேண்டியதை வழங்கியும், வழிகாட்டியும் வந்துள்ளது, இனியும் அது அவ்வாரே தொடர்ந்து செய்து வரும். அதாவது மனிதன் இறைவனாலும், அவரது குறிப்பிட்ட திட்டம் ஒன்றின் அடிப்படையிலும் படைக்கப்பட்டுள்ளான். இத்திட்டத்திற்கேற்ப அவன் தான் படைக்கப்பட்டதிலிருந்து இதுவரை வளர்ச்சியடைந்து வந்துள்ளான். விஞ்ஞானிகள் மனிதன் ஒரு காலத்தில் ஓர் அனுவின் நிலையில் கடல் நீரில் வாழ்ந்தும் பிறகு சிறிது சிறிதாக பரிணாம வளர்ச்சியடைந்து நிலத்தில் வாழும் ஓர் ஜீவனாகவும், பிறகு மரத்தில் குரங்கைப் போல் வாழ்ந்தும், பின் படிப்படியாக கற்காலம், இரும்புக்காலம், செப்புக்காலம், என பல படிகளைத் தாண்டி இப்போதிருக்கும் நிலையை அடைந்துள்ளான். அதாவது பாலப்பருவத்தைக் கடந்து அவன் இப்போது வாலிப பருவத்தை அடைந்துவிட்டான். இதுகாறும் உலகில் ஏற்பட்டு வந்துள்ள சச்சரவுகளும் சண்டைகளும் மனிதனின் முதிர்ச்சியின்மை மற்றும் இறைவன் அவனுக்கென வழங்கியுள்ள நல்லது கெட்டதை தேர்வு செய்யும் விசேஷ ஆற்றலின் விளைவுகளாகும். உடல் ரீதியாக அவனது பரிணாம வளர்ச்சி ஒரு நிலையை அடைந்துவிட்டது. இனி மனிதன் ஆன்மீக வளர்ச்சியடைய வேண்டிய கட்டத்தில் உள்ளான்.

 

ஆனால் மனிதன் தனது விசேஷ ஸ்தானத்தை நோக்கி வளர்ச்சியடையும் அதே வேளை, அவன் கடந்து செல்ல வேண்டிய கரடு முரடான பாதை குறித்து பஹாய் எழுத்துக்களில் நிறையவே காணலாம். நமது உடனடி எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக இருந்த போதும், அதற்கு பின் வரும் காலம் ஒளிமயமானதாக இருக்கும் என பஹாய் சமயத்தின் பாதுகாப்பாளரான ஷோகி எபெஃண்டி கூறியுள்ளார். சுருங்கக் கூறவேண்டுமானால் மனிதன் குழப்பங்கள் மற்றும் பேரழிவிகள் பலவற்றை சந்தித்து அவற்றின் பயனாக நல்ல அனுபவம் அடைந்து தனது வாழ்க்கைமுறையை மாற்றியமைத்து தனது படைப்பின் நோக்கத்தின் நிறைவேற்றத்தை காண்பான்.

 

வாசகர் ஒருவரின் பதில்

 

நெடுங்காலமாக அரசியல் சமூக குழப்பங்கள் நம்மோடு கூடவே இருந்துவந்துள்ளன. கடந்த கால மற்றும் நிகழ்கால புரட்சிகள், வகுப்பு கலவரங்கள், ஆட்சியை கைப்பற்ற நினைப்போரின் தீச்செயல்கள் ஆகியவற்றை கண்ணுறுகையில், மனுக்குலம் வெகு சிறந்த மீளுந்தன்மையை வெளிப்படுத்தியும் இதுவரை நிலைமையை நன்கு சமாளித்தும் வந்துள்ளது என்றே தோன்றுகின்றது.

 

மனுக்குலம் மற்றும் இயற்கை சார்ந்த பிற ஜீவனங்களுக்கிடையிலான சமநிலை சமன்பாடு குறித்த புதிய காரணக்கூறுகளை காண்போம். அரசியல் சமூக குழப்பங்கள் ஆகியவை உருபெறும் வழிவகைகளை மாற்றியமைத்த தொழில்நுட்ப மேம்பாடுகள், மற்றும் சுற்றுச் சூழல் மீது பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தவல்ல தொழில்துறை மேம்பாடுகள் இத்தகைய காரணக்கூறுகளாகும். அனு ஆயுத போர் மிரட்டல்கள், உயிரியல் பேரழிவு, தட்பவெப்பநிலை மாற்றங்கள் ஆகியவை மனுக்குலம் எவ்வாறு தொடர்ந்து பிழைக்கப்போகிறது எனும் கேள்வியை எழுப்புகின்றன.

 

என் தனிப்பட்ட கருத்து யாதெனில், உலகில் மனுக்குலம் தொடர்ந்து வாழ்வதற்கு ஏற்பட்டுள்ள உண்மையான மிரட்டல்களின் வளர்ச்சியினூடே, மனித நுன்னறிவாற்றலும் வளர்ச்சி கண்டுள்ளது என்றே கூற வேண்டும். தொழில்துறை அறிவியல் எனும் பிராங்க்கன்ஸ்டைன் அரக்கனை நாம் இன்னமும் கட்டவிழ்த்துவிடவில்லை. பன்மடங்காக அனுவாயுத கையிருப்புகள் வளர்ச்சி கண்டுள்ள போதும் இதுவரை உலகளாவிய யுத்தம் ஏதும் ஏற்படவில்லை. மருத்துவ ஆராய்ச்சி மேம்பட்ட மறுமலர்ச்சி நிலையில் உள்ளது. தட்பவெப்ப நிலை மாற்றம் கவலையளிப்பதாக இருப்பினும், மனுக்குலம் இதுபோன்ற நிலை மாற்றங்களை, கடந்து சென்ற காலங்களில் சமாளித்தது போன்று இக்காலத்திலும் சமாளிக்கவே செய்யும் என்பது என் நம்பிக்கை.

 

மனுக்குலம் எவ்வாறு தொடர்ந்து சமாளிக்கப்போகின்றது என்பதே இங்கு முதன்மையான கேள்வியாக கேட்கப்பட்டுள்ளது. தற்போது நமக்கு வாய்த்துள்ள மூலவள ஆதாரங்கள் ஒரு நூற்றண்டு காலத்திற்கு பிறகு நிலைத்திருக்குமா என்பது சந்தேகமே. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன் இல்லாத வள ஆதாரங்கள் இப்போது நமக்கு கிடைத்துள்ளன. முன்பு குறிப்பிட்டதுபோல், மனுக்குலம் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றியமைத்துக்கொள்ளும் ஒர் இனமாகும். வள ஆதாரங்களுக்கான ஒரு வாசல் மூடப்படும் போது, அதற்கான மற்றொரு வாசல் திறக்கவே செய்யும்.

 

சகல உலக காரியங்களின் மேம்பாட்டின் வேகம் நிச்சயமாகவே அதிகரித்துள்ளது. இந்த வேகத்தோடு நாம் போடியிட இயலுமா? நம்மில் பலருக்கு இது இயலாத ஒன்றாக இருக்கும். ஆனால் 14ம் நூற்றாண்டில், ஐரோப்பாவின் மக்கள் தொகையில் 3ல் ஒரு பங்கினர் ஒரு வகை நோயினால் அழிந்துபோயினர் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இருந்தபோதிலும் ஐரோப்பா அதிலிருந்து மீள்ந்தும் மேம்பாடு காணவும் செய்தது. ஒரு வேளை அதே போன்ற ஒரு பேரழிவை நாம் இக்காலத்திலும் காணக்கூடும், ஆனால் அத்தகைய பேரழிவிலிருந்தும் மனுக்குலம் மீண்டுவிடும் என்பதே என் எண்ணம்.

 

மனுக்குலத்தின் மீது நான் ஏன் இவ்வளவு நம்பிக்கைக் கொண்டுள்ளேன்? கண்டிப்பாக அவ்விதம் நான் நம்பி்க்கை கொள்ளவேண்டும். மானிட இனமெனும் முறையில் நாம் முதிர்ச்சியடையும் அவே வேளை நாம் தொடர்ந்து மேம்பாடு கண்டும் நம்மைத் தாக்கும் சமூக குழப்பங்களிலிருந்து மீளவும் செய்வோம் எனும் நம்பிக்கையின்றி இருப்பதற்கு பதிலாக, நாம் மனதில் எந்த பிடிப்பும் இல்லாமலேயே இருந்துவிடலாம். நான் இங்கு சமய நம்பிக்கை குறித்து பேசவில்லை (தற்போதைய நிலையில் உள்ள சமய நம்பிக்கைகள் ஒரு வேளை அதற்கு பங்காற்றலாம்) மாறாக, நாளை சூரியன் உதிப்பது எப்படி உறுதியோ அதே போன்று நாமும் பிழைத்திருப்போம் எனும் நம்பிக்கை குறித்தே பேசுகின்றேன்.

இம்மொழிபெயர்ப்பு திருப்தியளிக்கும் வகையில் உள்ளதா? தெரியப்படுத்தவும்