கவிதைகள்
1
வீட்டிற்கு அழககு வெண்மை
வயலுக்கு அழகு பசுமை
வாழ்வுக்கு அழகு நேர்மை
சொல்லுக்கு அழகு வாய்மை
கல்விக்கு அழகு திறமை
2
செயல்படுங்கள்
கல்விச் சுடரை
எண்ணத்தில் ஏற்றுங்கள்;
எதிர்காலம்
வளம் பெறலாம்!
இலட்சியச் சுடரை
சிந்தனையில் ஏற்றுங்கள்;
நாளை
புதிய பயணத்தைத் தொடங்கலாம்!
அன்புச் சுடரை
உறவில் ஏற்றுங்கள்;
எங்கும்
ஒற்றுமையுணர்வு மேலோங்கலாம்!
உண்மைச் சுடரை
வாழ்க்கையில் ஏற்றுங்கள்;
அங்கு
புரிந்துணர்வு பிறக்கலாம்!
இன்பச் சுடரை
குடும்பத்தில் ஏற்றுங்கள்;
என்றென்றும்
மகிழ்ச்சிவெள்ளம் பெருகி வழியலாம்!
நம்பிக்கைச் சுடரை
செயலில் ஏற்றுங்கள்;
தடைகளைத் தகர்த்தெறியலாம்!
வெற்றிச் சுடரை
மனதில் ஏற்றுங்கள்;
நாளை
நிலையான சாதனைப் படைக்கலாம்!
3.
கலங்கமில்லாதது கறுப்பு
அதுதான் வாழ்க்கையின் சிறப்பு!
கறுப்பு மையில் எழுதும் எழுத்து
மனதில் பதியும் படிப்பு!
அழகான எர்ணமே கறுப்பு
சில மனிதருக்கு,
அதன் மேல் வெறுப்பு!
மனிதனின் தேவை சிரிப்பு
ஆனால்,
கறுப்பு மனிதரைக் கண்டால்
உனக்கோ சலிப்பு!
4.
பணம் வேண்டாம்
உங்கள் பாசம் வேண்டும்
அழகு வேண்டாம்
அன்பு மனம் வேண்டுமஃ
அமைதி வேண்டாம்
உங்கள் அரவணைப்பு வேண்டும்
கவலை வேண்டாம்
உங்கள் சந்தோஷம் வேண்டும்
5.
இயற்கையின் பார்,
இயற்கையின் எழிலைப்பார்;
உன்னைப் பார்
உன் வாழ்க்கையைப்பார்;
இதுதான் இயற்கை பார்!
6.
துன்பமே நீ என்னை விடமாட்டாயா?
வெற்றிகளுக்கு என் முகவரி கிடைக்கவில்லையா?
நன்றி மறந்த நயவஞ்சககரைப் போல்ல்
நீயும் என்னை மறந்தது ஏன்?
இளம் தென்றலே
என் வாழ்வில்
சுகத்தென்றலாக வீசமாட்டாயா?
உனக்கேன் என்மீது வருத்தம்?
என் வாழ்வின் விடியலைத் தேடி
எப்போது வருவாய்?