பஹாய் சமயம்

ஓர் அறிமுகம்

இல்லம்

பஹாய் சமயம் - அறிமுகம்

 

1844ம் ஆன்டில் பாரசீக நாட்டில் உதித்த பஹாய் சமயம் இன்று குறைந்தது 300க்கும் அதிகமான நாடுகளிலும் பிரதேசங்களிலும் சுமார் 65 லட்சம் நம்பிக்கையாளர்களைக் கொண்ட ஒரு சுதந்திரமான உலகளாவிய சமயமாகும். பஹாய்கள் இன்று உலகம் முழுவதும் 120,000க்கும் அதிகமான உள்ளூர் சமூகங்களில் வசித்து வருகின்றனர்.

 

பஹாய் சமயத்தை வெளிப்படுத்தியவரின்பெயர் பஹாவுல்லா. “பஹாவுல்லா” என்பதன் மொழியாக்கம், “இறைவனின் ஓளி” அல்லது “தேஜஸ்” என்பதாகும். வடமொழியில் "விஷ்னு யாஷா" எனவும் இது மொழிபெயர்க்கப்படும். இது ஆங்கிலத்தில் "Glory of God" என கூறப்படும். பஹாவுல்லாவின் செய்தியின் சாரம் மனுக்குல ஒற்றுமை குறித்ததாகும். இந்த ஒற்றுமையின் அஸ்திவாரமாக இருக்க வேண்டியவை மூன்று முக்கிய நம்பிக்கைகளாகும்:

கடவுள் ஒருவரே

கடவுள் ஒருவரே உள்ளார் எனும் பஹாய்களின் கோட்பாட்டின் அர்த்தம், இந்த பிரபஞ்சமும், அதனுள் அடங்கியிருக்கும் அனைத்து ஜீவராசிகளும் ஆற்றல்களும் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியால் படைக்கப்பட்டுள்ளன என்பதாகும். நாம் கடவுள் என அழைக்கும் இந்த சக்தியானவர், தமது படைப்பின் மீது முழுமையான அதிகாரமுடையவர் மற்றும் அப்படைப்பு குறித்து பூரணமானதும் முழுமையானதுமான அறிவு படைத்தவர். கடவுளின் இயல்பு குறித்து நாம் வெவ்வேறு கருத்துக்கள் கொண்டிருந்த போதிலும், நாம் அவரை வெவ்வேறு விதத்தில் வணங்கிய போதிலும், அவரை "அல்லா" இஸ்லாமிய சமயம் அல்லது "யாஹ்வே",யூத சமயம் " கடவுள்" அல்லது "பிரம்மா" இந்து வேதம்என அழைத்தபோதிலும் அவை அனைத்தும் அந்த ஒரே ஆண்டவரையே குறிப்பிடுகின்றன.

 

progressive revelation

 

சமயங்கள் யாவும் ஒன்றே

உண்மையில், கடவுளின் சமயம் எனும் ஒரே சமயம்தான் உலகில் உள்ளது. இந்த ஒரு சமயம் தொடர்ந்து பரிணாம வளர்ச்சியுறுகிறது, மற்றும் உலகின் குறிப்பிட்ட ஒவ்வொரு சமயமுறையும் இந்த முழுவதின் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டத்தையே பிரதிநிதிக்கின்றன. பஹாய் சமயம் சமய பரிணாம வளர்ச்சின் இக்காலகட்டத்தை பிரதிநிதிக்கின்றது. கடவுளின் அவதாரங்களின் போதனைகளும் நடவடிக்கைகளும் கடவுளாலேயே வழிநடத்தப்படுகின்றன மற்றும் அவை இயற்கையாகவோ மனிதர்களிலிருந்தோ தோன்றவில்லை. இந்த கருத்தை வலியுறுத்திட கடவுளின் அவதாரம் உலகில் தோன்றும்போதெல்லாம் நடைபெறும் அந்த நிகழ்ச்சியை "திருவெளிப்பாடு" என பஹாவுல்லா வர்னிக்கின்றார். குறிப்பாக கடவுளின் அவதாரத்தின் படைப்புக்கள் அனைத்தும் கடவுளின் தவறுபடாத வார்த்தையையே பிரதிநிதிக்கின்றன. இவ்வார்த்தைகள் குறிப்பிட்ட தெய்வ அவதாரம் இப்பூமியைவிட்டு மறைந்த பின்னும் பூமியில் நீண்டகாலம் நிலைத்து நிற்கின்ற காரணத்தால் அவை திருவெளிப்பாடு எனும் இயல்நிகழ்ச்சியின் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகின்றன. இக்காரணத்தினாலேயே கடவுளின் அவதாரங்களின் எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகள் ஒரு எல்லைக்குட்பட்ட நிலையில் "திருவெளிப்பாடு" என குறிப்பிடப்படுகின்றன.

 

மனிதகுலம் ஒன்றே

கடவுளை நோக்கிய பாதை பலவென கூறுப்படும் வேளையில், பஹாவுல்லா, இறைவனை நோக்கிய பாதை ஒரே பொதுப் பாதை எனவும், உலக மக்கள் அனைவரும் அதில் வெவ்வேறு நிலைகளில் பயணம் செய்து கொண்டிருக்கின்றனர் எனவும் வெளிப்படுத்துகின்றார். பஹாவுல்லாவின் பிரார்த்தனை ஒன்றில் பின்வருமாறு கூறப்படுகின்றது

 

"இறைவா, நீர் மனிதர்கள் யாவரையம் ஒரே பெற்றோரிலிருந்து ஆக்கியுள்ளீர் எல்லோரும் ஒரே குடும்பமாய் வாழ விதி த்துள்ளீர்...."

 

மனுக்குலம் ஒரே இறைவனை தனது படைப்பாளராகக் கொண்டுள்ளது; அது ஒரே மண்ணிலிருந்து படைக்கப்பட்டுள்ளது. மனிதனின் வெளித்தோற்றங்கள் யாவும் அவனுடைய உண்மையான ஆன்மீக நிலையை பிரதிபலிப்பவை அல்ல எனவும் பஹாவுல்லா போதித்தார். உலக சமயங்கள் அனைத்தும் கடவுளின் நல்விருப்ப த்தையும் நோக்கத்தையும் படிப்படியாக வெளிப்படுத்துவதற்காகவே தோன்றியுள்ளன எனவும் பஹாவுல்லா போதிக்கின்றார். உலகளாவிய மனித சமூகம் செழுமை பெற வேண்டுமானால், அது சில அடிப்படை கொள்கைகளின் அஸ்திவார த்தில் அமைக்கப்பட வேண்டும். அவற்றில் முக்கியமானவை வருமாறு:

 

 

இவ்வுலக மாற்றங்களும் வாய்ப்புக்களும் மட்டுமே வாழ்வு என்பதல்ல எனவும், ஆன்மாவில் ஏற்படும் வளர்ச்சியே அதன் உண்மையான சிறப்பு எனவும், மனித வாழ்வு, அதாவது ஆன்மாவின் வாழ்வு இவ்வுலகின் ஒரு குறுகிய காலத்தில் நடைபெற்று இறைவனின் வெவ்வேறு உலகங்களில் என்றும் நிலையாகத் தொடர்கின்றது மற்றும் மனிதன் இவ்வுலகில் தெய்வீகப் பன்புகள் நிறைந்த ஓர் ஆன்மீக வாழ்க்கையை கடவுளின் பாதையில் வாழ்ந்து மனிதனுக்கு மட்டுமே இறைவன் அருளியுள்ள ஆன்மீக உலகிற்கு தன்னை அவன் தயார் செய்து அங்கு அவனை படைத்தவரின் முன்னிலையை அடைவதே மனித வாழ்வின் இறுதியான குறிக்கோளாகும்.

 

 

4yearplan

 

4yearplan

 

4yearplan

 

4yearplan

 

 

 

 

 

;