செய்தி - 739
ஆஸ்திரேலியாவில் உலகச் சமயங்களின் பாராளுமன்ற கூட்டம் நடைபெறுகின்றது
4 டிசம்பர் 2009
மெல்பர்ன், ஆஸ்திரேலியா, 4 டிசம்பர் (BWNS) – ஐந்து கண்டங்களிலுமுள்ள பஹாய்கள் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் அளிக்கைகள் செய்கின்றனர். ஒரு நூற்றாண்டிற்கும் முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இக்கூட்டத்தின் நவீனகால தொடர்ச்சி இப்போது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்றது.
3 டிசம்பரில் மெல்பர்ன் நகரின் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஏழு நாள் பாராளுமன்றம், உலக சமயங்கள் மற்றும் குழுக்கள் அனைத்திலிருந்தும் ஏறத்தாழ 8,000 பங்கேற்பாளர்களை ஈர்க்குமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அப்பங்கேற்பாளர்களில் அனைத்துலக பிரசித்திபெற்ற தலாய் லாமா மற்றும் இறையியலாளர் ஹான்ஸ் காங் போன்றவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
சிக்காகோ நகரில் 1893ல் முதன் முதலில் நடைபெற்ற சமயப் பாராளுமன்ற கூட்டத்தில்தான் பஹாய் சமயம் முதன் முதலில் பொதுக் குறிப்பீட்டைப் பெற்றது
“அந்த முதல் ஒன்றுகூடலே, சில அடிப்படைகளில் (இண்டர்)சமய இயக்கத்தின் ஆரம்பத்தை குறிக்கின்றது, மற்றும் சமயங்களுக்கிடையில் ஒரு புதிய ஐக்கிய உணர்வுக்கான எதிர்ப்பார்ப்பையும் உருவாக்கியது,” என ஆஸ்திரேலிய பஹாய் சமூகத்தின் பேச்சாளரான நேட்டலி மோபினி கூறினார்.
அவர் மேலும், “உலகத்தை குருட்டு சமயநம்பிக்கைகளிலிருந்து இது விடுவித்துள்ளது என இதன் தலைமை ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். முதலில் மாற்றங்களுக்கான அறிகுறிகள் தென்பட்டன ஆனாலும், உலகில் சகோதரத்துவம் மற்றும் அமைதியை ஸ்தாபித்திடும் நமது பொது நோக்கம் நிறைவேற்றப்பட நாம் மேலும் அதிக நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்பது தெளிவு,” என அவர் மேலும் தெரிவித்தார்.
“எல்லா சமயங்களுமே இறைவனிடமிருந்தே தோன்றியுள்ளன மற்றும் அவை மனுக்குலத்திற்கான கடவுளின் திட்டம் என்பது பஹாய் சமய நம்பிக்கைக்கு மையமாகும். ஆகவே, பலதரப்பட்ட சமயங்களுக்கிடையில் உள்ள தொடர்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கை நாங்கள் பெரிதும் ஆர்வத்துடன் ஈடுபடும் ஒன்றாகும்,” என அவர் மேலும் தொடர்ந்தார்.
இந்த மெல்பர்ன் நகர மாநாட்டில் 70க்கும் அதிகமான பஹாய்கள் வல்லுனர்குழு கலந்துரையாடல்களிலிருந்து, தட்பவெப்பநிலை மாற்றம், இன்டர்சமய உறவுகள், கலையாற்றல் அளிக்கைகள், பக்திக்கூட்டங்களை ஏற்பாடு செய்வது போன்ற ஏறத்தாழ பாராளுமன்றத்தின் எல்லா மட்ட நடவடிக்கைளிலும் கலந்துகொள்கின்றனர்.
இந்த உலக நிகழ்வில் பல முக்கிய பஹாய்களும் பங்கேற்கின்றனர்.
பஹாய்கள் சுற்றுச்சூழல் குறித்த பல தலைப்புக்களில் அளிக்கைகள் வழங்குகின்றனர். இவை இப்பாராளுமன்றத்தின் கருப்பொருளான, “ஓர் உலகளாவிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்: ஒருவரை ஒருவர் செவிமடுப்போம், உலக நலத்தை பேணுவது,” என்பதோடு இணக்கமானவையாகும்.
“பௌதீக உலகம் நலம் அடைந்திட... நாம் ஆன்மீக கோட்பாடுகளை ஆலோசிக்கவேண்டும்,” என டாக்டர் மோபினி மேலும் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலிய பஹாய்கள் பாராளுமன்றத்தின் பங்கேற்பாளர்கள் அனைவரும் பங்கேற்கக்கூடிய ஓர் ஆன்மீக நிகழ்ச்சியை வழங்குகின்றனர்; அதில் பல தேசிய மற்றும் அனைத்துலக கலைஞர்கள் பங்குபெறும் இசை, நாடகம், மற்றும் நாட்டியம் போன்றவை இடம்பெறும்; மற்றும் ஆன்மாவின் வாழ்வு, இண்டர்சமய நடவடிக்கைகளில் பெண்களின் பங்கு போன்ற நிகழ்வுகளும் அதில் அடங்கும்.
நவீன உலக சமய பாராளுமன்றம் அதே முன்னாள் உலக பாராளுமன்றம் நடந்த 100வது வருடமான 1993ல் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது அது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றது. 1999ல் அது தென் ஆப்பிரிக்காவின் கேப் டௌன் நகரிலும் 2004ல் ஸ்பேய்ன் நாட்டின், பார்சிலோனா நகரில் நடைபெற்றது.
மேற்கொண்டு விபரங்களுக்கு: : http://www.parliamentofreligions.org
அனைத்துலக சமய பாராளுமன்றத்தின் பஹாய் பங்கேற்பாளர்கள்: இடமிரு்நது வலம்.
போட்ஸ்வானாவின் லூக்கிரேஷிய வாரன், சிவப்பிந்தியரான கெவின் லோக் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் பிராயன் லெப்பார்ட்