செய்தி - 728
உலகின் முக்கிய சமயங்கள் சுற்றுச் சூழல் குறித்து செயல்திட்டம் ஒன்றை வழங்கியுள்ளன
4 நவம்பர் 2009
வின்சர், யுனைட்டட் கிங்டம் – பஹாய் சமயம் உட்பட உலகின் முக்கிய சமயங்களைப் பிரதிநிதிக்கும் முதன்மையாளர்கள், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நீண்டகால முயற்சி ஒன்றில் தங்கள் சமூகங்களையும் உட்படுத்தும் செயல்திட்ட தொடர்வரிசை ஒன்றை அதிகாரபூர்வமாக அமுல்படுத்திட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வின்சர் அரண்மனையில் நேற்று ஒன்றுகூடினர்.
அடித்தள மக்களை உற்சாகப்படுத்திட சமயங்கள் வகிக்கும் பங்கை வலியுறுத்தவும் “இப்பூவுலகோடு அமைதி ஏற்படுத்திக்கொள்ளவும்” கொண்டாட்ட உணர்வுடனான கூட்டம் ஒன்றில் இம்முதன்மையாளர்களோடு ஐக்கிய நாட்டின் பொதுக் காரியதரிசியான திரு பான் கி-மூன், எடின்பரோ கோமகனாரான பிஃலிப் இளவரசர் ஆகியோரும் கூடியிருந்தனர்.
“ஒரு பொது இலட்சியத்தை நோக்கி அரசாங்கங்களும் பொதுச்சமூகமும் செயல்படும்போது தன்மைநிலை மாற்றம் சாதகமாகின்றது என்பது என் நீண்டகால நம்பிக்கை,” என திரு பான் கூறினார். “நம்பிக்கைகளும் சமயங்களும் அந்த சமன்பாட்டின் மையங்களாக விளங்குகின்றன,” என அவர் மேலும் கூறினார்.
“உண்மையில், நமது உலகின் தலைவிதி மற்றும் தட்பவெப்பநிலை மாற்றத்தின் தீவிரமுறும் தாக்கங்கள் குறித்த விவாதங்களில் இவ்வுலகின் சமயம்சார்ந்த சமூகங்கள் ஒரு தனிசிறப்பான நிலையை வகிக்கின்றன,” என அவர் கூறினார்
இன்று மதியம் முடிவுற்ற அந்த மூன்று நாள் நிகழ்ச்சி ஐக்கிய நாட்டு மேம்பாட்டு திட்டம் (UNDP) மற்றும் 1995ல் பிஃலிப் இளவரசரால் ஸ்தாபிக்கப்பட்ட சமயங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த கூட்டனியால் (ARC) ஆதரவுவழங்கப்பட்டதாகும்.
வின்சர் அரண்மனையில் நேற்று நடந்த ஒன்றுகூடலே அக்கூட்டத்தின் முக்கியப் பகுதியாகும். அங்கு ஒவ்வொரு சமயகுழுக்களின் பிரதிநிதிகளும் சுற்றுச்சூழல் குறித்த மனப்பாங்கில் “தலைமுறை நிலையிலான மாற்றத்தை” ஊக்குவிப்பதற்கென வடிவமைக்கப்பட்ட ஓர் ஏழாண்டு திட்டத்தை வழங்கினர்.
ஏறத்தாழ சுதந்திர உலக சமயங்கள் அனைத்தையும் பிரதிநிதிக்கும் முப்பத்தொறு திட்டங்கள் வழங்கப்பட்டன. அச்சமயங்களாவன: பஹாய் சமயம், புத்தசமயம், கிருஸ்துவ சமயம், தாவோ சமயம், இந்துசமயம், இஸ்லாம், யூத சமயம், ஷிந்தோ சமயம், மற்றும் சீக்கிய சமயம்.
பொதுவாக, ஆணித்தரமான, நடைமுறையான நடவடிக்கைகளுக்கான படிகளை வழங்கிட அத்திட்டங்கள் முயன்றன.
உதாரணமாக, முஸ்லிம் திட்டமானது, உலகைச் சுற்றியுள்ள இஸ்லாமிய நாடுகளையும் சமயச் சமூகங்களையும் பிரநிதிக்கக்கூடிய “தட்பவெப்பநிலை மாற்ற நடவடிக்கைக்கான இஸ்லாமிய சங்கம்” (MACCA) என்படும் ஓர் அரவணைப்பு அமைப்பை ஸ்தாபித்திட வேண்டுகோள் விடுத்தது. அது சுற்றுச்சூழல் குறித்த இஸ்லாமிய பெயரிடும்முறை ஒன்றிற்கும், அதாவது “பசுமை ஹஜ்”. இதன் வாயிலாக வழக்கமுறையான இஸ்லாமிய புனித யாத்திரை சுற்றுச்சூழல் சாதகமான ஒன்றென கண்டுகொள்ளப்படும் அதோடு வெப்பம், ஒளி மற்றும் வடிவமைப்பில் அதிசிறந்த நடைமுறைகளை எடுத்துக்காட்டும் “பசுமை பள்ளிவாசல்” மாதிரி ஒன்றை எழுப்புவது.
சீக்கிய திட்டமானது அனைத்து குருத்துவாராக்களும் – கோவில்களும் – மறுபயனீடு, பசுமை உரம், பசுமை சக்தியின் பயன்பாடு, இயற்கை அடுப்பு, மழைநீர் சேமிப்பு, மறுபடியும்பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கோப்பகைள் வாங்கிட கேட்டுக்கொண்டது.
பஹாய் சமயத்தின் பிரதிநிதிகள் “சுற்றுச்சூழல் ஆதாரநிலைப்பாடு குறித்த சேவைச் செயல்களை” உலகளாவிய பஹாய் சமூகத்தினரிடையே ஊக்குவிப்பதற்காக குறிப்பிட்ட வட்டார பயிற்சிமுறைகளின் பயன்பாட்டின்பால் கவனம் செலுத்தும் ஒரு திட்டத்தை வழங்கினர்.
வின்சர் நிகழ்வில் கலந்துகொண்ட இரு பஹாய் பேராளர்களில் ஒருவரும் ஐக்கிய நாடுகளின் பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரதிநிதியுமான தாஹிரி நேய்லர், “மனித தன்முனைப்பு மற்றும் நடத்தையின் அடித்தலத்தில் சமய நம்பிக்கையும் ஆன்மீகமுமே வீற்றிருக்கின்றனவென பஹாய்கள் நம்புகின்றனர்,” என கூறினார்.
“உலகவெப்பநிலையை அல்லது சுற்றுச்சூழலின் தரக்குறைவைத் தூண்டுவன போன்ற ஊறுவிளைவிக்கும் மனித நடத்தைகளை மாற்றுவதற்கான முயற்சிகள் கடவுளுடனான நமது சொந்த உறவு மற்றும் இயற்கையுடனான மானிடத்தின் உறவு குறித்த மேலும் சிறந்த புரிந்துகொள்ளலுக்கு வழிவகுக்கும் செயற்பாடுகளால் பெரிதும் விரைவுபடுத்தப்படும் என்பது எங்கள் நம்பிக்கை. இத்தகைய புரிந்துகொள்ளலிலிருந்தே செயல்பாடுகள் இயல்பாக தோன்றுகின்றன.”
வின்சர் அரண்மனையில் ஒன்றுகூடிய சமய சமூகங்கள், சுற்றுச்சூழல் குழுக்கள், மற்றும் அனைத்துலக செயலான்மைகள் சார்ந்த ஏறத்தாழ 200 பிரதிநிதிகள் உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பு, குடிநீர் குறைபாடுகள், காடுகள் அழிக்கப்படுதல், மற்றும் பிற சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒரு புதிய நிலையிலான உடனுழைப்பை எவ்வாறு அடையலாம் என்பது குறித்து கலந்தாலோசிக்க Harte and Garter விடுதியில் நடைபெற்ற அதிகாரபூர்வ கூட்டத்தொடர்கள் மற்றும் பணிமனைகளிலும் கலந்துகொண்டனர்.
“தட்பவெப்பநிலை மாற்றம் என்பது சிக்கலானது, மற்றும் அதை எதிர்நோக்குவதற்கு நாம் பல நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்திக்கொள்வது அவசியமாகின்றது,” என ஐக்கிய நாட்டின் உதவி செயலாளரான ஓலாவ் க்ஜோர்வன் கூட்டத்தின் போது கூறினார். “பண்புகளில் அது மாற்றத்தை வேண்டுகிறது. அடித்தள மக்களை சென்றடைவது மற்றும் உள்ளங்களையும் மனங்களையும் தொடக்கூடிய இணையற்ற ஆற்றல் சமயங்களுக்கு உண்டு. அனைத்துலக சந்தைகளில் சமய அமைப்புக்களே மூன்றாவது நிலை பங்கேற்பாளர்களாக உள்ளனர். அவர்களால் செய்யப்படும் சுற்றுச்சூழல் சாதகமான கிரயங்கள் உலகம் முழுவது ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லவையாகும்,” என அவர் மேலும் கூறினார்.
வேல்ஸ் இளவரசரின் நீர்க்காடுகள் திட்டத்திற்கான விசேஷ ஆலோசகரும் ‘மண்ணுலகின் நண்பர்கள்’ அமைப்பின் செயலதிகார இயக்குனருமான டோனி ஜூனிப்பர், சமயங்களின் ஆற்றக்கூடிய முக்கிய பங்கு குறித்தும் அதேபோன்று வலியுறுத்தினார்.
“அறிவியல் பகுத்தறிவுக்கோட்பாடு நல்ல அறிவியலை வழங்கியுள்ள, அது சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்துவதற்கான மிகவும் அழுத்தமான அரசியல் வாதங்கள் தலைதூக்கிட செய்துள்ளது,” என திரு ஜூனிப்பர் கூறினார்.
“இதன் காரணமாக, அமிலமழை மற்றும் பிற சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள்பால் அரசாங்கங்கள் கவனம் செலுத்தின். ஆனால் இம்மாற்றங்கள் ஆழமற்றவையாக இருந்தன,” என்றார்.
“வெறும் அறிவியல் பகுத்தறிவுகோட்பாடுகள் மட்டுமே நாம் யார் மற்றும் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பது குறித்த நமது அடிப்படை புரிந்துகொள்ளலை மாற்றிட முடியாது. உலகத்துடனான நமது உறவில் ஓர் அடிப்படையான நிலைமாற்றத்தை கொண்டுவர சமயமும் அறிவியலும் ஒன்றாக முயலவேண்டும்,” என்றார்.
பேராளர்கள் குழு வின்சர் அரண்மனைக்குள் அனிவகுத்து நுழைகின்றது
பஹாய் பிரதிநிதிகளான ஆர்த்தர் லியோன் டேய்ல் மற்றும் தாஹிரி நேய்லர் தங்கள் சான்றிதழ்களைப் பெறுகின்றனர். அவர்கள் பிஃலிப் இளவரசர் மற்றும் பிறரோடு காணப்படுகின்றனர்.
ஊர்வலத்தில் ஐநாவின் கொடி மற்றும் பஹாய் சின்னம் உட்பட பிற சமய சின்னங்கள்.
எடின்பரோ கோமகனாரும் ஐநாவின் பொதுக்காரியதரிசியும் வின்சர் அரண்மனை ஒன்றுகூடலில் முக்கிய உரையாளர்களாக இருந்தனர்.
“சிருஷ்டியின் குரல்களை செவிமடுத்தல்,” எனும் இந்திய நடனம்.
எல்லா சமயங்களின் பங்கேற்பாளர்களும் பிஃலிப் இளவரசரிடமிருந்தும் திரு பான் கி-மூனிடமிருந்தும் சான்றிதழ்களைப் பெறுகின்றனர். இங்கு ஜப்பானிய ஷிந்தோ மதகுருக்கள் காணப்படுகிறார்கள்.