இல்லம்

"தட்பவெப்பநிலை வாதங்களில் நன்னெறிகளே காணப்பெறாத பரிமானங்களாகும்," என IPCC தலைவர் கூறுகிறார்.

 


23 செப்டம்பர் 2009

 

நியூ யார் – தட்பவெப்ப நிலைமாற்றத்தினால் உலக அளவில் நிகழக்கூடிய சமநிலையின்மை  அநீதிகள் ஆகியவற்றை உலக தலைவர்கள் உலக வெப்பநிலை அதிகரிப்பின் நன்னெறி மற்றும் ஒழுக்கமுறைகளின் அடிப்படையில் கவனமாக ஆராயவேண்டும், என தட்பவெட்பநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையிலான வல்லுனர் குழுவின் தலைவரான டாக். ராஜேந்திரா K. பச்சௌரி கூறியுள்ளார்.

 

 “தட்பவெப்பநிலை மாற்றத்தின் தாக்கம் உலகின் பல பாகங்களில் பாரபட்சமாகவும் சமநிலையற்றும் கடுமைமிகுந்தும் இருக்கக்கூடும்,” என பஹாய் அனைத்துலக சமூகத்தின் செயலகங்களில் காலையுணவு ஒன்றகூடலின்போது பேசிய டாக் பச்சௌரி கூறினார்.

 

 “நாம் இது குறித்து வெகு பெரிய அளவில் சிந்திப்பது அவசியமாகும். இந்த வாதத்தில் காணப்பெறாத ஒரு பரிமானமாக பெரும் அவசியத்துடன் ஒழுக்கமுறை முக்கியத்துவம் மிகுந்ததாக இருக்கின்றது,” என அவர் கூறினார்.

 

ஓர் அதிகாரபூர்வ மனு ஒன்றின் தாக்கல் நிகழ்வின்போது டாக். பச்சௌரியின் கருத்துக்கள் உலக வெப்பநிலை அதிகரிப்பின் நன்னெறி மற்றும் ஒழுக்கமுறையின் முக்கியத்துவம் மற்றும் தங்களின் கலந்துரையாடல்களில் அதன் தாக்கத்தை வலியுறுத்துவதற்காக, ஐ.நாவின் தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த இவ்வாரம் நடைபெற்ற உச்சநிலை கூட்டத்திற்காக ஒன்றுகூடியுள்ள உலகத் தலைவர்களை குறி வைத்தன.

 

இந்த மனு பஹாய் அனைத்துலக சமூகத்தினால் முன்வரைவு கண்டு 25 அரசியல் சார்பற்ற நிறுவனங்கள், சமயக்குழுக்கள், மற்றும் ஆட்சிக்கலை கழகங்களினால் கையொப்பமிடப்பட்டும் உள்ளது. “தட்பவெப்பநிலை மாற்ற நெருக்கடியின் மையத்தில் வீற்றிருக்கும் நன்னெறி மற்றும் ஒழுக்கமுறை குறித்த கேள்விகளை ஆழமாக கருத்தில் கொள்ள” உலகத் தலைவர்களை அச்சாசனம் கேட்டுக்கொள்கிறது.

 “தட்பவெப்ப நிலை நியாயம் குறித்த நாட்டம் எல்லைக்குட்பட்ட வளங்கள் குறித்த ஒரு போட்டியல்ல, மாறாக, ஆதரிக்கப்படக்கூடிய, நீதியுடனான மற்றும் அமைதிமிக்க ஓர் நாகரிகத்தை அமைக்க முயலும் தேசங்களிடையே அதிகரிக்கும் அளவிலான ஒற்றுமை குறித்த படிப்படியாக வெளிப்படும் செயற்பாட்டின் ஒரு பகுதியாகும்,” என அந்த மனு குறிப்பிட்டது.

 

ஐக்கியா நாட்டிற்கான பஹாய் பிரதிநிதியான தாஹிரி நேய்லர், அச்சாசனத்தின் நோக்கம் தட்பவெப்பநிலை மாற்றம் என்பது அரசியல், பொருளாதார மற்றும் அறிவியல் பிரச்சினைகளுக்கும் மேற்பட்டதென்பது குறித்து கவனத்தை ஈர்ப்பதே ஆகும் என்றார்.

 

 “தட்பவெப்பநிலை மாற்றத்தில் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய நன்னெறி மற்றும் ஒழுக்கமுறை குறித்த பரிமானம் ஒன்று உள்ளது,” என திருமதி நேய்லர் கூறினார். “உதாரனமாக, ஏழை நாடுகளை விட பணக்கார நாடுகளே தட்பவெப்ப பிரச்சினைகளுக்கு அதிகம் வித்திட்டுள்ளன. ஆகவே, எந்த நீண்டகால தீர்விலும் நீதி குறித்த அம்சம் ஒன்றுள்ளது,” என அவர் மேலும் கூறினார்.

 

தட்பவெப்பநிலை மாற்றத்தின் தாக்கம் மற்றும் அதன் சாத்தியம் குறித்த அறிவிற்கான கட்டுமானக்கூறுகளை அறிவியல் வழங்க முடிந்த அதே வேளை, குடிமக்கள் குழுக்கள் மற்றும் தனிநபர்களும் செயற்பாட்டிற்கான ஊக்கத்தை வழங்குவது முக்கியமாகும், என டாக். பச்சௌரி கூறினார்.

 

 “தலைவர்களை மட்டும் நாம் நம்பியிருக்க முடியாது, தேச அரசுகளையும் நாம் நம்பியிருக்கமுடியாது,” என அவர் கூறினார். “என்ன செய்யப்படவேண்டும் என்பதற்கான அடிமட்ட மக்களின் பேரெழுச்சி மற்றும் விழிப்புணர்வு உண்மையிலேயே தேவைப்படுகிறது. அது நடக்கும்போது, தலைவர்களும் பிறகு அதைப் பின்பற்றுவார்கள், “ என அவர் மேலும் கூறினார்.

மேலும் படிக்க...


மேல்விவரங்களுக்கு

peterbrown

டாக்டர் ராஜேந்திரா K. பச்சௌரி