செய்தி - 709
24 ஏப்ரல் 2009
பூனொஸ் ஆயர்ஸ், அர்ஜென்டினா — இவ்வாரம், 70வது வருடமாக, பூனொச் ஆயர்ஸ் பஹாய்கள் தங்கள் ஆன்மீக சபையை தேர்வு செய்வதற்காக ஒன்றுகூடினர். பூனொஸ் ஆயர்ஸ் ஆன்மீக சபை தென் அமெரிக்கா முழுவதுமுள்ள 600 ஆன்மீக சபைகளிலேயே மிகவும் பழமையான இரு ஆன்மீக சபைகளுள் ஒன்றாகும்.
பூனொஸ் ஆயர்ஸ் பஹாய் சமூகத்தின் வளர்ச்சியை குறிப்பிடும் நிழல்படங்களின் காட்சி ஒன்று 20 ஏப்ரலன்று பூனொஸ் ஆயர்ஸ் பஹாய்களின் கூட்டம் ஒன்றில் வழங்கப்பட்டது. உள்ளூர் சரித்திரத்தை ஆய்வு செய்த பெஹ்ரூஸ் கோமாஸி அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய உதவினார்.
பூனொஸ் ஆயர்ஸின் முதல் சபை 10 மே 1940ல் தேர்வு செய்யப்பட்டதென அவர் தெரிவித்தார். அக்காலத்தின் வெளியீடுகளின்படி பூனொஸ் ஆயர்ஸ், பிராசில் நாட்டின் பாஹியா, ஆகிய இரண்டுமே தென் அமெரிக்காவில் தேர்வு செய்யப்பட்ட முதல் இரண்டு சபைகளாகும்.
இவ்விரண்டு நகரங்களுக்கும் பிரபல பஹாய் போதகரான மார்த்தா ரூட் அவர்கள் 1919ல் வருகை தந்திருந்தார். இவர் தமது உலகம் தழுவிய பிரயாணங்களுக்கு மிகவும் பெயர் பெற்றவராவார். அப்பிராயணங்களின் போது அவர் அரச குடும்பங்கள், அரசாங்க அதிகாரிகள், பொதுமக்கள், பத்திரிக்கை நிருபர்கள் போன்றோருக்கு பஹாய் சமய செய்தியை வழங்கியுள்ளார்.
1940ல் மற்றொரு பிரபல பஹாய் ஆன மே மேக்ஸ்வல் அவர்களும் பூனொஸ் ஆயர்ஸுக்கு வருகை தந்திருந்தார். ஆனால் அவர் வருகை தந்த மூன்று நாட்களுக்குள் துரதிர்ஷ்டவசமாக 27 பிப்பரவரி அன்று உயிர்நீத்தார். மே மேக்ஸ்வலின் மரணம் அந்த நகரத்தில் பஹாய் நடவடிக்கைகளுக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தது என திரு கோமாஸி கூறினார். அவர் மறைந்த இரண்டே மாதங்களில் அந்த நகரின் முதல் ஆன்மீக சபை தேர்வு செய்யப்பட்டது.
ஏப்ரல் 21 முதல் மே 2 வரை ரித்வான் பண்டிகை நாட்களாகும் மற்றும் இந்த நாட்கள் பஹாவுல்லா தாம் கடவுளின் புதிய அவதாரம் எனும் தமது அறிவிப்பின் வருட விழாவும் ஆகும். உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இத்தகைய உள்ளூர்களில் இவ்வித தேர்தல்கள் நடைபெறுகின்றன.
மேலும் இதே ரித்வான் பண்டிகை நாட்களின் போது ஒவ்வொரு தேசிய சமூகமும் தேர்தல் மாநாடுகள் நடத்தி பேராளர்களின் மூலமாக தங்கள் தேசிய ஆன்மீக சபையை தேர்வுசெய்கின்றன. இத்தகைய 180 தேர்தல்கள் இவ்வருடம் நடைபெறவிருக்கின்றன.
தேசிய மற்றும் உள்ளூர் சபைகளில் ஒன்பது பேர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள் மற்றும் 21வயதிற்கு மேற்பட்ட அதே உள்ளூரில் வாழும் எல்லா பஹாய்களும் இத்தகைய தேர்தலில் பங்கு பெறும் உரிமை பெற்றவர்களாவார்கள்.
ஏப்ரல் 20ம் திகதி, பூனொஸ் ஆயர்ஸ் பஹாய்கள் தங்கள் ஆன்மீக சபைய தேர்வு செய்வதற்காக கூடியுள்ளனர்
பூனொஸ் ஆயர்ஸ் பஹாய் ஆன்மீக சபை முதன் முதலாக 1940ல் தேர்வு செய்யப்பட்டது. அதன் முதல் உறுப்பினர்கள்
1940ல் தங்கள் ஆன்மீக சபையை தேர்வு செய்வதற்காக கூடியிருந்த பஹாய்கள்