செய்தி - 687
மாநாடுகளின் பங்கேற்பு 50,000 தாண்டியுள்ளது
13 ஜனவரி 2009
குவாடாலாஜரா, மெக்சிகோ — மெக்சிகோவில், பிரார்த்தனைகள் ஸ்பேனிய மொழியில் கூறப்பட்டன, டொரொன்டோவில் அங்கிலம், பிரெஞ்ச் மற்றும் வட டுத்சொன் மொழிகளில் கூறப்பட்டன.
ஆனால் அங்கெல்லாம் நிலவிய உற்சாக உணர்வு ஒன்றாகவே இருந்தது. தங்களின் கடந்தகால சாதனைகளைக் கொண்டாட மற்றும் வருங்கால நடவடிக்கைகளைத் திட்டமிடவும் அவர்கள் ஒன்றுகூடியிருந்தனர். பஹாய் சமயத்தின் தலைமைத்துவமான தேர்ந்தெடுக்கப்படும் உலக நீதி மன்றத்தால் ஆணையிடப்பட்ட, குவாலாலாஜரா மற்றும் டொரொன்டோவில் நடைபெற்ற இவ்வொன்றுகூடல்கள் உலகம் முழுவதும் நடைபெறும் 41 மாநாடுகளில் ஒரு பகுதியாகும்.
இம்மாநாடுகள் நவம்பர் 1ல் ஆரம்பித்து மார்ச் 1ம் தேதி முடிவுறும். இதுவரை 27 ஒன்றுகூடல்களில் 50,000 மக்கள் பங்கேற்றுள்ளனர்.
டோரொன்டோ மாநாட்டில் சுமார் 4,000 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். அதில் நுனாவுட் உட்பட கிழக்கு கனடா முழுவதுமிருந்தும் பெர்முடாவிலிருந்தும் பங்கேற்பாளர்கள் வந்திருந்தனர். மெக்சிகோவிலிருந்து 600 பங்கேற்பாளர்கள் - வடமேற்கு பாஜா கலிஃபோர்னியாவிலிருந்து தென்கிழக்கின் சியாப்பாஸ் மற்றும் குவிந்தானா ரூவிலிருந்து கலந்துகொண்டனர்.
"பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது சிறிய மாநாடே ஆகும், ஆனால் அதன் இதயமும் உற்சாகமும் மெக்சிகோ போன்ற ஒரு பெரிய நாட்டையே தழுவும் அளவுக்கு பிரம்மாண்டமானவை," என மெக்சிகோ நாட்டின் பங்கேற்பாளர் ஒருவர் கூறினார்.
அடுத்த வாரம் கனடாவின் வான்கூவர்; நிக்காராகுவாவின் மானாகுவா; மற்றும் பாப்புவா நியு கினியின் லாய் ஆகிய இடங்களில் மாநாடுகள் நடைபெறும்.
மெக்சிகோவின் குவாடாலாஜரா நகரில் நடைபெற்ற மாநாட்டிற்கு அந்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பங்கேற்பாளர்கள் வந்திருந்தனர்.