செய்தி - 668
11 நவம்பர் 2008
ஜொஹான்னஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா —12 நாடுகளிலிருந்து ஆயிரம் பேர்களுக்கும் அதிகமான பஹாய்கள் ஒரு வட்டார மாநாட்டிற்கு ஒன்றுகூடினர். தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற கூட்டங்களில் இதுவே மிகப் பெரிய கூட்டமாகும்.
இதே போன்று கென்யா நாட்டின் நாக்கூரு நகரில் சென்ற வார இறுதியில் நடைபெற்ற மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நான்கு மாத காலத்திற்கு நடக்க வேண்டிய இந்த மாநாடுகளுக்கான மகத்தான வரவேற்பினால் பன்மடங்கு அதிகரிக்கும் பங்கேற்பாளர்களைக் கருத்தில் கொண்டு ஏற்பாட்டாளர்கள் தங்கள் திட்டங்களையெல்லாம் மாற்றியமைக்க வேண்டியுள்ளது.
ஜொஹான்னஸ்பர்கில் ஏற்பாட்டாளர்கள் எதிர்ப்பார்த்தது 500 பேர்களைத்தான். இருந்தும் அவர்கள் முன்யோசனையுடன் 800 பங்கேப்பாளர்களைக் கருத்தில் கொண்டு தங்கள் திட்டத்தை சற்று மாற்றியமைத்தனர். ஆனால் வந்ததோ 1000 பேர்களுக்கும் மேல்! ஏற்பாடுகள் சற்று நிலைகுலைந்துபோகவே செய்தன என அந்த நாட்டின் தேசிய ஆன்மீக சபை உறுப்பினர் ஒருவர் கூறினார்.
"ஆரம்பித்த சில மணி நேரத்தில் உற்சாகத்தையும் ஈடுபாட்டையும் தவிர் மற்றெல்லாமே பற்றாகுறைதான் ", என ஏற்பாட்டாளர்களில் ஒருவர் கூறினார்.
பஹாய்களின் தலைமைத்துவ தேர்ந்தெடுக்கப்படும் அமைப்பான உலக நீதி மன்றம் 20 அக்டோபர் 20 என திகதியிடப்பட்ட ஒரு கடிதத்தில் 2 நாள்கள் கொண்ட இந்த 41 மாநாடுகளையும் அறிவித்தனர்
அடிமட்ட சமூக மேம்பாட்டில் தாங்கள் சமீபகாலத்தில் அடைந்துள்ள சாதனைகளைக் கொண்டாடவும் தங்கள் உள்ளூர்களில் மைய நடவடிக்கைத் திட்டங்களுக்கான அடுத்த கட்ட செயல்பாடுகளைத் திட்டமிடுவதே இத்தகைய ஒன்றுகூடல்களுக்கான நோக்கம், என அக்கடிதம் அறிவித்தது.
இந்த மாநாடுகளில் முதலாவது மாநாடு 1 நவம்பரில் ஸாம்பியா நாட்டின், லுசாக்காவில் நடைபெற்றது, மற்றும் இவ்வாரத்தில் இந்தியாவின் பெங்களூர்; கொங்கோவின் ஊவிரா; மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசின் பாங்குய் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.
சுமார் இரு வாரங்களுக்கு முன்புதான் ஜோஹான்னஸ்பர்க்கில் தேசிய ஆன்மீகச் சபை இந்த மாநாட்டுக்கான விவரங்களை அறிவித்து தென் ஆப்பிரிக்காவைச் சுற்றியுள்ள பஹாய்களை பங்கேற்குமாறு ஊக்குவித்தது. அது அம்மாநாட்டை "ஒன்றுகூடி கலந்தாலோசனை செய்வதற்கான பேருணர்வு மிக்க வாய்ப்பு" என வர்ணித்தது.
அங்கோலா, போட்ஸ்வானா, லா ரியூனியன், லெசோத்தோ, மடாகாஸ்கார், மோரிஷியஸ், மோஸாம்பிக், நமீபியா, செய்ஷால்ஸ், தென் ஆப்பிரிக்கா, மற்றும் சுவாஸிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து பஹாய்கள் வந்தனர்.
முதல் நாள் மதியத்திற்குள்ளாக, "இம்மாநாடு பிரமிக்க வைக்கின்றதென" ஒரு ஏற்பாட்டாளர் கூறினார். சில நீண்டகால பஹாய்கள் பலவிடங்களிலிருந்து வந்திருந்த பஹாய்களைக் கண்ணீர் மல்க கண்ணுற்று புலகாங்கிதம் அடைந்தனர்.
மாநாட்டுக்கான பதிவு ஆரம்பித்தது முதல் ஆர்வமும் உற்சாகமும் நிறைந்திருந்தன.
நாக்குருவிற்கு வந்திருந்தோரில் பாதி பேர்கள் கென்யா நாட்டிலிருந்து வந்தவர்களாவர், ஆனால் உகாண்டாவிலிருந்து 200 பேர்களும், தான்ஸானியாவிலிருந்து 100 பேர்களும், எத்தியோப்பியாவிலிருந்து 42 பேர்களும், மோசாம்பிக்கிலிருந்து நால்வரும், தென் சூடானிலிருந்து மூவரும் வந்திருந்தனர்.
"பங்கேற்பாளர்கள் பலர் இதற்கு முன் எந்த மாநாட்டிலும் கலந்துகொள்ளாதவர்களாதலால் மாநாட்டில் உற்சாகமும் கரைபுரண்டோடியது," என மாநாட்டிலிருந்து வந்த முதல் அறிக்கை கூறியது.
தென் ஆப்பிரிக்கா முழுவதிலிமிருந்து பஹாய் ஜொஹான்னச்பர்கில் ஒன்றுகூடினர்....
கீழே: ஆப்பிரிக்காவின் பல பாகங்களில் நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சிகள்