உலக பஹாய்ப் பிரதிநிதிகள் ஏப்ரல்'08 அனைத்துலகப் பேராளர் மாநாட்டில் பஹாய் சமூகப் பிரச்சனைகள் குறித்து கருத்துரைக்க வரிசையில் நிற்கிறார்கள்

ஹைஃபா நகரில், உலகமய தேர்தல் உலகமயத்திற்கான காட்சியகமாகின்றது

153நாடுகளைச் சார்ந்த 1000த்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், தனிச்சிறப்பு வாய்ந்த தேர்தல் முறை ஒன்றைப் பின்பற்றி பஹாய் சமயத்தின் அனைத்துலக நிர்வாக அமைப்பைத் தேர்வு செய்திட ஒன்றுகூடினர்.

 

ஐக்கிய நாட்டுச் சபையில், சமயங்களோடு ஓர் அணுக்கமான உடனுழைப்பு

நாகரிகங்களின் கூட்டனி மற்றும் மற்றும் ஐநா பொதுச் சபையின் தீர்மானங்கள் உட்பட சமயம் சார்ந்த சமூகங்களோடு ஐநா புதிய கூட்டாண்மைகளை அமைக்கின்றது..

அகக்காட்சி: அறிவியல் மற்றும் சமயத்திற்கிடையிலான பிளவைக் கடப்பது: பரிணாமவளர்ச்சி குறித்த ஒரு கண்ணோட்டம்

அறிவியல் யுகமான இ்க்காலத்தில் சமயத்தின் பங்கு பற்றி பலர் கேள்வியெழுப்புகின்றனர். குறிப்பாக, பரிணாம வளர்ச்சி தத்துவம் குறித்த விஷயத்தில் இது உண்மையாகவே இருக்கின்றது. ஆனால், பஹாய் எழுத்துக்களில் பரிணாமவளர்ச்சியின் அறிவியல் மெய்ம்மையை அவ்வெழுத்துக்கள் அரவணைப்பதையும் அதே வேளை முடிந்தமுடிவான மெய்ம்மையின் தெய்வீக இயல்பை அது தழுவிடும் ஓர் அகக்காட்சியையும் நாம் அங்கு காணலாம்.

இரான் நாட்டில், ஆச்சரியமளிக்கும் அளவிலான ஆதரவுகளுக்கிடையே புதிய பஹாய்-எதிர்ப்பு கீழறுப்புமுறைகளும் தோன்றுகின்றன


கடந்த சில மாதங்களாக, இரான் நாட்டின் 300,000 உறுப்பினர் கொண்ட பஹாய் சமூகம் அதிகரிக்கும் வன்முறைகளையும் - அதே வேளை மக்களிடையே ஆச்சரியப்பட வைக்கும் அளவிலான ஆதரவையும் கண்டுள்ளது.

இத்தகைய வன்முறையும் தொல்லையளிப்புக்களும் அரசாங்கத்தின் வெளிப்படையான ஆசிகளுடனேயே செயல்படுத்தப்படுகின்றன என்பதே உண்மை. பஹாய்களுக்கு எதிராக தனது தகவல் சாதனங்கள் வழியாகவும் பள்ளிகளில் வெளிப்படையான சமயப்பாகுபாடுகளின் வழியாகவும், வெலை செய்யுமிடங்கள் மற்றும் நீதிமன்றங்கள் வாயிலாகவும் தொடரப்படும் அவதூறு பிரச்சாரத்தின் வாயிலாக இரான் நாட்டு அரசாங்கம் சமீப காலங்களில் பஹாய்களுக்கெதிராக வெறுப்புணர்வைத் தூண்டி வருகிறது.

ஸாம்பியா நாட்டில், சேவைத்திட்டத்தின் வாயிலாக இளம் பதின்மவயதினர்கள் பயனடைகின்றனர்.

பல்வேறு பின்னனியைச் சார்ந்த 2000த்திற்கும் மேற்பட்ட "இளமிளைஞர்கள் " அறிவுத் திறன்கள் மற்றும் நன்னெறி மேம்பாட்டை போதிக்கும் ஒரு புதிய திட்டத்தில் பங்கேற்கின்றனர். பிறருக்குச் சேவை செய்வதின்பாலான வலியுறுத்தல் வெளிப்படையான நல்விளைவுகளை உண்டாக்குகின்றது என்கின்றனர் சமூகத் தலைவர்கள்.

பெண்களுக்கெதிரான வன்முறை குறித்து உலகளாவிய கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஐ.நாட்டின் வல்லுநர் குழு பரிந்துரை.

டிசம்பர் மாதம் நடைபெற்ற பெண்களுக்கெதிரான வண்முறையை ஒழிக்கும் விஷயத்திற்கு மறுகவனம் செலுத்துவது பற்றிய வல்லுநர்குழு விவாதங்களில் அரசாங்க மற்றும் பொதுச் சமூக பிரதிநிதிகள் அறைகூவல் விடுத்துள்ளனர்

வறுமை, வேலைவாய்ப்பு, மற்றும் தொழில் பற்றிய அர்த்தம் குறித்து ஐ.நாவில் கலந்தாலோசனை.

ஐக்கிய நாடுகள் - பஹாய் அனைத்துலக சமூகம் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது, ஒன்று வறுமைநிலை குறித்தும் மற்றுது வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பற்றியதும் ஆகும். மேலும் அந்த நிறுவனம் இளைஞர்களும் வெலைவாய்ப்புக்களும் பற்றிய ஒரு வல்லுநர் குழு ஐநாவிற்கான சமூக மேம்பாட்டுக் கமிஷனில் பிப்ரவரி மாதம் விவாதம் ஒன்றை ஏற்பாடு செய்திட உதவியது. "வறுமையை ஒழித்தல்: ஒன்றாக முன்னேறிச் செல்லல்," எனும் அந்த வறுமைநிலை குறித்த அறிக்கை, உலகளாவிய வறுமைநிலையை ஒழிப்பதற்கான இணக்கப்பட்ட, கோட்பாடு அடிப்படையிலான அனுகுமுறையை அறைகூவியது.

நூல் ஆய்வு: உள்ளூர் அளவில் செயல்படுவது, உலகளாவிய அளவில் சிந்திப்பது, மறுசிந்தனை

பில் மேக்கிப்பன் எழுதிய இப்புதிய நூலின் மையத்தில் உலகளாவிய பொதுநலனுக்கும், செழுமைக்கும் துரிதமான மற்றும் பரவலான பொருளாதார வளர்ச்சி மூலத்தீர்வல்ல எனும் எதிர்மாறான கருத்து உள்ளது.


மொழிபெயர்ப்பு:

பஹாய் அனைத்துலக சமூகத்திலிருந்து கிடைக்கும் புதிய செய்திகளுக்குப் பின் வரும் இணையத்தளத்திற்குச் செல்லவும்:

http://news.bahai.org