இல்லம்

 

இனவாதத்தி்ற்கெதிரான போர்

 

பஹாய் அனைத்துலக சமூகம் இனவெறிக்கெதிரான உலக மாநாட்டுக்கு விடுத்த அறிக்கை

துர்பான், தென் ஆப்பிரிக்க

25 ஆகஸ்ட் 2001 (பஹாய் உலக செய்தி சேவை)

 

இனவாதம், இனபாகுபாடு, இனவெறுப்பு மற்றும் இவற்றோடு தொடர்பு கொண்ட பிற சகிப்பின்மைகளுக்கு எதிராக நடக்கும் மாநாட்டுக்கு பின்வரும் அறிக்கையை பஹாய் அனைத்துலக சமூகம் வெளியிட்டுள்ளது. இந்த மாநாடு, வரும் 31 ஆகஸ்ட 2001 - 7 செப்டம்பர் 2001 வரை, துர்பான், தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவிருக்கின்றது.

 

இனவாதம் சரும(நிறத்தை) அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கவில்லை, ஆனால், மனித உள்ளத்திலிருந்தே உற்பத்தியாகின்றது. இன ரீதியான தப்பெண்ணம், இனவெறுப்பு, மற்றும் சகிப்பின்மைக்கான நிவாரணமாகப்பட்டது, அந்த தப்பபிப்ராயங்களை முதலில் திருத்துவதன் வாயிலாகவே அடையப்படவேண்டும். இந்த தப்பெண்ணங்கள், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உயர்வுமனப்பான்மை மற்றும் தாழ்வுமனப்பான்மைகள் குறித்த தப்பான உட்கருத்துக்களை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளன.

 

எல்லா வகையான பிரிவினைகள் மற்றும் சகிப்பின்மைகளின் மையத்தில், மனுக்குலம் என்பது வெவ்வேறான மற்றும் தனித்த இனங்கள், மக்கள், மற்றும் ஜாதிகளை கூறுகளாக கொண்டுள்ளது எனும் தவறான எண்ணமே உள்ளது. மற்றும், இந்த தனிப்பிரிவுகள், இயல்பாகவே, மாறுபடும் அறிவாற்றல்களையும், நெறிமுறைகளையும், மற்றும்/அல்லது சரீர ஆற்றல்களையும் கொண்டுள்ளன எனும் எண்ணமும் ஏற்பட்டுள்ளது. இந்த தப்பான எண்ணங்கள், வெவ்வேறு மனிதப்பிரிவுகள் வெவ்வேறு வகைகளில் நடத்தப்படுவது நியாயமே எனவும் வாதிடுகின்றன. உண்மையில், இருப்பது ஒரு மனித இனமே. பூலோகத்தில் வசிக்கும் நாமெல்லாருமே ஒரே மக்கள், ஒரு விதியினால் பிணைக்கப்பட்டுள்ள ஒரே மனிதக்குடும்பம், ஒரு வஸ்துவிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரே இனம். நாம் "ஒரே ஆன்மாவாக இருக்க கடமைப்பட்டவர்களும்" ஆவோம். இந்த உண்மையை கண்டுணர்வதே, இனவாதம், இனவெறுப்பு மற்றும் எல்வா விதமான சகிப்பின்மைகளுக்கும் எதிரான நிவாரணமாகும். இனவாதத்திற்கெதிரான உலக மாநாட்டின் கலந்துரையாடல்கள், காலந்தாலோசனைகள் மற்றும் இறுதி முடிவுகளின் பின்னனியில் வழிகாட்டும் கோட்பாடாக, இந்த கண்டுகொள்ளலே இருக்கவேண்டும்.

 

வாழ்க்கை குறித்த இந்த அடிப்படை விஷயத்தை ஒழுங்காகப் புரிந்துகொள்ளவேண்டும். அப்படி புரிந்துகொள்வதானது, இனவாதம், இன மற்றும் ஜாதி குறித்த தப்பெண்ணங்கள், இனவெறுப்பு ஆகியவற்றுக்கு அப்பால் மனுக்குலத்தை வழிகாட்டிடும் ஆற்றலை மட்டும் கொண்டிருக்கவில்லை, ஆனால், சகிப்பு அல்லது பலகலாச்சாரவியல் குறித்த இடை எண்ணங்களுக்கும் அப்பால் வழிகாட்டக்கூடியது. இந்த கோட்பாடுகள், அமைதியான, நியாயமான, மற்றும் ஐக்கியமான உலகத்தை ஸ்தாபிப்பதற்கு முக்கிய படிகளாகும். ஆனாலும், ஆழமாக வேரூன்றியுள்ள இனவாதம் மற்றும் அதன் தோழமை எண்ணங்களை அழிப்பதற்குறிய ஆற்றலை அவை கொண்டிருக்கவில்லை.

 

மனுக்குல ஒறுமை குறித்து கோட்பாடானது, மனித ஆன்மாவின் மையமான ஆழங்களுக்குள்ளேயே ஒரு சலசலப்பை ஏற்படத்தக்கூடிய ஒன்றாகும். சகோதரத்துவம் அல்லது ஒற்றுமையின் சிறப்பு குறித்த பேச்சுக்களை, வேறு விதமாக பேசும் ஒரு முறையும் அல்ல இது. அல்லது, ஏதோ அறைகுறை எதிர்ப்பார்ப்போ, கவர்ச்சியான விளம்பரமோ என்பதும் அல்ல. இந்த இருபதாம் நூற்றாண்டில் மனுக்குலம் கூட்டாக முதிர்ச்சி நிலையை அடைந்துள்ளதன் காரணமாக, நமது கவனத்தைக் கவருவதான ஒரு நித்தியமான ஆன்மீக, நெறிமுறைசார்ந்த, மற்றும் பௌதீக ரீதியிலான மெய்நிலையின் பிரதிபலிப்பே இது. அதன் வெளிப்பாடு தற்போது மிகவும் தெளிவாகவே தென்படுகிறது. ஏனெனில், உலக மக்கள் அனைவரும், தாங்கள் பரஸ்பரம் ஆதரவு தேவைப்படும் நிலையில் இருப்பதைக் கண்டுணரவும், தங்கள் முழுமை குறித்து விழிப்புணர்வு பெறவும் முடிந்தவர்களாக இருக்கின்றனர்.

 

மனுக்குல ஒறுமையின் உண்மை நிலை, அறிவியல் ரீதியாகவும் முழுமையாக ஆதரிக்கப்பட்டுள்ளது. மனிதவியலும், அவய அமைப்புமுறையும், மனோதத்துவமும், சமூகவியலும், சமீபத்தில், மரபியற்கூறுகளை நுண்ணாய்வு செய்யும் விஞ்ஞானமான மரபறிவியல் முறையும், அடிப்படை வாழ்வுநிலைக்கப்பால் கணிப்புக்கு அப்பாற்பட்ட வேறுபாடுகளைக் கொண்டிருந்த போதும், மனுக்குலம் ஒன்றே ஒன்றுதான் என்பதை மெய்ப்படுத்தியுள்ளன. அவற்றின் நம்பிக்கையாளர்கள், ஒரு சில நேரங்களில், தாங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் எனும் தவறான எண்ணத்தைக் கொண்டிருந்தபபாதும், எல்லா உலக மகா சமயங்களும் இந்தக் கோட்பாட்டைத்தான் கடைப்பிடித்து வந்துள்ளன. உலகமகா சமயங்களின் ஸ்தாபர்கள் அனைவருமே, ஒரு காலத்தில், அமைதியும், நியாயமும் மேவி, மனுக்குலம் முழுமையும் ஐக்கியமாகும் என்பதை வாக்களித்துள்ளனர்.

 

மனுக்குலத்தின் கூட்டு ஒறுமைத்தன்மையின் புதுவிழிப்புணர்வானது, ஒரு வரலாறு சார்ந்த வளர்செயற்பாட்டின் முடிவிலேயே தோன்றியுள்ளது. அதில், தனிமனிதர்கள் விரிவடையும் ஒருமங்களாக இருக்கப்பட்டுள்ளனர். குல நிலையிலிருந்து, இனங்களாகவும், பிறகு ஊர்களின் நிலைக்கும், அதன் பிறகு தேசங்களாகவும் மாறிவந்துள்ள மனுக்குலத்தின் தவர்க்கவியலா அடுத்த கட்டம், ஓர் உலகநாகரிகமாக மாறுவதே அன்றி வேறில்லை. இந்த புதுவுலக நாகரீகத்தில், எல்லா மனிதர்களும், மக்கள்களும், ஒரே தனிப்பெரும் ஜீவனின் ஆக்கக்கூறுகளாவர். இந்த ஜீவனே மனித நாகரீகமாகும். நூறு வருடங்களுக்கும் முன் பஹாவுல்லா கூறியுள்ளது போல், "உலகம் ஒரே நாடு, மனிதர்கள் அதன் பிரஜைகள்."

 

மேலும், பஹாய் புனித வாசகங்களில் விளக்கப்பட்டுள்ளது போல், மனுக்குலத்தின் ஒறுமைத்தன்மை: "தற்கால சமுதாயத்தின் கட்டமைப்புமுறையில் பூரன இயற்கை மாற்றத்தை வலிறுத்துகின்றது. உலகம் இதுவரையில் அனுபவித்திராத ஒரு மாற்றமாக அது இருக்கும்... நாகரீகப்படுத்தப்பட்ட உலகம் முழுவதையும் மறுகட்டமைப்பு செய்வது, மற்றும் இராணுவமற்ற பகுதியாகவும் செய்வதற்குக் குறைந்து வேறு எதையும் அது கோரவில்லை. அதன் வாழ்வின் அவசியமான அம்சங்கள் அனைத்திலும் பூரண இயற்கக வளர்ச்சி ரீதியில் ஐக்கியப்படுத்தப்பட்டிருக்கும். அதன் அரசியல் சாதனங்கள், அதன் ஆன்மீக இலட்சியங்கள், அதன் வானிபமும் பணநிலைமையும், அதன் எழுத்துருவும், மொழியுமே அந்த அவசியமான அம்சங்களாகும். இருந்தபோதிலும், அதன் கூட்டரசுக் கூறுகளின் தேசிய ரீதியிலான அம்சங்களில் அது கணிப்பிட முடியாத அளவுக்கு பல்வகைத் தன்மைகளை கொண்டிருக்கும். இனவாதத்திற்கு எதிரான உலக மாநாட்டின் கருப்பொருள்களைப் பற்றி சிந்திக்கையில், மனுக்குல ஒருமைத்தன்மையின் மெய்நிலையை ஒழுங்காக புரிந்துகொள்வதானது, பல விளைவுகளைச் சுட்டிக்காட்டுகிறது.

 

அது வலியுறுத்துவது என்னவென்றால், உலக மக்களில் குறிப்பிட்ட ஒரு குழுவினருக்கு வேறு ஒரு குழுவினரைப் பார்க்கிலும், எந்த ஒரு சட்டமோ, சம்பிரதாயமோ, மனோநிலையோ, வழங்கும் மேலான உரிமைகளோ, சலுகைகளோ, நெறிமுறைப்படி மட்டுமல்லாது, மற்றவர்களைவிட தாங்கள் ஏதோ ஒரு வகையில் உயர்ந்தவர்கள் என தங்களைத் தாங்களே கருதிக்கொள்வோரின் மேலான நன்மைகளுக்கும் இது அடிப்படையான எதிர் நிலையிலேயே இருக்கின்றன என்பதாகும்.

 

தேசிய நாடுகள், தாங்கள் உலகமயமான நாகரீகத்தின் கட்டுமான கூறுகள் எனும் முறையில், பொது உரிமை முறைகளை பற்றிக்கொள்ள வேண்டும். மற்றும், தங்களுடைய சட்டங்கள், சம்பிரதாயங்கள் மற்றும் வழக்கங்களிலிருந்து, ஜாதி, தேசிய, அல்லது இன ரீதியான எந்தவொரு பிரிவினையையும் முற்றாக அகற்றுவதற்கு சுறுசுறுப்பான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

 

சமூக ரீதியிலான அமைப்புமுறைகளுக்கு நீதியே அதிகாரம் செலுத்தும் கோட்பாடாக இருக்கவேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது. தொடர்விளைவான இக்கோட்பாடு, அரசாங்கங்கள், அவற்றின் செயலாண்மைகள், மற்றும் பொது சமூகம் ஆகியவற்றிடமிருந்து பொருளாதார நியாயமின்மைகளை எல்லா நிலைகளிலும் நேர்படுத்துவதற்குரிய பரவலான நடவடிக்கைகளை கோருகின்றது. தன்னிச்சையாக வழங்குதல் மற்றும், அளவுக்கதிகமான செல்வத்தை "சமப்படுத்தல் மற்றும் பங்கிடுவது" குறித்த அரசாங்க நடவடிக்கைகளை பஹாய் வாசகங்கள் வலியுறுத்துகின்றன. இதன் வாயிலாக, செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்குமிடையிலான பெரும் ஏற்றத்தாழ்வுகள் அகற்றப்படக்கூடும். எல்லா நிலைகளினூடும் பொருளாதார செழிப்பை ஊக்குவிக்கும் இலாபப்பங்கீடு மற்றும் தொழிலை வழிபாட்டுக்கு இணையாக்குவது போன்ற, குறிப்பிட்ட சில நடவடிக்கைகளையும் பஹாய் போதனைகள் அறிவுறுத்துகின்றன.

 

நடப்புக்காலத்திய பிரச்சனைகளான, சிறுபான்மையினர் தேசம் தேசமாக சிதறி போகும் சூழ்நிலை, பிரஜா உரிமை குறித்த சமமற்ற சட்டங்கள், அகதிகள் மறுகுடியேற்றம் போன்ற, வேற்றினவெறுப்பு குறித்த மாநாடு எதிர்நோக்கும் பிரச்சனைகள், மனுக்குலத்தின் ஒருமை மற்றும், பஹாவுல்லா குறிப்பிட்டிருக்கும், உலகப்பிரஜை கருத்துப்படிவத்தின் ஒளியில் மிகச் சிறந்த முறையில் அனுகப்படக்கூடும்.

 

மேலும், மனுக்குல ஒருமை குறித்த கோட்பாடு, நடப்புலகின் மக்களை வெவ்வேறு "இனங்களாகவும்" "மக்களாகவும்" வேறுபடுத்திக்காட்டும் முயற்சிகளை, செயற்கையானவை எனவும் தவறான எண்ணத்தை தோற்றுவிக்கக்கூடியவை எனவும் வெளிப்படுத்துகின்றது. இன, தேசிய மற்றும்/அல்லது வகுப்பு குறித்த மரபு செல்வங்கள், பெருமைக்குரியவைகளாகவும், நேரான சமூக மேம்பாட்டுக்கான சூழ்நிலையாக செயல்பட கூடியவைகளாகவும் கருதப்படக்கூடியபோதிலும், இவ்வித சிறப்புகள், வேறு பல புதிய வேற்றுமைகள், அவை எவ்வளவுதான் நுணுக்கமானவையாக இருந்தபோதிலும், உயர்தர மனப்பான்மைகளுக்கான அஸ்திவாரங்களாக, ஆகிவிடக்கூடாது.

 

பல பல வருடங்களாகவே, பஹாய் உலக சமூகம், ஐக்கிய நாடுகளுக்கான தனது அறிக்கைகளில், மனித ஒருமை, இனவாதத்திற்கெதிரான போர் ஆகியவற்றை ஆதரிக்கவோ, கோரவோ செய்துள்ளது. இவற்றின் உதாரணங்களாக:

 

மனுக்குலத்தின் பூரண இயற்கை ஒற்றுமையை போதிக்கக்கூடிய அனைத்துலக கல்விப் பிரச்சாரங்களை பரவலாக ஊக்குவிப்பது. குறிப்பாக, தேசிய மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள், அதே சமயம் அரசாங்கச்சார்பற்ற அமைப்புக்கள் ஆகியவற்றை ஈடுபடுத்தும் இவ்வித முயற்சியை ஐக்கிய நாடுகள் சபையே ஒருங்கிணைக்கவேண்டும் என வலியுறுத்துவது.

 

மனுக்குலத்தின் கூட்டு மனசாட்சியை பிரதிநிதிக்கும், இனவாதத்தையும், இனபாகுபாட்டையும், குறிப்பாக, எல்லாவித இனபாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக மாநாடு போன்ற, ஒரு பூரணமான சட்டஅமைப்பை வழங்கக்கூடிய அனைத்துலக சாதனங்களை, --பரவலாக ஆதரிப்பது--மற்றும் பற்றிக்கொள்வது. --"மனித உரிமை குறித்த ஒரு கலாச்சாரத்தை" உருவாக்கும் நோக்கத்துடன் உலகளாவிய நிலையில் மனித உரிமை குறித்த கல்வியை ஊக்குவிப்பது.

 

பஹாய் அனைத்துலக சமூகம், இனவாதம் மற்றும் இனபாகுபாட்டை ஒழிப்பதை குறிக்கோளாகக் கொண்ட நடவடிக்கைகளை ஆதரிக்கவோ அவற்றில் மிகவும் விரிவாக பங்குபெறவோ செய்துள்ளது. பெரும்பாலும், தற்போது 182 எண்ணிக்கைக் கொண்டுள்ள, அதன் தேசிய உறுப்புநாடுகளின் வாயிலாக அது நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. உதாரணமாக, இனவாதத்தை குறிப்புடன் எதிர்க்கும் எண்ணிக்கையற்ற பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், கல்வி சம்பந்தமான நிகழ்வுகள், பத்திரிக்கை செய்திகள் மற்றும் பொதுக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அஃது ஆதரவு அளித்துள்ளது.

 

மேலும், உள்ளூர் நிலையிலான பங்கேற்புகளின் படைப்பாற்றல் மிக்க உற்சாகத்தைப் பயன்படுத்தியதன் வாயிலாக, பல நாடுகளில் உள்ள பஹாய்கள், இன ஒற்றுமை செயற்குழுக்களை அமைத்துள்ளனர். இவை, பல்லின மக்களை உறுப்பினர்களாக பெற்றும், இன ரீதியான தப்பெண்ணங்களை ஒழிக்கவும், தங்கள் உள்ளூர் சமூகங்களில் உள்ள வெவ்வேறு இனங்களுக்கிடையே பரஸ்பரம் மரியாதை உணர்வுகளைத் தோற்றுவிக்கவும் திட்டங்களை வகுத்துள்ளன.இந்த செயற்குழுக்கள், பஹாய்கள் தங்களுக்கிடையே இருக்கும் இன தப்பெண்ணங்களை போக்கிக்கொள்ளவும் உதவ முயன்றுள்ளன. அதற்கும் மேல், அரசியல், கல்வி மற்றும் சமய தலைவர்களோடு கொண்ட விரிவான உடனுழைப்பின் வாயிலாக, சமூகத்தில் நிலவும் இன ரீதியிலான தப்பெண்ணங்களை ஒழிப்பதிலும் உதவியுள்ளனர்.மேலும் குறிப்பிடத்தக்க வகையில், உலகம் முழுவதும் உள்ள பஹாய் சமூகங்கள், இன ஒற்றமையை ஊக்குவிக்கும் இளைஞர் பணிமனைகளுக்கு ஆதரவு நல்கியுள்ளன, ஆயிரக்கணக்கில் "இன ஒற்றுமை தின" பொது நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளன, இனங்களுக்கிடையிலான இணக்கத்தை ஊக்குவிக்க தொலைக்காட்சி, மற்றும் ஒளிநாடா பிரசாரங்களை ஆரம்பித்துள்ளன, உள்ளூர் இன ஐக்கிய உரையாடல்களுக்கு ஆதரவு தந்துள்ளன, மற்றும் இனவாதத்தை எதிர்த்திட பல்வேறு தேசிய கமிஷன்களிலும் பங்காற்றியுள்ளன.

 

மனுக்குல ஒருமை செயல்முறைக்கு எப்படி கொண்டுவரப்படலாம் என்பதை மேலும் முழுமையாக புரிந்துகொள்ள முயலுவோர், பஹாய் அனைத்துலக சமூகத்தின் அனுபவங்களை அய்வு செய்வது பயனளிக்கக் காணலாம். இந்த அனுபவம், பலதரப்பட்ட தனிமனிதர்கள் இணக்கத்துடனும், ஒற்றுமையுடனும் எப்படி வாழ முடியும் என்பதற்கான தொடர்ந்து மேம்பாடு காணும் மாதிரி ஒன்றை வழங்குகின்றன.ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பியத்தைப் பெற்றுள்ள உலகளாவிய பஹாய் சமூகம், கிட்டத்தட்ட எல்லா வகையான பின்னனிகளையும் கொண்ட தனிநபர்களை உள்ளடக்கியுள்ளது. 2,100க்கும் மேற்பட்ட வெவ்வேறு இனத்தினரும், பூர்வகுடியினரும் இதில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். ஏறத்தாழ எல்லா நாடுகளையும், சமயப் பின்னனிகளையும், சமூக வகுப்பினரையும் சார்ந்த தனிமனிதர்களும் இதில் அடங்கியுள்ளனர்.

 

பரந்து கிடக்கும் உலக மக்களை பிரதிபலிக்கும் இத்தகைய பெரும் பல்வகைத்தன்மை நிலவிய போதிலும், உலகளாவிய பஹாய் சமூகமானது உலகில் உள்ள பெரிதும் ஐக்கியப்படுத்தப்பட்ட அமைப்புக்களில் தானும் ஒன்றாக விளங்குகிறது. இந்த ஒற்றுமை உணர்வு அந்த சமூகம் கொண்டிருக்கும் சமய நம்பிக்கைக்கும் அப்பால் செல்கிறது. இந்தப் பல பின்னனிகளைக் கொண்ட தனிநபர்கள், உதாரணமாக, கலப்புத் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இது பஹாய் சமயத்தில் ஊக்குவிக்கப்ட்டுள்ள ஒன்றாகும். மற்றும்/அல்லது, உள்ளூர் பஹாய் சமூகங்களில் அவர்கள் அனுக்கமாக செயல்படுகின்றனர், உள்ளூர் மற்றும் தேசிய நிலையிலான நிர்வாக ஸ்தாபனங்களிலும் அவர்கள் ஒன்றாக சேவையாற்றுகின்றனர்.உலகளாவிய பஹாய் சமூகத்தை நாம் கவனமாக ஆராயுமிடத்து, ஆச்சர்யப்படத்தக்க வகையில் விரிவான, அதே சமயம் ஒரே திடமான ஈடுபாட்டைக் கொண்ட, உலகளாவிய கலாச்சாரம் ஒன்றை உருவாக்கும், மக்கள் அமைப்பாகவும் அது இருக்கின்றது. இச்சமூகம் அமைதியை, நீதியை, மற்றும் தளரா மேம்பாட்டை வலியுறுத்தியும், எந்த ஒரு வகுப்பினரும் உயர்ந்த நிலை என எதிலும் இல்லாமல் இருக்கவும் செய்துள்ளது.

 

ஒற்றுமைப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தை உருவாக்கும் தங்களின் வெற்றியானது, பஹாவுல்லா அளித்துள்ள ஆன்மீக போதனைகளின் உற்சாகத்திலிருந்தே உதித்துள்ளது என பஹாய்கள் நம்புகின்றனர். ஒற்றுமையின் முக்கியத்துவம் குறித்தும், ஒறுமைத்தன்மையின் மெய்நிலை குறித்தும், ஓர் அமைதியான உலக நாகரீகத்தை உருவாக்க வேண்டியதன் உடனடி அவசியம் குறித்தும் பஹாவுல்லா எழுதியுள்ளார். பஹாய் நம்பிக்கைக்கே அடிக்கல்லாக விளங்கும் பின்வருவனவற்றை பஹாவுல்லா எழுதியுள்ளார்:

 

"மனிதர்களின் குழந்தைகளே! உங்களனைவரையும் ஏன் ஒரே மண்ணிலிருந்து ஆக்கினோம் என்று தெரியுமா? ஒருவர் மற்றவருக்கு மேலாக தன்னை உயர்த்திக் கொள்ளாதிருப்பதற்காகத்தான். நீங்கள் எங்ஙனம் படைக்கப்பட்டீர்கள் என்பதை எப்பொழுதும் உள்ளத்தில் இருத்திச் சிந்திப்பீர்களாக. நீங்கள் அனைவரும் ஒரே பொருளினால் ஆக்கப்பட்டதனால் எல்லோரும் பல உடலைக் கொண்ட ஒரே உயிராக உழல்வீராக; ஒரே கால்களைக் கொண்டு நடப்பீர்களாக; ஒரே வாயைக் கொண்டு உண்பீராக; ஒரே நாட்டிலுள்ள ஓர் இல்லத்தில் வசிப்பீராக; அதனால், உங்களது செயலின் வாயிலாக ஒருமையின் அடையாளமும், பற்றின்மையின் சாராம்சமும் பிரதிபலிக்குமாக.

 

 

--------------------------------------------------

பதிப்புரிமை 2001 - பஹாய் உலக செய்தி சேவை