விசேஷ பிரார்த்தனைகள்

 

இல்லம்

விசேஷ பஹாய் பிரார்த்தனைகள்

 

 

separator

 

 

 

பாதுகாப்புக்கும் குணப்படுத்துதலுக்குமான பிரார்த்தனை

 

உயரிய, அதி மேன்மையான, அதி விழுமிய அவரது திருனாமத்தின் பெயரால்! தேவரே, எனதாண்டவரே, நீர் போற்றப்படுவீராக! எனதாண்டவரே, என் பிரபுவே, என் தேவரே, என் ஆதரவாளரே, என் நம்பிக்கையே, என் புகலிடமே, என் ஒளியே. உம்மைத் தவிர வேறெவருமே அறிந்திராத, மறைவாயுள்ள, பாதுகாக்கப்பட்ட உமது திருநாமத்தின் பெயரால், இந்நிருபத்தினை ஏந்தி வருபவனை ஒவ்வொரு பேரிடரிலிருந்தும் ஈதியிலிருந்தும், கொடிய ஆண், பெண் ஒவ்வொருவரிடமிருந்தும்; திங்கிழைப்போரின் தீமையிலிருந்தும், இறைநம்பிக்கையற்றோரின் சூழ்ச்சியிலிருந்தும் பாதுகாக்குமாறு உம்மை வேண்டிக் கொள்கிறேன். மேலும், அனைத்துப் பொருள்களின் மீதுமான அதிகாரத்தினை உமது கையில் வைத்துள்ள என் இறைவா, வேதனை, துன்பம், ஆகிய ஒவ்வொன்றிலிருந்தும் அவனைப் பாதுகாப்பீராக. உண்மையிலேயே, சகலத்தின்மீதும் சக்தி கொண்டுள்ளவர் நீரே. நீர் விரும்பியாவாறு நீர் செய்கின்றீர், நீர் திருவுளங்கொண்டத்ற்கேற்ப ஆணையிடிகின்றீர்.
மன்னருக்கெல்லாம் மன்னரே!
கருணைமிக்க தேவரே!
புராதன அழகிற்கும், அருளுக்கும், தயாளத்திற்கும் ஈகைக்கும் ஊற்றாகியவரே!
நோய்களைக் குணப்படுத்துபவரே!
தேவைகளைப் பூர்த்தி செய்பவரே!
ஒளிக்கெல்லாம் ஒளியானவெரே!
ஒளிக்கெல்லாம் மேலான ஒளியானவரே!
ஒவ்வோர் அவதாரத்தையும் வெளிப்படுத்துபவரே!
தயாள குணமுடையவரே!
கருணையாளரே!
அருளாளரே, வள்ளன்மை மிக்கவரே, உமது அதிமிகு கருணையின் மூலமாகவும், கிருபையின் மூலமாகவும், இந்நிருபத்தினை ஏந்தி வருபவனிடம் கருணை காட்டுவீராக! மேலும், உமது பாதுகாப்பின் வாயிலாக, அவனது உள்ளமும் மனமும் வெறுக்கத் தக்க யாவற்றிலிருந்தும் அவனைக் காத்தருள்வீராக. சக்தி வழங்கப் பட்டோரிடையே நீர், மெய்யாகவே, அதி சக்தி வாய்ந்தவர்.
உதய சூரியனே, இறைவனின் ஒளி உம்மீது லயித்திடுமாக! தம்மைத் தவிர கடவுள் வேரெவருமிலர் என எல்லாம்வல்ல, அதி அன்பரான, ஆண்டவனே தம்மைக் குறித்து அளித்திட்ட அத்தாட்சிக்கு, நீர், சாட்சியம் அளிப்பீராக.
~ பஹாவுல்லா