இல்லம்

தாமரையின் நிழலில், அமைதியும் சாந்தமும் நிலவுகின்றன

 

புது தில்லி, 19 மார்ச் 2008 (BWNS)

 

அனுதினமும் மக்கள் வந்தவண்ணமாக இருக்கின்றனர். ஆயிரக்கணக்கில் வந்தனர். சில வேளைகளில் தொடர்ச்சியான மக்கள் வெள்ளம். நாளுக்கு 8000, 10,000, சில சமயங்களில் 15,000. விடுமுறைக்காலங்களில் 30,000, 50,000 கூட. ஒரு சமயம் 150,000!

 

இருந்தபோதும் அனைவரும் சாந்தமாகவே இருந்தனர். சில வேளைகளில் தங்கள் காலனிகளை தரைக்குக்கீழே அமைக்கப்பட்டுள்ள காலனிகள் வைப்பிடத்தில் தங்கள் காலனிகளை விட்டுச் செல்ல வரிசையாக நிற்கின்றனர். பிறகு "கமலாலயம்" என அழைக்கப்படும் அக்கட்டிடத்தினுள் நுழைகின்றனர். உள்ளே சாந்த உணர்வு மிக்க சூழ்நிலை நிலவுகின்றது. இவ்விடத்தைச் சுற்றி உலா வரும் மக்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்கையில், அங்கு நிலவும் அமைதி சற்று ஆச்சர்யமளிக்கவே செய்கின்றது.

 

"மக்களிடம் இங்கு காணப்படும் கட்டுக்கோப்பு பெரிதும் வியப்பளிக்கின்றது," என தமது மனைவி மற்றும் மகனுடன் தென்னிந்தியாவின் ஹைதராபாத்திலிருந்து வந்திருந்த திரு ரமேஷ் செருக்கு கூறினார். அவர் புது தில்லியில் வீற்றிருக்கும் இப்பஹாய் ஆலயத்திற்கு வந்திருப்பது இதுவே முதன் முறையாகும்.

 

சென்ற வருடம் 46 லட்சம் சுற்றுப்பயணிகள் இக்கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். ரோமிலுள்ள செயின்ட் பீட்டர் பேசிலிக்கா, எய்ஃபெல் டவர் ஆகியவற்றின் வழியில் இத்தாமரைக் கோவில் உலகிலேயே மிவும் பிரபலமான இடங்களில் ஒன்றாகியுள்ளது.

 

பெரும்பாலான வருகையாளர்கள் இந்தியாவைச் சார்ந்தவர்களாக இருந்துபோதிலும், உலகம் முழுவதிலும் இருந்தும் மக்கள் இங்கு வரையாளிக்கின்றனர். இவர்கள் இந்துக்கள், கிருஸ்தவர்கள், நாஸ்திகர்கள், இஸ்லாமியர்கள், புத்தமதத்தினர், சீக்கியர்கள், பஹாய்கள் ஆகியோராவர். இவர்கள் குடும்பத்தினர், தம்பதிகள், தனிமனிதர், பள்ளிப்பிள்ளைகள் மற்றும் சுற்றுப்பயனக் குழுவினராவர்.

 

பலர் மிகவும் பிரமிக்கத்தக்க கட்டுமானம் ஒன்றைக் காண வருகின்றனர் மற்றும் அது பிரமிக்கத் தக்க ஒரு அமைப்புமாகும். இருந்தபோதிலும் இவர்கள் அங்கு வந்தவுடன் அவர்கள் நடந்துகொள்ளும் விதம் வேறு விதமான ஏதோ ஒரு மனப்பான்மையையே காண்பிக்கின்றது.

 

படத்தில் காணப்படும் மோகன் விஜயகுமார் பாதுகாப்புப் பகுதியில் பணிபுரிகின்றார். நேரம் கிடைக்கும்போது வருகையாளர்களை வரவேற்பதில் அவருக்குப் பெரும் விருப்பம். ஆங்கிலம் உட்பட அவர் சுமார் அரை டஜன் இந்திய மொழிகளில் பேசக்கூடியவர். மேலும் பல வேற்று மொழிகளில் சில சொற்றொடர்களையும் கற்றுவைத்துள்ளார். பல்லாயிரக்கணக்கானோர் அவரது கனிவான வரவேற்பை செவிமடுத்துள்ளனர்: "ஹலோ! எங்கிருந்து வருகிறீர்கள்?"

 

பார்ப்பதற்கு கமல மலரைப்போல் இருக்கும் இக்கோவிலினுள் முதலில் நுழையும்போது எப்படியிருந்தது எனும் கேள்விக்கு, "மன அமைதி" என ரீத்தா சிங்கே பதிலளித்தார். மூன்று வரிசைகளில் 27 இதழ்களைக் கொண்டு ஒன்பது பக்கங்களைக் கொண்ட இக்கோவில் உலகம் முழுவதுமுள்ள மற்ற பஹாய்க் கோவில்கள் போலவை அடிப்படையில் அமைந்துள்ளது.

 

சில நிமிடங்களே கோவிலினுள் சென்று வரும் வருகையாளர்களில் பெரும்பாலோர், இத்தகைய அமைதியுணர்வினாலேயே ஈர்க்கப்படுகின்றனர் என பொது உறவு டைரக்டர் திரு ஷத்ருகுன் ஜிவானி சற்று சிந்தித்தப் பிறகு கூறினார்.

 

"அவர்கள் திடீரென மிகவும் அமைதியான ஒரு இடத்தில் இருப்பதைக் காண்கின்றனர்," என்றார் அவர். அவர்கள் சற்று நிதானித்துப் பிறகு உட்புறத்தை தாங்களே உற்று நோக்குகின்றனர்.

 

திரு சரங் ஜோஷி, "இங்கு நிலவும் நிசப்தம் நமது சிந்தனைகள் கூட காதில் ஒலிப்பதாத் தோன்றும்," என்றார். அமெரிக்காவில் வாழும் இந்தியரான இவர், அக்கட்டிடத்தின் ஆன்மீகத் தன்மையினால்," பெரிதும் கவரப்பட்டதாகக் கூறுகின்றார்.

 

"அத்தகைய ஆன்மீகத் தன்மையை கட்டிட அமைப்பு உள்ளடக்கியுள்ளது," மனதைக் கவருகிறது என்றார்.

 

மேலும் திரு ஜிவானி, பெரும்பாலானோர் சில நிமிடங்களே உள்ளே இருந்த போதிலும், அத்தகைய விஜயம் அர்த்தமுள்ளதாகவே இருக்கும் என்றார்.

 

இங்கு பலர் அடிக்கடி வருவது பற்றி, "வீட்டில் இரண்டு மணி நேரம் அமைதியாக கழிப்பதில் அர்த்தமற்றதாகத் தோன்றினும், கோவிலில் இரண்டே நிமிடங்கள் செலவிடுவது மனதை நெகிழச் செய்கிறது," என கருத்து தெரிவித்தார்.

 

வருகையாளர்கள் பெரும்பாலும் சில நிமிடங்கள் பிரார்த்தனை மற்றும் அமைதியாக சிந்தனை செய்யவும் சற்று அமைதியாக இருப்பார்கள். மத வேறுபாடின்றி இங்கு அனைவரும் வரவேற்கப்படுகின்றனர்.

 

"இங்கு சமய அறிவுரைகள் மற்றும் சொற்பொழிவுகள் இல்லாததை மக்கள் விரும்புகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த சமயகோட்பாடுகளின் வாயிலாக அமர்ந்து பிரார்த்தனை அல்லது தியானம் செய்கின்றனர்"

 

மேலும் சில குறிப்புகள்

 

110 கோடி மக்களைக் கொண்ட இந்தியா உலகிலேயே அதிகமான மக்களைக் கொண்ட நாடுகளில் இரண்டாவது நிலையை வகிக்கின்றது. சமய மரபுகள் நிறைந்த நாடும் ஆகும் அது. இங்கு 80 விழுக்காடுகளுக்கும் அதிகமானோர் இந்துக்களாவர். அடுத்த நிலையில் இஸ்லாமியர், கிருஸ்தவர், சீக்கியர், ஜைனர், பஹாய்கள், புத்தமதத்தினர், யூதர்கள் ஆகியோரும் இங்கு வாழுகின்றனர். 

 

இறைவனை வழிபடுவதற்கு, எல்லா சமயங்களையும் சார்ந்தவர்களுக்காக பஹாய் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. உண்மையில் எல்லா சமயங்களும் ஒரே கடவுளிடமிருந்து தோன்றி ஒரே தெய்வீக மெய்ம்மையின் அடுத்தடுத்த அத்தியாயங்களைப் பிரதிநிதிக்கின்றன

 

வருங்காலத்தில் இத்தகைய கோவில்களைச் சுற்றிலும் மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், அறிவியல் ஸ்தாபனங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவை இருக்கும். ஆனால் தற்போது அவற்றை நிறுவும் திட்டம் எதுவும் கிடையாது.

 

கோவிலின் உட்புறம்

 

கோவிலின் உட்புறத்தில் பிரார்த்தனை மண்டபம் உள்ளது. இதில் 1300 பேர்கள் உட்காரலாம். பெரும்பாலான நாள்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஐந்து அல்லது ஆறு நிமிடங்களுக்கு பஹாய், இஸ்லாம், இந்து, புத்த மற்றும் கிருஸ்துவ புனித எழுத்துக்களிலிருந்து வாசகங்கள் வாசிக்கப்படுகின்றன.

 

இங்கு வருவோர் தாங்கள் எதைப் பார்க்கமுடியாது என்பது குறித்து ஆரம்பத்திலேயே விளக்கமளிக்கப்படுகின்றனர். இங்கு சிலைகள் கிடையாது, பஹாய் சமயத்தின் ஸ்தாபகர்களின் படங்கள் கிடையாது, பூஜை மேடைகள் கிடையாது, இந்து சமய தெய்வங்கள், புத்தர் அல்லது இயேசுவின் சிலைகள் கிடையாது.

 

இந்தத் தகவல் சிலருக்கு ஏமாற்றமளிப்பதாக இருக்கின்றது. அமெரிக்காவில் இருந்து வந்த ஒரு சிறுவன், "இங்கு சிலைகள் எல்லாம் இருக்கும் என்று நினைத்தேன்," என குழப்பத்துடன் கேட்டான்.

 

கோவிலின் உட்புறம் மனதைக் கவர்வதாகவும், கோவிலின் வளைவுகளை எடுத்துக்காட்டுவதாகவும், பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களின் பலவித வேலைப்பாடுகளை எடுத்தியம்புவதாகவும் உள்ளது. இக்கோவில் திறக்கப்பட்டு இருபத்தொரு வருடங்கள் ஆகின்றது. இக்கோவிலின் வழியே இலட்சோப லட்ச மக்கள் வந்து சென்றுள்ளனர். ஆனால், கோவில் இன்றும் புதிதாகவும், மாசுபடாமலும் இருக்கின்றது. சிலர் பத்தியுணர்வூட்டுவதாகவும் ஆன்மீகமயமாக இருப்பதாகவும் கூறுவர்.

 

கோவிலின் உட்புறத்தைச் சுற்றி, இந்தியிலும் ஆங்கிலத்திலும், வாழ்வு மற்றும் சமயம் பற்றிய பஹாய் சமய ஸ்தாபகரான பஹாவுல்லாவின் திருவாக்குக் குறிப்புகள் உள்ளன.

 

"நீ அகண்ட வானமண்டலம் முழுவதும் விரைந்து சென்று பரந்து விரிந்த சுவர்க்கத்தைக் கடந்து சென்றாலும், எமது ஆணைக்குக் கீழ்படிதல் மற்றும் எமது முன்னிலையில் பனிவைத் தவிர நீ வேறு எதிலும் அமைதிகாணப் போவதில்லை," மற்றும் இவ்வுலகின்பால் மட்டுமே நீ கவனமாயிராதே, ஏனெனில் யாம் நெருப்பதைக் கொண்டு தங்கத்தைச் சோதிப்போம், மற்றும் தங்கத்தைக் கொண்டு எமது சேவகர்களைச் சோதிப்போம்," போன்ற வாசகங்களைக் காணலாம்.

 

படிப்படியாக வெளிப்படும் மனிதகுலத்திற்கான கடவுளின் திட்டத்தை கற்பிக்க வந்த கிருஷ்னர், சோரோவஸ்டர், புத்தர், மோசஸ், இயேசு, முகம்மது, மற்றும் 'பா'ப் போன்ற தெய்வீகத் தூதர்களை உள்ளடக்கிய வரிசையில் வெகு அணிமையில் வந்தவரே பஹாவுல்லா என்பது பஹாய்களின் நம்பிக்கையாகும்.

 

இங்கு வருவோரிடம், பஹாவுல்லாவின் மைய போதனைகளான கடவுளின் ஒருமைத்தன்மை, மனிதகுலத்தின் ஒருமைத்தன்மை, சமயத்தின் ஒருமைத்தன்மை ஆகியவற்றிற்காக அக்கோவில் அர்ப்பனிக்கப்பட்டுள்ளது என்பது தெரிவிக்கப்படுகின்றது.

 

"இக்கோவிலின் நோக்கம் நாம் ஒரே உண்மைக் கடவுளால் படைக்கப்பட்ட ஒரே மனிதக்குலம் என்பதை ஞாபகப்படுத்துவதே ஆகும் - இங்கு வருவோர் அத்தகைய வேறுபாடுகளை மறந்துவிட வேண்டும்," என திரு ஜிவானி கூறுகின்றார்.

 

தாமரை மலர் இங்கு வரும் பெரும்பாலான மக்கள் அவ்விடம் குறித்த உணர்வோடும் அது எதன் சின்னமாக விளங்குகிறதோ அது குறித்த உணர்வோடும் திரும்பிச் செல்கின்றனர் என திரு ஜிவானி எண்ணுகின்றார்.

 

"இங்கு வருவோர் வெவ்வேறு நோக்கங்களுக்கான வந்தாலும், அவ்வருகை ஓர் ஆன்மீக அனுபவமாகவே மாறுகின்றது," என அவர் மேலும் கூறுகிறார். "இவ்வழிபாட்டு இல்லம் எல்லா மதங்கள்பாலும் மரியாதையை உருவாக்குகின்றது என்பதை அனைவரும் புரிந்துகொள்கின்றனர்."

 

ஆசிய சமயங்கள் அனைத்தும் - இந்து, புத்த பார்சி போன்றவை அனைத்தும் தாமரை மலரோடு அனுக்கம் கொண்டுள்ளன. ஆகவே, இக்கோவில் அதே தாமரை மலரின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும், என அவர் விளக்கினார்.

 

தாமரைத் தூய்மையைக் குறிக்கின்றது ஏனெனில் அம் மலர் பெரும்பாலும் சேற்றுத் தண்ணீர் மற்றும் தேங்கிய நீரில் காணப்படுகின்றது. தூய மனித ஆவி அத்தகைய அழுக்கிலிருந்து உயர்ந்து தன்னுடைய உண்மயான ஸ்தானத்தை அடையவேண்டியதை இது குறிப்பது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கின்றது என்றார் அவர்.

 

"இவ் வழிபாட்டு இல்லம் வழிவழியான சமய முறை கட்டடக்கலைவழி வடிவமைக்கப்படவில்லை, அது ஓர் அனைத்துலக அமைப்பைக் கொண்டுள்ளது, ஆகவே அனைவரும் ஒரு வரவேற்புணர்வைப் பெறுகின்றனர்," என அவர் தொடர்ந்தார்.

 

கனடாவைச் சார்ந்த இக்கோவிலின் கட்டடக்கலைஞரான பாஃரிபோர்ஸ் சபா, கணக்கற்ற ஆன்மீக உட்பொருட்களைக் கொண்டுள்ளபடியால் தாம் கோவிலுக்கு இத்தாமரை வடிவத்தைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறுகிறார்.

 

"தாமரை கடவுளின் அவதாரத்தைப் பிரதிநிதிக்கின்றது, மற்றும் தூய்மை, மென்மை ஆகியவற்றின் சின்னமும் ஆகின்றது, மற்றும் அதன் சிறப்பு இந்தியர்களின் உள்ளம் மற்றும் இதயங்களில் ஆழப்பதிக்கப்பட்டுள்ளது," என அவரது எழுத்துப்பூர்வமான கருத்துரைகள் தெரிவிக்கின்றன.

 

சிலர் இக்கோவிலுக்கும் அதற்கும் 14 வருடங்களுக்கு முன்பு 1973ல் திறக்கப்பட்ட சிட்னி, ஆஸ்த்திரேலியாவில் உள்ள ஓப்ரா ஹௌஸ் எனப்படும் கட்டடத்திற்கும் உள்ள ஓற்றுமை குறித்து சில வேளைகளில் வினவுகின்றனர்.

 

ஆனால், அந்த கட்டடம் காற்றடிக்கும் திசையில் செல்லும் ஒரு பாய்மரக் கப்பலைக் குறிக்கின்றது வட்டவடிவமான இக்கோவில் தாமரை மலரைக் குறிக்கின்றது மற்றும் கட்டட வேலைகளும் மாறுபட்டவை என திரு ஜிவானி குறிப்பிட்டார்.

 

கோவிலும் பஹாய்களும் இந்தியாவில் உலகெங்கிலும் விட அதிகமாக 10 இலட்சத்திற்கும் அதிகமான பஹாய்கள் உள்ளனர். ஆனால் இக்கோவில் அச்சமயம் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தியுள்ளது என்பதில் ஐயமே இல்லையென இந்திய பஹாய்களின் தேசிய ஆன்மீகச் சபை உறுப்பினர்களில் ஒருவரான திரு அலி மெர்ச்சன்ட் கூறுகிறார்.

 

"இக்கோவில் எங்களுக்கென ஓர் தனிப்பட்ட அடையாளத்தை ஏற்படு்த்தியுள்ளது. இப்போது இக்கட்டடம் குறித்த உட்பொருளை நாம் போதிக்கவேண்டும்."

 

 

கோவிலில் அன்றாடமும்

 

கோவில் திங்கட் கிழமை தவிர் மற்ற நாட்கள் அனைத்திலும் திறக்கப்படுகின்றது. இதற்குள் நுழைய கட்டணம் கிடையாது. உலகம் முழுவதிலும் உள்ள பஹாய்கள் இதற்கான செலவுகளை தங்களின் நன்கொடைகளின் வாயிலாக அளிக்கின்றனர். இங்கு பல பஹாய் தொண்டர்கள் சேவையாற்றுகின்றனர். இவர்கள் உலகம் முழுவதிலுமிருந்து, சென்ற வருடம் 70 நாடுகளிலிருந்து, வருகின்றனர்.

 

தகவல் மையம்

 

தேவையான தகவல்கள் பெற இங்கு ஒரு தகவல் மையம் உள்ளது. பஹாய் சமயம் குறித்த தகவல்களை இங்கு பெறலாம். வருகையாளர்களுக்கு போதிக்கும் முயற்சிகள் கிடையாது. இது பஹாய் சமய போதனைகளில் ஒன்றான "தன்னிச்சையாக உண்மையை ஆராயவேண்டும்" என்பதை கருத்தில் கொண்டு செய்யப்படுகிறது. இங்கு பஹாய் சமயத்தின் வரலாறு, போதனைகள் மற்றும் புனித எழுத்தோவியங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதிலிமுள்ள பஹாய்களின் சமூகப் பொருளாதார திட்டங்கள் குறித்தும் விரிவான காட்சிகள் உள்ளன. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி திரைப்படங்கள் அவ்வப்போது காட்டப்படுகின்றன.

 

26 ஏக்கர்கள் கொண்ட இக்கோவில் நிலம் 1953ல் வாங்கப்பட்டது. கட்டட வேலைகள் 1980ல் ஆரம்பிக்கப்பட்டு கோவில் 1987ல் மக்களுக்காக திறக்கப்பட்டது. கட்டடத்திற்கான கட்டுமானச் செலவு சுமார் 10 மில்லியன் டாலர்களாகும். இதற்கான நிதி உலகம் முழுவதுமுள்ள பஹாய்களின் அன்பளிப்பின் வழி சேகரிக்கப்பட்டது.

 

கோவிலின் கட்டடக் கலைஞர் திரு பாஃரிபோர்ஸ் சபா. இவரே கட்டுமான நடவடிக்கைகளின் திட்டநிர்வாகியாக இருந்தார். கோவில் பல சிறப்பு விருதுகளைப் பெற்றுள்ளது:

 

உலகம் முழுவதும் இது போன்ற ஏழு கோவில்கள் உள்ளன. மேற்கொண்டு விபரங்களுக்கு பின்வரும் வலைத் தலத்திற்குச் செல்லவும்:

http://www.bahai.org