இல்லம்

 

நோபல் பரிசாளர்கள் இரானிய பஹாய்க் கைதிகளை விடுவிக்கக் கோரிக்கை

 

30 ஜூன் 2008

நியூ யார்க் -- தெஹரானில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் ஏழு முக்கிய பஹாய்களை உடனடியாக விடுவிக்குமாறு ஆறு நோபல் பரிசாளர்கள் இரானிய அரசுக்கு ஓர் அறிக்கை அனுப்பியுள்ளனர்

 

பெண்கள் நோபல் முனைவு எனும் சின்னத்தின் கீழ் இந்த ஆறு நோபல் பரிசாளர்களும் அப் பஹாய்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துமாறும் அவர்களை உடனடியாக முன்நிபந்தனையின்றிவிடுவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்தப் பஹாய்கள் அனைவரும் முறைதயான குற்றச்சாட்டுகள் ஏதுமின்றியும், வழக்குறைஞர்களின் உதவியும் இன்றியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

ஐக்கிய நாட்டுக்கான பஹாய் அனைத்துலக சமூகத்தின் தலைமை பிரதிநிதியான பானி டுகால் "தங்கள் சமய நம்பிக்கைத் தவிர வேறு எவ்வித காரணமும் இன்றி தடுத்துவைக்கப்பட்டிருக்கும், சக பஹாய்களான் அந்த அறுவரையும் விடுவிக்குமாறு பகிரங்கமாகக் கோரியுள்ள இந்த அனைத்துலக ரீதியில் பிரபலமான சமூக சேவையாளர்களுக்கு நாங்கள் பெரிதும் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம்" எனக் கூறினார்.

 

இந்த அறிக்கைக்கு ஆதரவளிக்கும் நோபல் பரிசாளர்கள் பின்வருமாறு:

 

 

பெண்கள் நோபல் முனைப்பின் தலையங்கத் தாளில் வெளியிடப்பட்ட அவர்களின் அறிக்கை பின்வருமாறு:

“We note with concern the news of the arrest of six prominent Baha’is in Iran on 14 May 2008. 14 மே 2008ல் ஆறு பிரபல பஹாய்கள் கைது செய்யப்பட்டனர் எனும் தகவலை நாங்கள் சற்று மனக்கவலையுடனேயே பெற்றுக்கொண்டோம். கைது செய்யப்பட்ட திருமதி பாஃரிபா கமாலபாடி, திரு ஜமாலொடின் கமாலபாடி, திரு ஜமாலொடின் கஃஞ்சானி, திரு அபிஃப் நயிமி, திரு சையிட் ரெசாயி, திரு பெஹ்ருஸ் தவாக்கொலி, மற்றும் திரு வஹிட் திஸ்பாஃம் இரானிய பஹாய் சமூகத்தின் நடவடிக்கைகளை ஒருஙகிணைக்கும் தற்காலிகக் குழு ஒன்றின் உறுப்பினர்களாவர். மேலும் இக்குழுவின் மற்றொரு அங்கத்தினரான திருமதி மாஃவாஷ் சபேட், 5 மார்ச் 2008லிருந்து தடுத்துவைக்கப்பட்டுள்ளார் எனவும் அறிகின்றோம். இரானிய பஹாய் சமூகத்திற்குப் பெறுகி வரும் இவ்வித மிரட்டல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து நாங்கள் எங்களின் ஆழ்ந்த மனக்கவலையை பதித்திட விரும்புகிறோம்.

 

“இந்த அறுவரின் பாதுகாப்பை உறுதிபடுத்துமாறும் அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும் நாங்கள் இரானிய அரசாங்கத்திற்கு அறிவிக்க விரும்புகிறோம்.

 

பெண்கள் நோபல் முனைவு இந்த ஆறு பெண் நோபல் பரிசாளர்களால் 2006ல் நிறுவப்பட்டது. இவர்கள் வட அமெரிக்கா, லத்தின் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, மற்றும் ஆப்பிரிக்காவை பிரதிநிதிக்கின்றனர். இதன் நோக்கம் உலகம் முழுவதும் உள்ள பெண்களோடு உடனுழைத்து உலகில் அமைதியை ஏற்படுத்துவதாகும். இதுவரை உலகில் 12 பெண்களே நோபல் பரிசை வென்றுள்ளனர்.

 

பெண்கள் நோபல் முனைப்பு கனடாவின் ஒட்டாவா நகரில் செயலகத்தைக் கொண்டுள்ளது.