இல்லம்

இரான் பஹாய்கள் குறித்து ஐ.நா. கவலை

 

நியு யார்க், ஐக்கிய அமெரிக்கா, 22 டிசம்பர் 2004(BWNS) - 1985லிருந்து முதன் முறையாக, இரான் நாட்டின் மனித உரிமை சூழ்நிலை குறித்து ஐக்கிய நாட்டு பொதுச் சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதில் தனது இரானில் நிலவும் மனித உரிமை சூழ்நிலை குறித்த தனது பெருங்கவலையை தெரிவித்தது, குறிப்பாக அந்த நாட்டின் பஹாய்கள் அனுபவித்து வரும் துன்புறுத்தல்கள் பற்றி தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்தது.

 

கனடா நாட்டினால் முன்மொழியப்பட்ட அந்த தீர்மானம், 71க்கு 54 எனும் எண்ணிக்கையில் 20 டிசம்பர் 2004 அன்று நிறைவேற்றம் கண்டது. அத்தீர்மானம் சமய அடிப்படையில் மக்களை பிரித்துப்பார்க்கும் எல்லாவிதமான செய்கைகளையும் ஒழிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டது மற்றும் பஹாய்களுக்கு எதிராக சமீபத்தில் நிகழ்ந்து வரும் மனித உரிமை அத்துமீரல்களை குறிப்பிட்டது.

 

குறிப்பாக, சிறுபான்மை குழுவினர்களான கிருஸ்துவ, யூத மற்றும் சுன்ன இஸ்லாமியர்களுக்கெதிரான பிரிவினைக் கொள்கை, மற்றும் தன்னிச்சையான கைது மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், சுதந்திரமாக வழிபாடு செய்வதற்குத் தடை, சமூக நடவடிக்கைகளை பகிரங்கமாக மேற்கொள்வதற்கு தடை, சொத்துரிமைகளை மறுத்தல், சமய முக்கியத்துவம் சார்ந்த தலங்களை இடித்துத் தகர்த்தல், சமூக, கல்வி மற்றும் சமுதாயம் சார்ந்த நடவடிக்கைகளுக்குத் தடைவிதித்தல், மற்றும் உயர் கல்வி, வேலைவாய்ப்பு, ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் மறுக்கப்படுதல் போன்ற பஹாய்களுக்கெதிராக அதிகரித்துவரும் கொடுமைகளை அத்தீர்மானம் குறிப்பிட்டது.

 

உலக பஹாய் சமூகம் தேசங்களின் அனைத்துலக சமூம் அளித்துவரும் ஆவரவுக்காக தனது நன்றியை தெரிவிப்பதாக அனைத்துலக பஹாய் சமூகத்தின் பிரதான பிரதிநிதியான திருமதி பானி டுகால் தெரிவித்தார்.

 

“அத்தீர்மானம் குறிப்பிடுவது போல், பஹாய்களின் நிலைமை இவ்வருடம் மோசமடைந்துள்ளது. அனைத்துலக சமூகத்தின் இதுபோன்ற தீர்மானங்களே இரான் நாட்டின் கொடுமைக்குட்படுத்தப்பட்ட பஹாய் சமூகத்தின் பாதுகாப்புக்கான முக்கிய வழியாக இருக்கின்றது,” என்றார் திருமதி டுகால்.