வரலாற்றில் முக்கியமான சிலர்

சுறுக்கக் குறிப்புகள்

இல்லம்

ஷோகி எபெஃண்டி

ஷோகி எபெஃண்டி பாப் அவர்கள் "வாசலாகவும்" பஹாவுல்லா "இறைவனால் வெளிப்படுத்தப்பட்டவராகவும்" இவர்களுக்குப் பின் உலக பஹாய் சமூகம் அப்து'ல்-பஹா அவர்களின் தலைமைத்துவத்தில் பல்கிப் பெருகி, முக்கியமாக அமெரிக்கா வரை பரவியது. அப்து'ல்-பஹா தமக்கும் பிறகு பஹாய் சமூகத்தை வழிநடத்த தமது பேரராகிய ஷோகி எபெஃண்டியை நியமித்தார். இவர் 1989ல் ஆக்கா நகரில் பிறந்தார். அப்து"ல்-பஹா மறைந்த போது ஷோகி எபெஃண்டிக்கு வயது 22. இவர் இங்கிலாந்து ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டிருந்த போது தாம் பஹாய் சமயத்தின் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதை அறிந்துகொண்டார். இவரது வழிகாட்டலின் வாயிலாக பஹாய் சமயம் உலகத்தின் எல்லா திசைகளிலும் பரவியுள்ளது. (மேலும் படிக்க..)

 

மிர்சா மிஹ்டி

Mihdiஇவர் பஹாவுல்லாவுக்கும் ஆசிய்யா காஃனும் அவர்களுக்கும் பிறந்த பிள்ளைகளும் உயிரோடிருந்தவர்களில் மூன்றாவதாவார். தன் தந்தை நாடுகடத்தப்பட்டபோது இவருக்கு இரண்டே வயது. வயதின் காரணமாக இவர் தம் குடும்பத்தாரோடு செல்லவில்லை. சற்று வயதானா பிறகே இவர் தன் பெற்றோரிடம் சென்று சேர்ந்தோர். "பஹாவின் ஒளியில் பிறந்தவர்" என பஹாவுல்லா அவர்களால் இவர் வர்ணிக்கப்பட்டுள்ளார். இவருக்கு 22 வயதான போது இவர் எதிர்பாராத விதமாக மாடியிருந்து கால் இடரி கீழே விழுந்து மரணமுற்றார். பஹாவுல்லா அவர்கள் இவர் உயிர் பிழைக்க வேண்டுமா என கேட்டதற்கு, தாம் தமது உயிரை சிறைக் கதவுகள் திரக்கப்பட்டு பஹாய்கள் பஹாவுல்லாவை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படுவதற்காக தியாகம் செய்ய விரும்புவதாகக் கூறினார். இவர் "அதி தூய கிளை" எனவும் அழைக்கப்படுகின்றார். (மேலும் படிக்க...)

பாஹிய்யா காஃனும்

இவர் பஹாவுல்லா ஆசிய்யா காஃனும் தம்பதியரின் புதல்வியாவார். அப்து'ல்-பஹா இவரது மூத்த சகோதரர். பஹாய் சமயத்தின் முன்னனி பெண்மனியாக இவர் கருதப்படுகின்றார். தமது தந்தையான பஹாவுல்லா அவர்கள் நாடுகடத்தப்படும் போது இவருக்கு ஆறு வயது. தமது தாய் தந்தையருடனும் அண்ணனுடனும் சேர்ந்து இவரும் நாடுகடுத்தலுக்கு உட்பட்டார். இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமல் தமது வாழ்வை தமது தந்தையின் சமய சேவைக்காக தியாகம் செய்தார்.

(மேலும் படிக்க..)

 

ஆசிய்யா காஃனும்

bahiyyih

பஹாவுல்லா அவர்களுக்கு பதினெட்டு வயதாகிய போது அவருக்கும் மிகவும் பிரபலமான குடும்பத்தில் பிஹந்தவரான ஆசிய்யா காஃனும் அவர்களுக்கும் திருமணம் நடந்தது. இவருடைய சீர் வரிசைகள் பல ஒட்டங்களில் தாங்கிவரப்பட்டன. இவர் ஒரு மனைவி எனும் முறையிலும் தாய் எனும் முறையிலும் உலகத்துக்கே ஒரு உதாரணமாக விளங்கினார். இவர் இறந்தபோது பஹாவுல்லா இறைவனின் எல்லா உலகங்களிலும் இவரே தமது நிலையான துணை எனக் குறிப்பிட்டார்.

(மேலும் படிக்க..)