இல்லம்

 

எகிப்து நாட்டு பஹாய்களின் பிரச்சினை

 

எகிப்து நாட்டின் பஹாய் பிரச்சனையின் இறுதி நீதி மன்ற வாதங்கள் முடிந்தன; தீர்ப்பு இன்னும் இரண்டு வாரங்களில்.

 

3 டிசம்பர் 2006 - ஒரு பஹாய் தம்பதியினர் தங்கள் பத்திரங்களில் தங்களின் சமயம் சரியாக அடையாளங் காணப்பட வேண்டும் என நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இவர்களின் வழக்குறைஞர்கள் தலைமை நிர்வாக நீதிமன்றத்தில் நேற்று தங்கள் வாதங்களை முன்வைத்தனர். இந்த வழக்கு தற்போது தேசிய அளவில் சமய சுதந்திரம் குறித்த ஒரு விவாதமாக ஆகிவிட்டது.

 

வாதத் தொகுப்பு சுறுக்கமாக இருந்தது, மற்றும் நீதிமன்றம் 16 டிசம்பர் வரை தனது தீர்ப்பை தள்ளிவைத்துள்ளது. இந்த வழக்கு அனைத்துலக மனித உரிமை குழுக்களால் மிகவும் அனுக்கமாக கவனிக்கப்பட்டு வருகின்றது.

 

இந்த வழக்கு ஹுசாம் இஸ்ஸாட் மூசா மற்றும் ரண்யா இனாயத் ரஷ்டி எனும் திருமணமான ஒரு தம்பதியினர் தங்கள் பாஸ்போர்ட்டுகளில் தங்கள் மகள்களை சேர்த்துக்கொள்ள மனுச் செய்த போது அவர்களின் சமயம் பஹாய் சமயம் என அவற்றில் குறிக்கப்பட்டிருந்ததனால் அவை பரிமுதல் செய்யப்பட்டும், அதன் தொடர்பில் அவர்கள் அது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததினாலும் உருவானது.

 

எகிப்து நாட்டில், பிரஜைகள் அனைவரும் தங்கள் அடையாள அட்டைகளிலும் தங்கள் மற்ற பத்திரங்களிலும் அவர்களின் சமயங்களை குறிப்பிட வேண்டும் மற்றும் தற்போதுள்ள சட்டத்தின்படி அதிகாரபூர்வமாக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள மூன்று சமயங்களான இஸ்லாம், கிருஸ்தவ சமயம் மற்றும் யூத சமயம் இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமே குறிப்பிட முடியும். ஆகவே, பஹாய்கள் அடையாள அட்டைகள் இன்றி இருக்கின்றனர். அடையள அட்டை இன்றி அவர்கள் கல்வி, பொருளாதார சேவைகள் மற்றும் மருத்துவ வசதிகள் போன்ற உரிமைகளை பெற முடியால் உள்ளனர்.

 

கடந்த ஏப்ரல் மாதத்தில் கீழ் கோர்ட் ஒன்று இத் தம்பதிகளுக்கு சாதகமாக தீர்ப்பளித்து, அரசாங்கள் அவர்களின் அடையாள அட்டைகளில் அவர்களின் சமயத்தை ஒழுங்காக குறிப்பிட வேண்டும் என ஆணையிட்டது. அத் தீர்ப்பு அரசாங்கத்தினால் ஒரு சமயம் அங்கீகரிக்கப்படவில்லையெனினும் அச் சமயத்தவர்களின் பத்திரங்களில் அவர்களின் சமயம் கண்டிப்பாக குறிப்பிடப் படவேண்டும் எனவும் குறிப்பிட்டது.

 

ஆனால் அத்தீர்ப்பு எகிப்திய நாட்டின் மதவாத குழுக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. அவர்கள் திருக்குரானில் குறிப்பிடப்படாத எந்த சமயத்தையும் அதிகாரபூர்வமாக குறிப்பிடக் கூடாது என வாதிட்டனர். இது சமய சுதந்திரம் மற்றும் சகிப்புத்தன்மை குறித்து அந்த நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ஏப்ரல் மாதம் முதல் இவ் வழக்கு குறித்து அல்லது அதன் எதிர்மறை விளைவுகள் குறித்து 400க்கும் அதிகமான கட்டுரைகள் எகிப்திய மற்றும் அரபு செய்தி சாதனங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

 

அரசாங்கள் அக் கீழ்கோர்ட்டின் தீர்ப்பை மறுமுறையீடு செய்து, அவ் வழக்கு தலைமை நிர்வாக நீதிமன்றத்தின் முன் கொண்டுவரப்படவும் செய்தது.