இல்லம்

கைது செய்யப்பட்ட பஹாய்கள் தங்கள் வீடுகளில் ஆயுதங்கள் வைத்திருந்தார்கள் எனும் கூற்றை பஹாய் அனைத்துலக சமூகம் வன்மையாக மறுக்கின்றது.

 

9 ஜனவரி 2010

 

ஜெனேவா — கடந்த ஞாயிறன்று கைது செய்யப்பட்ட பஹாய்களின் வீடுகளில் ஆயுதங்களும், துப்பாக்கி ரவைகளும் கண்டுபிடிக்கப்பட்டன எனும் இரான் அரசாங்கத்தின் புதிய குற்றச்சாட்டுகளை பஹாய் அனைத்துலக சமூகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

 

"இது முழுப் பொய்யன்றி வேறில்லை. பஹாய்கள் தங்கள் அடிப்படை போதனைகளின் அடிப்படையில் வன்செயில் ஈடுபடாமையை கடைப்பிடிக்கின்றனர், மற்றும் அவர்களின் இல்லங்களில் "வெடிமருந்துகள் " கண்டுபிடிக்கப்பட்டன எனும் குற்றச்சாட்டுகள் முற்றாக நம்பமுடியாதவையாகும்," என ஜெவெவாவில் உள்ள ஐநாவிற்கான பஹாய் அனைத்துலக சமூக பிரதிநிதியான திருமதி டையேன் அலாயி கூறினார்.

 

"சந்தேகமின்றி, இவை இரான் நாட்டின் பஹாய் சமூகத்தினருக்கு எதிராக தப்பெண்ணம் மற்றும் வெறுப்புணர்வு மிக்க சூழ்நிலையை உருவாக்கிடும் நோக்கத்துடன் அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட அடிப்படையற்ற திரிப்புகளே ஆகும். இரான் நாட்டில் ஒரு நூற்றாண்டு காலமாக பஹாய்கள் பல விதமான துன்புறுத்தல்களை அனுபவித்து வந்துள்ளனர். இருந்தும் அவர்கள் இதுவரை ஆயுதங்கள் எதையும் ஏந்தியதில்லை, மற்றும் இது அனைவருக்கும் தெரியும். துரதிர்ஷ்டவசமாக, இரான் நாட்டு அரசாங்கம் பஹாய் சமூகத்தினருக்கு எதிரான தனது கொடிய நோக்கங்களை நியாயப்படுத்திட இத்தகைய புனைசுருட்டுகளையே மீண்டும் பயன்படுத்துகிறது. இப் பொய்கள் எந்த நம்பகமும் இல்லாதவை என்பதை அது அறிந்துகொள்ளவேண்டும்."

 

"இது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் சுமார் இரண்டு வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஏழு பஹாய்களின் விசாரனைக்கு சில நாட்களுக்கு முன் இத்தகைய குற்றச்சாட்டுகள் வெளிவருவது குறிப்பாக கவலையளி்ககின்றது," என அவர் கூறினார்.

 

இத்தகைய குற்றச்சாட்டுகள் உயிர்களுக்கு பாதகம் விளைவிப்பதாக இல்லாவிடில் அவை மிகவும் பொருத்தமற்றவையும் முட்டாள்தனமானவையாகவும் இருக்கும். நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளது போல, இரான் நாட்டின் பிரச்சனைகளுக்கு இரான் அரசாங்கம் பொறுபேற்றுக்கொள்ளாமல் அதை அன்னிய அரசுகள், அனைத்துலக அமைப்புகள் மற்றும் செய்தி ஊடகங்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் தீவிரவாதிகள் மீது சுமத்துகின்றது," என்றார்.

 

கடந்த வெள்ளிக்கிழமை, தெஹரான் நகரின் பொது பிராசிக்கியூட்டர், அப்பாஸ் ஜஃப்பாரி டோலாட்டபாடி, "அஷுரா தினத்தன்று ஏற்பட்ட கிளர்ச்சியை ஏற்பாடு செய்வதற்கு உதவியது மற்றும் கிளர்ச்சிகளின் படங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியதற்கும் கைது செய்யப்பட்டனர்," என கூறியதாக பல செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன.

 

."அவர்கள் பஹாய்கள் என்பதற்காக கைது செய்யப்படவில்லை, அவர்கள் சிலரின் வீடுகளில் நாங்கள் ஆயுதங்களையும் தோட்டாக்களையும் கைப்பற்றினோம்," என டோலாட்டபாடி கூறியதாக ஏஜன்ஸ் ஃபிரான்ஸ் பிரஸ் அறிவித்தது.

 

சமீபத்தில் இரான் நாட்டில் நடந்த குழப்பங்கள் சம்பந்தமாக அஷுரா கிளர்ச்சிகள் அல்லது வேறு கீழறுப்பு மற்றும் வன்முறைகளில் பஹாய்கள் ஈடுபட்டிருந்தனர் என்பதை திருமதி ஆலாயி வன்மையாக மறுத்தார்.

 

"கடந்த 30 ஆண்டுகளாக இரான் நாட்டு பஹாய்கள் பெரும் கொடுமைமிகு துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்; அவர்கள் தான்தோன்றியான கொலைகளுக்கு ஆளாக்கப்பட்டனர், அவர்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லமுடியாமல் செய்யப்பட்டது. இருந்தபோதிலும் அவர்கள் அமைதியான மற்றும் சட்டப்படியான வழிகளிலேயே தங்கள் குறைகளை எடுத்தியம்பியுள்ளனர்," என்றார் திருமதி அலாயி.

 

வேவுபார்த்தல், "சமயப் புனிதத்தன்மையை கெடுத்தல்", மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக துர்பிரச்சாரம் செய்தல் போன்ற ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் ஏழு பஹாய்கள் செவ்வாய் கிழமை விசாரனை செய்யப்படவிருக்கின்றனர். அவர்கள் எவின் சிறைச்சாலையில் 2008ம் ஆண்டு மத்தியிலிருந்து சிறை செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள்: திருமதி பாஃரிபா கமாலபாடி, திரு ஜமாலொடின் கமாலபாடி, திரு ஜமாலொடின் கஃஞ்சானி, திரு அபிஃப் நயிமி, திரு சையிட் ரெசாயி, திரு பெஹ்ருஸ் தவாக்கொலி, மற்றும் திரு வஹிட் திஸ்பாஃம். அதே போன்று ஞாயிற்றுக் கிழமை 13 பஹாய்கள் அதே போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

http://news.bahai.org/story/747


 

சமய பாராளுமன்றம்

கைது செய்யப்பட்ட எழுவர்:

திருமதி பாஃரிபா கமாலபாடி, திரு ஜமாலொடின் கமாலபாடி, திரு ஜமாலொடின் கஃஞ்சானி, திரு அபிஃப் நயிமி, திரு சையிட் ரெசாயி, திரு பெஹ்ருஸ் தவாக்கொலி, மற்றும் திரு வஹிட் திஸ்பாஃம்