இல்லம்

இரான் நாட்டில் கைது செய்யப்பட்ட ஏழு பஹாய்களின் விசாரனை நாள் நெருங்குகிறது

 

5 ஜனவரி 2010

ஜெனேவா – சமீப காலமாக இரான் நாட்டில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளால் அடுத்த

செவ்வாய்க்கிழமை விசாரனைக்கு உட்படுத்தப்படுத்தப்படவிருக்கும் ஏழு பஹாய்களின் இறுதி தலைவிதி குறித்து பெரும் கவலை தரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

"கொதித்திருக்கும் மக்களின் கவனத்தைத் அதிகாரத்திலிருப்போர் மீதிருந்து திசைத் திருப்புவதற்காக பஹாய்கள் இழிவுபடுத்தப்பட்டு மற்றும் தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அடிக்கடி பலியாடுகள் ஆக்கப்படுவது சாதாரனமாக நடக்கும் ஒன்றாகிவிட்டது, மற்றும் இப்போது, விசாரனைக்கான நாள்கள் நெருங்க நெருங்க, பஹாய்கள் மீண்டும் பலியாடுகள் ஆக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன," என ஜெனேவாவில் பஹாய் அனைத்துலக சமூகத்தின் ஐக்கிய நாடுகள் பிரதிநிதியான டையேன் அலாயி கூறினார்.

"நாட்டில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதற்கு மாறாக, இரான் நாட்டு அரசாங்கம் பிரச்சினைகளுக்கான காரணத்தை, அன்னிய அரசாங்கங்கள், அனைத்துலக இயக்கங்கள் மற்றும் தகவல் சாதனங்கள், மாணவர்கள், பெண்கள், மற்றும் தீவிரவாதிகள் என மற்றவர்கள் மீதே சுமத்திட முயலுகின்றது. இப்போது இந்த நீண்ட பட்டியலில் பஹாய்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்," என அவர் மேலும் கூறினார்.

"இரான் நாட்டின் புனித நாள்களில் ஒன்றான அஷுரா எனப்படும் புனித நாளில் நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு பஹாய்கள் மீது குற்றம் சுமத்திட கடந்த பல நாட்களாக இரான் நாட்டு அதிகாரபூர்வ தகவல் சாதனங்கள் முயன்றுவருகின்றன. எவின் சிறையில் வாடும் ஏழு பஹாய்கள் மீது மக்களின் வெறுப்புணர்வைத் தூண்டும் குறிக்கோளுடனேயே இது செய்யப்படுகிறது. தற்போது நாட்டில் நிலவும் கொந்தளிப்புகளுக்கு பஹாய்களை காரணமாக்கி பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு நாட்டின் அரசாங்கம் அல்லது அதன் அதிதீவிர அதிகாரிகள் முயலுகின்றனர் என்பதே எங்கள் கவலை," என திருமதி அலாயி மேலும் கூறினார்.

 

இக் கவலையின் தொடர்பில், கடந்த ஞாயிறன்று 13 பஹாய்கள் தங்கள் இல்லங்களிலிருந்து வலுக்கட்டாயமாக ஒரு தடுப்புமையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, அவர்கள் அனைவரும் இனி வருங்காலங்களில் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள மாட்டார்கள் என ஒரு கடிதத்தில் கையெழுத்திட வற்புறுத்தப்பட்டனர், என அவர் கூறினார்.

 

"நடப்பதை கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, இப் பஹாய்கள் எதிர்நோக்கும் சூழ்நிலை மிகவும் அபாயகரமானதே ஆகும். அவர்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் பெரிதும் கவலையுறுகிறோம்."

."அவர்களின் விசாரனை ஒரு நாடகமாகவே இருக்கும் மற்றும் அதன் முடிவு எதிர்ப்பார்த்ததே ஆகும்," என்றார் அவர்.


"விசாரனைக்கு முன்பாகவோ அதற்குப் பின்பாகவோ, இந்த எழுவருக்கும் ஏதாவது நடக்குமாயின், அதற்கு இரான் நாட்டு அரசே பொருப்பேற்க வேண்டும். அனைத்துலக சமூகம் இது குறித்து தான் அவ்விசாரனையை கூர்ந்து கவனிக்கப் போவதாகவும் எவ்விசாரனையும் அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகள் ரீதியிலேயே நடைபெற வேண்டும் என தெரிவிக்கவும் வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்," என்றார்.


திருமதி பாஃரிபா கமாலபாடி, திரு ஜமாலொடின் கமாலபாடி, திரு ஜமாலொடின் கஃஞ்சானி, திரு அபிஃப் நயிமி, திரு சையிட் ரெசாயி, திரு பெஹ்ருஸ் தவாக்கொலி, மற்றும் திரு வஹிட் திஸ்பாஃம் ஆகியோரே அந்த கைது செய்யப்பட்ட ஏழு பஹாய்களாவர். அவர்கள் 2008ல் கைது செய்யப்பட்டு இன்று வரை எவின் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.


இரான் நாட்டின் அதிகாரபூர்வ செய்திகள் அந்த எழுவரும் "இஸ்ரேல் நாட்டின் ஒற்றர்கள், சமயத்தின் புனிதத் தன்மைகளை கெடுத்தவர்கள், இஸ்லாமிய மக்களாட்சிக்கு எதிராக தப்புப் பிரச்சாரம் செய்தவர்கள் என குற்றஞ்சாட்டப்படுவார்கள் என கூறுகின்றன. இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் அடிப்படையற்றவை," என்றார் திருமதி அலாயி.


ஜூலை, ஆகஸ்ட், மற்றும் அக்டோபர் மாதங்களில் விசாரனைக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன ஆனால், அவை ஒவ்வொரு முறையும் தள்ளிவைக்கப்பட்டன. கடந்த டிசம்பரில் ஜனவரி 12 விசாரனைக்கான புதிய தேதி என வழக்கறிஞர்களிடம் அறிவிக்கப்பட்டது.


2009ம் ஆண்டில் பஹாய்களைத் துன்புறுத்துவது சீராக அதிகரித்துள்ளது என திருமதி அலாயி குறிப்பிட்டார். தற்போது சுமார் 48 பஹாய்கள் சிறைப்பட்டிருக்கின்றனர், மற்றும் நாடு முழுவதும் பலரின் வீடுகள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டும், சுய உடைமைகள் பரிமுதல் செய்யப்பட்டும், சுழல் கைது முறைக்கு உட்படுத்தப்பட்டும் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல் சுமார் 60 பஹாய்கள் கைது செய்யப்பட்டு ஓரிரவு முதல் பல மாதங்கள் வரை சிறைவைக்கப்பட்டுள்ளனர்.


தகவல் ஊடகங்கள் பஹாய் எதிர்ப்பு பிரச்சாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டும், கடந்த வாரம் 27 டிசம்பரில் நடைபெற்ற அஷுரா புனித நாள் ஆர்ப்பாட்டங்களுக்கு பஹாய்களே காரணம் எனும் அப்பட்டமான பொய் பிரச்சாரமும் செய்துள்ளனர்.

அதற்கு அடுத்த நாள், அரசியல் விவகாரங்களில் "வல்லுனர்" என விரிக்கப்படும் நேமாத்துல்லா பவாந்த், "ஸியோனிஸத்தின் தலைமைத்துவத்தின் கீழ் உள்ள பஹாய் இயக்கமே தற்போது நிலவும் நேருக்கடிக்கும் குழப்பத்துக்கும் காரணம்" என கூறியதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.


வரப்போகும் விசாரனையில் பயன்படுத்தப்படுவதற்காக இத்தகைய பிரச்சாரங்கள் ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சியே எனும் சந்தேகம் பஹாய்களிடையே ஏற்பட்டுள்ளது என திருமதி அலாயி கூறினார்.


3 ஜனவரியில் கைது செய்யப்பட்ட 13 பேரில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட எழுவரில் இருவரின் உறவினர்களும் அடங்குவர். பிரபல வழக்கறிஞர் ஷிரின் எபாடியின் முன்னாள் செயலாளரும் அவரின் கனவரும் இதில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கட்டுரையை முழுமையாக ஆங்கிலத்தில் காண:
http://news.bahai.org/story/745

 

சமய பாராளுமன்றம்

கைது செய்யப்பட்ட எழுவர்:

திருமதி பாஃரிபா கமாலபாடி, திரு ஜமாலொடின் கமாலபாடி, திரு ஜமாலொடின் கஃஞ்சானி, திரு அபிஃப் நயிமி, திரு சையிட் ரெசாயி, திரு பெஹ்ருஸ் தவாக்கொலி, மற்றும் திரு வஹிட் திஸ்பாஃம்