இல்லம்

மாநாடு: சமயமும் அறிவியலும் கூட்டுசேர்ந்து சுற்றுசூழல் பிரச்சினைகளை ஆலோசிக்கின்றன

 


17 செப்டம்பர் 2009

 

வாஷிங்டன் — மக்களின் ஆன்மீக நம்பிக்கைகள் தட்பவெப்ப நிலை மாற்றங்கள் குறித்த அவர்களின் மனப்பான்மைகளின்பால் தாக்கம் கொண்டுள்ளன மற்றும் சமய இயக்கங்கள் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த மானிடத்தின் மறுமொழியைக் கட்டமைத்திட அதிகரித்த வன்னம் உதவிவருகின்றன.

 

வாஷிங்டன் டி.சி.யில் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்தியில் நடைபெற்ற பஹாய் ஆய்வு சங்கத்தின் 33வது வருடாந்திர மாநாட்டின் போது வெளிவந்த செய்திகளுள் இதுவும் ஒன்று. இந்த ஒன்றுகூடல் 20 நாடுகளிலிருந்து சுமார் 1000 பங்கேற்பாளர்களை ஈர்த்திருந்தது.

 

"சுற்றுச்சூழல்கள்" என்பதே மாநாட்டின் கருப்பொருளாக இருந்தது. இம்மாநாட்டின் ஒரு முக்கிய பேச்சாளராக திரு பீட்டர் ஜி. பிரௌன் இருந்தார். இவர் மொன்ட்ரியோலில் உள்ள மேக்கில் பல்கலைகழகத்தில் பூகோள விரிவுரையாளராவாராகவும் எதிர்காலத்திற்கான குவேக்கர் இன்ஸ்ட்டியூட்டில் ஒழுக்கமுறை பொருளாதார திட்டப்பணியில் பங்கேற்றும் உள்ளார். டாக்டர் பிரௌன் தற்போதைய பொருளாதார எடுத்துக்காட்டு உலகத்தில் குழப்பங்களை வரவழைக்கின்றது மற்றும் மக்கள் தாங்கள் இவ்வுலகின் குடிகள் எனவும் பயனீட்டாளர்கள் அல்லவென்றும் கருதுவது அவசியம் என கூறினார்.

 

"நமக்கு நம்மைப்பற்றிய மாறுபட்ட ஒரு கருத்துரு அவசியமாகும்," என அவர் கூறினார் - அதாவது மானிடம் ஒரு நீண்ட "பரஸ்பர பரினாம" செயற்பாட்டின் ஒரு பகுதியெனும் ஒரு கருத்துரு. இவ்வுலகின் இயற்கைவளங்களை மேலும் அதிகமாக எவ்வாறு சுரண்டலாம் என கேட்பதைவிட, உலகின் ஜீவராசிகள் அனைத்தோடும் மரியாதை மற்றும் பரிமாற்ற நன்னெறியோடு வாழலாம் என கேள்வியெழுப்புவது அவசியம், என்றார்.

 

ஒழுக்கநெறி குறித்த சமுதாயத்தின் கருத்து மிகவும் குறுகியது, என அவர் மேலும் தொடர்ந்தார். மனிதர்களுக்கு மட்டுமின்றி, செயல்முறைகளுக்கும் ஒழுக்கநெறி முறைமைகள் செயற்படுத்தப்படவேண்டும்.

"நாம் நமது ஒழுக்கநெறி முறைமைகளை நமது நமது அறிவியல் சார்ந்த அறிவோடு ஒன்றிணைத்திட இயலாமல் இருக்கின்றோம்," என அவர் மேலும் கருத்துரைத்தார்.

 

சுற்றுச்சூழல் இயக்கங்களோடு மதக் குழுவினரும் சமயச்சமூகங்களும் அதிகரித்த அளவில் உடனுழைக்கின்றனர் என்பதை பஹாய் உரையாளரான திரு பீட்டர் ஏட்ரியன்ஸ் விவரித்தார். இவர், "சமயங்கள் தங்கள் கைப்பிடியில் கொண்டிருக்கும் குறிப்பிட்ட நன்னெறி குறித்த அதிகாரத்தை வேறு எந்த குழுமங்களும் கொண்டிருக்க முடியாது" எனக் கூறிய சமயம் மற்றும் சூழ்நிலையியல் குறித்த மன்றத்தின் உடன் ஸ்தாபகரான மேரி எவலின் டக்கரை அவர் சுட்டினார்.

 

திரு ஏட்ரியன்ஸ் ஆதரிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழலை உருவாக்ககுவதற்கான ஆன்மீக அல்லது நன்னெறி அம்சங்களின்பால் கவனம் செலுத்தும் பல்வேறு குழுக்கள் எடுத்திருக்கும் பல முனைவுகளை பட்டியலிட்டார். பின்வருவன அவற்றுள் சில:

 

-- "செயல்பாட்டில் நம்பிக்கை: சமயநம்பிக்கைச் சமூகங்கள் உலகிற்கு நன்னம்பிக்கையை வழங்குகின்றன" என தலைப்பிடப்பட்ட சியெரா சங்கத்தின் முதல்மாதிரி அறிக்கை.

-- சுற்றுச்சூழலம் மற்றும் யூதவாழ்வுமுறை குறித்த கூட்டணியால் ஆதரிக்கப்பட்ட திட்டநிரல்கள்.

-- உலகக்கண்கானிப்புக் கழகத்தின் அறிக்கை ஒன்று: "ஆதரிக்கப்படக்கூடிய உலகத்திற்கான நாட்டத்தில் சமயங்களை ஈடுபடுத்துவது".

-- மற்றும் இதர.

திரு ஏட்ரியன்ஸ் மேலும் "அடிமைத்தனத்தை ஒழிப்பதில், குடிமுறை உரிமைகள் இயக்கத்தில், மற்றும் தென்னாப்பிரிக்காவில் நிறவெறிமுறையை ஒழிப்பதில் சமயங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன மற்றும் இ்ப்போது அவை சுற்றுச்சூழல் பக்கமும் அதிகரிக்கும் வகையில் தங்கள் ஆற்றல்களை குறிவைத்துள்ளன," என கூறினார்.

"ஒரு ஆதரிக்கப்பட்ட வருங்காலத்தை நோக்கி உலகத்தை திசைதிருப்புவதற்கு மனிதவரலாற்றில் காணப்படாத பல்வேறு நிலையிலான தியாகம், சமூக ஒன்றியம், தன்னலமற்ற சேவை, குறிக்கோள் ஒற்றுமைகள் தேவைப்படுகின்றன. இத்தகைய பன்புகள் சமய ஆற்றல்களின் வாயிலாக தங்களின் அதிவுயர்ந்த மேம்பாட்கைக் கண்டுள்ளன," என்றார்.


மேல்விவரங்களுக்கு

peterbrown

இந்த நிகழ்வில் பங்கேற்ற உரையாளர்களில் ஒருவரான பீட்டர் ஜி பிரௌன்.