இல்லம்

பொருளாதார பிரச்சினையின் மையத்தில் நீதிநெறியே வீற்றிருக்கின்றது, EBBF கூறுகிறது

 


6 ஜூலை 2009

 

ஜெனேவா – உலக பொருளாதார பிரச்சினை குறித்த எவ்வித நடவடிக்கையும் நீதிநெறி குறித்தும் விவாதிக்க வேண்டும், ஏனெனில் இந்த நெருக்கடி “அடிப்படையில் நம்பிக்கை மற்றும் நேர்மை,” குறித்ததாகும் என ஐரோப்பிய பஹாய் வணிக மன்றம் சென்ற வாரம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.


மேலும், இந்த நிலைமை “அனைத்து நிலைகளையும் உள்ளடக்கிய” நீதிநெறி சார்ந்த தீர்வை வேண்டுகிறது – அவையாவன தனிநபர்கள், வணிகமன்றங்கள், அரசாங்கங்கள் மற்றும் நிர்வாக அமைப்புக்களாகும், என அவ்வறிக்கை கூறுகின்றது. இந்த அறிக்கை ஜெனேவாவில் ஏற்பாடு செய்யப்பட்ட உலகளாவிய நீதிநெறி கலந்துரையாடல் மன்றத்தினால் அதன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு பல நாடுகளிலிருந்தும் அமைப்புக்களிலிருந்தும் வந்து ஒன்றுகூடிய 400 பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட அறிக்கையாகும்


மக்கள் தங்கள சிந்தனைகளை மறுவடிவப்படுத்திக்கொள்ளும் போது, சில கோட்பாடுகள் கருத்தில் கொள்ளப்படவேண்டும், என EBBF கூறியது.


“லௌகீகவாத தன்னல கருத்துக்களை மானிடத்திற்கான பொதுநல சேவையாக மாற்றிவிட வேண்டும்,” என EBBF கூறியது. போட்டியுணர்வு கூட்டுறவுணர்வாக மாறவேண்டும்; ஊழல் நடத்தைகள் ஒழுக்கச் செயல்களாக மாறவேண்டும்; பால்நிலை வாதங்கள் பால் சமநிலையாக மாறவேண்டும்; தன்னல காப்புணர்வு உலக ஐக்கியமாக மாறவேண்டும்; அநீதி நீதியாக மாறவேண்டும், என அவ்வறிக்கை மேலும் கூறியது.


இத்தகைய புதிய கட்டமைப்புமுறையை ஒன்றிணைந்து உருவாக்கிட பரந்தநிலை சமூகத்துடனான உடனுழைப்பை EBBF மேம்படுத்திக்கொள்ளவும் வரவேற்கவும் செய்கின்றது என அவ்வறிக்கை கூறியது.


வணிக மக்களையும், நாடுகளையும், எல்லா வாழ்க்கைநிலையிலும் உள்ளவர்களை நீதி மற்றும் நியாத்தின் அடிப்படையில் ஒரு புதிய பொருளாதார முறையை ஒன்றிணைந்து அமைத்திட நாங்கள் அழைக்கின்றோம்.


2 – 3 ஜூலை மாதத்தில் ஜெனோவாவிலுள்ள ஐக்கிய நாட்டு தலைமையகத்தில் நடைபெற்ற இந்த உலகளாவிய நீதிநெறி உரையாடலில் 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


தற்போது நிலவும் நெருக்கடியை கடந்துசெல்கையில் வணிகநிறுவனங்களுக்கும் நாடுகளுக்கும் உதவக்கூடிய புதிய வகை சிந்தனைகளை வழங்கிடும் முயற்சியில் EBBF இந்த அறிக்கையை வழங்கியுள்ளது.


இந்த EBBFன் பொதுச் செயலாளரான டேனியல் ட்ரூரன் அவர்கள் “மாற்றுமுறை ஒன்றுக்கு தற்போது அவசரத் தேவையுள்ளது,” எனக் கூறினார்.


நெருக்கடி நேரங்களில்,  முன்சென்றிடுவதற்கான சரியான பாதையைத் தேடுவதானது முன் எப்போதும் விட சற்று வலுவாகவே இருக்கின்றது மற்றும் அவ்வகை தேடுதலானது இந்த நெருக்கடிக்கு எவ்வகையிலும் வழிவகுக்கவில்லை என அவர் கூறினார்.


இந்த ஐரோப்பிய பஹாய் வணிக அமைப்பு 1990ல் உருவாக்கப்பட்டு இப்போது 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சுமார் 60 நாடுகளில் பெற்றுள்ளது.


மேல்விவரங்களுக்கு

 

 

 

"An Ethical Perspective on Today's Economic Crisis"