இல்லம்

 

பஹாய்கள் ஐ.நா.வின் "நிலைநிறுத்தக்கூடிய மேம்பாடு" நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

19 மே 2009

 

ஐக்கிய நாடுகள்— ஓர் அரசாங்க சார்பற்ற நிறுவனத்தின் உறுப்பினர் எனும் முறையில் ஐ.நா.வின் நிலைநிறுத்தக்கூடிய மேம்பாடு குறித்த இவ்வருட கமிஷனில் 19 வயதே ஆன அலிஷியா குண்டால் ஒரு குறைந்த வயது பங்கேற்பாளராக அதன் இளைஞர் ஒன்றுகூடலில் பங்கேற்பது இயல்பான விஷயமே.

 

ஆனால், அரசாங்கங்களின் பிரதம ஒன்றுகூடலின்போது தமது குழுவினரால் குழுவின் தலை அறிக்கையை வாசிப்பதற்கு நியமிக்கப்படுவார் என அவர் எண்ணியதில்லை மற்றும் மாறாக அவர் அந்த அறிக்கையை மே 14ல் வாசிக்கவும் செய்தார்.

 

"நான் அதை வாசிக்க இயலாதென்றேன் ஆனால் என் குழுவில் இருந்தவர்கள் நான் அவ்வறிக்கையை தயாரிப்பதற்காக பெரும் சிரமம் எடுத்துக்கொண்டதால் அதை நானே வாசிப்பது முறை என்றார்கள்," என கனடா நாட்டு டோரொண்டோ பல்கலைகழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் மாணவியும், மே மாதம் 4-15 வரை நடைபெற்ற இவ்வருட கமிஷனின் நிகழ்ச்சிக்கு பஹாய் அனைத்துலக சமூகத்தின் ஆறு பிரநிதிகளுள் ஒருவருமான குமாரி குண்டால் கூறினார்.

 

கமிஷன் இவ்வருடத்தின் நிகழ்ச்சிநிரலில் உணவுநெருக்கடி, விவசாயம், மற்றும் ஆப்பிரிக்கா குறித்து கவனம் செலுத்தும் அதே வேளை வருங்கால தலைமுறையினரையும் கருத்தில் கொள்ளவேண்டிய அதன் கடமையை அந்த இளைஞர் அறிக்கை சுட்டிக்காட்டியது.

 

அந்த இளைஞர் அறிக்கையில், "நெருக்கடிமிக்க நேரங்களில் நேரவசதி அல்லது பீதியால் உந்தப்பட்டு நாம் பெரும்பாலும் பழைய முறைகள் அல்லது எளிய தீர்வுகளையே செயல்படுத்துகின்றோம்," என குமாரி குண்டால் வாசித்தார்.

 

"ஆனால் நாம் இந்த வழியிலேயே செயல்பட்டுக்கொண்டிருக்கமுடியாது," என அவ்வறிக்கை கூறியது. இக்காலத்தின் தேவைகளை நிறைவு செய்யும் அதே வேளை நாம் முடிந்த வரையில், சிரமம் பாராமல், அதிகம் செலவானாலும், வருங்கால தலைமுறையினர் தங்கள் தேவைகளை அடைவதற்கான வழிமுறைகளை பாதிக்காத வகையில் உறுதியாக நிலைநிறுத்தக்கூடிய நடவடிக்கைகளையே நாம் முன்நிறுத்தவேண்டும், என அவ்வறிக்கை மேலும் கூறியது.

 

நிலைநிறுத்தக்கூடிய மேம்பாடு குறித்த விஷயங்களில் விசேஷ கவனம் செலுத்தும் ஐ.நா.வுக்கான பஹாய் பிரதிநிதியான தாஹிரி நேய்லர், நிலைநிறுத்தக்கூடிய மேம்பாட்டின் இன்றியமையா அங்கமான கல்வி மற்றும் திறன்வளர்த்தலின் பங்கை குறித்துக்காட்டுவதே இந்த கூட்டத்தில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவித்ததின் குறிக்கோளாகும் என விளக்கினார்.

 

"நல்ல கல்வி மற்றும் பயிற்சிகளை அடைவதால், தங்கள் சொந்த மேம்பாட்டுக்கான முன்மையாளர்களாக இளைஞர்கள் இருக்கக்கூடும்," என குமாரி குண்டால் மேலும் எடுத்துரைத்தார்.

 

 

 

 

710-1

 

அலிஷியா குடாண்ல் தமது அறிக்கையை வாசிக்கின்றார்.

 

710-2

 

சீதோஷ்ன நெறிமுறை எனும் துணை நிகழ்ச்சி பஹாய் அனைத்துலக சமூகத்தின் ஆதரவில் நடைபெற்றது