இல்லம்

 

பிரிட்டிஷ் பிரதமர் பஹாய்களுக்கு தமது ரித்வான் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.

 

24 ஏப்ரல் 2009

 

லண்டன் — பஹாய்களின் மிக முக்கிய விழாவான ரித்வான் பண்டிகை குறித்து இங்கிலாந்து பஹாய்களுக்கு தமது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அச்செய்தியில் "பிரிட்டிஷ் பஹாய் சமூகம் தனது எண்ணிக்கையை விஞ்சிய அளவில் பிரிட்டிஷ் வாழ்க்கைமுறைக்குப் பெரும் பங்காற்றி வருவது குறித்து தமது மரியாதையையும் பாராட்டுதல்களையும்," தெரிவித்துள்ளார்.

 

பஹாய்களின் சகல-கட்சிகள் பாராளுமன்ற நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்திர விருந்து நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட அச்செய்தியில், பொது வாழ்க்கை முறைகளில் பஹாய் பங்கை "வரவேற்று" உலகின் சில பகுதிகளில் பஹாய்கள் அனுபவித்து வரும் பாகுபாடு மற்றும் கொடுமைகள் "துக்ககரமானவை" என வருணித்தார்.

 

அவரது உணர்வுகளை கனசர்வேடிவ் மற்றும் லிபரல் டெமோகிரட் கட்சிகளின் தலைவர்களும், சர்ச் ஓஃப் இங்லண்ட் தலைவரும், எதிரொலித்தனர். இவர்கள் அனைவரும் அந்த நிகழ்ச்சிக்கு தங்கள் வாழ்த்துக்களை அனுப்பியிருந்தனர்.

 

கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான டேவிட் கேமரன், "பஹாய்கள் சமத்துவம், ஐக்கியம், சமூக நீதி, மற்றும் மனிதவுரிமைக்கு அழுத்தம் கொடுப்பதானது உங்கள் சமயத்திற்கு பெருமை தருவதாக அமைகின்றது," என எழுதியிருந்தார்.

 

லிபரல் டெமோகிராட் கட்சியின் தலைவரான நிக் கிலெக், "ரித்வான் காலம் இங்கிலாந்தில் வாழும் ஆயிரக்கணக்கான பஹாய்களால் வழங்கப்பட்டுள்ள சமூக கலாச்சார பங்களிப்புக்களை பாராட்டி அவை குறித்து பிரதிபலிப்பு செய்திடுவதற்கான நேரம்," என்றார்.

 

"சமய சகிப்புத்தன்மை, அமைதி மற்றும் ஐக்கியம் உலகம் முழுவதும் மேம்பாடு காண பஹாய் சமூகம் எடுத்துவந்திருக்கும் முனைப்பான நடவடிக்கைகளுக்காக அச்சமூகம் பெரிதும் பெருமைப்படலாம்," என மேலும் கூறினார்.

 

பிரதம மந்திரியின் செய்தி பஹாய்கள் இரான் நாட்டில் அனுபவித்து வரும் கொடுமைகளை குறிப்பாகச் சுட்டியது: "இந்த ரித்வான் காலத்தில் இரான் நாட்டில் சிறயில் வாடும் ஏழு பஹாய் நண்பர்களின் நிலையே நமது உள்ளங்களில் முன்னிற்கின்றது. நாம் நமது கவலையை இரான் நாட்டு அரசாங்கத்திடம் தெரிவித்திருக்கின்றோம் மற்றும் அந்த நாட்டு அதிகாரிகள் அந்த ஏழு பேரும் நியாயமான முறையில் விசாரிக்கப்படவேண்டும் என்பதை உறுதி செய்து அந்த நாட்டில் வாழும் பஹாய் சமூகம் பாரபட்சமாக நடத்தப்படுவதையும் நிறுத்த வேண்டும்."

 

காண்டர்பரி ஆர்ச்பிஷப் டாக். ரோவன் வில்லியம்ஸ் அவர்களின் சார்பில் எழுதப்பட்ட ஒரு செய்தியில், "சென்ற வருடம் தகுந்த காரணமின்றி கைது செய்யப்பட்டு மிகவும் கடுமையான சூழலில் சிறை செய்யப்பட்டதிலிருந்து அந்த எழுவரும் நடத்தப்படும் விதம் குறித்து அவர் தமது ஆழ்ந்த கண்டனத்தை தெளிவுபடுத்தினார். தற்போது அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் அக்குற்றச்சாட்டுகள் அமைதியான மற்றும் விசுவாசமான குடிகள் எனும் பஹாய்களின் அனுபவத்திற்கு நேரெதிராக இருக்கின்றது," என்றார்.

 

பிரதமரின் செய்தி, மற்ற 80 விருந்தினர்களோடு சேர்ந்து கலந்துகொண்ட வெளிவிவகார அலுவலக அமைச்சரான பில் ராம்மல் அவர்களால் படிக்கப்பட்டது. அவ்விருந்தினர்களுள் அரசாங்க சார்ப்பற்ற நிறுவனங்கள் மற்றும் பிற சமயஸ்தாபனங்களைச் சார்ந்த பிரமுகர்களும் இருந்தனர். அந்த நிகழ்வு ஏப்ரல் 22ல் ஹௌஸ் ஆஃப் காமன்ஸ் வெளிப்படித்தளங்களில் நடைபெற்றது.

 

ரித்வான் 12 நாட்களும், தாம் இறைவனின் இக்காலத்திற்கான அவதாரம் மற்றும் இயேசு, முகம்மது, புத்தர், கிருஷ்னர், மோசஸ் ஸோரொவெஸ்டர், மற்றும் பிறர் வரிசையில் ஆகக் கடைசியாக வந்த பஹாவுல்லா 1863ல் செய்த பொது அறிவிப்பைக் குறிப்பிடும் வருடாந்திர விழாவாகும்.

710-1

 

பிரிட்டிஷ் பிரதமரின் செய்தியை வெளிவிவகார அலுவலக அமைச்சரான திரு பில் ரேம்மல் வாசிக்கின்றார்.

 

710-2

 

1980களில் தமது தந்தையை இழந்தும், தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நெருங்கிய உறவினரையும் கொண்ட பஹார் தாஃஸிப் ரித்வான் விருந்து நிகழ்வில் சொற்பொழிவாற்றுகின்றார்.