இல்லம்

 

பஹாய்களும் மனிதவுரிமை இயக்கங்களும் இரான் நாட்டு அதிபர் தமது நாட்டில் நிகழ்ந்து வரும் பாகுபாடுகளை முதலில் களைய வேண்டும் என கூறுகின்றனர்.

 

19 ஏப்ரல் 2009

 

ஜெனேவா — இரான் நாட்டு அதிபர் மஹமூட் அஹமடினெஜாட் இவ்வாரம் டுர்பான் (2) எனும் மாநாட்டில் சொற்பொழிவாற்றுவதற்கு முன் அவர் தமது நாட்டிலேயே நிகழ்ந்துவரும் பாகுபாடுகளை களையவேண்டும் என இரு மனிதவுரிமை இயக்கங்களுடன் சேர்ந்து பஹாய் அனைத்துலக சமூகமும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

 

அவ்வறிக்கை பஹாய் அனைத்துலக சமூகம், மனித உரிமை பாதுகாப்புக்கான இரான் நாட்டு கழகம் (LDDHI), மனித உரிமைக்கான அனைத்துலக கூட்டுறவு (FIDH) ஆகியவற்றால் ஒரு கூட்டு செய்தி வெளியீடாக வெளியிடப்பட்டது.

 

அந்த மூன்று இயக்கங்களும் இரான் நாட்டு அதிபர் சிறுபான்மையினர், பெண்கள், மற்றும் சமய சிறுபான்மையினருக்கெதிரான பாகுபாடுகளை தீர்க்க முற்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்ததோடு , வெறுப்புணர்வு தூண்டுதல் பிரச்சினைக்கும் தீர்வு காணவேண்டும் என வேண்டுகோள் விடுத்தன.

 

"மிகவும் கவலைதரும் ஒரு விஷயமாக அரசாங்க கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட செய்தி சாதனங்கள் பஹாய் சமய விசுவாசிகளுக்கு எதிராக கீழ்தரமான வகையில் செய்திகளை வெளியிட்டுள்ளன. இதற்குச் சான்றாக இரான் நாட்டில் நூற்றுக்கணக்கில் வெளிவந்துள்ள கட்டுரைகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இணைய வெளியீடுகள், மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் கையேடுகளை அந்த அறிக்கை சுட்டியது.

 

டுர்பான் மறுஆய்வு மாநாடு ஐ.நாவின் ஏற்பாட்டில் நடைபெறுகின்றது. இம்மாநாட்டின் நோக்கம் இனவாதம், இனபாகுபாடு, அன்னிய வகுப்பினருக்கெதிரான சந்தேகமனப்பான்மை, மற்றும் இவை தொடர்பான பிரச்சினைகளுக்கு எதிராக டுர்பான், தென் ஆப்பிரிக்காவில் 2001 வருடம் நடைபெற்ற உலக மாநாட்டின் தீர்மானங்கள் எந்த அளவுக்கு மேமபாடு கண்டுள்ளன என்பதை ஆய்வு செய்வதாகும்

 

(இந்த மூன்று இயக்கங்களும் வெளியிட்டுள்ள செய்தி வெளியீட்டைக் காண்பதற்கு, இங்கே செல்லவும்.)