இல்லம்

இவ்வருட நவ் ருஸ் பண்டிகை பாப் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட 100வது வருட நிறைவை குறிக்கின்றது

 

18 மார்ச் 2009

 

ஹைஃபா, இஸ்ரேல் -- மார்ச் 21ம் திகதியன்று உலகம் முழுவதிலுமுள்ள பஹாய்கள் தங்களின் வருட பிறப்பான நவ் ருஸ் பண்டிகையை கொண்டாடுவர். இத்திகதி, பஹாய் சமயத்தின் முன்னோடி அவதாரமான பாப் அவர்கள் கார்மல் மலையில் நல்லடக்கம் செய்யப்பட்டதின் 100வது வருட நிறைவையும் குறிக்கின்து.

 

1909ம் வருட நவ் ருஸ் தினத்தின் போது, பஹாய் சமயத்தின் தலைமைத்துவத்தை வகித்த, பஹாவுல்லாவின் மூத்த மகனான அப்துல் பஹா அவர்கள் பாப் அவர்களின் பூதவுடலை நல்லடக்கம் செய்தார். ஹைஃபா நகரத்தின் கார்மல் மலை மீது தாம் கட்டியிருந்த ஒரு கட்டிடத்தில் அப்துல் பஹா அவர்கள் விலைமதிப்பற்ற அப் பொக்கிஷத்தை நல்லடக்கம் செய்வித்தார்.

 

அந்த ஆரம்ப கட்டிடம் பின்னாளில் சுற்றிலும் அழகான வடிவமைப்புடன் கூடிய தூன்களால் அலங்கரிக்கப்பட்டு அதற்கு சிகரம் வைத்தாற்போல் அதன் உச்சியில் பொன்குவிமாடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடம், பஹாய் சமயத்துடன் தொடர்புடைய இரு அவதாரங்களில் முதல் அவதாரமன பாப் அவர்களுக்குத் தகுந்த நல்லடக்க ஸ்தலமாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு அவதாரங்களும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தனர். எல்லா சமயங்களாலும் வாக்களிக்கப்பட்டும் நீண்டகாலமாக எதிர்ப்பார்க்கப்பட்டவருமான பஹாவுல்லா அவர்களின் உடனடி வருகையை அறிவிப்பதே பாப் அவர்களின் நோக்கமாக இருந்தது.

 

பாப் அவர்கள் 1850ல் தப்ரீஸ் நகரின் பொது சதுக்கத்தில் 750 துப்பாக்கிகள் ஏந்திய வீரர்களால் சுடப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார். சிதைந்த அவரது உடல் புதைக்கப்படமுடியாமல் சுமார் 50 வருட காலம் இரான் நாட்டில் அங்கும் இங்குமாக ஒளித்து வைக்கப்பட்டு பிறகு இரகசியமாக புனிதநிலத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கும் அவரை அடக்கம் செய்வதற்கு ஏற்ற இடமின்னமையால் மேலும் பத்து வருடங்களுக்கு ஒளித்து வைக்கப்பட்டு பிறகு கார்மல் மலையில் அடக்கம் செய்யப்பட்டது.

 

பஹாவுல்லாவும் பாரசீக நாட்டைச் சேர்ந்தவரே ஆனால், அவர் தமது தாய் நாட்டை விட்டு நாடு கடத்தப்பட்டு இறுதியாக ஆக்கோ-ஹைஃபா வட்டாரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டார். பஹாவுல்லா தமது விண்ணேற்றத்திற்கு முன்னர் பாப் அவர்களின் உடலை பாரசீக நாட்டிலிருந்து கொண்டுவந்து கார்மல் மலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட வேண்டுமென அப்துல்-பஹாவிடம் பணித்தார்.

 

அதன் பின்னர் அப்துல்-பஹா அவர்கள் நல்லடக்க நினைவாலயத்திற்கு தகுந்த நிலத்தை வாங்கிடவும்; அதன்மீது ஒரு கட்டிடத்தைக் கட்டவும்; நினைவாலயத்திற்குச் செல்வதற்கான சாலை ஒன்றை அமைக்கவும் ஏற்பாடுகள் செய்தார். பர்மா நாட்டு பஹாய்கள், நல்லடக்கத்திற்கான பளிங்கு சவப்பெட்டி ஒன்றை அனுப்பிவைத்தனர்.

 

பஹாய் வரலாற்றில் 100 வருடங்களுக்கு முன் நடந்த குறிப்பிடத்தக்க அந்த சம்பவத்தின் விவரங்களை"கடவுள் கடந்து செல்கின்றார்" எனும் நூலில் காணலாம்:

 

அப்துல்-பஹா அவர்கள் அந்த பளிங்குப் பெட்டியை அதற்கென தயார் செய்யப்பட்ட நல்லடக்கக்குழிக்கு பெரும் முயற்சியுடன் கொண்டு சென்று, அன்று அந்திவேளையில் ஒரே ஒரு விளக்கின் ஒளியில், மனதை நெகிழச்செய்யும் ஆன்மீகச்சூழ்நிலையில், கிழக்கு மற்றும் மேற்கு நாட்டு விசுவாசிகள் சூழ நல்லடக்கப்பெட்டியில் கிடத்தப்பட்டிருந்த பாப் அவர்களை தமது கைகளாலேயே அடக்கம் செய்தார்..."

 

1909ல் பாப் அவர்களின் நினைவாலயத்தின் ோதற்றம்

 

கீயெவ்2

 

 

 

நினைவாலயத்தின் தற்போதைய தோற்றம். அதனுள் பழைய கட்டிடத்தைக் காணலாம்.

 

 

 

 

 

 

 

 

அப்பழைய கட்டிடத்தின் வேலைப்பாடுகளைக் இன்றும் காணலாம்

 

 

அன்றிருந்தது போன்றே இன்றும் பழைய கட்டித்தின் சுவர்கள் காணப்படுகின்றன.

 

 

 

 

 

பழை நினைவாலயத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள அலங்காரக் கட்டிடம்