இல்லம்

வரலாற்று முக்கியத்துவம் மிக்க 18வாரகால மாநாடுகள் ஒரு முடிவிற்கு வந்துள்ளன

 

3 மார்ச் 2009

 

கீயெவ், யுக்ரேன் — நான்கு மாதங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் ஆரம்பித்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க 41 பஹாய் மாநாடுகள் சென்ற வாரம் கிழக்கு ஐரோப்பாவின் யுக்ரேன் நாட்டின் தலைநகரான கீயெவில் ஓர் ஒன்றுகூடலின் வழியாக முடிவிற்கு வந்தது.

 

சுமார் 730 பங்கேற்பாளர்கள் இதில் கலந்துகொண்டனர். இவர்களுள் பெரும்பாலோர் யுக்ரேன், ரஷ்யா, மோல்டோவா, ஆர்மீனியா, பெலாருஸ், எஸ்டோனியா, லித்துவேனியா மற்றும் லாட்வியாவிலிருந்து வந்திருந்தனர். அனைத்து 41 மாநாடுகளைப்போலவே உலக நீதி மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டில் இவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

 

நவம்பர் 1ல் ஆரம்பித்து 18 வாரங்கள் தொடர்ந்து, உலகம் முழுவதையும் சூழ்ந்து, மேற்கத்திய நாடுகளின் மாநகரங்களிலிருந்து தென் கடல் தீவுகளின் குக்கிராமங்கள் வரை பங்கேற்பாளர்களை ஈர்த்த இந்த மாநாட்டு தொடர்களில் 77,700 பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர்.

 

இவற்றுள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சிட்னி மாநாடுகள் 5000 பங்கேற்பாளர்களுக்கும் மேல், பிராங்க்பர்ட் மற்றும் டொரொன்டோ மாநடுகள் 4000 பங்கேற்பாளர்களுக்கும் மேல் ஈர்த்தன.

சமூக-அமைப்பு நடவடிக்கைகளில் அடையப்பட்ட வெற்றிகளைக் கொண்டாடவும், எதிர்கால திட்டங்களைக் கலந்தாலோசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடுகளில் கலந்துகொள்ள மக்கள் கால்நடையாக தூரப்பயணங்களையெல்லாம் மேற்கொள்ள வேண்டி அல்லது மிகவும் கடினமான சூழ்நிலைகலையெல்லாம் கடந்து வரவேண்டியிருந்தது.

 

இந்த மாநாடுகள் அனைத்திலும் பங்கேற்பு எண்ணிக்கைகள் எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கைகளைக் காட்டிலும் பேரளவு அதிகமாகி, மடைதிறந்த வெள்ளம்போல் நிறைந்திருந்த பங்கேற்பாளர்களுக்காக ஏற்பாட்டாளர்கள் ஏற்கனவே செய்யப்பட்ட ஏற்பாடுகளை மறு ஆய்வு செய்து மாநாட்டுக்கு மேலும் பெரிய இடமாகவோ மேலும் அதிகமான அறைகளை பெறவோ வேண்டியிருந்தது.

 

இந்த மாநாடுகள் உலகம் முழுவதும் அண்டை சமூகங்களிலும் கிராமங்களிலும் பஹாய் நடவடிக்கைகளை ஸ்தாபிப்பதற்கான ஐந்தாட்டு திட்டம் ஒன்றின் மத்திய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

 

இம்மாடுகள் குறித்த மேல் விவரங்களுக்கு:

http://news.bahai.org/community-news/regional-conferences/

கீயெவ்1

உலகம் முழுவதும் 77,700 பங்கேற்பாளர்கள் 41 மாநாடுகளில் கலந்துகொண்டனர். மேலே: கீயெவ் மாநாட்டில் மாஸ்கோவிலிருந்து ஸாஃபார் ஹாம்ராயெவ் மற்றும் கீயெவிலிருந்து யூஜினியா போலுவெக்டோவா.

 

கீயெவ்2கீயெவ் மாநாட்டிற்கு 8 ஐரோப்பியா நாடுகளிலிருந்து 730 பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர்

 

கீயெவ்3

 

கீயெவ் மாநாடு 41 ஒன்றுகூடல்களில் இறுதியானதாகும். இம்மாநாடுகள் உலக நீதி மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்தாற்போன்று 18 வாரங்களுக்கு நடைபெற்றன.