இல்லம்

பாப் அவர்களின் நினைவாலயத்தின் மறுசீரமைப்புப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன


28 டிசம்பர் 2008


ஹைஃபா, இஸ்ரேல் — பஹாய் உலகத்தின் அதி புனித ஸ்தலங்களில் ஒன்றும் ஹைஃபா நகரின் மிகப்பிரபலமான இடங்களில் ஒன்றுமான பொண்குவிமாடமுடைய பாப் அவர்களின் நினைவாலயத்தின் நான்கு வருட கால மறுசீரமைப்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.


பாப் அவர்களின் நினைவாலயம், கார்மல் மலையில் சாரலில் ஹைஃபா வலைகுடாவையும் மத்திய தரை கடலையும் நோக்கியவாறு  பஹாய் பூந்தோட்டத்தின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தோட்டங்களும் நினைவாலயமும் இஸ்ரேல் நாட்டில் சுற்றுப்பயணிகளை வெகு அதிகமாகக் கவரும் இடங்களாகும்.


குவிமாட அமைப்புடைய இக்கட்டிடம் சுமார் 55 வருடங்களுக்கம் முன் கட்டிமுடிக்கப்பட்டது. அதற்கு இப்போது, பூகம்பங்களைத் தாங்கும் கட்டமைப்பு, கல் வேலைப்பாடுகளின் மீள்ச்சி, எஃக்கினால் ஆன அலங்காரங்களை புதுப்பிப்பது, மின்சார அமைப்புமுறையை மேம்படுத்துவது, குவிமாடத்தில் புதிய தகடுகள் கொண்டு வேய்வது ஆகியவற்றை உட்படுத்திய மறுசீரமைப்பு மற்றும் புதுப்பிப்புகள் அதற்கு தேவைப்படுகிறது.


அதன் வடிவமைப்பில், பயன்பாட்டில் மற்றும் அதன் பொதுவான தோற்றத்தில் மாற்றங்கள் ஏதும் இராது. சீரமைப்புப் பணிகளின் போது, நினைவாலயம் பஹாய் புனிதயாத்ரீகர்களுக்கும் சுற்றுப்பயணிகளுக்கும் வசந்தகாலம் தவிர மற்ற நாட்களில் எப்போதும்போல் திறந்திருக்கும் வகையில் அதன் சீரமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்படும். மே மாதம் அல்லது ஜூன் 2009 முதல் அக்கட்டிடம் கட்டுமானப் படிகள் மற்றும் கான்வஸ் துணி கொண்டு சுமார் இரண்டு வருட காலத்திற்கு மூடப்பட்டிருக்கும். இத்திட்டம் சுமார் 6 மில்லியன் அமெரிக்க டாலர் செலவை உள்ளடக்கி அதற்கான நிதிகள் அனைத்தும் பஹாய் சமூகத்தினரிடமிருந்தே பெறப்படும். 


இந் நினைவாலயம் பாப் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடமாகும். பாப் அவர்கள் இறைவனின் ஓர் அவதாரம் எனவும் பஹாய் சமயத்தின் மைய நாயகர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.


பாப் அவர்கள் 1850ல் இரான் நாட்டின் தப்ரீஸ் நகரில் 1850ல் மரணதண்டைக்குள்ளானார். பல வருடங்களுக்குப் பிறகு அவரது உடல் ஹைஃபா நகருக்குக் கொண்டுவரப்பட்டு தற்போதைய நினைவாலயத்தில் 1909ல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  


ஆரம்பத்தில் பாப் அவர்களின் கல்லறையை உள்ளடக்கியிருந்த கட்டிடம் ஒருமாடி நீண்டசதுர கட்டிடமாகும். கருங்கல் மற்றும் இத்தாலி நாட்டின் பளிங்குக் கற்களால் ஆன நெதர்லாந்து நாட்டிலிருந்து பெறப்பட்ட பொன்தகடுகளால் போர்த்தப்பட்ட குவிமாட கூறை பிறகு அமைக்கப்பட்டு 1953ல் முழுவதாக கட்டிமுடிக்கப்பட்டது.


பாப் அவர்களின் நினைவாலயமும், ஹைஃபா நகருக்கு வடக்கேயுள்ள ஆக்கோ நகரிலுள்ள பஹாவுல்லாவின் நினைவாலயமும் உலகிலேயே அதி புனிதமான இடங்களென பஹாய்களால் கருதப்படுகின்றன. வெகு சமீபத்தில், இவ்விரு இடங்களும் அவற்றைச் சுற்றியுள்ள தோட்டங்களும் யூனெஸ்கோவால் உலக மரபுடைமைத் தலங்களில் ஒன்றாக, மனிதகுலத்தின் கலாச்சார மரபுச்செல்வங்களில் ஒரு பகுதியாக தேர்வு செய்யப்பட்டது.

 

shrinebab