இல்லம்

பஹாய்கள் மனித உரிமை பிரகடணத்தின் 60வது ஆண்டுநிறைவை நினைவுகூறுகின்றனர்.

 

7 டிசம்பர் 2008

 

நியு யார்க் – உலகைச் சுற்றிலுமுள்ள பல பஹாய் சமூங்கள் மனித உரிமை நாளை இவ்வாரம் நினைவுகூறுகின்றனர் -

 

நியூ யார்க்கில், பஹாய் அனைத்துலக சமூகம் ஒரு நாள் கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்யவிருக்கின்றது: "சமயம் அல்லது நம்பிக்கை சுதந்திரம்: அறுபது வருடகால ஐக்கிய நாட்டுப் பாதுகாப்புக்குப்பின் கண்ணோட்டங்களும் சவால்களும்."

 

humanrights

டிசம்பர் 08 ல், நடைபெறவிருக்கும் அக்கருத்தரங்கம், இரு குழுக்கள் கொண்ட கருத்தரங்கு ஒன்றை உள்ளடக்கியிருக்கும்.

 

அரங்க உறுப்பினர்களுள் அனைத்துலக சமய சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையத்தில் சேவை செய்யும் ஜேக்கப் புலோஸ்டீன் நிலையத்தின் ஃபெலிஸ் கேயர்; ஐக்கிய நாட்டின் மக்கள்தொகை நிதியின் அஸ்ஸா கராம்; பிரிகம் யங் பல்கலைக்கழகத்தின் சட்ட மற்றும் சமய ஆய்வுகளுக்கான அனைத்துலக மையத்தின் கோல் டர்ஹாம்; மற்றும் பிரிஸ்டல் பல்கலைகழக சட்டக்கல்வி நிலையத்தின் மால்க்கம் எவன்ஸ்.

 

"இவ்வருடம் மனித உரிமை நாள் குறிப்பான முக்கியத்துவமுடையதாக இருக்கின்றது ஏனெனில் மனித உரிமைகள் இன்று பல திசைகளிலிருந்து மீறல்களுக்கு உள்ளாகியுள்ளன. அனைத்துலக மனித உரிமைகள் பிரகடணத்தின் 60வது வருடமான இவ்வருடம் சமய சுதந்திரம் மற்றும் நம்பிக்கைகளுக்கான வரைமுறைகளை மிகவும் அழுத்தமாக அச்சாசனம் வெளிப்படுத்துவது மிகவும் முக்கியமாகின்றது.

 

உலகம் முழுவதுமுள்ள பஹாய் சமூகங்கள் டிசம்பர் 10ல் அனுசரிக்கப்படும் இந்த மனித உரிமைகள் தினத்தை அனுசரித்திட பல விதமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன.