இல்லம்

நிழல்பட தொகுப்பு இணையத்தளத்தில் ஏற்றப்பட்டுள்ளது

 

7 நவம்பர் 2008 (BWNS)

 

ஹைஃபா, இஸ்ரேல் – அதிகாரபூர்வ பஹாய் இணையத்தளத்தில் பஹாய் நடவடிக்கைகள் சார்ந்த சுமார் 500 நிழல்படங்கள் பார்வைக்கும் இறக்கம் செய்வதற்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

"வளர்ச்சி குறித்த இயக்கவிசைகளை அடைவது" எனப்படும் அந்த வலைப்பக்கத்திற்கான இணைப்பு பின்வருமாறு: http://www.bahai.org/attaining/.

 

பஹாய் உலக நிலையத்தால் ஆணையிடப்பட்ட அந்தப் படங்கள், கடந்த இளவேனிற்காலத்தில் ஹைஃபாவில் நடைபெற்ற அனைத்துலக பஹாய் பேராளர் மாநாட்டைக் குறிவைத்து அதற்கு முன்பு திட்டமிடப்பட்டு பெறப்பட்ட ஆயிரக்கணக்கான படங்களுள் அடங்கும். ஏறத்தாழ உலகநாடுகள் அனைத்திலிருந்தும் பேராளர்கள் இதில் பங்குபெற வருகையளித்து, அம்மாநாட்டை மனுக்குலத்தின் பல்வகைத்தன்மையை வெளிப்படுத்தினர்.

 

பஹாய்கள் தங்களுடைய சொந்த ஊர்களில் மைய நடவடிக்கைகளான பயில்வட்டங்கள், குழந்தைகள் வகுப்புகள், இளைய இளைஞர் நடவடிக்கைகள், மற்றும் வழிபாட்டுக் கூட்டங்களில் பங்குபெறுவதை அப்படங்கள் பிரதிபலித்தன. சமூகப் பொருளாதார மேம்பாடுகளுக்கென இதில் ஒரு பக்கம் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

 

பதினெட்டு வெவ்வேறு நாடுகளின் மாநகரங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து அப்படங்கள் தருவிக்கப்பட்டிருந்தன. அவ்விடங்களாவன: கம்போடியா, கனடா, கொங்கோ குடியரசு, இந்தியா, கென்யா, கிரிபாத்தி, மலேசியா, மலாவி, மொங்கோலியா, நேப்பாளம், பனாமா, சரவாக், துருக்கி, ஐக்கிய அரசுகள்(இங்கிலாந்து), ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஸாம்பியா ஆகியவை.

 

columbia

படத்தொகுப்பில் கொலம்பியா நாட்டின் இக்குழந்தைகளின் படமும் அடங்கும் (தொடர்காட்சி...)