இல்லம்

உகாண்டா திட்டம் கல்வியறிவு திட்டத்தோடு நிற்கவில்லை.

 

2 நவம்பர் 2008

 

நெப்பி வட்டாரம், மேற்கு நைல் பிரதேசம், உகாண்டா — கல்வியறிவு பெற்றிருப்பதென்பது தேவையான தகவல்கள் மற்றும் செய்திகளை படிக்கும் திறன் பெற்றிருப்பதென்பதாகும் - இதன் காரணமாகவே UPLIFT எனப்படும் கல்வியறிவு த் திட்டத்தின் முதல் பாடப்பகுதி மலேரியா நோயை எவ்வாறு குணப்படுத்துவது என்பது பற்றியதாகும்.

 

பின்னர் வரும் பாடப்பகுதிகள், உணவுமுறை, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, குப்பை உரம் தயாரிப்பது, சுற்றுச்சூழல் குறித்த சவால்கள், மற்றும் இதர விஷயங்களை அறிவுறுத்துகின்றன.

 

உகாண்டாவின் இந்தப் பகுதியில் வாழும் அலுர் மொழி பேசும் கிராமத்தவரான அலிஸா பொலி என்பவர், இந்த UPLIFT எனப்படும் பயிற்சியில் கலந்துகொண்ட தன்னையும் கலந்துகொள்ளாதன தனது நண்பர்களையும் ஒப்பிடுகையில் தங்களுக்கிடையில் பெரும் வேறுபாடு இருப்பதாகக் கூறுகிறார்.

 

தமது 63ம் வயதில் இவ்வருட ஆரம்பத்தில் அவர் இ்ந்த UPLIFT கல்விப்பயிற்சியில் கலந்துகொண்டு இப்போது படிக்கவும் கற்றுக்கொண்டுள்ளார்.

 

இந்த UPLIFT எனப்படும் வார்த்தையில் காணப்படும் "T" எனும் எழுத்து, இத்திட்டத்தின் மையக் கருத்தான, நிலைமாற்றத்தைக் குறிப்பதாகும், என இத்திட்டத்தின் இயக்குனரான திரு ஹிஸ்ஸாயா ஹிஸ்ஸானி கூறுகிறார். இத்திட்டத்தின் முழு பெயர் "Uganda Program of Literacy for Transformation" அல்லது "நிலைமாற்றத்திற்கான உகாண்டா கல்வியறிவு திட்டம்" என்பதாகும்.

 

ஐந்து பஹாய் நண்பர்களுடன் இத்திட்டத்தை 2001ம் வருடம் ஆரம்பித்த டாக்டர் ஹிஸ்ஸானி, "இந்த UPLIFT எனப்படும் திட்டம் சமூகப் பொருளாதார நிலைமாற்றத்திற்கு கல்வியறிவை வாகனமாகப் பயன்படு்த்துகிறது," என விளக்கினார்.

 

அதுமுதல் இந்த கல்வியறிவுத் திட்டத்தில் 6,700க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர், மற்றும் -- நோர்வே மற்றும் உகாண்டா அரசாங்கங்களின் உதவியோடு -- UPLIFT 2009க்குள் மேலும் 4000 பேர்களை பயிற்றுவிப்பதற்கு உறுதியளித்துள்ளது.

 

பங்கேற்பாளர்கள் என்ன கற்றுக்கொள்பவை

 

இத்திட்டத்தில் கலந்துகொள்வோர் "கற்றுக்கொள்பவர்கள்" என அழைக்கப்படுகின்றனர் மற்றும் இப்பயிற்சியை முடித்தவர்கள் வெறும் எழுத்தறிவுத் திறம் மட்டுமின்றி அதன் முழுமைமதிப்பைப் பற்றி பேசுகின்றனர்.

 

இப்பயிற்சியை முடித்துள்ள ஏழு குழந்தைகளைப் பெற்றவரான 61வயதுடைய குலாஸ்திக்கா ஒக்வொங் எனும் மாது, "நான் அறியாமையில் வாழ்ந்தேன். மலேரியா நோயை எப்படி குணப்படுத்துவது என்பது எனக்குத் தெரியாது, மற்றும் குப்பை உரம் தயாரிக்கவும் தெரியாமலிருந்தேன்... நாங்கள் அன்றாடங் காய்ச்சிகளாக வாழ்ந்தோம். நாங்கள் பயிர் செய்தவற்றை நாங்கள் உண்டு எவ்வித சேமிப்பும் இன்றிய வாழ்ந்தோம். ஆனால் இப்போது என் மனப்பாங்கு பெரிதும் மாறியுள்ளது" எனக் கூறுகிறார்.

 

இத்திட்டத்தின் பத்து வெளி ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரைக் கனவராகப் பெற்ற திருமதி ஒக்வோங், தாம் மற்றவர்களை நம்பி வாழ்பவர்களுள் ஒருவராக இருக்கும் உணர்வோடு வாழ்ந்ததாகவும், ஆனால் இத்திட்டத்தில் பங்குபெற்றதிலிருந்து தாம் இப்போது பெரிதும் சுதந்திர மனப்பான்மை பெற்றிருப்பதாகக் கூறுகிறார்.

 

"யாருக்காவது நோய் கண்டால் நான் மந்திரவாதி வைத்தியர்களிடமே சென்று வந்தேன், ஆனால், இப்போது நான் வேப்பிலை மூலிகை மருந்துவகைகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளேன். அதுவும் பயன்தரவில்லையெனில் நாங்கள் சுகாதார மையத்திற்குச் செல்வோம். பள்ளி தொடர்பான கூட்டங்கள் நேர விரயம் என நான் நினைத்ததுண்டு, ஆனால் அவை முக்கியம் என்பதை இப்போது உணர்கிறேன். புத்தகங்கள் படிப்பதும் முக்கியம்," என்கிறார் அவர்.

 

image1

திட்டத்தில் பங்கு பெறுவோர்

 

image2

டாக்டர் ஹிஸ்ஸாயா

 

image4

கற்றுக்கொண்டவர்களின் எழுத்து மாதிரி

 

 

image5

வேப்பிலை மருந்து தயாராகிறது

 

image6

அரசாங்க அதிகாரி

 

image7

திருமதி ஒக்வோங்

 

image8

திரு ஒனேகியூன் ஒரேஸ்தே

 

image9

பயிற்சி மையம்

 

image10