இல்லம்

சமயக் குழுக்களுக்கான உலகமய கருத்தரங்கை ஐ.நா ஒன்றுகூட்டியது.

இஸ்தான்புல், துருக்கி 30 அக்டோபர் 2008— ஐ.நாவின் மக்கள் நிதியமைப்புக்களுக்கான இரண்டு நாள் உலகமய கருத்தரங்கில் பங்கு பெற்ற சமயச் சார்புடைய குழுக்களில் பஹாய் அனைத்துலக சமூகமும் உள்ளடங்கியிருந்தது.

 

20 - 21ல் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற இக்கருத்தரங்கு, HIV-AIDS, குழந்தைபிறப்பு உடல்நலன், பாலின சமத்துவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை சார்ந்த மக்கள் தொகை மற்றும் மேம்பாடு குறித்த பிரச்சினைகளை ஆய்வு செய்தது.

 

பெண்கள் பிரச்சினைகள் குறித்து சிறப்புத் தேர்ச்சியுடையவரும் ஐ.நாவிற்கான பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரதிநிதியுமான திரு ஃபுல்யா வெக்கிலோக்லு இதில் கலந்துகொண்டார்.

 

"பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் பெண்களுக்கு ஆற்றலளித்தல்" குறித்த குழு கலந்துரையாடலின் போது கிடைத்த இடைவெளியில் மனப்பாங்கு மாற்றம் மற்றும் இது குறித்து சமய அடிப்படையிலான அமைப்புக்கள் எவ்வாறு இதில் சிறப்புப் பங்காற்ற முடியும் என்பவை குறித்து அவர் வலியுறுத்தினார்.


 

 

globalforum