இல்லம்

பஹாய்கள் அனைத்துலக வறுமை ஒழிப்பு நாளை அனுசரிக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் 26 அக்டோபர் — வறுமை குறித்த ஐக்கிய நாடுகள் கூட்டம் ஒன்றை திறக்கும்படி வேண்டப்பட்ட திரு கெவின் லோக் தமது தாய் மொழியான லாக்கோட்டா சியூக்ஸ் மொழியில் "பருந்து" பற்றிய பிரார்த்தனை ஒன்றைக் கூறினார். "பருந்து மனித ஆவியின் மேலான இயல்பைக் குறிக்கும், மனித ஆவி மேன்மைக்குணத்திற்கு உயரக்கூடிய உள்ளாற்றலைக் குறிக்கும் ஒரு சின்னமாகும்," என திரு லோக் விளக்கினார். அனைத்துலக வறுமை ஒழிப்பு நாளக் குறிக்கும் ஐ.நா.வின் வட்டமேஜை நிகழ்வின் போது இது நடைபெற்றது.


"பருந்து எப்போதுமே உயரப் பறந்திட உந்தப்படுகிறது," என அவர் கூறினார். "பருந்து ஒரு புதிய நாளின் ஒளியைக் காண்கிறது மற்றும் அது களிப்புணர்வினால், 'இப்புதிய நாளில் நானே முதலில் பறக்கின்றேன்,' எனக் கூவுகின்றது," என அவர் கூறினார்.

 

பிறகு, உலகளாவிய நிலையில் நடைபெறும் வறுமை ஒழிப்பு முயல்வுகளைக் குறித்துப் பேசுகையில், "நாமெல்லாருமே இருளிலிருந்து விடுதலையடையவே முயல்கிறோம்," என்றார்.

 

1993ல் ஐ.நா.வினால் நிறுவப்பட்ட, வறுமை குறித்த விழிப்புணர்வு நாளுக்கு ஆதரவளிக்கும் வகையில் உலகம் முழுவதும் பஹாய்கள் எடுத்துக்கொண்டிருக்கும் முயல்வுகளில் ஐ.நா. வட்டமேஜைக்கான பங்களிப்புக்களில் திரு கெவின் அவர்களின் பங்களிப்பும் ஒன்றாகும்.

 

-- உகாண்டாவில் பஹாய் சமூகம் இரண்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தது. வறுமை ஒழிப்பு குறித்த ஓர் அறிக்கையை வழங்கும் பத்திரிக்கை நிருபர்கள் கூட்டம் மற்றும் கம்ப்பாலா நகரில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தில் ஒரு சிறப்புப் பிரார்த்தனைக் கூட்டம் ஆகியவை.

 

-- ஆஸ்திரேலியாவில், "வறுமை ஒழிப்பு: பெண்களுக்குக் கல்வியூட்டல்," எனும் தலைப்பில் பஹாய்கள் ஒன்றிணைந்த குழுக் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்தனர். அரசாங்கம் மற்றும் கல்வியாளர் பிரதிநிதிகளோடு 7 மற்றும் 11 வயதான இரு சிறுமிகளும் இதில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்நிகழ்வை ஆஸ்திரேலியாவின் யூனிஃபெம் எனப்படும் பெண்களுக்கான ஐ.நா. நிதியமைப்பு, ஆஸ்திரேலிய நாட்டின் உதவி நிறுவனம் மற்றும் பஹாய்களும் ஒன்றாக ஏற்பாடு செய்தனர்.

 

-- ஜெர்மனியில், இந்த நாளை அனுசரித்திடுவதற்குத் துணையாக உள்ளூர் பஹாய்கள் பயன்படுத்திட "வறுமைக் கருவிப்பெட்டி" ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் பவர்பாய்ண்ட் விளக்கமளிப்பு ஒன்றும், வறுமை ஒழிப்பு குறித்த பஹாய்களின் கண்ணோட்டங்கள், மற்றும் பஹாய் புனித எழுத்தோவியங்களிலிருந்து வறுமை மற்றும் செழுமைக்கிடையிலான பெரும்பிளவை குறைக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றிய குறிப்புகளும் உள்ளடங்கியிருந்தன.

 

-- அர்ஜென்டினாவில், பூனொஸ் ஆயர்ஸ் நகர பஹாய்கள் வழிபாடு, "பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான ஆன்மீகத் தீர்வுகள்" எனும் தலைப்பில் சொற்பொழிவு, மற்றும் வேறுபட்ட சமூகப் பொருளாதார பின்னனியைச் சார்ந்த இரு இளைஞர்கள் பற்றிய நாடகம் உட்டபட பல கலை சார்ந்த படைப்புக்கள் திட்டமிடப்பட்டன.

 

இதே போன்று பஹாய்கள் பங்கேற்கும் பல நிகழ்வுகள் எல் சால்வடோர், கென்யா, மோரிஷியஸ், மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் திட்டமிடப்பட்டன.

 

babshrine

 

திரு கெவின் அவர்கள் அனைத்துலக வறுமை ஒழிப்பு தினத்தன்று ஐ.நா.வின் வட்டமேஜை நிகழ்வில் தமது குழலை ஊதுகின்றார். அதன் போது அவர் தமது தாய்மொழியான சியூக்ஸ் மொழியில் ஒரு பிரார்த்தனையை கூறினார். இந்த நிகழ்வு 17 அக்டோபர் 2008ல் நியு யார்க் ஐ.நா.வில் நடபெற்றது.