இல்லம்

இரான் நாட்டில் வெளியாகியுள்ள அறிக்கை ஷிராஸ் பஹாய்கள் குற்றமற்றவர்கள் என்பதைச் காட்டுகிறது.

நியு யார்க், 24 அக்டோபர் 2008 (BWNS) -- 2006 ஷிராஸ் நகரில் கைது செய்யப்பட்ட பஹாய் இளைஞர்கள் குறித்து ஆய்வு செய்த ஓர் இரான் நாட்டு பரிசோதகர் ஒருவர், தமது ஆய்வின் விளைவாக ஜூன் 2008 எனத் திகதியிடப்பட்ட ஓர் இரகசிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அவ்வறிக்கையில் பஹாய்கள் இதுநாள் வரை என்ன கூறி வந்துள்ளனரோ அதையே அவரும் கூறியுள்ளார்: அதாவது அப் பஹாய் இளைஞர்களுடைய நடவடிக்கைகள் யாவும் மனிதாபிமான இயல்புடையவை மற்றும் பஹாய் சமயத்தை சட்டத்திற்குப் புறம்பாக போதிப்பதை உள்ளடக்கவில்லை என்பதாகும்.

 

ருஸ்டாமி எனும் பெயருடைய "பரிசோதகர் மற்றும் சட்ட ஆலோசகரால்" அவ்வறிக்கை கையொப்பமிடப்பட்டுள்ளது மற்றும் இரான் நாட்டின் மனித உரிமை தீவிரவியக்கவாதிகளால் 23 அக்டோபரில் அது பிரசுரிக்கவும் பட்டது. அவ்வறிக்கை "அம்மாநிலத்தின் பிரதம தலைவரின் பிரதிநிதிக்கு" விலாசமிடப்பட்டும் அவரால் அது பணிக்கப்பட்டது எனவும் அதில் குறிக்கப்பட்டுள்ளது.

 

கைது செய்யப்பட்ட 54 பஹாய்களில் மூவர் நான்கு வருட சிறைவாச தண்டனை விதிக்கப்பட்டு இன்றும் ஷிராஸ் நகரில் சிறையில்உள்ளனர்.

 

அவ்வறிக்கையில் அவர்களுடைய நடவடிக்கையில் சமயம் பற்றிய எவ்வித குறிப்பும் இல்லை, மாறாக அவ்வகுப்புக்களில் கலந்துகொண்ட இளைஞர்கள் அவ்வகுப்புக்களை தொடரவே விரும்புகின்றனர் எனவும் அப்பரிசோதகரிடம் தெரிவித்துள்ளனர்.

 

பஹாய்களுக்கெதிராக இழைக்கப்படும் அநீதிகளை அவ்வறிக்கை வலியுறுத்துவதாக ஒரு பஹாய் பேச்சாளர் கூறினார்.

 

"இரான் நாட்டில் குற்றம் என்பதற்கு அளிக்கப்படும் திரிக்கப்பட்ட விளக்கத்திலும் கூட அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை உள்நிலை விசாரனை ஒன்று அடிப்படையாக நிரூபித்துள்ளபோதும், ஷிராஸ் நகரின் இளம் பஹாய்கள் தொடர்நது சிறையிலிருப்பது வெளிப்படையான அநீதியாகும்," என ஐ.நா.விற்கான பஹாய் அனைத்துலக சமூகத்தின் தலைமை பிரதிநிதியான திருமதி பானி டுகால் கூறினார். "அரசாங்கத்தின் பொய்கள் சிறிதும் அடிப்படையில்லாதவை," என அவர் மேலும் கூறினார்

 

மே 20006ல் நடைபெற்ற அக்கைது நடவடிக்கைகள் அனைத்துலக ரீதியில் செய்தி சாதனங்களின் கவனத்தைப் பெற்று பல அரசாங்களால் கவலை தெரிவிக்கவும் பட்டது.

 

54 இளையோர்களையும் அவர்களின் முஸ்லிம் நண்பர்களையும் உள்ளடக்கிய அக்குழு, ஷிராஸ் நகரிலும் அதைச் சுற்றிலும் உள்ள வறிய நிலையில் உள்ள இளைஞர்களுக்கு 2004 முதல் மனிதாபிமான திட்டங்களில் ஈடுபட்டு அவர்களிடையே கல்வியறிவு மற்றும் ஒழுக்கநெறி மேம்பாட்டை, ஏழ்மை நிலையிலுள்ள சுற்றுப்புறங்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலயிலும் நடத்தி வந்தது.

 

19 மே 2006ல் அக்குழுவின் உறுப்பினர்கள் அரசாங்கப் பிரதிநிதிகளால் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடையே இருந்த அவர்களின் முஸ்லிம் நண்பர்களும் ஒரு பஹாய் இளைஞரும் உடனடியாக விடுவிக்கப்பட்டனர், ஆனால் 53 இளைஞர்கள் மட்டும் சில நாட்களிலிருந்து ஒரு மாதம் வரை தடுத்துவைக்கப்பட்டனர்.

 

பிறகு, 2007ல் கற்பனையான சில குற்றச்சாட்டுகளில் பேரில், அதாவது அவர்கள் "மறைமுகமாக" தங்கள் சமயத்தை போதிப்பதில் ஈடுபட்டனர் என சிறைவைக்கப்பட்டனர். சமய சுதந்திரத்தை அனைத்துலக சட்டங்கள் வலியுறுத்திய போதும் இரான் நாட்டில் பஹாய் சமயத்தைப் போதிப்பது குற்றமாகும். பிறகு, ஜனவரி 2008ல், அவர்களுள் மூன்று பெர்களை சிறை வத்தது பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது, அவ்விளைஞர்கள் அரசாங்க எதிர்ப்பு "பிரச்சாரங்களில்" ஈடுபட்டனர் என அரசாங்கப் பேச்சாளர் கூறினார்.

 

இருந்தபோதும், 16 ஜூன் 2008ல் வெளியிடப்பட்ட, அம் மாநிலத்தின் (ஃபார்ஸ்) தலைமை அதிகாரிக்காகவும் ஷிராஸ் நகரின் தலைமை இமாமிற்காகவும் தயாரிக்கப்பட்ட அந்த இரகசிய அறிக்கையில், தமது ஆய்விற்காகப் பேட்டி காணப்பட்ட அனைவருமே பஹாய் சமயத்தைப் பற்றி பாட நேரத்தில் குறிப்பிடப்பட்டதே இல்லை எனக் கூறியதாக தெரிவித்தார். இது அரசாங்கக் குற்றச்சட்டிற்கு நேர் எதிரான தகவலாகும்.

 

உதாரணமாக, அந்த ஆய்வாளர் பஹாய்களால் நடத்தப்பட்ட அவ்வகுப்புகளில் பங்கேற்ற பல இளைஞர்களும், வேலை ஓய்வு பெற்ற ஒரு காவல் அதிகாரியும், அவ்வகுப்புக்கள் சிறிதும் வேறுபாடின்றி கல்விசார்ந்தவையே என தெரிவித்தனர்.

 

"அவர்களின் நடவடிக்கைகளின் ஆரம்பத்திலிருந்தே இவ்விளைஞர்கள் இத்தகைய அறக்காரியங்களில் வாரம் ஒரு முறை நடத்தி, இளைய இளைஞர்களுக்கும் இளைஞர்களுக்கும் உதவி வந்துள்ளனர் என," அவ்வறிக்கை மேலும் கூறியது. இது வேலை ஓய்வு பெற்ற, ஜெட்டி எனும் பெயருடைய ஒரு இராணுவ அதிகாரியை சுட்டிக் கூறப்பட்டதாகும். இவ்வகுப்புக்களின் நடவடிக்கைகள் எழுதுவது, வரைவது, மற்றும் சுகாதாரக் கல்வி, ஒழுக்கநெறி ஆகியவையே போதிக்கப்பட்டு சமயம் பற்றியோ அரசியல் பற்றியோ எதுவுமே குறிப்பிடப்பட்டதில்லை. பஹாய் சமயம் பற்றி எந்த நேரத்திலும் எதுவுமே அங்கு பேசப்பட்டதில்லை."

 

ரஸ்டாமி எனும் பெயருடைய காவல் அதிகாரி தாம் அவ்வகுப்புகளில் பங்கு பெற்ற எட்டு இளைஞர்களை பேட்டி கண்டதாகக் கூறினார். அவர்கள் அனைவருமே "அவ்வகுப்புகளில் அவர்கள் ஒழுக்கநெறி கல்வி, சித்திரக்கலை, கைதயெழுத்துக்கலை, சமூக திறனாற்றல்கள் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், எந்த நேரத்திலுமே அரசியல் குறித்தோ, சமய எதிர்ப்பு விவாதங்களிலோ சட்டம், சமயம் அல்லது கலாச்சார முறைகளுக்குப் புறம்பாக கலந்துரையாடல்கள் நடைபெற்றதில்லை" எனக் கூறினர்.

 

சிறைவாசம் அனுபவித்துவரும் அம் மூவரும், ஹாலே ரூஹி, ராஹா சபேட் மற்றும் சாஸான் தாக்வா ஆவர். சென்ற வருடம், அவர்கள் சார்பாக Amnesty International எனப்படும் அமைப்பு ஓர் நடவடிக்கை அறிக்கையை வெளியிட்டது. அதில், அந்த இளைஞர்கள் அனைவரும் முற்றிலும் தங்கள் சமய நம்பிக்கைக்காகவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கருத்து தெரிவித்திருந்தது.

 

திருமதி டுகால் பஹாய்களை கைது செய்வது மற்றும் சிறைப்படுத்துவது என்றுமே தவறானதாகும், ஏனெனில் அனைத்துலக சட்டங்கள் ஒருவர் தமது சமயத்தைப் பிறருக்குப் "போதிப்பதை" அனுமதிக்கின்றது.

 

ஆனால், இந்த சம்பவத்தில் அத்தகைய போதன"ைகள் எதுவுமே நடைபெறவில்லையென அவர் கூறினார். பஹாய்களும் அவர்களின் முஸ்லிம் நண்பர்களும் ஏழைப் பிள்ளைகளுக்குக் கல்வியறிவு, சுகாதாரம் மற்றும் ஒழுக்கநெறிகள் குறித்த இலவசமாக நடத்தப்பட்ட மனிதாபிமான முறையான முயல்வுகளிலேயே ஈடுபட்டிருந்தனர்."

 

"இத்தகைய முயல்வுகளுக்காக, அம் மூன்று இளைஞர்களும் சிறையில் வாடுகின்றனர், மற்றும் இப்புதிய அறிக்கையின்படி இத்தண்டனை மிகவும் குரூரமான ஒரு செயலாகின்றது. அவர்களுள் ஓரிளைஞர் தமது காலில் ஏற்கணவே ஏற்பட்டிருந்து வாகன விபத்தின் காரணமான காயத்திற்கு தக்க மருத்துவ உதவிகளின்றி இருந்துள்ளார்."

 

“Our hope now is that with the public release of this report, the Iranian government will release the three and exonerate them and the other 50 people.” "ஆகவே, "இவ்வறிக்கையின் பகிரங்கமான வெளியீட்டினால், இரான் நாட்டு அரசாங்கம் அந்த மூன்று பேர்களையும் விடுவித்து மற்ற 50 பேர்களையும் குற்றமற்றவர்கள் என அறிவிக்கும் என்பது எங்கள் நம்பிக்கை."

 

"மேலும், நீண்ட காலமாக நடந்து வரும் இத்தகைய தவறான குற்றச்சாட்டுகளின் மூலம் இரான் நாட்டுப் பஹாய்களின் நற்பெயரைக் கெடுக்கும் முயல்வை இரான் நாட்டு அரசாங்கம் கைவிடும் என நாங்கள் எதிர்ப்பார்க்கின்றோம் -- மற்றும் எவின் சிறையில் வைக்கப்படிருக்கும் இது போன்றோரையும், ஏற்கனவே சிறைவகைகப்பட்டுள்ள ஏழு பஹாய்கள் உட்பட அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்பது எங்கள் எதிர்ப்பார்ப்பு," என திருமதி டுகால் மேலும் கூறினார்.

 

(குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையை உள்ளடக்கிய இரான் நாட்டு மனித உரிமை தீவிரநடவடிக்கையாளர்களின் இணையப்பக்கத்தை இங்கு காணலாம்: http://hrairan.org/Archive_87/1135.html)


 

babshrine

 

கைது செய்யப்பட்டு இதுவரை விடுவிக்கப்படாத சிறையிலடைக்கப்பட்ட மூன்று இளைஞர்கள்