இல்லம்

பாப் அவர்களின் பிறந்த நாளை பஹாய்கள் நினைவுகூறுகின்றனர்.

 

17 அக்டோபர் 2008

 

ஹைஃபா, இஸ்ரேல் -- உலகம் முழுவதிலுமுள்ள பஹாய்கள், 20 அக்டோபரில் பாப் அவர்களின் பிறந்த புனித நாளை அனுசரிக்கவிருக்கின்றனர்.

 

பஹாய்கள் தங்கள் தினசரி வேலகளிலிருந்து ஓய்வு கொள்ளவேண்டிய ஒன்பது நாட்களில் ஒரு நாளான, 1819ல் ஷிராஸ் நகரில், உலகிற்கு சையிட் அலி முகம்மது, அல்லது பாப் அவர்களின் பிறந்த தினமான 20 அக்டோபர் அத்தினத்தின் ஆண்டுநினைவு நாளாகும்.

 

1844ல் பாப் அவர்கள் உலகப் பெரும் சமயங்களிலெல்லாம் முன்கூறப்பட்டுள்ள வாக்களிக்கப்பட்ட திருஅவதாரம் தாமே மற்றும் பஹாவுல்லா எனும் திருநாமம் கொண்ட மற்றுமொரு மாபெரும் தெய்வீக அவதாரத்தின் விரைவில் நிகழவிருக்கும் வருகையை மக்களுக்கு முன்னறிவிப்பதே தமது தமது சமயப்பணியெனவும் அவர் அறிவித்தார். பாப் மற்றும் பஹாவுல்லா இருவருமே கடவுளின் அவதாரங்கள் என்பது பஹாய்களின் நம்பிக்கையாகும்.

 

தமது தந்தை மற்றும் தாய் வழியில் கடவுளின் அவதாரமாகிய முகம்மதுவின் வம்சத்தவரான பாப் அவர்கள், தமது தாய்நாடான இரானில் பல்லாயிரக்கணக்கான மக்களை தமது சமயத்திற்கு ஈர்த்தார். 1850ல் அரசாங்கத்தின் ஆணையின்பேரில் வட இரானின் தப்ரீஸ் நகரின் பொது சதுக்கத்தில் அவர் துப்பாக்கிகள் ஏந்திய வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

அவரது புனித உடல் பின்னாளில் இஸ்ரேல் நாட்டின் ஹைஃபா நகருக்குக் கொண்டுவரப்பட்டு அங்கு கார்மல் மலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பொன்கூறை கொண்ட அவரது திருக்கல்லறை, ஹைஃபா நகரிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும்.

 

பாப் அவர்களின் பிறந்த நாளை இன்னவிதத்தில்தான் கொண்டாட வேண்டுமென எவ்வித சடங்குகளோ சம்பிரதாயங்களோ கிடையாது. பெரும்பாலும் பஹாய்கள் வழிபாட்டுக்கூட்டங்கள் அல்லது இசை நிகழ்வுகளை ஏற்பாடு செய்து தோழமையுணர்வோடு ஒன்றுகூடி நிகழ்ச்சிகளை நடத்துவர்.

 

 

 

babshrine

 

 

பாப் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள, பூந்தோட்டங்கள் சூழ்ந்த இடம். பஹாய்கள் இங்கு தியானம் செய்யவும் பிரார்த்திக்கவும் வருகின்றனர்.