இல்லம்

வலைப்பதிவு(Blog) நடவடிக்கை தினம் சமூக செயல்பாட்டிற்கான ஒற்றுமையை உருவாக்குகிறது, என்கிறார் அதன் ஏற்பாட்டாளர்.

 

13 அக்டோபர் 2008

 

சிட்னி, ஆஸ்திரேலியா, 13 அக்டோபர் 2008 (BWNS) -- உலகெங்கிலும் உள்ள வலைப்பதிவர்கள்(Bloggers) - இன்று உலகிலேயே வெகு அதிகமாகப் பதிவுகள் பெறும் வலைப்பதிவுகளுக்கு எழுதுவோர் உட்பட - 15 அக்டோபர் தேதியன்று நடைபெறவிருக்கும் இரண்டாவது உலக வலைப்பதிவு நடவடிக்கை தினத்தன்று, 'வறுமை' குறித்து கலந்துரையாடவிருக்கின்றனர்.

இதுவரை ஏறத்தாழ 100 இலட்சம் வாசகர்களைக் கொண்ட 8,000த்திற்கும் அதிகமான வலைப்பதிவர்கள் இத்திட்டத்திற்குத் தங்களைப் பதிந்துகொண்டுள்ளனர். சென்ற வருட வலைப்பதிவு தினத்தை ஓர் அறிகுறியாகக் கொண்டு பார்த்தால் - நிகழ்ச்சி தினத்திற்குள் இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தகும் வகையில் மேலும் அதிகரிக்கக்கூடும். தங்களைப் பதிந்துகொண்டுள்ள குறிப்பிடத்தக்க வலைப்பதிவர்களாக TechCrunch, LifeHacker, ReadWriteWeb, மற்றும் ProBlogger போன்றோர் உள்ளனர்.

ஏற்பாட்டாளர்களுள் முக்கியமான ஒருவரான திரு கொல்லிஸ் தா'யீட், வலைப்பதிவு நடவடிக்கை தினம் குறித்த கருப்பொருள் பஹாய் நம்பிக்கைகளோடும் சமூகநடவடிக்கைகள் குறித்த பஹாய் போதனைகள் பற்றிய தமதுஅறிவோடும் நன்கு ஒத்திருக்கின்றது என்கிறார்.

அனைத்துலக நிலையில் இணைய வடிவமைப்புத் தொழில்நெறிஞராகப் பனிபுரியும் ஆஸ்திரேலியரான திரு தா'யீட், "வலைப்பதிவர்களுக்கான ஒரு நடைமேடையை வழங்கி அவர்கள் தங்கள் தினசரி வாழ்விலிருந்து ஒரு நாளை ஒதுக்கி சமூகநிலையில் பயன்மிகு காரியம் ஒன்றைப் புரிவதற்கு வழிவகுக்குப்பதே எங்கள் குறிக்கோள்," எனக் கூறுகிறார்.

"இது பஹாய் கோட்பாடுகளைச் செயல்பாடு காணச் செய்கிறது, அதாவது மக்கள் தங்கள் வட்டத்திற்கு வெளியே வந்து பரந்திருக்கும் சமுதாயத்திற்குத் தங்களால் இயன்ற பயன்மிக்க ஏதேனும் செய்யவேண்டும். செயல்படவேண்டும் என்பதில் தனிநபர்களிம் மீது பஹாய் சமயம் பெறும் பொறுப்பைச் சுமத்துகிறது" என அவர் மேலும் தொடர்ந்தார்.

பொதுவாக இணையமும், குறிப்பாக வலைப்பதிப்புக்களும், தொடர்புகொள்ளலில் ஒரு தனிச்சிறப்பான வழியை வழங்குகின்றன, மற்றும் வலைப்பதிவு நடவடிக்கை தினம் இத்தகைய தொடர்பில் தானும் பங்குபெறுகிறது, என திரு தா'யீட் கூறினார்.


உலகின் 100 தலையாய வலைப்பதிவுகளில்(Technorati-யால் பட்டியலிடப்பட்டவை) கால்வாசி வலைப்பதிவுகள் இதில் பங்கேற்க தங்களைப் பதிந்துகொண்டுகள்ளன.

வலைப்பதிவு நடவடிக்கை தினம் எனும் கருத்து வலைப்பதிவாளர்கள் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தை தங்கள் சுயக் கண்ணோட்டத்தோடு கூறாயும் நோக்கோடும் மற்றும் அதை எல்லாருமே ஒரே நேரத்தில் செய்து ஒரு குறிப்பிட்ட தலைப்பில் பன்முகமான உலகளாவிய கலந்துரையாடலை உருவாக்குவதுமே வலைப்பதிவு நடவடிக்கை தினத்தின் நோக்கமாகும்.

"உங்கள் வலைப்பதிவு பொதுவாக பொருளாதாரம் குறித்ததென்றால் நீங்கள் வறுமைநிலையை அந்தக்கோணத்திலிருந்து ஆராயலாம். உங்கள் வலைப்பதிவு தொழில்நுட்பம் பற்றியதெனும்போது நீங்கள் அக்கோணத்திலிருந்து பிரச்சனையை ஆராயலாம்," என திரு தா'யீட் கூறினார்.

இத்திட்டத்திற்கு ஆதரவளிக்க விரும்புவோர் www.blogactionday.org எனும் வலைத்தளத்திற்குச் சென்று தங்களைப் பதிந்துகொள்ளலாம், மற்றும் வேறு எவரும் அதே வலைத்தளத்திற்குச் சென்று, வலைப்பதிவுப் பேச்சுத்தொடரின் 12 மனிநேர வானொலி பேச்சுத்தொடர் உட்பட, வேறு வகைகளிலான பங்கேற்புகள் குறித்து ஆராயலாம்.

(இது குறித்த விரிவான தகவலுக்கும் படங்களுக்கும் இங்கே செல்லவும்: http://news.bahai.org/story/658.)

blogactionday

 

வலைப்பதிவு நடவடிக்கை தின இணையப்பக்கம்

 

image1

 

கொல்லிஸ் மற்றும் சையன் தை'யீட், வலைப்பதிவு நடவடிக்கை தினத்தின் முக்கிய ஏற்பாட்டாளர்கள்

 

image2

 

'ZenHabits' எனப்படும் 100 தலையாய வலைப்பதிவுகளுள் ஒன்றின் ஆக்குனரான லியோ பாபௌதா,"வலைப்பதிவு நடவடிக்கை தினம் ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து வெகு பரந்த அளவிலான உரையாடலை ஏற்படுத்துகின்றது...»"