இல்லம்

கடினங்கள் மிகுந்த நகரின் இளைஞர் நிகழ்ச்சி இன்றியமையா "அம்சமான – 'நம்பிக்கையை' வழங்குகின்றது.

 

போர்ட்டிச்சி, இத்தாலி - தென் இத்தாலிய நகரான போர்ட்டிச்சியில் வாழும்12 வயதான அல்பர்ட்டோ லிக்கார்டி, தெருக்களில் திரியும் தனது நண்பர்களுக்கென சில ஆலோசனைகள் வழங்குகிறார்.

 

"வீனே தெருவில் சுற்றிக்கொண்டு இருப்பதற்குப் பதிலாக, பஹாய் நிலையத்திற்கு வாருங்கள். அது உங்களுக்கு பயன்மிக்கது," என அவர் அழைப்பு விடுக்கின்றார்.

 

போர்ட்டிச்சி நகர் நேப்பல்ஸ் நகருக்குத் தென்கிழக்கில் உள்ளது. அது சுமார் 60,000 மக்களைக் கொண்ட  ஒரு நகராகும். இத்தாலியிலும் பிற இடங்களிலும் இயங்கும் இளமிளைளைஞர்களுக்கான பஹாய் திட்டம் ஒன்றுக்குத் தங்களைப் பதிந்துகொண்டுள்ள போர்ட்டிச்சி இளைஞர்களுள் அல்பர்ட்டோவும் ஒருவராவார்.

 

இத்தாலி நாட்டில் 130க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்ட இத்தகைய இளைஞர் குழுக்கள் சுமார் 25 உள்ளன. இவற்றில் பங்குபெறும் இளைஞர்களில் பெரும்பாலானோர் பஹாய் சமூகத்திற்கு வெளியே உள்ளவர்களாவர்.

 

11லிருந்து 14 வயதுடைய இளைஞர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டம் பங்கேற்பாளர்கள் தங்கள் ஆன்மீக இயல்நிலையைப் புரிந்துகொள்ளவும், தங்கள் மீதும் பிறர் மீதும் அவர்கள் ஒரு மதிப்புணர்வைப் பெறவும், தங்களைச் சுற்றியுள்ள சமூகத்திற்குச் சேவைச் செய்யவும் அவர்களுக்கு உதவும் நோக்கம் கொண்டதாகும்.

 

தாங்கள் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளக்கூடிய தெருவீதிகளில் சுற்றித் திரிவதிலிருந்து அவர்களை இவ்விளைஞர் திட்டம் பாதுகாக்கின்றது என்பது உண்மைதான், ஆனால் இத்திட்டத்தின் குறிக்கோள் அதைவிட ஆழமானதாகுமென அதன் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

 

கலந்துரையாடல்கள், சேவைத் திட்டங்கள், குறிப்பிட்ட வாசகக்குறிப்புக்களின் ஆய்வு, விளையாட்டு, இசை ஆகியவற்றின் வாயிலாக இளைஞர்கள் மனிதர்கள் எனும் முறையில் தங்களின் மேலியல்பு குறித்த அறிவைப் பெறுகின்றனர் என்கிறார் இத்திட்டத்தின் இத்தாலிய பொறுப்பாளரான அன்டொனெல்லா டெமொன்டே.

 

இதன் வாயிலாக இளைஞர்கள் எதிர்மறையான சகவயதினர் வற்புறுத்தல்களை எதிர்த்துநிற்கவும் பிறருக்கு நம்பிக்கையையும் சேவை அடிப்படையிலான ஒரு வாழ்க்கைமுறையை வழங்கிடவும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது, என அவர் மேலும் கூறினார்.

 

வேலைவாய்ப்பின்மை, குற்றச்செயல், பதின்மகர்ப்பம், மற்றும் பிற பிரச்சினைகள் இளைஞர்களிடையே நம்பிக்கையின்மையை வளர்க்கும் சூழலில் இது மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது, என்றார் அவர் "மேலும், போர்ட்டிச்சி மக்கள்தொகைமிகுந்தும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கவும் செய்கின்றது – வாழ்வதற்கு இது பெரும் சவால்கள் மிகுந்த இடமாகும்," என அவர் மேலும் தொடர்ந்தார்.

 

அல்பர்ட்டோ போன்று, அன்னா டெலுச்சாவுக்கு 12 வயதுதான், ஆனால் பெரும்பாலான தனது சகவயதுடையோரிடையே என்ன நடக்கின்றது என்பதை புரிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவராக அவர் இருக்கின்றார்.

 

"அவர்கள் மிகவும் மோசமான சூழலில் வாழ்கின்றனர்," என அவர் கூறுகின்றார். "அவர்கள் பெரும்பாலான நேரங்களில் தெருக்களில் சுற்றுகின்றனர், சண்டையிடுகின்றனர், புகைப் பிடிக்கின்றனர்... அவர்கள் வயது முதிர்ந்தவர்கள் போன்று வாழ்கின்றனர்.... 12 வயதிலேயே மற்ற நகரங்களுக்கு களியாட்டங்களுக்காக டிஸ்கோ செல்கின்றனர்."

 

அன்னா இப்பஹாய் நிகழ்ச்சியில் சென்ற வருடம் சேர்ந்தார். இப்பாடத்திட்டத்தின் இன்றியமையா இரண்டு கருப்பொருள்காளான கடமையுணர்வு மற்றும் மரியாதை குறித்து அவர் இப்போதெல்லாம் பேசுகின்றார்.

 

"இளையோர்கள் மனதில் தங்கள் செயல்கள் குறித்த பொறுப்புணர்வென்பது கிடையாது," என அவர் கூறுகின்றார். "மேலும், அவர்கள் யாரையும் மதிப்பதுமில்லை."

 

போர்ட்டிச்சியில், இத்தாலி மொழியில், 'அட்டிவிட்டா பெர் ஜியோவானிஸ்ஸிமி எனப்படும் இந்த "இளமிளைஞர் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் இம்மாதம் புதிய வகுப்பு ஆண்டை துவங்குகின்றனர் மற்றும் சென்ற வருடம் போன்று, குறைந்தது 12 இளமிளைஞர்களாவது அதில் சேருவரென எதிர்ப்பார்க்கின்றனர்.

 

மேற்கொண்டு குறிப்புக்கள்

 

வெரோனா பல்கலைக்கழக மாணிவியான 21 வயதுடைய ஐரீன் சூச்சே, போர்ட்டிச்சியில் 6 மாதகாலம் அத்திட்டத்தில் பனியாற்றியுள்ளார்.  இளைஞர்கள் தங்களின் ஆன்மீகப் பண்புகளை கலந்துரையாடல் மூலமும் தங்கள் சமூகத்திற்குச் சேவை செய்வதன் வாயிலாகவும் கற்றுக்கொள்ள உதவிடும் ஒரு திட்டமென அவர் அதைக் குறிப்பிடுகின்றார்.

 

"இத்திட்டத்தின் வாயிலாக நாங்கள் நல்ல முடிவுகளைக் காண்கின்றோம். இளையோர் சங்கோஜங்களை விடுத்துள்ளனர். அவர்கள் தாங்களும் தங்கள் வாழ்க்கையில் ஏதாவது சாதனைகள் புரிய முடியும் என நம்பிக்கைக் கொண்டுள்ளனர். அவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசும் விதத்திலிருந்து ஒருவருக்கொருவர் மரியாதையோடு பழகுவதை நாம் பார்க்கலாம்," என்றார் அவர்.

 

16 வயதுடைய சீரோ சாங்கியானோ, இத்திட்டத்தில் மூன்று வருடகாலம் ஈடுபட்டுள்ளார் மற்றும் இளம் பதின்மவயதினர் புதிய ஒழுக்கமுறைகளை மேம்படு்த்திக்கொள்ள அது உதவுகின்றது என ஒப்புக்கொள்கிறார்.

 

" நானே அறிந்திடாத, பொறுமை, பிறருக்கு உதவும் மனப்பான்மை போன்ற நற்பண்புகள் என்னுள் இருக்கின்றன என்பதை நான் கண்டுகொண்டேன்," என அவர் கூறுகின்றார்.

 

கொஞ்செட்டா ரோஸெட்டியின் 12 வயதுடைய மகளான கார்லா அப்பஹாய் நிகழ்ச்சியில் பங்குபெறுகிறார். அவரும் அவ்வாரே பெரிதும் உற்சாகத்தோடு கூறுகிறார்:

 

"என் மகள் முன்பிருந்ததைவிட இப்போது உதவிமனப்பாண்மைமிக்கவளாக இருக்கின்றாள். அவள் எப்போதும் மனதைரியம் இல்லாதவளாக இருந்துவந்தாள், ஆனால், பஹாய் நிலையத்திற்குப் போக ஆரம்பித்ததிலிருந்து அவள் பிறருடன் வெளிப்படையாகப் பழகவும், சுயநம்பிக்கை மிகுந்தவளாகவும் இருக்கின்றாள்," என்கிறார் திருமதி ரோஸெட்டி.

 

அத்திட்டத்தில் தமது மகள் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் வாழ்க்கையில் அவளுக்கு வழிகாட்டிட உதவும் என அவர் எதிர்ப்பார்க்கின்றார்.

 

"வேலை வாய்ப்புக்கள் இப்போது மிகவும் குறைவு, மற்றும் துரதிர்ஷ்டவசமாக போர்ட்டிச்சி நகர் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கென பெரும் வாய்ப்புக்களை அளித்திடவில்லை," என்கிறார் அவர்.

 

போர்ட்டிச்சி நகரின் பஹாய்களுள் ஒருவரான 32 வயதான இவானா கார்லுச்சியோ, அத்திட்டத்தை பெரிதும் ஆதரிக்கின்றார். அத்திட்டம் ஒவ்வொருக்குள்ளும் உள்ள நேர்மறையான ஆன்மீகப் பண்புகள் மற்றும் பிறருக்கு உதவும் திறனாற்றல்கள்பால் கவனம் செலுத்துவதன் வாயிலாக நம்பிக்கையின்மைக்கான காரணங்களை எதிர்கொள்கிறது.

 

இந்த இளைஞர்களுக்கு நாம் செய்யக்கூடிய பேருதவி இதுவே ஆகும் என்பதை நாம் உணர்வது இத்திட்டத்தில் நாம் சேவையாற்றுவதற்கான முக்கிய காரணமாகின்றது.

ரஃப்பாயெல் ஒலிவியெரி இத்திட்டத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு சேர்ந்தார். அதிலிருந்து தமது வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார்: "தங்கள் எதிர்காலத்திற்கான ஒளிமிகு தூநோக்கையும் அதன்வாயிலாக சமுதாயத்தை மாற்றுவதற்கான வாய்ப்பையும் இத்திட்டம் இளைஞர்களுக்கு வழங்குகின்றது என்பது என் எண்ணமாகும்," என்கிறார் அவர்.

 

இத்திட்டம் குறித்து

 

இந்த இளைஞர் குழுக்கள், குறிப்பாக, ஒவ்வொரு பங்கேற்பாளரும் கலந்தாலோசனையில் பங்குபெறுவதற்கு உதவியாக, ஆறிலிருந்து பன்னிரண்டு பேர்கள் கொண்ட சிறிய குழுக்களாக இருக்கும். போர்ட்டிச்சியில், சென்ற வருடம் சேர்ந்துகொண்ட 12 இளைஞர்களும் தங்கள் வகுப்புக்களில் இரு சிறிய குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அக்குழுக்கள் ஒவ்வொரு புதன்கிழமையும் பஹாய் நிலையத்தில் தங்கள் சந்திப்புக்களை நடத்தினர்.

 

குழுக்கள் ஒவ்வொருன்றும், பெரும்பாலும் அதன் பங்கேற்பாளர்களைவிட சில வருடங்களே மூத்திருக்கும் ஒரு பயிற்சிபெற்ற உயிர்ப்பூட்டுணரால் வழிநடத்தப்படுகின்றன. இத்திட்டத்தோடு நன்கு அறிமுகமான ஒரு பஹாய் ஆன கேரோலின் கஸ்டர், உயிர்ப்பூட்டுனருக்கும் பங்கேற்பாளர்களுக்குமிடையிலான உறவே இதற்கு ஜீவனாகும் என குறிப்பிடுகின்றார்.

 

"இளைஞர்களின் தனித்தன்மை வாய்ந்த உள்ளாற்றல்களையும் திறமையாற்றல்களையும் உயிர்ப்பூட்டுனர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அங்கு ஒரு தனிச்சிறப்புமிக்க உறவு ஏற்படுத்தப்படுகிறது," என அவர் கூறுகின்றார்.

 

"மேலும், அக்குழுக்கள் கூடும் சூழ்நிலை மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாகும். அது ஒரு பள்ளிக்கூட வகுப்பு போன்றதல்ல, ஆனால், அதே சமயம் நண்பர்கள் ஏதேச்சையாக ஒன்றுகூடுவது போன்றதும் அல்ல. கூட்டங்கள் களிப்புணர்வு மிகுந்தவையாக இருந்தபோதும் அதே சமயம் பொறுப்புணர்வு கூடியவையாகவும் இருக்கின்றன.

 

"லௌகீகம், பகுத்தறிவு, மற்றும் ஆன்மீகச் சிறப்புக்கள் யாவும் முக்கிய குறிக்கோள்களாக அறிமுகப்படுத்தப்பட்டும் இளமிளைஞர் நடவடிக்கைகளில் அவை ஒன்றிணைக்கப்பட்டுள்ள விதமும் இந்நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்புமிக்க அம்சமாகும்."

 

 நடுவில் அல்பர்ட்டோ ரிக்கார்டி - தெருவில் சுற்றுவதைக்காட்டிலும் செய்யக்கூடிய நல்ல காரியங்கள் பல உள்ளன..

 

கலந்தாலோசனைகள், சேவைத் திட்டங்கள், கலைகள், விளையாட்டுகள், ஆகியவற்றின் வாயிலாக, போர்ட்டிச்சியின் இந்த வகுப்புக்கள் தங்கள்பாலும் பிறர்பாலும் மரியாதை செலுத்தவும், எவ்வாறு சேவையாற்றுவது என்பது குறித்து கற்கின்றனர்.....

   அன்னா டெலுச்சா, வயது 12 கூறுவதாவது: போர்ட்டிச்சியின் பல இலைஞர்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழ்கின்றனர். அவர்கள் எப்போதும் தெருக்களைச் சுற்றிக்கொண்டும், புகை பிடித்தும், சண்டையிட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். பஹாய் வகுப்புக்களுக்கு செல்பவர்கள்.....

 

 ரஃபாயெல் லிக்கார்டி, வயது 14 திட்டம் குறித்துக் கூறுவதாவது:  இந்த வகுப்புக்கள் நான் என்னுள் புதிய நற்பண்புகளையும் கலையாற்றல்களையும் கண்டுகொள்ள துணைபுரிகின்றன, மற்றும் நான் இப்போது வெளிப்படையாக......

 

 11லிருந்து 14 வயதுடைய போர்ட்டிச்சி நகரின் "இளைஞர்" வகுப்பின் இளைஞர்கள், தங்களுடைய வகுப்பை சேவைத் திட்டங்களுடனும் பிற நடவடிக்கைகளுடனும் கலந்து நடத்துகின்றனர். இம்மாதம் திட்டம் ஆரம்பிக்கின்றது.....