இல்லம்

 

பஹாய்கள் மீதும், நோபல் பரிசாளர் ஷிரின் எபாடி அவர்களின் மீதும் இரான் நாட்டின் தகவல் சாதனங்கள் நடத்தும் தாக்குதல்கள் "அறிவுக்கொவ்வாத பயம் மற்றும் தப்பெண்ணங்களை" உருவாக்க முயலுகின்றன.

 

நியு யார்க் -- இரான் நாட்டு தகவல் சாதனங்களில் சிறைவைக்கப்பட்டுள்ள ஏழு முக்கிய பஹாய்களைப் பற்றியும், அவர்களுக்காக வாதாடும் நோபல் பரிசாளர் ஷிரின் எபாடி மற்றும் பிறரைப் பற்றியும் தவறான பல செய்திகள் வெளியிடப்படுகின்றன. இது பஹாய்களுக்கு சட்டப்படியான பிரதிநிதித்துவம் கிடைக்காமல் செய்வது மற்றும் அறிவுக்கொவ்வாத பயம் மற்றும் தப்பெண்ணங்களை உருவாக்கும் ஒரு முயற்சியாகும் இதுவென பஹாய் அனைத்துலக சமூகம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

 

அரசு சார்பான செய்தி வெளியீடுகளில் வெளிவரும் அறிக்கைகள் தகவல் சாதனங்களைப் பயன்படுத்தி சிறை செய்யப்பட்டுள்ள அந்த ஏழு பஹாய்கள் கீழறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் எனும் தவறான கருத்தை ஏற்படுத்தவும், அதனால் அந்த ஏழு பேருக்கும் பிரபல இரான் நாட்டு மனித உரிமை சட்ட ஆலோசகரும் நோபல் பரிசாளருமான திருமதி ஷிரின் எபாடியும் அவரின் குழுவினரும் அவர்களைப் பிரதிநிதிப்பதற்கான முயற்சியை அந்த சட்ட ஆலோசகர்களின் நற்பெயர்களை கெடுப்பதன் வாயிலாகவும் தடுக்க முயலுகின்றன. திருமதி எபாடியும் அவர்தம் குழுவினரும் அந்த ஏழு பஹாய்களுக்கு சாதகமாக வாதம் செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளனர்.

 

பஹாய் அனைத்துலக சமூகத்தின் இந்த அறிக்கை, திருமதி எபாடியின் மகள் ஒரு பஹாய், பஹாய்கள் ஜியோனிச சித்தாந்தவாதிகள், இரான் நாட்டு பஹாய்கள் இஸ்ரேலில் உள்ள தங்கள் அனைத்துலக தலைமைத்துவத்தோடு தொடர்புகொள்ளும்போது கீழறுப்புச் சதியில் ஈடுபடுகின்றனர் என்பன போன்ற குற்றச்சாட்டுகளுக்கு மறுமொழியளிக்கின்றது.

 

"இரான் நாட்டு அரசாங்கம் பஹாய்களை இழிவுபடுத்தும் எல்லாவித முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது. பிறகு, தேவைப்படும்போது தானே உருவாக்கியுள்ள அந்த தவறான கருத்துகளின் அடிப்படையில் அந்த நபர் ஒரு பஹாய் என அறிவிக்கின்றது," என அந்த அறிக்கை கூறுகின்றது. "இவ்விதமான செயல்களில் இரான் நாட்டு அரசாங்கம் ஈடுபடுவது இது முதல் முறையல்ல மற்றும் அதில் பாதிக்கப்பட்ட முதல் பெண்மனி திருமதி எபாடியும் அல்ல. ஒரு வழங்கறிஞர் எனும் முறையில் திருமதி எபாடி இதுபோன்ற பல தனிநபர்களுக்கும் பலவித பின்னனியைச் சார்ந்த பல குழுக்களுக்கும் வாதாடியுள்ளார்; ஆகவே திருமதி அவர்களின் நம்பிக்கைகளைத் தாமும் பின்பற்றுகிறார் என்பது அர்த்தமல்ல. பிறகு, அவருடைய மகள் ஒரு பஹாய் நம்பிக்கையாளர் என "குற்றஞ்சாற்றுவதன்"வாயிலாக அரசாங்கச் சார்புடைய தகவல் சாதனங்களின் உள்நோக்கம் என்னவாகத்தான் இருக்கமுடியும்?"