இல்லம்

இரான் நாட்டு பஹாய்கள் கைது - குற்றச்சாற்றுகள் குறித்து பஹாய் அனைத்துலக சமூகம் வன்மையான மறுப்பு

 

நியு யார்க் -- சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட ஏழு பஹாய்கள் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் மற்றும், அவர்கள் "இஸ்ரேல் மற்றும் பிற நாடுகளுடன் சட்டவிரோதமான உறவுகள் வைத்திருந்தனர் என ஒப்புக்கொண்டுள்ளனர் எனும் இரான் நாட்டு அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் ஒருவரின் குற்றச்சாட்டை பஹாய் அனைத்துலக சமூகம் வன்மையாக மறுத்திருக்கின்றது.

 

ஐக்கிய நாட்டிற்கான பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரதான பிரதிநிதியான பானி டுகால் அவர்கள், "இரான் நாட்டுப் பஹாய்கள் எவ்வித கீழறுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர் எனும் கருத்தை நாங்கள் மிகவும் வன்மையாக மறுக்கின்றோம்," என கூறுனார். "பஹாய் சமூகம் எவ்வித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்ல. அவர்களுடைய ஒரே குற்றம் அவர்கள் தங்கள் சமயத்தைப் பின்பற்றுவதே ஆகும்," என அவர் மேலும் கூறினார்.

 

"இத்தகைய கடுமையான குற்றச்சாட்டினால் அந்த ஏழு தனிநபர்களின் உயிர்களுக்காக நாங்கள் பெரிதும் அச்சம் கொண்டுள்ளோம்." என அவர் கூறினார்.

 

தெஹரான் நகரில் உள்ள பாதுகாப்பிற்கான இஸ்லாமிய புரட்சி நீதிமன்றத்தின் துணை அரசாங்கத் தரப்பு வழக்கறிஞரான ஹசான் ஹட்டாட்டின் செய்திப் பத்திரிக்கைகளில் வெளிவந்த அறிக்கைகள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார். இவ்வருட ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட ஏழு பஹாய்களும் இரான் நாட்டில் உள்ள 3 லட்சம் பஹாய்களுகளின் தேவைகளை கவனிக்க உதவக்கூடிய ஒரு செயற்குழுவின் உறுப்பினர்கள் ஆவர் என திருமதி பானி டுகால் தெரிவித்தார்.

 

"இது இரகசியமே அல்ல -- இக்குழுவின் அங்கத்தினர்கள் கைது செய்யப்படுவதற்கு முன்பே அரசாங்கம் இது குறித்து நன்கு அறிந்திருந்தது. இந்த நபர்கள் எவ்வித கீழறுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்பது குறித்தும் அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும்," என்றார் அவர்.

 

திருமதி டுகால், "இக் கைது நடவடிக்கைகள், கடந்த பத்தாண்டுக்காலமாக இரான் நாட்டில் உள்ள பஹாய்களை முற்றாக ஒழிப்பதற்கு தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என்றார். மற்றும் இப்போதைய குற்றச்சாற்றுடுகள் முன்பு சாற்றப்பட்ட அடிப்படையற்ற குற்றச்சாற்றுகளின் மாதிரியையே பின்பற்றுகின்றன," என்றார் அவர்.

 

"இஸ்ரேலுடன் பஹாய்கள் தொடர்பு கொண்டுள்ளனர் என்பது முழுப் பொய் மற்றும் தவறான ஒரு தோற்றத்தையும் இது ஏற்படுத்துகிறது. வட இஸ்ரேலில் நிறுவப்பட்டுள்ள பஹாய் உலக நிர்வாக மையத்தைக் குறித்து இவர்கள் இத்தகைய தவறான கருத்துக்களை ஏற்படுத்த முயலுகின்றனர்," என்றார் அவர்.

 

"பஹாய் சமயம் 1853 வரை இரான் நாட்டையே மையமாகக் கொண்டிருந்தது. அப்போது இருந்த அரசாங்கம் பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லாவை வலுக்கட்டாயமாக நாடுகடத்தினர். பிறகு அவர் துருக்கி ஒட்டமான் அரசின் மத்திய தரைக் கடற்கரையிலுள்ள ஆக்கோ நகரில் சிறைவைக்கப்பட்டார். அந்த இடம் இப்போது இஸ்ரேல் நாடாகியுள்ளது எனும் சரித்திரக் குறிப்பை இரான் நாட்டு அரசாங்கம் முற்றாக கருத்தில் கொள்ளவில்லை.

 

இரான் நாட்டிலுள்ள பல பஹாய்கள், ஒருங்கிணைப்புக் குழுவில் கைது செய்யப்படுவதற்கு முன் இருந்தவர்கள் உட்பட, அடிக்கடி அவர்களின் நடவடிக்கைகள் குறித்த விசாரனைக்காக தடுத்து வைக்கப்படுகின்றனர். மறைப்பதற்கு ஒன்றுமில்லாத நிலையில் பஹாய்கள் விசானைகளின்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு உண்மையாக பதிலளிக்கின்றனர் என திருமதி டுகால் தெரிவித்தார்.