இல்லம்

 

பஹாய் நினைவாலயங்கள் உலக மரபுடைமைத் தலங்களாகத் தேர்வு

 

 

குவெபெக் நகரம் -- இந்த நகரத்தில் கூடிய ஐக்கிய நாட்டு செயற்குழு ஒன்று இஸ்ரேலில் உள்ள இரு பஹாய் நிறைவாலயங்கள் "தனிச்சிறப்புமிக்க சர்வதேச மதிப்பினைப்" பெற்றிருப்பதால் மனிதகுலத்தின் கலாச்சார மரபுடைமைகளின் ஒரு பகுதியாக கருதப்பட வேண்டும் எனத் தீர்மானித்துள்ளது.

 

யுனெஸ்கோவின் உலக மரபுடைமை செயற்குழுவின் இந்தத் தீர்மானத்தினால் பஹாய்களின் இரு அதி முக்கிய இடங்களான - தங்கள் சமயத்தின் ஸ்தாபகர்களின் நினைவாலயங்கள் - சீனப் பெருஞ் சுவர், பிரமிட்கள், தாஜ் மஹால், மற்றும் ஸ்டோன்ஹெஞ் போன்ற அனைத்துலக ரீதியில் முக்கியமானவை என அடையாளங்காணப்பட்டுள்ள இடங்களின் வரிசையில் இடம் பெருகின்றன.

இந்த உலக மரபுடைமை வரிசையில் உலகளாவிய சமய முக்கியத்துவம் பெற்ற இடங்களான வட்டிக்கன், ஜெருசல நகரின் பழைய பகுதி, ஆஃப்கானிஸ்தானில் உள்ள, சமீபத்தில் வெடி வைக்கப்பட்ட பாமியன் புத்த சிலைகளும் இடம் பெற்றுள்ளன.

 

ஐக்கிய நாட்டின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோவினால் பராமரிக்கப்பட்டுவரும் இந்தப் பட்டியலில், இந்த நவீன காலத்தில் உதித்த சமயமரபுத் தொடர்புள்ள முதல் இரு தலங்களாகும்.

இஸ்ரேலின் வடகறையிலுள்ள பழைய ஆக்கோவுக்கு அருகிலும், ஹைஃபாவிலுள்ள கார்மல் மலையிலும் உள்ள இவ்விரு நினைவாலயங்களும், பஹாவுல்லா, பாப் ஆகியோர்களான பஹாய் சமய ஸ்தாபகர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடங்களாகும்.

 

பஹாவுல்லா, பாப் ஆகிய இருவரும் கடவுளின் அவதாரபுருஷர்கள் என்பது பஹாய்களின் நம்பிக்கை; அவர்களின் புனிதக்கல்லறைகள் சுமார் 50 லட்ச விசுவாசிகளைக் கொண்ட ஒரு சமயசமூகத்தினரின் புனித யாத்திரைக்கான தலங்களாகும். பஹாவுல்லாவின் நினைவாலயம் உலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் தங்கள் பிரார்த்தனையின்போது முகம் திருப்ப வேண்டிய மையமாகும், மற்றும் ஜெருசலத்தில் உள்ள யூதர்களின் மேற்குக்சுவர், மெக்காவிலுள்ள இஸ்லாமியர்களின் காபா போன்றவற்றிற்கு இணையான ஒரு முக்கியத்துவத்துவத்தை இது வழங்குகிறது.

 

பஹாவுல்லா இரானில் பிறந்து, அன்று ஒட்டமான் சாம்ராஜ்யத்தில் இருந்த ஆக்கோவுக்கு நாடுகடத்தப்பட்டு, 1892ல் அங்கு விண்ணேற்றமடைந்தார். பாப் அவர்கள் 1850ல் மரணதண்டனைக்குள்ளாகி, அவரது உடல் பின்னாளில் ஹைஃபாவுக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

 

இவ்விரு நினைவாலயங்களும் அவற்றைச் சுற்றியுள்ள தோட்டங்களின் காரணத்தினால் தனிச்சிறப்பு பெற்றுள்ளன. அப்பூந்தோட்டங்கள் பல கலாச்சாரங்களின் வடிவக்கூறுகளை உள்ளடக்கியுள்ளன. பஹாய் புனித யாத்ரீகர்கள் உட்பட அத்தோட்டங்களுக்குப் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களும் சுற்றுப்பயணிகளும் வருடந்தோரும் வருகை புரிகின்றனர்.

 

"சுமார் 150 வருடங்களில் மத்திய கிழக்கில் மட்டுமே காணப்பட்ட ஒரு சிறிய சமூகமாக இருந்து இன்று உலகளாவிய நிலையில்  கிட்டத்தட்ட உலகின் ஒவ்வொரு நாட்டிலும் விசுவாசிகளைக் கொண்டுள்ள ஓர் உலக சமூகமாக ளர்ந்துவிட்ட இச்சமூகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் யுனெஸ்கோவின் இந்த அங்கீகாரத்தை நாங்கள் வரவேற்கின்றோம்," என பஹாய் அனைத்துலக சமூகத்தின் பொதுச் செயலாளரான திரு அல்பர்ட் லிங்கன் கூறினார்.

 

"இதற்கான நியமனத்தை முன்னுரைத்த இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு நாங்கள் பெரிதும் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம்," என அவர் மேலும் கூறினார்.

 

உலக மரபுடைமைப் பட்டியல் 1972ல் யுனெஸ்கோவினால், "கலாச்சார மற்றும் இயற்கை சார்ந்த தனிச்சிறந்த அனைத்துலக மதிப்புடைய மரபுடைமைகளை" அடையாளங்காணவும், பாதுகாக்கவும் மற்றும் பராமரிக்கவும் நிறுவப்பட்டது. இதுவரை, 184 நாடுகள் இந்த உலக மரபுடைமை உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. இந்த உடன்படிக்கை இந்தப் பட்டியலுக்குத் தேர்வுறுவதற்கான பொதுவான அளவுமுறைகளை வரையறுக்கின்றது, மற்றும் இதுவரை கிழக்கு ஆப்பிரிக்காவுள்ள செரங்கெட்டி மற்றும் ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப்பை உள்ளடக்கிய 850க்கும் அதிகமான இடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ள.

 

உலக மரபுடைமை செயற்குழு உலக மரபுடைமை உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ள 21 நாடுகளை உள்ளடக்கியுள்ளது. இக் குழு அதன் குழுத்தலைவரின் நாட்டில் ஆண்டுதோரும் ஒன்றுகூடுகிறது. இவ்வருடத் தலைவராக கனடா நாட்டின் டாக். கிருஸ்டினா கேமரனாவார் மற்றும், தானே உலக மரபுடைமை தலங்களில் ஒன்றான குவெபெக்கில் கூடிய கூட்டம், அந்த நகரத்தின் 400வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தோடு ஒன்றுசேர்ந்திருந்தது.