இல்லம்

headimageஇஸ்ஸாட் அன்சாரி பயிலரங்கு ஒன்றின் போது பங்கேற்பாளர்களை நோக்கி தமது கைகளை ஆட்டுகின்றார்

பெங்களூர் வட்டார மாநாடு

15 – 16 நவம்பர் 2008

 

indiamap
ஐந்தாண்டு திட்டத்தின் சாதனைகளைக் கொண்டாடவும் அதன் தேவைகளைக் கருத்தில் கொள்ளவும் நான்கு வாரங்களுக்கு முன் உலக நீதி மன்றத்தால் ஆணையிடப்பட்ட 41 மாநாடுகளில் ஒன்றான 15-16 நவம்பர் பெங்களூர் வட்டார மாநாட்டில் 1,500க்கும் அதிகமான நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இம்மாநாட்டிற்கு இந்தியா முழுவதிலிமிருந்து பங்கேற்பாளர்கள் வந்திருந்தனர். அவர்களுள், கர்னாடகம், மஹாராஷ்ட்ரம், மற்றும் தமிழ்நாட்டிலிருந்து தலா 250 பேர்களுக்கும் அதிகமானோரும், கேரளத்திலிருந்து 170 பேர்கள், ஆந்திரப்பிரதேசத்திலிருந்து 70 பேர்களும் பங்கேற்றனர். பிற தேசிய சமூகங்களிலிருந்தும் பலர் வந்திருந்தனர். அவற்றுள் அந்தமான் தீவிலிருந்து 50 பஹாய்கள், ஸ்ரீ லங்காவிலிருந்து 21பேர்களும் அடங்குவர்.

 

மாநாடு நகர மையத்தில் நடத்தப்பட்டது. மாநாட்டு மண்டபம் 900பேர்கள் உட்காரும் வசதி கொண்டது. ஆனால், எதிர்ப்பார்க்கப்பட்ட பங்கேற்பாளர்கள் இரட்டிப்பாக வந்திருந்ததாலும் அதனால் இடம் போதாமையாலும் மண்டபத்தைச் சுற்றியிருந்த அறைகளும் மாநாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டன.

 

மாநாடுகளில் கலந்துகொள்ளுமாறு உலக நீதி மன்றத்தின் அழைப்பைக் கண்டவுடன் தாங்கள் அடைந்த சிலிர்ப்புணர்வு குறித்து பேசினர். "உலக நீதி மன்றம் உலகம் முழுவதும் மாநாட்டுத் தொடர் ஒன்றை ஏற்பாடு செய்து வருகின்றனர் எனக் கேள்விப்பட்டவுடன் அதை அருள்பேரழகரின் அழைப்பாகவே நான் கருதினேன்," என ஆந்திரப் பிரதேசத்தின் வசந்தி கோபிநாத் கூறினார். "உலக நீதி மன்றத்தின் அழைப்புக்கு செவிசாய்த்துள்ள ஒவ்வொரு சமயநம்பிக்கையாளரின் பக்தியை நான் பெரிதும் வியந்து பாராட்டுகிறேன்," என கார்நாடகத்தின் கெங்கேரி கிலஸ்டரைச் சார்ந்த மாலா மல்லிகார்ஜுன் கூறினார்.

 

அனைத்துலக போதனை நிலையத்தின் இரு உறுப்பினர்களான உரன்சைக்கான் பாத்தார் மற்றும் டாக். அய்மான் ரோஹானியும் உலக நீதி மன்றத்தைப் பிரதிநித்தினர். இந்திய தேசிய ஆன்மீகச் சபையின் உற்சாகமான வரவேற்பிற்குப் பிறகும் பங்கேற்பாளர்களுக்கு உலக நீதி மன்றத்தின் செய்தி வாசிக்கப்பட்ட பிறகும், தனிநபர்களும் ஸ்தாபனங்களும் ரித்வான் 2009க்குள் வளர்ச்சிக்கான 36 தீவிரத் திட்ட வட்டாரங்களுக்கான இலக்குகளை விவரித்தனர். ஆறு மொழிகளில் மொழியாக்கம் நடந்த முதல் நாளன்று, ஒவ்வொரு வட்டாரம் மற்றும் நாடுகளிலிருந்தும் அடையப்பட்ட சாதனைகள் அறிவிக்கப்பட்டன, பிறகு உலக நீதி மன்றத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற சமீப செய்திகள் கவனத்துடன் படிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

-----------------------------------------------------------------------------------------------------------------------
“கடந்த ஏழு ஆண்டுகளாக சமூகம் பெரும் வளர்ச்சி கண்டுவந்துள்ளது. உண்மையிலேயே கிராமப்புறங்களிலிருந்து வந்து மேடை மீது நின்று பங்கேற்பாளர்கள் முன் பேசும் மக்களைக் காணும்போது எனக்கு பெரும் ஆச்சரியமாக இருக்கின்றது."

பார்கவா - ஆந்திர பிரதேசத்தின் ஹைதராபாத் கிலஸ்டர்

------------------------------------------------------------------------------------------------------------------------

"உற்சாக உணர்வுகள் மிகுந்திருந்தன. இங்கு வருகைதந்தோரில் பெரும்பாலோர் அடிமட்ட மக்களாவர். சவால்கள் மிகுந்த ஏற்பாடுகளாயினும், அனைவருமே மகிழ்ச்சியாக இருந்தனர்," என ஒரு பங்கேற்பாளர் கூறினார்.

 

மதிய வேளை நிகழ்ச்சியின் போது, ஐந்தாண்டு திட்டத்தின் மைய உட்கருத்துக்கள் பற்றியும் அத்திட்டம் குறித்த தங்கள் அனுபங்கள் மற்றும் திட்டம் பற்றிய தங்கள் அனுபவங்களையும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர். பயிற்சிப்பாடங்களின் தன்மைமாற்ற ஆற்றலை அனுபவித்த தனிநபர்கள் பலர், சேவைகள் புரிந்திடவும் உள்ளூர் முன்னோடிகளாக முன்னெழுவதற்கும் கூட தாங்கள் உந்தப்பட்டுள்ளதைப் பகிர்ந்துகொண்டனர். வாய்ப்புகள் மிகுந்த ஒரு கிலஸ்டருக்கு சமீபத்தில் இடம் பெயர்ந்து சென்ற ஓர் இளைஞர் தாம் எவ்வாறு ஆறு மாத காலத்திற்குள் வளர்ச்சிக்கான தீவிர திட்டங்களை அமுல் படுத்திட உதவியது குறித்த தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். தமிழ் நாட்டின் குழந்தைகள் வகுப்பு ஆசிரியர் ஒருவர் ஒரே கிலஸ்டரைச் சார்ந்த 100 வகுப்புக்களை நிர்வகித்ததன் பலனான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

 

முதல் நாள் மாலையின்போது மாநாட்டு மண்டபம், இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களைச் சார்ந்த அன்பர்களால் படைக்கப்பட்ட நாடகம், இசை, பாடல் மற்றும் ஆடல்களால் நிறைந்திருந்தது.

 

“மாநாட்டுக்கு முன் இப் பஹாய் சமூகம் குறித்து எவ்வித தகவலும் கிடைப்பதில்லையே என நான் வருந்தியதுண்டு. இச்சமூகம் நலிந்து வருகிறது என நான் நினைத்தேன். ஆனால் இந்த மாநாடு என் எண்ணத்தை மாற்றியமைத்துவிட்டது. கடந்த ஏழு ஆண்டுகாலமாக இச்சமூகம் வளர்ந்து வந்துள்ளது. கிராமபுரங்களிலிருந்து வந்த பஹாய்கள் மேடை மீது நின்று பேசுவதைக் கேட்கும்போது எனக்கே வியப்பாக இருக்கின்றது," என்றார் ஹைதராபாத் நகரைச் சார்ந்த பார்கவா.

------------------------------------------------------------------------------------------------------------------------
”ஒவ்வொரு பஹாய் நம்பிக்கையாளரும் இப்படி முன்னெழுந்துள்ளதை நம்பவே முடியவில்லை. எனது 30 பஹாய் வாழ்வில், முதன் முறையாக இத்தகைய பெரிய கூட்டத்தில் முழு அன்பும் உற்சாகவுணர்வும் பங்கேற்பாளர்களிடையே மிகுந்திருப்பதை காண்கின்றேன்."

சுதா பாராசா - ஹைதராபாத் கிலஸ்டர்

------------------------------------------------------------------------------------------------------------------------

இரண்டாவது நாள் காலையில், கண்கவரும் நடனம் ஒன்றிற்குப் பிறகு நடைபெற்ற வழிபாட்டு நிகழ்ச்சிக்குப் பிறகு கண்ட ஆலோசகர் திரு லத்தீஃப் ரஷிட் கதைகள் மற்றும் உற்சாகமூட்டும் திருவாசகக்குறிப்புகள் நிறைந்த அதே சமயம் குறிப்பிட்ட ஆலோசனைகளும் நிறைந்த ஒரு சொற்பொழிவை ஆற்றினார். அவர் தனிநபர்களை நோக்கி கிலஸ்டர்கள் வளர்ச்சித் திட்டங்களை நிறுவதற்கு உதவுவதில் தங்கள் பங்கினை ஆற்றும்படி வேண்டுகோள் விடுத்தார். அவர் இப்போது நடப்பதையும் பத்தாண்டு திட்டத்தின் போது நடந்ததையும் ஒப்பிட்டு பேசினார். நாம் அதே போன்ற நிலைமாற்றம் பெறவேண்டும் என்றார். அச்சவால் பங்கேற்பாளர்கள் தங்கள் பயிலரங்குக் குழுக்களில் தீவிரமாகவும் கவனக்குவிப்புடனும் பங்குபெற தயார் செய்தது. முதல் நாள் இரவு நடந்த கலாச்சார நிகழ்வின் போது எல்லா படைப்புக்களும் இடம் பெற முடியாமல் போனதால், நிகழ்ச்சி இடைவெளி ஒவ்வொன்றின்போதும் ஆன்மக்கிளர்ச்சியை உண்டுபண்ணும் பாடல்கள் உற்சாக உண்ர்வை தூண்டிவிட உதவியது.

 

மாநாட்டு முடிவின்போது அவ்வட்டாரத்தில் வாழும் நண்பர்கள் ரித்வான் 2009 அல்லது அதற்கு பிறகு விரைவில் 38 வளர்ச்சிக்கான தீவிர திட்டங்களை செயல்படுத்தும் திட்டம் ஒன்றை முடிவு செய்தனர். மாநாட்டு பங்கேற்பாளர்களில் 150பேர்கள் அடையாளம் காணப்பட்ட கிலஸ்டர்களில் நடமாடும் பயிற்றுனர்களாகவும் பயண போதகர்களாகவும் சேவை செய்வதன் வாயிலாக உதவிடவும், மேலும் அந்த ஐந்து வட்டாரங்களையும் சார்ந்த, புதிதாக திருமணமான ஒரு ஜோடியையும் சேர்த்து 12 பேர்கள், உள்ளூர் முன்னோடிகளாகவும் முன்னெழுந்தனர்.

 

மாநாட்டு முடிவில், திருமதி கோபிநாத், "நான் இந்த மாநாட்டினால் பெரிதும் உற்சாக உணர்வை அடைந்துள்ளேன், மற்றும் விசாகப்பட்டின கிலஸ்டரான என் கிலஸ்டரின் பஹாய்கள் ரித்வான் 2009க்குள் அக்கிலஸ்டரை "A" கிலஸ்டராக உயர்த்திடுவது மட்டுமல்லாமல், அக்கம் பக்கத்திலிலுள்ள கிலஸ்டர்களுக்கு அவற்றின் வளர்ச்சி முயல்வுகளுக்கு உதவிடுவதாகவும் உறுதிபூண்டுள்ளனர்," என தெரிவித்தார்.

"ஒவ்வொரு நம்பிக்கையாளரிடமிருந்தும் இத்தகைய மகத்தான பதில்செயலாகப்பட்டது வியப்பாகவும் நம்பமுடியாமலும் இருக்கின்றது. எனது 30 ஆண்டுகால பஹாய் வாழ்க்கையில், இவ்வளவு பெரிய நிகழ்வின் பங்கேற்பாளர்களுள் முழுமையான அன்பும் உற்சாகமும் நிலவுவதை இப்போதுதான் முதன் முறையாக காண்கிறேன்," என்றார் ஹைதராபாத் கிலஸ்டரைச் சார்ந்த திருமதி சுதா பாராசா.

 (கண்ட ஆலோசகர்கள் மற்றும் பங்கேற்பாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகளிலிருந்து வழங்கப்பட்டது)

 

பங்கேற்பாளர்களின் கருத்துக்கள்

 

bangalore2

திருமதி கலா பாஸ்கரன், ஹைதராபாத் கிலஸ்டர், ஆந்திர மாநில பஹாய் வாரிய உறுப்பினர்: "அடிமட்ட நண்பர்களின் இவ்வளவு பெரிய ஒன்றுகூடலைக் காண்பதில் நான் பெரிதும் கிளர்ச்சியுறுகிறேன். அவர்களின் அனுபவங்களால் நான் உற்சாகம் பெற்றுள்ளேன். சமயச் சேவையின்பால் ஒரு கடமையுணர்வை உருவாக்கிட இந்த மாநாடு எனக்கு உதவியுள்ளது."

 

bangalore3பஞ்ச்கானி, நியூ ஈரா ஆசிரியர் பயிற்சி மையத்தின் மாணவி ஒருவர்: "நான் கிராமங்களுக்கு போதனை விஜயங்கள் மேற்கொள்ளும்போது பஹாய் செய்திக்கு எவரும் செவிசாய்க்கவில்லையெனில் நான் நம்பிக்கையிழந்துவிடுவேன். ஆனால் இந்த மாநாடு எனக்கு நம்பிக்கையையும் மனவுறுதியையும் வழங்கியுள்ளது, நான் தன்மைமாற்ற உணர்வை அடைந்துள்ளேன். என் வாழ்க்கை இதுவரை இருந்தது போல் இனி இருக்காது."

 

bangalore4"வசந்த், கெங்கேரி கிலஸ்டர், கர்நாடகம்: "இன்று பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் சமுதாயத்தின்பால் பஹாய் நடவடிக்கைகளின் வளர்ச்சியும் திட்டங்களின் வெற்றியும் எவ்வாறு விளைவுகள் உண்டாக்குகின்றன என்பதன் அறிவு எனக்கு பெரும் வெளிப்பாடாகும்."

 

bangalore5நிரோஷினி சாலே, கொழும்பு, ஸ்ரீ லங்கா: “ஏழு முன்னுரிமை பெற்ற கிலஸ்டர்களிலிருந்து 21 நண்பர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். பலவகை கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் சமயப் பின்னனியைச் சார்ந்த அன்பர்கள் இங்கு ஐக்கியத்துடன் ஒன்றுகூடியிருப்பது பெரும் வியப்பாக இருக்கின்றது. ஒன்றாக உலக நீதி மன்றத்தின் செய்தியை ஒன்றாகப் படிப்பது மிகவும் ஊட்டமளிக்கும் அனுபவமாகும்.

 

bangalore6மிட்ரா நயிமி, மும்பை, மஹாராஷ்டிரம்: ”இம்மாநாட்டை ஏற்பாடு செய்தமைக்காக உலக நீதி மன்றத்திற்கு நான் நன்றி செலுத்துகின்றேன். ஐந்தாண்டு திட்டத்தின் வெற்றிக்கு எனது பங்கு குறித்து நான் இப்போது விழிப்புணர்வு பெற்றுள்ளேன்

 

 

bangalore7சரவணன், கண்ணூர் கிலஸ்டர், கேரளம்: ”திட்டம் குறித்த ஆழமான புரிந்துகொள்ளலை நான் இப்போது அடைந்துள்ளேன். இது குறித்த என் அறிவை விசாலமாக்கிய உலக மையத்தின் இரு ஆலோசகர்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்."

 

bangalore8”கண்ணூர் கிலஸ்டர், கேராளா சார்ந்த ஒரு பஹாய்: நான் ஒரு "A" கிலஸ்டரிலிருந்து வருகிறேன். ரித்வான் 2009க்குள் அத்தகுதியை அடைய வேண்டிய கிலஸ்டர்களில் சேவை செய்திட எனக்கு இது உதவியாக இருக்கும். இம்மாநாட்டின் வாயிலாக நான் நிறைய மன உறுதியை அடைந்துள்ளேன்."

 

 

bangalore9மாலா மல்லிகார்ஜுன், கெங்கேரி கிலஸ்டர், கர்நாடகம்: “இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு. இங்கு நண்பர்களிடையே நிறைந்த களிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஒற்றுமையையும் காண்கிறேன். பங்கேற்பாளர்கள் பல தாய்மொழிகள் பேசுகின்றனர். வெவ்வேறு பயில்மனைகளில் வேவ்வேறு மொழிகள் பேசப்பட்டன. பிரதான ஒன்றுகூடல்களின் போது ஆறு மொழிகளில் அந்த நிகழ்ச்சி மொழிபெயர்க்கப்பட்டது”.
Download image

  bangalore10
ஒரு மாலை நிகழ்வின் போது, பங்கேற்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட கிலஸ்டருக்கான திட்டங்களைத் தீட்டுகின்றனர்.
Download image

  bangalore11
சனிக்கிழமை மாலை, பயிற்சி செயற்பாட்டின் வாயிலாக தாங்கள் அனுபவித்த தன்மைமாற்றம் குறித்து பங்கேற்பாளர்கள் பகிர்ந்துகொள்கின்றனர்.
Download image

  bangalore12
சில வாரங்கள் மட்டுமே இருந்து, 1,500 மாநாட்டு பங்கேற்பாளர்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டிய சவால்மிக்க சூழ்நிலை ஏற்பட்டாலும், களிப்புணர்வுகள் மிகுந்தே இருந்தன.
Download image

  bangalore13
மாநாட்டு மண்டபம் நிறைந்துவிட்டதால் மண்டபத்தைச் சுற்றியிருந்த அறைகளும் பயன்படுத்த வேண்டியதாயிற்று.
Download image

  bangalore14
ரித்வான் 38க்குள் வளர்ச்சிக்கான தீவிர திட்டங்களை அமுல்படுத்துவதாக மாநாட்டில் கூடியிருந்த பஹாய்கள் வாக்குறுதியளித்தனர்.
Download image

  bangalore15
41 மாநாடுகளில் நடந்த முதல் 6 மாநாடுகளில் பெங்களூர் மாநாடே பங்கேற்பில் அதிகமானதாகும்.
Download image

  bangalore16
இந்தியாவிற்கென விதிக்கப்பட்ட மூன்று மாநாடுகளில் பெங்களூர் மாநாடே முதலாவதாகும். அதற்கடுத்த வார இறுதிகளில் புது டில்லி மற்றும் கோல்கத்தாவில் மாநாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
Download image

  bangalore17
கண்ணூர் கிலஸ்டர் பஹாய்கள் திட்டங்கள் தீட்டியும் அடைந்துள்ள மேம்பாட்டை எடைபோடவும் செய்கின்றனர்.
Download image

  bangalore18
தென்னிந்தியா முழுவதிலிருமிருந்தும் இளைஞர்கள் மாநாட்டிற்கு வந்திருந்தனர். ஸ்ரீ லங்காவிலிருந்தும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்
Download image

  bangalore19
இந்தப் பயில்மனை விஷாகப்பட்டின கிலஸ்டர் பஹாய்களை உள்ளடக்கியிருந்தது.
Download image

  bangalore20
திரு திருமதி லோகந்தவாலா தம்பதியினர் தென்னிந்திய பாரம்பரிய உணவை களிப்போடு உண்கின்றனர்.
Download image

  bangalore21
நீல உடையில் உள்ள திருமதி உரன்சாய்க்கான் பாத்தர், டாக். அய்மான் ருஹானியுடன் கலந்தாலோசிக்கின்றார். அவர்கள் இருவரும் உலக நீதி மன்றத்தின் பிரதிநிதிகளாக மாநாட்டில் கலந்துகொண்டனர்.
Download image

  bangalore22

திருமதி ரக்ஷனா ராவ் தமது இரு குழந்தைகளுடன் சற்று ஓய்வு பெறுகிறார்.

Download image

 

 

 

அனைத்து மாநாடுகளும்