இல்லம்
“நாங்கள் வெட்கப்படுகின்றோம்!”

 

நடைமுறைக்கு மாறாக, உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஈரானிய ஆர்வலர்கள் அடங்கிய குழு இரான் நாட்டு பஹாய்கள் அனுபவித்து வந்துள்ள கொடுமைகள்பால் ஒன்றரை நூற்றாண்டுகளாக தாங்கள் மௌனமாக இருந்துவந்துள்ளதற்காக மன்னிப்புக்கோரும் திறந்த மடல் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.

 

நல்லவை, அழகு ஆகியவற்றின் பெயராலும் மனிதகுலம், சுதந்திரம் ஆகியவற்றின் பெயராலும்!

 

இரான் நாட்டினர் எனும் முறையில், கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளாக அந்நாட்டு பஹாய்கள் மீது சுமத்தப்பட்டு வந்துள்ள கொடுங்கோன்மைகளுக்காக நாங்கள் வெட்கப்படுகின்றோம்.

 

அனைத்துலக மனித உரிமை பிரகடணத்தில் பதிக்கப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள், “இனம், நிறம், பால், மொழி, சமயம், அரசியல் அல்லது பிற கருத்துக்கள்,” மற்றும் இனப்பிரிவு, சமூகப் பின்னனி, சொத்துக்கள், பிறப்பு அல்லது பிற ஸ்தானத்தைக் கருத்தில் கொள்ளாமல், எவ்வித பாகுபாடுமின்றி எல்லா இரான் நாட்டினருக்கும் உரித்தாகும் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். ஆனால், பஹாய் சமயத்தின் தோற்றத்திலிருந்து, இந்த நாட்டில் அதன் விசுவாசிகளுக்கு அவர்களின் சமய நம்பிக்கைகளை மட்டுமே காரணம் காட்டி மனித உரிமைகளின் பல அம்சங்கள் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன.

 

சரித்திர குறிப்புக்கள் மற்றும் ஆதாரங்களிலிருந்து, பாப்யி சமயத்தின் ஆரம்பத்திலிருந்து பஹாய் சமயத்தின் தோற்றம் வரை, ஆயிரக்கணக்கான நமது நாட்டினர் தங்கள் சமய நம்பிக்கையின் காரணமாக தப்பான அபிப்பிராயம் மற்றும் மூட நம்பிக்கையெனும் வாளுக்கு இரையாகியுள்ளனர். இந்த சமயத்தின் முதல் சில பத்தாண்டுகளின் போது அதன் ஆதரவாளர்களில் இருபதாயிரம் பேர்களுக்கும் மேல் இரான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.

 

அவ்வாறு நிகழ்ந்த காலங்களில் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான கொலைகளுக்கு எதிராக எவருமே குரலெழுப்பவில்லை என்பது குறித்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்;

 

இதுநாள் வரை இக்கொடூரமான குற்றங்களுக்கு எதிரான கண்டன குரல்கள் வெகு சிலவே என்பது குறித்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்;

 

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பஹாய் சமயத்தின் உருவாக்கக் காலத்தில் அது அனுபவித்த கொடும் அடக்குமுறை போக, கடந்த இருபதாம் நூற்றாண்டிலும் அவ்வப்போது நமது நாட்டின் இப்பிரிவினர் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர். அப்போது அவர்கள் தங்கள் இல்லங்களை இழந்தும் தங்கள் தொழில்மையங்கள் தீக்கிரையாக்கப்பட்டும், அவர்களின் உயிர், சொத்துக்கள் மற்றும் குடும்பங்களும் கொடுமையான துன்பங்களுக்குள்ளாக்கப்பட்டனர் – ஆனால் அக்காலங்களில் இரான் நாட்டின் பகுத்தறிவாளர் சமூகம் மௌனமாக இருந்த்தற்காக நாங்கள் வெட்கப்படுகின்றோம்.

 

கடந்த முப்பது ஆண்டுகளாக, பஹாய்களை அவர்களின் சமய நம்பிக்கையின் அடிப்படையில் கொல்வது சட்டபூர்வமாக்கப்பட்டு சுமார் 200க்கும் அதிகமான பஹாய்கள் இதுவரை கொல்லப்பட்டும் உள்ளனர் என்பது குறித்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்;

 

இரான் நாட்டின் பஹாய் சமூகத்தின் மீதான இத்தகைய கொடுங்கோன்மைகளை பகுத்தறிவாளர் குழுமம் ஒன்று நியாயப்படுத்தியிருப்பது கண்டு நாங்கள் வெட்கப்படுகின்றோம்;

 

பல பத்தாண்டுகாலங்கள் இரான் நாட்டிற்கு சேவை செய்த பஹாய்களின் ஓய்வூதியம் அபகரிக்கப்பட்டிருப்பது கண்டு நாங்கள் வெட்கப்படுகின்றோம்;

 

தங்களின் சமயத்தின்பால் அவர்கள் கொண்டிருந்த விசுவாசத்தின் காரணமாகவும் அவ்வித நம்பிக்கையை அவர்கள் மறைக்காமல் வெளிப்படுத்தியதற்காகவும், பல்கலைகழகங்கள், பல உயர்கல்விநிலையங்கள் ஆகியவற்றுக்கு ஆயிரக்கணக்கான பஹாய் இளைஞர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறித்து நாங்கள் மௌனம் சாதித்ததற்காக நாங்கள் வெட்கப்படுகின்றோம்;

 

பஹாய் குழந்தைகளின் பெற்றோர்களின் சமய நம்பிக்கையை காரணம் காட்டி, பள்ளிகளில் அக்குழந்தைகள் அவமானப்படுத்தப்படுவது குறித்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்.

 

பஹாய்கள் சீராக துன்புறுத்தப்பட்டும் தவறாக பொய்க்குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டும், பல பஹாய்கள் தங்கள் சமய நம்பிக்கைக்காக சிறைப்படுத்தப்பட்டும், அவர்களின் இல்லங்களும் தொழில்மையங்களும் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டும், அவ்வப்போது அவர்களின் இடுகாடுகள் சிதைக்கப்படுவதன்பால் நாங்கள் மௌனம் சாதித்ததற்காக நாங்கள் வெட்கப்படுகின்றோம்;

 

நமது நாட்டின் இப்பிரிவினரின்பால் அதிகாரபூர்வ மற்றும் பிற அரசாங்க சாதனங்கள் வெளிப்படுத்திய அநீதி மற்றும் நிந்தனைகளின் நீண்டதும் கொடுமைமிகுந்த்துமான நிலையில் நமது சட்டங்களும் நீதிமுறைகளும் அவர்களை ஒதுக்கிவைத்தும் அவர்களின் உரிமைகளைப் பரித்ததும் கண்டு நாங்கள் வெட்கப்படுகின்றோம்.

 

இந்த அத்துமீரல்களுக்காகவும் அநீதிகளுக்காகவும் நாங்கள் வெட்கப்படுகின்றோம், மற்றும் இச்செய்கைகள் குறித்த எங்களின் மௌனத்திற்காகவும் நாங்கள் வெட்கப்படுகின்றோம்.

 

கீழே கையொப்பமிட்டுள்ளவர்களாகிய நாங்கள், இரான் நாட்டின் பஹாய் சமூகத்திற்கெதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக பஹாய்களாகிய உங்களிடமிருந்து மன்னிப்பு கோருகின்றோம்.

 

இனிமேலும் உங்கள்பால் இத்தகைய அநீதிகள் இழைக்கப்படும்போது நாங்கள் மௌனமாக இருக்கப்போவதில்லை.

 

அனைத்துலக மனித உரிமைகள் பிரகடணத்தில் பதிக்கப்பட்டுள்ள எல்லா உரிமைகளையும் நீங்கள் பெற்றிட நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

 

வெறுப்பையும் அறியாமையையும் அன்பாகவும் சகிப்புத்தன்மையாகவும் மாற்றிடுவோம்.

 

பிப்ரவரி 3, 2009

https://www.bic.org/news/bahais-express-gratitude-open-letter-support-0

 

(கையொப்பங்கள்)

இரான் நாட்டில் பஹாய் இடுகாடுகள் திட்டமிடப்பட்டு அழிக்கப்படுகின்றன...

 

cemetry1

 

cemetry2

 

cemetry3

 

cemetry4