பஹாவுல்லாவின் எழுத்தோவியங்கள்

 

இல்லம்

 

கித்தாப்-இ-அக்டாஸ்

 

பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா அவர்களால் எழுதப்பட்ட கித்தாப்-இ-அக்டாஸ் திருநூல் பஹாய் சமயத்தின் மைய நூலாகும். முதலில் அரபு மொழியில் எழுதப்பட்ட இந்த நூலுக்கு கித்தாப்-இ-அக்டாஸ் எனும் பெயர் பஹாவுல்லா அவர்களாலேயே வழங்கப்பட்டது. மற்றும், "அதி புனித நூல்", "சட்டமுறைகள் நூல்", அல்லது சில வேளைகளில் அக்டாஸ் நூல் எனவும் வழங்கப்படுகிறது.

 

இந்த நூல் 1873ல் எழுதிமுடிக்கப்பட்டது. இதன் பிரதிகள் பஹாவுல்லா அவர்களாலேயே பல பஹாய்களுக்கு 1890-1891ல்அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நூலை பஹாவுல்லா அவர்கள் பம்பாய் நகரில் அச்சிடுவதற்கு ஏற்பாடுகள் செய்தார்.

 

பஹாய் போதனைகளில் தாய்-நூல் எனவும் இந்த நூல் குறிப்பிடப்படுகிறது, மற்றும் வருங்கால நாகரிகத்தின் அமைப்புமுறைக்கான சாசனமும் இதுவாகும். மேலும், இது வெறும் சட்ட நூல் மட்டும் அல்ல: இதில் வேறு பல விஷயங்களும் உள்ளடங்கியுள்ளன. குறிப்பாக, நெறிமுறைகள் குறித்த விஷயங்கள் மற்றும் தனிநபர்கள், குழுக்கள் மற்றும் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்ட நிருபங்கள் ஆகியவை. இந்த நூல் பஹாய் நிர்வாக ஸ்தாபனங்களை நிறுவுவதைப் பற்றி குறிப்பிடுகின்றது, பஹாய் சமய நடவடிக்கைகள், தனிநபர் விதிமுறைகள், கிரிமினல் சட்டங்கள், நெறிமுறைகள், சமூகக் கோட்பாடுகள், மற்று இதர சட்டங்கள், தீர்க்கதரிசனங்களும் இதில் அடங்கும்.

 


 

கித்தாப்-இ-இகான்

 

 

பஹாவுல்லாவின் எழுத்தோவியக்களுள் அடுத்த நிலையில் முக்கியத்துவம் வாய்ந்து நூலாக கித்தாப்-இ-இகான் எனும் நூலே உள்ளது. இந்த நூல் கித்தாப்-இ-அக்டாஸ் நூலிற்கு சற்று மாறுபட்ட நூலாகும்.

 

இந்த நூல் 1862ல் இரண்டு நாள்கள் இரண்டு இரவுக்குள் வெளிப்படுத்தப்பட்டது. 'பா'ப் அவர்களின் தீர்க்கதரிசனம் ஒன்றின் நிறைவேற்றமாக இந்த நூல் எழுதப்பட்டது. உண்மையில் இந்த நூல் 'பா'ப் அவர்களின் நூலான பாயானின் நிறைவேற்றமாகும் மற்றும் பஹாய் சமயத்திற்கான அந்த இளம் அவதாரபுருஷரின் தெய்வீக ஸ்தானத்தைக் உறுதிப்படுத்துவதும் ஆகும்.

 

இந்த நூல், கடந்தகால தெய்வீக விதிமுறைகளை வெளிப்படுத்திய ஆபிரஹாம், மோசஸ், கிருஸ்து, முகம்மது போன்றோரின் ஸ்தானங்களையும் சமயக்குறிக்கோள்களையும், அவர்களின் போதனைகளுக்கிடையே உள்ள ஒற்றுமையையும் உறுதிப்படுத்துகிறது. இவர்கள் அனைவரும் மனிதகுலத்தின் நன்னெறிக் கல்வி குறித்து பூமியில் அவதரித்தவர்களாவர். இவர்கள் அடுத்தடுத்து பூமியில் தோன்றியது இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளடங்கியுள்ள திட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு தெய்வீக நாடகநிகழ்வாகும். இவர்களின் செய்திகள் சமுதாயத்தின் உருமாதிரி, அதன் உண்மையான வரலாறு மற்றும் அது அடையவேண்டிய இலக்கைப் படிப்படியாக வெளிப்படுத்துகின்றன. இவர்களின் செய்தி காலத்திற்குக் காலம் அல்லது ஒரு சமயவெளிப்பாட்டிலிருந்து மறு வெளிப்பாடுவரை மனித ஆன்மாக்களை மறுவுயிர்ப்புறச் செய்து, வாழ்க்கைக்கு விளக்கமும், நோக்கமும் அளிக்கின்றது. இந்த அவதாரங்களின் வாயிலாக, நாகரிகம் புதிய உச்சங்களை அடைகின்றது, மக்கள் கூட்டங்கள் தாங்கள் வாழும் அக்காலத்துடனான இணக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொள்கின்றன.

 

கடந்தகால உலக நாகரிகங்களின் வசந்தகாலங்களில், சமயமே மனித சூழ்நிலைகளை ஊடுருவி அவர்களின் உணர்ச்சிகளையும் கலையாற்றல்களையும் ஈடுபடுத்துவதாக இருந்துள்ளது. இக்கலாச்சாரங்களுள் காணப்படும் ஒரு பொதுவான அம்சம் அவை யாவும் அனைத்தையும் இயக்கும் கடவுளைச் சார்ந்திருந்ததாகும். யூத, கிருஸ்துவ மற்றும் முகம்மதிய திருநூல்களில் குழப்பமாகவும், திரிப்பாகவும் காணப்பட்ட உருவகங்கள் மற்றும் மறைபொருள்கள் குறித்தும் சமயங்களின் படிப்படியான வளர்ச்சி பற்றியும் பஹாவுல்லாவின் கித்தாப்-இ-இகானில் காணப்படும் விளக்கங்களின் வாயிலாக உண்மையைத் தேடுவோர் பெரிதும் பயனடைகின்றனர். இன்று பஹாவுல்லாவின் வார்த்தைகள் ஒரு புதிய வசந்தகாலத்திற்கான அறிவிப்பைச் செய்கின்றன, ஒரு முற்றிலும் புதிய நாகரிகத்திற்கான அடித்தல வழிகாட்டியையும் வழங்குகின்றன.

 

;