<link rel="stylesheet" href="/chrome/css/noscript.css?12e0e20c"> 2017: பஹாய் உலகிற்கு ஒரு முக்கியமான வருடம் | பஹாய் உலக செய்தி சேவை (BWNS)

2017: பஹாய் உலகிற்கு ஒரு மகத்தான வருடம்

2 ஜனவரி 2018
செவிமடு
Download (MP3)

பஹாய் உலக நிலையம் — பஹாய் உலகில் வருடம் 2017-இல் முக்கிய மேம்பாடுகளைக் கொண்ட ஒரு வருடமாக விளங்கியது

வழிபாட்டு இல்லங்கள்

2016-இல் கடைசி கண்ட ரீதியான வழிபாட்டு இல்லத்தின் திறப்புவிழா நடந்து ஒரு வருடத்திற்குள், பத்தம்பாங், கம்போடியாவில் செப்டம்பர் மாதம் முதலாவது உள்ளூர் பஹாய் வழிபாட்டு இல்லம் திறப்புவிழா கண்டது.

“ஒரு புதிய விடியல் துவங்குகின்றது,” என அந்த நிகழ்ச்சியைப் பற்றி உலக நீதிமன்றம் எழுதியது

வில்லைக்காட்சி
28 படங்கள்
கோவிலின் கட்டிடக் கலைஞருடனான நேர்காணல் உட்பட, திறப்புவிழா பற்றிய தகவலை இங்கு படிக்கவும்.

நோர்ட்டே டெல் கௌகா, கொலம்பியாவில் ஒரு சமூகம் தனது சொந்த உள்ளூர் வழிபாட்டு இல்லத்திற்கு ஆயத்தம் செய்கின்றது. கட்டுமானம் ஜனவரியில் ஆரம்பித்து பின்தொடர்ந்த மாதங்களில் குறிப்பிடத்தக்க மேம்பாடு கண்டுள்ளது. கோவில் கட்டுமானத்தின் பல்வேறு கட்டங்களை கான்பிக்கும் காணோளி.

வானுவாத்திலுள்ள தன்னா தீவில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தின் போது, உள்ளூர் கோவிலின் வடிவமைப்பு ஜூன் மாதத்தில் திரைநீக்கப்பட்டது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வடிவமைப்பின் அந்த திரைநீக்கத்தைக் கொண்டாட அத்தீவில் ஒன்றுகூடினர்.

வில்லைக்காட்சி
28 படங்கள்
தன்னா தீவின் மக்களுள் பலர், ஜூன் மாதத்தில் கோவில் வடிவத்தின் திரைநீக்கத்தை வரவேற்பதற்காக பாரம்பரிய உடைகளை உடுத்தியிருந்தனர்.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு பொது மக்களுக்காக திறந்துவிடப்பட்ட தென் அமெரிக்காவின் கண்டரீதியான வழிபாட்டு இல்லம், வியக்கத்தக்க வகையில் சுமார் 500,000 வருகையாளர்களைக் கண்டுள்ளது. இருநூறாம் நினைவாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்ற அக்டோபர் மாதத்தில் மட்டும் 75,000 மக்களுக்கும் மேல் வருகை தந்தனர். மேலும் அது பல மதிப்புமிக்க கட்டிடக்கலை விருதுகளைப் பெற்றுள்ளது. இந்த மதிப்புகளுக்கும் பல்லாயிரக்கணக்கான வருகையாளர்களைப் பார்க்கிலும், ஒற்றுமை மற்றும் ஒருமை குறித்த கருத்தாக்கங்களை உருப்படுத்திடும் ஒரு கட்டமைப்பு உரிய நேரத்தில் தோற்றங்கண்டுள்ளது மனதை ஈர்ப்பதாகும்

வில்லைக்காட்சி
28 படங்கள்
ஜூலை மாதத்தில் ஒரு மனதை ஈர்க்கும் காட்சி - வழிபாட்டு இல்லம் பனிமழையினால் சூழப்பட்டுள்ளது

இருநூறாம் நினைவாண்டு

பஹாவுல்லாவின் பிறப்பு குறித்த இருநூறாம் நினைவாண்டு ஒரு தற்காலிக இடைநிறுத்த தருணத்தை உருவாக்கியது. அவரது வாழ்வைக் கொண்டாடுவதற்கான ஒருவாய்ப்பை வழங்கியது மட்டுமின்றி, மாறாக, அவர் ஸ்தாபித்த உலக சமயத்தின் வெளிப்படுதலைக் கண்ணுற்று, 19-ஆம் நூற்றாண்டு பாரசீகத்தில் அதன் அமளிமிகு மூலங்களிலிருந்து அதன் மடிப்பவிழ்வைத் தடங்கண்டு, நம்பவே முடியாத வகையில் பலதரப்பட்ட சமூகங்களை ஒரே பொது பெருமுயல்வில் ஒற்றுமைப்படுத்தும் ஓர் உலகளாவிய சமயமாக அது உயர்ந்துள்ள வரை மானிடத்தின் வாழ்வுக்கு அவரது போதனைகளின் தாத்பரியங்களைப் பற்றி பிரதிபலிப்பதற்கான ஒரு வாய்ப்பையும் அது வழங்கியது.

வில்லைக்காட்சி
28 படங்கள்
bicentenary.bahai.org -இல் இருநூறாம் நினைவாண்டு கொண்டாட்டங்கள் பதிவுசெய்யப்பட்டன

மனிதகுல ஒருமை குறித்த கண்டுகொள்ளலில் அடித்தலமிடப்பட்ட ஓர் உலக நாகரிகத்தின் வெளிப்படுகைக்கு பங்களிப்பதற்காக மானிடத்தை ஒன்றுதிரட்டுவதே பஹாவுல்லாவின் போதனைகளின் குறிக்கோளாகும்.

“ஓர் உலக நாகரீகம் குறித்த உணர்வை உருவாக்கிக்கொள்ளவும், உலகின் வழிநடத்தல் குறித்த பொறுப்பேற்கவும் பஹாவுல்லா நம் ஒவ்வொருவருக்கும் கோரிக்கை விடுக்கின்றார். வரக்கூடிய பல எதிர்கால தலைமுறைகளுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிவகுத்திடுவதற்கான அறிவை பஹாய்கள் எனும் முறையில் நீங்கள் பெற்றிருக்கின்றீர்கள்; மற்றும் முன் எப்போதுமின்றி, இப்போது, பஹாவுல்லாவின் நம்பிக்கையாளர்களின் குரல்களுக்கு செவிசாய்க்கப்பட வேண்டும்,” என நியூ யார்க் நகரில் நடைபெற்ற பஹாய் அனைத்துலக சமூகத்தின் இருநூறாம் நினைவாண்டு கண்டாட்டத்தின்போது ஐக்கிய நாடுகளுக்கான பனாமா நாட்டின் நிரந்தர பிரதிநிதியான லோரா எலினா ஃபுலோரெஸ் ஹெரேரா. கூறினார்

வில்லைக்காட்சி
28 படங்கள்
பஹாவுல்லாவின் பிறப்பு குறித்த இருநூறாம் நினைவாண்டு அனுசரிப்பிற்கு, சான்டா டெக்லா, எல் சால்வடோரில் நடந்த ஓர் ஒன்றுகூடல்
வில்லைக்காட்சி
28 படங்கள்
தாய்லாந்து இளவரசி சொம்சவாலி பாங்காக்கில் நடைபெற்ற பஹாவுல்லாவின் இருநூறாம் நினைவாண்டு கொண்டாட்டத்தில் நடைபெற்ற ஒரு நடன் நிகழ்ச்சியை கண்டுகழிக்கின்றார்.

இந்த நிகழ்ச்சிகென தயாரிக்கப்பட்ட உலகிற்கு ஒளி, எனும் திரைப்படம் குடும்பங்களிலிருந்து, திரையரங்குகள் மற்றும் அரங்கங்கள் வரை எல்லா சூழல்களிலும் உலகின் எல்லா இடங்களிலும் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. “அப்படத்தைப் பார்த்த பிறகு, உலகைச் சுற்றிலும் மக்கள் இதே நடவடிக்கைளில்தான் ஈடுபட்டு வருகின்றனர் என்பதைக் கண்டும், பஹாவுல்லாவின் திருவாக்குகளைக் கண்டும் அவற்றைப் படிக்கவும் செய்திடுவோருள் நானும் சேர்க்கப்பட்ட அந்த ஆசீர்வாதத்தை உணர்ந்தேன்,” என படத்தைப் பார்த்த ஜப்பானிய இளைஞர் ஒருவர் கூறினார்.

bicentenary.bahai.org, எனும் இணையதளத்தில் உலகைச் சுற்றிலும் நடைபெற்ற குறிப்பிடத்தக்க கொண்டாட்டங்களின் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன ; அங்கு அந்த நிகழ்ச்சிக்காக எழுதப்பட்ட உலக நீதிமன்றத்தின் கடிதம் ஒன்றும் உள்ளது.

இறுநூறாம் நினைவாண்டு இணையதளம் பஹாய் வழிபாட்டு இல்லங்களிலும், வருங்காலத்தில் வழிபாட்டு இல்லங்கள் நிர்மாணிக்கப்படப் போகும் இடங்களிலும் கொண்டாட்டங்கள் குறித்த நேரடி ஒளிபரப்புகளை வழங்கின. இது குறித்த முழு காட்சிகள் bicentenary.bahai.org -இல் கிடைக்கும்; அதன் முன்காட்சி மேலே இணைக்கப்பட்டுள்ளது.

இறுநூறாம் நினைவாண்டு இணையதளம் பஹாய் வழிபாட்டு இல்லங்களிலும், வருங்காலத்தில் வழிபாட்டு இல்லங்கள் நிர்மாணிக்கப்படப் போகும் இடங்களிலும் கொண்டாட்டங்கள் குறித்த நேரடி ஒளிபரப்புகளை வழங்கின. இது குறித்த முழு காட்சிகள் bicentenary.bahai.org -இல் கிடைக்கும்; அதன் முன்காட்சி மேலே இணைக்கப்பட்டுள்ளது.

வில்லைக்காட்சி
28 படங்கள்
இருநூறாம் நினைவாண்டிற்காக பஹாய் சமூகத்திற்கு ஆதரவு மற்றும் அங்கீகார செய்திகள் வழங்கியோருள் சிலர் நாட்டு மற்றும் அரசாங்கத் தலைவர்களும் அடங்குவர். மேலே (இடமிருந்து வலம்): இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி; ஐக்கிய அரசின் (இங்கிலாந்து) பிரதமர் தெரேசா மே; மற்றும் ஸாம்பியா நாட்டின் முதல் அதிபர் கென்னத் கௌன்டா. கீழே (இடமிருந்து வலம்): வங்காள தேச பிரதமர் ஷேய்க் ஹஸீனா; சிங்கைப் பிரதமர் லீ ஸியென் லூங்; மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர்.

அரசாங்கத் தலைவர்கள், அரசு சார்பற்ற அமைப்புகள், மற்றும் சமய குழுக்கள் கலந்து கொண்ட பல்வேறு ஒன்றுகூடல்களில், சமுதாயத்தில் சமயத்தின் பங்கு, இடப்பெயர்வு, அமைதி, சுற்றுச் சூழல், கல்வி, மற்றும் பால்மை சமயத்துவம். போன்ற விஷயங்களுக்கு பஹாய் சமூகம் அதன் பங்களிப்பை வழங்கியது.

வில்லைக்காட்சி
28 படங்கள்
பிரேசில் நாட்டின் பிரதிநிதிகள் சபையான, அதன் தேசிய காங்கிரஸின் கீழ்சபை, பஹாவுல்லாவின் பிறப்பு குறி்தத இருநூறாம் ஆண்டிற்கு மரியாதை செலுத்திடும் வகையில் ஒரு விசேஷ நிகழ்ச்சியை நடத்தியது.

வில்லைக்காட்சி
28 படங்கள்
ஜெர்மனி நாட்டின், குடிபெயர்வு, அகதிகள், ஒன்றிணைவு ஆகியவற்றுக்கான தேசிய மந்திரியான அய்டான் ஓகூஸ், ஜெர்மனி பஹாய் சமூகத்தினாலும், என் பிராங்க் அறவாரியத்தினாலும் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றுகின்றார்.

கலைகள், கலாச்சாரம், மற்றும் வெளியீடுகள்

பிரபலமான தொல்பொருள் காட்சியகங்களிலின் கண்காட்சிகளிலிருந்து, கலைஞர்களின் பங்களிப்பு குறித்த கொண்டாட்டங்கள் வரை, கலைகளுக்கு அகத்தூண்டல் வழங்குவதற்கான ஆன்மீகத்தின் சக்தி குறித்த ஒரு நுண்காட்சியை 2017 வழங்கியது. பஹாவுல்லாவின் பிறப்பு குறித்த இருநூறாம் நினைவாண்டு அனுசரிப்பிற்கு அடித்தட்டு மக்களிடமிருந்து எண்ணிலடங்கா கலைத்திற வெளிப்பாடுகள் பொங்கி வழிந்தன.

வில்லைக்காட்சி
28 படங்கள்
ஸ்டாக்ஹோல்ம், ஸ்வீடன் நாட்டில் நினைவாண்டு குறித்த ஓர் இசை நிகழ்ச்சி

கடந்த மே முதல் செப்டம்பர் வரை, பஹாய் கலைஞர் மார்க் டோபியின் படைப்புகள் வெனீஸ் நகரிலுள்ள குக்கென்ஹாய்ம் பொருட்காட்சியக்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அதே வேளை, லன்டன் நகரிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகங்களில் பஹாவுல்லாவின் திருவாக்குகள் குறித்த ஒரு கண்காட்சி திறக்கப்பட்டது. இத்தாலி நாட்டில், வணிக நிறுவனமான மார்கிராஃப் பல்லேடியோ தொல்பொருளகத்தில், பளிங்கினால் கட்டப்பட்ட பஹாய் சமயத்தின் மிகப் பிரபலச் சின்னங்களாக விளங்கும் பல கட்டிடங்களின் காட்சியை ஏற்பாடு செய்திருந்தது.

வில்லைக்காட்சி
28 படங்கள்
பிரிட்டன் நாட்டில் பஹாவுல்லாவின் கையெழுத்துப் பிரதிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இவ்வருடம் நூறு வயதை அடைந்திருக்கக்கூடிய பஹாய் இசைக்கலைஞரான டிஸ்ஸி ஜில்லெஸ்ப்பி, உலகம் முழுவதிலுமுள்ள பன்மடங்கான இசை நிகழ்ச்சிகளில் நினைவுகூர்ந்திடப்பட்டார். ஜில்லெஸ்ப்பியின் நீண்டகால நண்பரும் சகாவுமான ஒருவருடன் நடத்தப்பட்ட நேர்காணலில் ஜில்லெஸ்ப்பியின் இசையில் சமயத்தின் ஆன்மீக மற்றும் சமுதாய கோட்பாடுகள் எவ்வாறு செல்வாக்குச் செலுத்தியுள்ளன என்பது குறித்த ஒரு கண்ணோட்டத்தை வழங்கினார்

இவ்வருடம் பஹாய் சமூகத்திலிருந்து பல பதிப்புகளைக் கண்டது. சென்ற 2017 ஜனவரியில் நினைவுகூர்வதற்கான நாள்கள் எனப்படும் புனித நாள்களுக்கான பஹாவுல்லாவின் திருவாக்குத் தொகுப்பு ஒன்று இருநூறாம் நினைவாண்டுக்கு ஆயத்தமாக முதன் முறையாக வெளியிடப்பட்டது. பஹாய்கள் எனப்படும் ஒரு சஞ்சிகையின் புதிய பதிப்பு ஒன்று செப்டம்பர் மாதம், பிரசுரிக்கப்பட்டதோடு, இரான் நாட்டிற்கான ஒரு புதிய அதிகாரபூர்வ இணையத்தளம் பிப்ரவரி மாதம் இணையத்தில் ஆரம்பம் கண்டது. மேலும், சென்ற மார்ச் மாதத்தில் பஹாய் உலக செய்தி சேவை ஒரு புதிய தோற்றத்துடன் அதன் இணையதளத்தை ஆரம்பித்தது மற்றும், ஒரு கைபேசி செயலி மற்றும் பொட்காஸ்ட்;ஐயும் அதனோடு வெளியிட்டது; பஹாய் ஊடக சேமகம் படங்களின் ஒரு புதிய தொகுப்பை செப்டம்பர் மாதம் வெளியிட்டது; மற்றும் ஒரு வரலாற்றுப் பதிவாக விளங்கும் இருநூறாம் நினைவாண்டு இணையத்தளம், உலகம் முழுவதும் நடைபெற்ற கொண்டாட்டங்களைப் பதிவு செய்தது.

வில்லைக்காட்சி
28 படங்கள்
"The Baha'is நூலின் ஒரு புதிய பதிப்பு செப்டம்பர் மாதம் பிரசுரிக்கப்பட்டது. இதன் பிரதிகளை ஐக்கிய அமெரிக்க பஹாய் வெளியீட்டு சேவையின் இணையத்தளத்தின் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்

பஹாய் சமூகத்தின் கொடுமை

இவ்வருடம் முழுவதும், கொண்டாட்டங்களுக்கான தருணங்கள் பல இருந்த போதும், இரான் மற்றும் யேமென் நாட்டின் பஹாய் சமூகங்கள் தொடர்ந்து கொடுமைகளை எதிர்நோக்குகின்றனர்.

வில்லைக்காட்சி
28 படங்கள்
மனசாட்சி சார்ந்த ஐந்து பஹாய் பெண் கைதிகளும் ஐந்து பிற கைதிகளும் இருநூறாம் நினைவாண்டுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஒரு வெள்ளை பட்டுப் பின்னலை செய்தனர். பிறகு, தஙுகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அந்த துனியில் ஒரு நிழலபட வடிவம் ஒன்றை உருவாக்கினர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில், சனா நகரத்தின் அதிகாரிகள், முக்கிய பழங்குடித் தலைவர் ஒருவரான வாலிட் அய்யாஷ் உட்பட 25 பஹாய்களைக் கைது செய்ய உத்தரவிட்டனர். திரு அய்யாஷ் என்னவானார் என்பது இன்னமும் தெரியவில்லை.

இருநூறாம் நினைவாண்டின் போது, ஒரு சிறிய பஹாய் ஒன்றுகூடலைத் திடீரென தாக்கி, துப்பாக்கிகளை பிரயோகித்து வாலிட்'இன் சகோதரரான அக்ரம் அய்யாஷ்சை கைது செய்தனர்.

உலகம் முழுவதும் நடைபெற்ற மகிழ்ச்சியும் ஆனந்தமும் மிக்க எண்ணிலடங்கா உதாரனங்களின் அணுக்கத்தில் வைத்துப் பார்ப்பது கருத்தைக் கவர்வதாக இருக்கின்றது", என்றார் நியூ யார்க்கிலுள்ள ஐ்க்கிய நாடுகள் பஹாய் அனைத்துலக சமூக அலுவலகத்தின் பிரதிநிதியான பானி டுகால் கூறினார்.

பஹாய் இளைஞர்களுக்கு பல்கலைக்கழக கல்வி திட்டமிட்டு மறுக்கப்படுவது, பொருளாதார ரீதியில் பஹாய் சமூகத்தை ஒடுக்குமுறைக்கு ஆளாக்கியது, மற்றும் பிற மனித உரிமை அத்துமீரல்கள் உட்பட சென்ற வருடம் முழுவதும் இரான் நாட்டில் துன்புறுத்தல்கள் குறையவில்லை,

பத்து வருடகால அநீதியான சிறைவாசம் முடிவடையும் தருணத்தை நெருங்கிய போது, இரான் நாட்டில் முன்னாள்களில் பஹாய் சமூகத்தின் விவகாரங்களை கவனித்து வந்த ஒரு தற்காலிக தலைமைத்துவ குழுவினரான, யாரானின் முன்னாள் உறுப்பினர்களை அதிகாரிகள் விடுவிக்க ஆரம்பித்தனர். அவர்கள் 2008-இல் கைது செய்யப்பட்டனர். 1980-களில் முறையான பஹாய் ஸ்தாபனங்கள் சட்டத்திற்குப் புறம்பானவை என பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு, அதிகாரிகளின் முழு அறிவோடும் அங்கீகாரத்தோடும் இக்குழு உருவாக்கப்பட்டது.

மாஹ்வாஷ் சபேர், 64, ஃபாரிபா கமாலபாடி, 55, மற்றும் பெஹரூஸ் தவாக்கோலி, 65, தங்களின் சிறைவாசத்தை முடிவடைந்து, விடுதலையடைந்துள்ளனர். இன்னுமும் நால்வர் சிறையில் இருக்கின்றனர்.

வில்லைக்காட்சி
28 படங்கள்
யாரான் எனப்படும் ஓர் இடைக்கால குழுவின் உறுப்பினர்கள் எனும் முறையில், மாஹ்வாஷ் சபேட் (இடம்) மற்றும் ஃபாரிபா கமாலபாடி (வலம்) இருவரும் சமீபத்தில் தங்களின் அநீதியான சிறைவாசத்தை முடித்துள்ளனர்.