Feed on
Posts
Comments

Category Archive for 'Uncategorized'

பஹாவுல்லா இராக் நாட்டில் வாசம் செய்திருந்த போது, பஹாவு்லலா கடவுளின் அவதாரம் என நம்பாத மதகுருக்கள் அவரை சோதிப்பதற்காக ஒருவரை அவரிடம் அனுப்பினர். அப்போது என்ன நடந்தது என பஹாவுல்லா தமது வார்த்தைகளிலேயே விவரிக்கின்றானர்: பஹாவுல்லா இராக் நாட்டில் வாசம் செய்திருந்த போது, பஹாவு்லலா கடவுளின் அவதாரம் என நம்பாத மதகுருக்கள் அவரை சோதிப்பதற்காக ஒருவரை அவரிடம் அனுப்பினர். அப்போது என்ன நடந்தது என பஹாவுல்லா தமது வார்த்தைகளிலேயே விவரிக்கின்றானர்: “இதற்கு முன் தோன்றியிராதவை இவ்வெளிப்பாட்டினில் தோன்றியுள்ளன. […]

Read Full Post »

இன்று மனிதன் லௌகீக செல்வங்களை சேர்ப்பதிலேயே தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை செலவிடுகின்றான். போதுமான பணம் சேர்ந்திடும் போது, அவனுக்கு வயதாகி விடுகின்றது. இறக்கும் போது அவன் சேர்த்தவற்றை அவன் தன்னுடன் எடுத்துச் செல்லவும் முடியவில்ல. இது குறித்து பஹாவுல்லா: “…எமது வருகையின் போது அதன் ஆளுநர்களும், மூத்தோர்களும் சிறுவர்களும் ஒன்றுகூடி பொழுதுபோக்குக்கான விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தனர்.” இறைவன் எமக்குக் கற்பித்த உண்மைகளை எம்மிடமிருந்து பெற்றுக்கொள்ளவோ, எமது வியத்தகு, விவேகமிக்க, திருமொழிகளை ஏற்கவோ முதிர்ச்சியடைந்திட்டோர் எவரையுமே யாம் காணவில்லை.” […]

Read Full Post »

பஹாய்கள் அனுதினமும் கூற வேண்டிய கட்டாயப் பிரார்த்தனைகளுள் ஒன்றில் பின்வரும் வாசகம் உள்ளது: உம்மை அறிந்து வழிபடுவதற்கனவே என்னைப் படைத்திருக்கின்றீர்… இதை வேறு விதமாக, ‘அறிந்து அன்புசெலுத்துவதற்கென…என்றும் பஹாய் திருவாக்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மனிதப் பிறவியின் நோக்கம் இந்த சில வார்த்தைகளில் அடங்கியுள்ளது. மனிதன் தன்னைப் படைத்தவரை அறிந்து அன்பு செலுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளான். ஆனால், எளிமையாகத் தோன்றும் இச்சில வார்த்தைகளில் பொதிந்து கிடக்கும் உள்ளர்த்தங்கள் எண்ணிலடங்காதவை. இங்கு மனிதனுக்கு இரண்டு இயல்பான திறனாற்றல்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை […]

Read Full Post »

(தற்காலிக மொழிபெயர்ப்பு) திருமணம் மற்றும் குடும்ப வாழ்வு குறித்து ஒரு பஹாய் அன்பருக்கு அப்துல்-பஹா வழங்கிய அறிவுரை 22 டிசம்பர் 1918 ஹைஃபா …நீர் …திரும்பிச் செல்லவிருக்கின்றதனால், நீர் (திருமணத்தில் ஈடுபட்டு) ஒரு மனைவியை அடைவது பற்றி சிந்திக்க வேண்டும். உமது அறிவாற்றல் மற்றும் ஆன்மீக இலட்சியங்களுக்கு ஏற்ற ஒரு பெண்ணைத் தேர்வு செய்வீராக. அவள் விவேகம், அறிவுக்கூர்மை, பூரணத்துவத்தை இலட்சியமாகக் கொண்ட ஓர் சின்னமாக இருத்தல் வேண்டும். அவள் உமது வாழ்வு குறித்த பிரச்சினைகள் அனைத்திலும் […]

Read Full Post »

மனிதன் என்பவன் இருமை நிலையில் படைக்கப்பட்டுள்ளான். உலகில் ஒளி மற்றும் இருள், கருப்பு மற்றும் வெள்ளை, நல்லது மற்றும் கெட்டது என இருப்பது போன்று, மனிதனும் இருமை நிலையில் வாழ்கின்றான். பௌதீக ரீதியில் மனிதன் என்பவன் சந்தேகமின்றி ஒரு மிருகமே. மிருகங்களுக்கு இருக்கும் எல்லா குணங்களும் அவனுள்ளும் இருக்கின்றன–பசி, தூக்கம், கோபம், பொறாமை, பேராசை மற்றும் இதர. மிருகங்களைப் போன்றே அவனது காலம் முடியும் போது அவன் மரணமெய்துகிறான், அவன் உடல் மண்ணோடு மண்ணாகின்றது. அறிது அறிது […]

Read Full Post »

நம்பிக்கையின் ஒளி, கதைகள் பஹாவுல்லாவின் சக்தியால் பல ஆன்மாக்கள் தங்களின் உயிரையே தியாகம் செய்திடும் அளவிற்கு பெரும் மாற்றத்திற்குள்ளாகினர். அத்தகையோரில் பதினாறு வயதினராக இருந்த படீ’யும் ஒருவராவார். படீ` நாஸிருத்தீன் ஷாவிற்கான பஹாவுல்லாவின் நிருபத்தை வழங்குவதற்காக பஹாவுல்லாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அக்கா நகர் சென்று பஹாவுல்லாவை சந்தித்த பிறகு, அவர் தம்மிடம் பாதுகாப்பாக கொடுத்திருந்த நாஸிருத்தீன் ஷாவிற்கான நிருபத்தை எடுத்துக்கொண்டு இரான் நாட்டிற்கு திரும்பி சென்று, மன்னர் வேட்டைக்காக சென்றிருந்த இடத்திற்கே சென்று பல நாள்கள் காத்திருந்து நிருபத்தை […]

Read Full Post »

மூலம்: http://www.huffingtonpost.co.uk/genevieve-seri/200-years-since-his-birth_b_18094870.html பஹாய் சமயத்தின் ஸ்தாபகராகிய பஹாவுல்லா பிறந்த 200-ஆம் நினைவாண்டு குறித்த கொண்டாட்டங்கள் உலகத்தின் எல்லா பாகங்களிலும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. எண்ணிலடங்கா உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான, சமுதாயத்தின் ஒவ்வொரு கலாச்சாரத்தையும் பகுதியையும் உள்ளடக்கிய கொண்டாட்டங்கள் உலகின் சீர்திருத்தத்திற்காக ஒன்றுபடவும் பங்களிப்பதற்காகவும் உதவேகமுற்றுள்ளன. பஹாவுல்லாவின் செய்தி இதுதான், “இதுவே, இறைவனின் மிகச் சிறந்த சலுகைகள் மனிதர்மீது பொழியப்பட்டுள்ள நாள்; அவரது வலுமிக்கக் கிருபை எல்லாப் பொருட்களினுள்ளும் வியாபிக்கச் செய்யப்பட்டுள்ள நாள். தங்களிடையே உள்ள வேற்றுமைகளை அகற்றி மீண்டும் ஒன்றிணைந்து, […]

Read Full Post »

ஆக்கம் – கார்மெல் M திருப்பதி பிரசுரம்: ஜலை 8, 2017, காலை 9:12 ஆக்கம் – கார்மெல் M திருப்பதி   பிரசுரம்: ஜலை 8, 2017, காலை 9:12 ஹைஃபா நகரின் பாதுகாப்பிற்காக அங்கு பணிபுரிந்த இந்திய வீரர்களுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தும் படம் தோன்றியபோது, முதலாம் உலக யுத்தத்தின் போது இந்தியப் படையினரின் பல சந்திப்புகளின் போது, உலகளாவிய பஹாய் சமூகத்திற்கு மகத்தான தாக்கமும் அர்த்தமும் கொண்டிருந்த, அவற்றுள் […]

Read Full Post »

2019-ஆம் ஆண்டு, பாப் பெருமானரின் இருநூறாவது பிறந்தநாளைக் குறிக்கின்றது. அவ்வருடம் ஒரு புனித ஆண்டாக உலகம் முழுவதுமுள்ள பஹாய்களால் கொண்டாடப்பட விருக்கின்றது. ஆனால், அவரது காலத்தில் அவருக்கு நடந்த அவமரியாதையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அவரது சமயம் பரவிய வேகத்தைக் கண்ட பாரசீக அதிகாரிகள், அவரை 9 ஜூலை 1850-இல் 750 துப்பாக்கிகளின் குண்டுகளுக்கு இறையாக்கினர். பாப் பெருமானார் மரணமடைந்த நேரத்திலிருந்து அவரது உடல் எப்படியெல்லாம் பாதுகாக்கப்பட்டு, இறுதியில் எவ்வாறு கார்மல் மலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பதன் வரலாற்றை […]

Read Full Post »

பஹாய் சமயத்தின் ஒன்பது முக்கிய புனித நாள்களுள், பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா, அவருக்கு முன்னோடியாக விளங்கிய பாப் பெருமானார் இருவரின் பிறந்த நாள்களும் அடங்கும். இவ்வருடமான கி.பி. 2017 பஹாவுல்லாவின் பிறப்பு குறித்த 200-வது நினைவாண்டாகும். அதே போன்று கி.பி. 2019 பாப் பெருமானார் பிறப்பின் 200-வது நினைவாண்டாகும். இவ்விருவரின் பிறந்தநாள்களைப் பற்றி குறிப்பிடுகையில், அவை இரண்டும் ஒன்றே, அவை ஒன்றாகவே கொண்டாடப்பட வேண்டுமென பஹாவுல்லா வலியுறுத்தியுள்ளார். இஸ்லாமிய நாள்காட்டியைப் பின்பற்றிவந்த பஹாய்களுக்கு இதில் சிரமம் […]

Read Full Post »

Older Posts »