Feed on
Posts
Comments

Monthly Archive for October, 2014

கடவுள் யார்?

கடவுள் யார் எனும் கேள்விக்கு பஹாவுல்லாவின் எழுத்தோவியங்களிலிருந்து (பிரார்த்தனை) ஒரு விளக்கம் பிரபுவே, எனதாண்டவரே, நீர், போற்றி மகிமைப் படுத்தப்படுவீராக! எந்த ஒரு நாவுமே, அதன் விவேகம் எத்துணை ஆழமானதாயினும், உம்மைப் பொருத்தமுற புகழ்ந்திட இயலாதென எனக்கு உறுதியாகத் தெரிந்திருந்தும் எவ்வாறு யான் உம்மைக் குறித்துரைக்க இயலும்; அல்லது, மனித மனம் என்னும் பறவையின் பேராவல், எவ்வளவு மிகுதியாயிருப்பினும், எங்ஙனம் அது உமது மாட்சிமை, அறிவு என்னும் விண்ணுலகத்திற்கு உயர்ந்திடுவோம் என நம்பிக்கைக் கொண்டிட இயலும். என் […]

Read Full Post »

கடந்த வருடம் (2013ல்) உலகம் முழுவதும் 114 இளைஞர் மாநாடுகள் உலகம் முழுவதும் நடைபெற்றன. “இளம் நம்பிக்கையாளர் தலைமுறை ஒவ்வொன்றிற்கும், மனிதகுலத்தின் செழுமைக்குப் பங்களிப்பதற்கு, தங்களின் வாழ்நாள் காலத்திற்கே உரிய தனித்தன்மை வாய்ந்த ஒரு வாய்ப்பு ஏற்படும். நிகழ்கால தலைமுறையினர்க்கு, ஆழச்சிந்திக்கவும், ஈடுபாடுகொள்ளவும், பேரளவிலான ஆசிகள் வழிந்தோடவல்ல அர்ப்பணிப்புத் தன்மை மிக்க வாழ்விற்காகத் தங்களைத் தாங்களே வலுப்படுத்திக்கொள்ள வேண்டிய காலம் கனிந்துவிட்டது.” “மனிதகுலத்திற்குச் சேவை செய்வது” எனும் தலைப்பில் அம்மாநாடுகளின் காணொலிகள் இங்கு வழங்கப்படுகின்றன. வசனங்கள் தமிழில் […]

Read Full Post »

முகம்மத் நூரிஸாட், டாக். முகம்மத் மாலெக்கி இருவரும் உயர்கல்வி மறுக்கப்பட்ட சில பஹாய்களைச் சென்று சந்தித்தனர். கல்வியில் பாகுபாட்டை எதிர்க்கும் இயக்கம் – இரானிய இயக்குனர், திரைக்கதை மற்றும் பத்திரிக்கையாளரான திரு முகம்மத் நூரிஸாட், தெஹ்ரான் பல்கலைகழகப் பிரதான முகவராக புரட்சிக்குப் பின் நியமிக்கப்பட்ட டாக். முகம்மத் மாலெக்கியுடன், உயர்கல்வி மறுக்கப்பட்ட பஹாய்கள் சிலரைச் சென்று சந்தித்தார். திரு முகம்மத் நூரிஸாட் தமது ஃபேஸ்புக் (facebook) பக்கத்தில், இச்சந்திப்பை “வெட்கக்கேடன்றி வேறில்லை” எனும் தலைப்பில் வர்ணித்துள்ளார். வெட்கக்கேடன்றி […]

Read Full Post »