Feed on
Posts
Comments

Monthly Archive for July, 2012

அமரப்பறவை மேலெழுகிறது (பாப் அவர்களின் மரணதண்டனை) http://www.huffingtonpost.com/shastri-purushotma/phoenix-rises-the-execution-of-the-bab_b_1620138.html (உலகம் முழுவதும் உள்ள பஹாய்கள் பாப் எனும் திருநாமம் கொண்ட தங்களின் இரு அவதாரங்களில் ஒருவரின் தியாகமரண தினத்தை வருடா வருடம் 9 ஜூலையன்று நினைவுகூர்வர். பின்வருவது அவரின் மரணம் பற்றிய ஒரு குறுவிவரமாகும்.) நிரபராதியென நீங்கள் நம்பும் ஒருவரைச் சுட்டுச் சாகடிக்கும் கசப்பான கடமை ஒன்றை நீங்கள் நிறைவற்ற வேண்டும் என வைத்துக்கொள்வோம். பிறகு நீங்களும் உங்கள் படைப்பிரிவும் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபரைச் சுடுவதற்கு முன் அவரை […]

Read Full Post »

கட்டுரையாளர் டாக்டர் சிந்த்தியா ஜெயசூரியா மரவள்ளிக் கிழங்கு சாதாரனமாக எங்குமே கிடைக்கும் உணவுப்பொருளாகும். போர்க்காலங்களில் உணவு கிடைக்காத போது பல நாடுகளில் மக்கள் இந்தக் கிழங்கை சாப்பிட்டே உயிர்பிழைத்திருந்தனர். இக்கிழங்கு பலவிதமாக சமைக்கப்படக்கூடும், ஆனால் உணவு தவிர இக்கிழங்கிற்கு மருத்துவ ரீதியான பயன்களும் உண்டென்பது அவ்வளவாக அறியப்படாத ஒன்றாகும். அவற்றில் ஒன்று மரவள்ளிக்கிழங்கு புற்று நோயிலிருந்து நிவாரணம் அளிக்கவல்லது என்பதாகும். ஆனாலும், இது மருத்துவ ஆய்வுகள் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை. இருந்தபோதும் இக்கிழங்கில் மிகைப்பட கிடைக்கும் ஒரு […]

Read Full Post »

சமுதாயம் பொருளாதார மேம்பாடு காணக் காண அதோடு சேர்ந்து களவுத் தொழிலும் வளர்ந்துவருகிறது. தினசரி நாளிதழ்களைப் புரட்டிப்பார்த்தால் இங்கு திருட்டு அங்கு திருட்டு எனும் செய்திக்கு பஞ்சமேயில்லை. சில வேளைகளில் பெண்களின் கைப்பைகள் பறிக்கப்படும்போது அந்த வேகத்தில் அவர்கள் கீழே விழுந்து காயமடைவதும் உண்டு, சில வேளைகளில் மரணம் சம்பவிப்பதும் உண்டு. காரில் பயணம் செய்யும் போது கூட திருட்டு நடப்பது உண்டு. அவ்வித திருட்டை எப்படி தடுப்பது என்பது குறித்து வேடிக்கையாக பின்வரும் படம் விளக்குகிறது.

Read Full Post »