Feed on
Posts
Comments

Monthly Archive for February, 2012

சமய நம்பிக்கையைக் காரணமாகக் கொண்டு பல்கலைக்கழகம் செல்ல அனுமதி மறுக்கப்படுவதுண்டா? கிட்டத்தட்ட இருநூறு நாடுகளில் ஏறத்தாழ என்பது இலட்சம் நம்பிக்கையாளர்களைக் கொண்ட பஹாய் சமயம் உலகப் பெரும் சமயங்களின் வரிசையில் அதுவும் ஒன்றாக இருக்கின்றது. ஆனால், ஈரான் நாட்டிலோ, மனிதகுலம் முழுவதன் ஆன்மீக ஒற்றுமையை வலியுறுத்தும் பஹாய் சமயத்தின் விசுவாசிகள் பல நூற்றாண்டுகளாகவே கொடுமைகளுக்கு ஆளாகி வந்துள்ளனர். இக்கொடுமைகள் சமயம் மற்றும் சமூக ரீதியானவையாகும்; குறிப்பாக ஆண் பெண் சமத்துவம் பற்றிய கோட்பாடு தீவிர பழமைவாத மத […]

Read Full Post »

பொதுவாக இலவகங்கத்தின் (cinnamon) பயன் அதை உணவு வகைகளில் சேர்த்து உணவின் சுவையை அதிகரிப்பதற்கே என பலர் நினைக்கலாம். ஆனால், இலவங்கத்திற்கு இதைவிட முக்கியமான மருத்துவப் பயன்கள் உள்ளன என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. இலவங்கத்தில் பலவிதங்கள் உண்டு. குறிப்பாக ஸ்ரீ லங்காவில் பயரிடப்படும் லவங்க மரத்திலிருந்து எடுக்கப்படும் உள்பட்டை வெகு மணமானதாகும் மற்றும் இலவங்கம் சீனா,வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. வாங்கும் போது எந்த வகை இலவங்கம் உங்களுக்கு நல்லது என்பதைப் பார்த்து வாங்க […]

Read Full Post »

கறிவேப்பிலையின் பயன்கள் தென்னிந்திய சமையல்முறைகளில் கறிவேப்பிலையென்பது இன்றியமையாத ஓர் அம்சமாகும். ஆனால், பொதுவாகவே சாப்பிடும்போது கறிவேப்பிலையை ஒதுக்கிவைத்துவிட்டே உணவை உண்போம். இனி அவ்வாறு செய்ய வேண்டாம். ஏன்? கறிவேப்பிலைக்குப் பல மருத்துவ குணங்கள் உண்டு. அது ஜீரணத்திற்கான என்ஸைம்களைத் (enzymes) தூண்டிச் சுரக்கவைக்கின்றது மற்றும் இதனால் உணவு விரைவாக ஜீரணமாகின்றது. உணவு உண்டபின் ஒரு டம்ளர் மோரில் சிறிது பெருங்காயமும் கறிவேப்பிலை இலைகள் சிலவும் கலந்து குடிப்பது ஜீரணத்திற்கு நல்லதாகும். – வாந்தி மற்றும் அஜீரணத்திற்கு நல்ல […]

Read Full Post »

“பதினாறு வயதினிலே” எனும்போது இயக்குனர் பாதிராஜாவின், நடிகை ஸ்ரீதேவி நடித்த பதினாறு வயதினிலே 1977 திரைப்படமே ஞாபகத்திற்கு வரும். ஓர் இளம்பெண் எவ்வாறு பருவத்தின் கோளாரினால் காதல் வயப்படுகிறாள் மற்றும் அதனால் பெரும் சோதனைகளையும் சந்திக்கின்றாள் என்பதே கதை. அந்த இளம் பெண்ணின் உலகமே அவள் வாழ்ந்த கிராமந்தான். அவள் உட்பட்டிருந்த அந்தச் சூழ்நிலையில் அவளுக்குத் தெரிந்த வாழ்க்கையை அவள் வாழ்ந்தாள். இறுதியில், அவள் சந்தித்த சோதனைகளின் வாயிலாகத் தான் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் அந்தப் பதினாறு […]

Read Full Post »